under review

கோழியூர்கிழார் மகனார் செழியனார்: Difference between revisions

From Tamil Wiki
(Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது)
(Inserted READ ENGLISH template link to English page)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Koliyurkilar Makanar Cheliyanar|Title of target article=Koliyurkilar Makanar Cheliyanar}}
கோழியூர்கிழார் மகனார் செழியனார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.
கோழியூர்கிழார் மகனார் செழியனார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==

Revision as of 19:58, 2 July 2023

To read the article in English: Koliyurkilar Makanar Cheliyanar. ‎

கோழியூர்கிழார் மகனார் செழியனார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

கோழியூர் கிழாரின் மகனாக செங்கல்பட்டு மாவட்டம் கோழியூரில் செழியனார் பிறந்தார். செழியன் என்பது பாண்டியனைக் குறிக்கும் பெயர்.

இலக்கிய வாழ்க்கை

இவர் எழுதிய குறிஞ்சித் திணைப்பாடல் நற்றிணையில் 383-ஆவது பாடலாக உள்ளது. வேங்கை மலர்கள், வேங்கை சூழ்ந்த இடத்தைக் கடந்து தலைவியைக் காண வரும் தலைவனைப் பற்றிய செய்தியைக் கூறும் பாடல்.

பாடல் நடை

நற்றிணை: 383

கல் அயற் கலித்த கருங் கால் வேங்கை
அலங்கல்அம் தொடலை அன்ன குருளை
வயப்புனிற்று இரும்பிணப் பசித்தென, வயப்புலி
புகர் முகம் சிதையத் தாக்கி, களிறு அட்டு,
உரும் இசை உரறும், உட்குவரு நடு நாள்,
அருளினை போலினும், அருளாய் அன்றே-
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு,
ஓங்கு வரை நாட! நீ வருதலானே.

உசாத்துணை


✅Finalised Page