திருமங்கலம் சுந்தரேச பிள்ளை: Difference between revisions
(Moved categories to bottom of article) |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 40: | Line 40: | ||
{{ | {{Finalised }} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]] | [[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]] |
Revision as of 09:28, 25 June 2023
திருமங்கலம் சுந்தரேச பிள்ளை (ஜனவர் 7, 1904 - ஜூலை 26, 1954) ஒரு தவில் கலைஞர்.
இளமை, கல்வி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலம் என்ற கிராமத்தில் வயலின் கலைஞர் மருதமுத்துப் பிள்ளை - மருதாம்பாள் இணையருக்கு ஜனவர் 7, 1904 அன்று சுந்தரேச பிள்ளை பிறந்தார்.
சுந்தரேச பிள்ளை முதலில் தன் அண்ணன் அப்பாவுப் பிள்ளையிடமும் பின்னர் வல்லம் சோமசுந்தரம் பிள்ளையிடமும் தவில் பயிற்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
சுந்தரேச பிள்ளைக்கு அப்பாவுப் பிள்ளை (தவில்), ஸ்வாமிநாத பிள்ளை (நாதஸ்வரம்) என்ற இரண்டு மூத்த சகோதரர்களும், விசாலாக்ஷி, மீனாக்ஷி, சுப்பம்மாள், நாகரத்தினம் என்ற நான்கு மூத்த சகோதரிகளும் இருந்தனர்.
நாதஸ்வரக் கலைஞர் புதுச்சத்திரம் நாராயணஸ்வாமி பிள்ளை என்பவரின் மகள் ஆச்சிக்கண்ணம்மா என்பவரை சுந்தரேச பிள்ளை மணந்து சாரதாம்பாள், அஞ்சுகம் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் புதுச்சத்திரம் முத்துவீருஸ்வாமி பிள்ளை) என்ற இரு மகள்களையும் ஷண்முகநாதன் என்னும் மகனையும் பெற்றார்.
இசைப்பணி
மாணவர்கள்
திருமங்கலம் சுந்தரேச பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:
- பெங்களூர் மாணிக்கம்
- யாழ்ப்பாணம் ரத்தினம்
- சமயபுரம் வெங்கடேசன்
- வல்லம் ராஜமாணிக்கம்
உடன் வாசித்த கலைஞர்கள்
திருமங்கலம் சுந்தரேச பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:
- சுந்தரேச பிள்ளை
- பெரம்பலூர் அங்கப்ப பிள்ளை
- மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை
- திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை
- திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை
மறைவு
திருமங்கலம் சுந்தரேச பிள்ளை காசநோயால் பாதிக்கப்பட்டு ஜூலை 26, 1954 அன்று மறைந்தார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page