under review

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம்: Difference between revisions

From Tamil Wiki
(Split image templates and other text)
(Corrected text format issues)
Line 28: Line 28:
எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், நவம்பர் 10, 1993-ல் காலமானார்.
எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், நவம்பர் 10, 1993-ல் காலமானார்.
[[File:Rahim book 2.jpg|thumb|எம்.ஆர்.எம். அப்துற் றஹீம் நூல்கல்]]
[[File:Rahim book 2.jpg|thumb|எம்.ஆர்.எம். அப்துற் றஹீம் நூல்கல்]]
== நூல்கள் ==
== நூல்கள் ==



Revision as of 14:21, 3 July 2023

எழுத்தாளர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீம்

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம் (எம்.ஆர்.எம். அப்துல் ரஹீம்) (ஏப்ரல் 27, 1922- நவம்பர் 10, 1993) தமிழக எழுத்தாளர். தமிழில் முதன் முதலில் சுய முன்னேற்ற நூலை எழுதியவராகக் கருதப்படுகிறார். இஸ்லாம் சார்ந்து பல நூல்களை எழுதினார். இஸ்லாமியக் கலைக் களஞ்சியத்தை உருவாக்கினார்.

பிறப்பு, கல்வி

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டியில் ஏப்ரல் 27, 1922 அன்று, எம்.ஆர்.எம். முஹம்மது காசீம்-எம்.ஆர்.பி. கதீஜா பீவி இணையருக்குப் பிறந்தார். காரைக்குடி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வர் வித்தியாசலையில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். புதுமுக வகுப்பை புதுக்கோட்டை அரசினர் கல்லூரியில் கற்றார். இளங்கலைக் கல்வியை சென்னை அரசினர் முஹம்மதியா கல்லூரில் நிறைவு செய்தார். தமிழ், ஆங்கிலம், அரபு, உருது மொழிகள் அறிந்தவர்.

தனி வாழ்க்கை

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், எழுத்தையே தனது தொழிலாகக் கொண்டார். முழு நேர எழுத்தாளராகப் பணியாற்றினார். மனைவி: எம்.ஆர்.பி. சைனப் ருகையா பீவி. மகள்கள்: கதீஜா பீவி, பாத்திமா பீவி.

எம்.ஆர்.எம். அப்துற்றஹீம் புத்தகங்கள்
இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்

இலக்கிய வாழ்க்கை

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், கல்லூரியில் படித்த காலத்தில் வெ. சாமிநாத சர்மாவின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அவரைப் போலத் தானும் பல்துறை நூல்களைப் படைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். முதல் படைப்பு ‘அரேபியாவின் அதிபதி’ 1943-ல் வெளியானது. தொடர்ந்து இஸ்லாமியச் சான்றோர்கள் பலரது வாழ்க்கை வரலாறுகளை, தத்துவ விளக்கங்களை, போதனைகளை நூல்களாக எழுதினார். 1948-ல் இவர் எழுதிய ’வாழ்க்கையில் வெற்றி’ தமிழில் வெளியான முதல் சுய முன்னேற்ற நூலாகக் கருதப்படுகிறது. நபிகள் நாயகம், நபிமார்கள் வரலாறு எனப் பல நூல்களை எழுதினார். முஸ்லிம் முரசு போன்ற இதழ்களில் இவரது கட்டுரைகள், நேர்காணல்கள் வெளியாகின.

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், 3600 பக்கங்கள் கொண்ட இஸ்லாமியக் கலைக் களஞ்சியத்தை உருவாக்கினார். இது குறித்து ஜெயமோகன், “இஸ்லாமியப் பண்பாட்டை விரிவாக அறிய உதவும் மாபெரும் ஆக்கம், 1977ல் ‘அப்துற் றகீம் ‘ அவர்களால் தொகுக்கப் பட்ட இஸ்லாமிய கலைக் களஞ்சியம். நான்கு தொகுதிகள் வெளி வந்த இப்பெரும் பணி இஸ்லாமிய சமூகத்தால் ஆதரிக்கப் படாமல், தமிழ் சூழலின் வழக்கமான உதாசீனத்துக்கு ஆளாகி முழுமை பெறாது நின்று விட்டது. [1]” என்கிறார். சுமார் 60-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார் அப்துற் றஹீம்.

பதிப்பியல்

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், தனது நூல்களைப் பதிப்பிதற்காக, 1948-ல், ’யுனிவர்ஷல் பப்ளிஷர்ஸ்’ என்ற பதிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் தனது நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

விருதுகள்

  • எம்.ஆர்.எம். அப்துற் றஹீம் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காக் போன்ற நாடுகளுக்கு அழைக்கப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டார்.
  • மு. கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்டோரால் பாராட்டப்பட்டார்.

இலக்கிய இடம்

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், தமிழின் முதல் சுய முன்னேற்ற நூலை எழுதியவராக மதிப்பிடப்படுகிறார். இஸ்லாமிய சமயம் சார்ந்து பல நூல்களை எழுதியிருந்தாலும் இஸ்லாமியக் கலைக்களஞ்சியத்தை நான்கு பாகங்களாகத் தொகுத்திருப்பது எம்.ஆர்.எம். அப்துற் றஹீமின் மிக முக்கிய சாதனையாக மதிப்பிடப்படுகிறது.

மறைவு

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், நவம்பர் 10, 1993-ல் காலமானார்.

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம் நூல்கல்

நூல்கள்

  • அரேபியாவின் அதிபதி
  • அமெரிக்க ஜனாதிபதி ஐஸனோவர்
  • அன்பு வாழ்வோ! அருள் வாழ்வோ!
  • அன்புள்ள தம்பி!
  • அல் ஹதீஸ் பாகம் - 1
  • அல் ஹதீஸ் பாகம் - 2
  • அல் ஹதீஸ் பாகம் - 3
  • இல்லறம்
  • இளமையும் கடமையும்
  • இஸ்முல் அஃலம்
  • இஸ்லாமிய கலைக்களஞ்சியம்-நான்கு தொகுதிகள்
  • உலக மேதைகள்
  • உன்னை வெல்க!
  • எண்ணமே வாழ்வு!
  • ஒழுக்கம் பேணுவீர்!
  • கவலைப் படாதே!
  • குணத்தின் குன்று
  • கோடீஸ்வரக் கொடை வள்ளல்
  • சரவிளக்கு
  • சுபிட்சமாய் வாழ்க!
  • நகரத் தலைவர்
  • நபிகள் நாயகம்
  • நபிமார்கள் வரலாறு -இரண்டு பாகங்கள்
  • நபி ஸலவாத்தின் நற்பலன்கள்
  • நினைவாற்றல், அறிவிற்கு ஓர் அணி
  • நெடுங்காலம் வாழ்க!
  • படியுங்கள்!! சிந்தியுங்கள்!!
  • படியுங்கள்!! சிரியுங்கள்!!
  • படியுங்கள்!! சுவையுங்கள்!!
  • பூங்குழலி
  • மகனே! கேள்!
  • மன ஒருமை, வெற்றியின் இரகசியம்
  • மனதை வெல்லுவாய்! மனிதனாகுவாய்!!
  • மனிதப் புனிதன் ஆப்ரஹாம் லிங்கன்
  • மருத்துவ மன்னர்கள்
  • முன்னேறுவது எப்படி?
  • முஸ்லிம் சமுதாயச் சிற்பிகள்
  • முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்
  • முஸ்லிம் பெரியார்கள் மூவர்
  • ரஷ்யஞானி லியோ டால்ஸ்டாய்
  • வலிமார்கள் வரலாறு முதல் பாகம்
  • வலிமார்கள் வரலாறு இரண்டாம் பாகம்
  • வலிமார்கள் வரலாறு மூன்றாம் பாகம்
  • வலிமார்கள் வரலாறு நான்காம் பாகம்
  • வலிமார்கள் வரலாறு ஐந்தாம் பாகம்
  • வாழ்க்கையில் வெற்றி
  • வாழ்வது ஒரு கலை!
  • வாழ்வரசி
  • வாழ்வின் ஒளிப்பாதை
  • வாழ்வின் வழித்துணை
  • வழிகாட்டும் ஒளிவிளக்கு
  • வழுக்கலில் ஊன்று கோல்
  • வள வாழ்விற்கு வழி
  • வாழ்வைத் துவங்கு!
  • விடா முயற்சி, வெற்றிக்கு வழி!
  • விடுதலை வீரர் மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர்
  • வியாபாரம் செய்வது எப்படி?
  • விளக்கேற்றும் விளக்கு
  • வெற்றியும் மகிழ்ச்சியும்
  • Muhammad The Prophet

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page