under review

அக்கரசுதகம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
m (Spell Check done)
Line 1: Line 1:
அக்கரசுதகம் அல்லது அட்சரசுதகம் என்பது [[சித்திரக்கவிகள்|சித்திரக்கவி]]யில் ஓர் வகை. முழுவதும் நின்று ஒரு பொருள் தருவதாகவும், ஒவ்வொரு எழுத்தை நீக்கும்போதும் மற்றொரு பொருளைத் தரக்கூடியதாகவும்  ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு பொருள்கள் காட்டிப் பாடப்படுவது அக்கரசும். அக்கரம் (அட்சரம்) - எழுத்து. சுதகம் - குறைத்தல்.
அக்கரசுதகம் அல்லது அட்சரசுதகம் என்பது [[சித்திரக்கவிகள்|சித்திரக்கவி]]யில் ஓர் வகை. முழுவதும் நின்று ஒரு பொருள் தருவதாகவும், ஒவ்வொரு எழுத்தை நீக்கும்போதும் மற்றொரு பொருளைத் தரக்கூடியதாகவும்  ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு பொருள்கள் காட்டிப் பாடப்படுவது அக்கரசுதகம். அக்கரம் (அட்சரம்) - எழுத்து. சுதகம் - குறைத்தல்.


அக்கரம்‌ - எழுத்து, சுதகம்‌ - குறைப்பு அக்கரச்‌ சுதகமென்பது எழுத்துகளை ஒவ்வொன்றாகக் குறைத்துக்கொண்டே வருவதால் அமையும்‌ சித்திரக்கவி அதாவது பொருள்‌ தரக்கூடிய சொல்லொன்றைக்‌ கூறி அதில்‌ ஒவ்வொரு எழுத்தாக நீக்க, வேறுவேறு பொருள்‌ தருமாறு அமைந்திருக்கும்‌ செய்யுள்‌. இதனை முத்துவீரியம்‌ ''எமுத்தழிவு'' என்றும்‌, [[சுவாமிநாதம்|சுவாமிநாதம்‌]] ''எழுத்துச்‌ சுதம்‌'' என்றும்‌ கூறுகின்றன
அக்கரம்‌ - எழுத்து, சுதகம்‌ - குறைப்பு அக்கரச்‌ சுதகமென்பது எழுத்துகளை ஒவ்வொன்றாகக் குறைத்துக்கொண்டே வருவதால் அமையும்‌ சித்திரக்கவி அதாவது பொருள்‌ தரக்கூடிய சொல்லொன்றைக்‌ கூறி அதில்‌ ஒவ்வொரு எழுத்தாக நீக்க, வேறுவேறு பொருள்‌ தருமாறு அமைந்திருக்கும்‌ செய்யுள்‌. இதனை முத்துவீரியம்‌ ''எழுத்தழிவு'' என்றும்‌, [[சுவாமிநாதம்|சுவாமிநாதம்‌]] ''எழுத்துச்‌ சுதம்‌'' என்றும்‌ கூறுகின்றன


[[தண்டியலங்காரம்]] இதன் இலக்கணத்தை
[[தண்டியலங்காரம்]] இதன் இலக்கணத்தை
Line 69: Line 69:
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Revision as of 14:19, 2 June 2023

அக்கரசுதகம் அல்லது அட்சரசுதகம் என்பது சித்திரக்கவியில் ஓர் வகை. முழுவதும் நின்று ஒரு பொருள் தருவதாகவும், ஒவ்வொரு எழுத்தை நீக்கும்போதும் மற்றொரு பொருளைத் தரக்கூடியதாகவும் ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு பொருள்கள் காட்டிப் பாடப்படுவது அக்கரசுதகம். அக்கரம் (அட்சரம்) - எழுத்து. சுதகம் - குறைத்தல்.

அக்கரம்‌ - எழுத்து, சுதகம்‌ - குறைப்பு அக்கரச்‌ சுதகமென்பது எழுத்துகளை ஒவ்வொன்றாகக் குறைத்துக்கொண்டே வருவதால் அமையும்‌ சித்திரக்கவி அதாவது பொருள்‌ தரக்கூடிய சொல்லொன்றைக்‌ கூறி அதில்‌ ஒவ்வொரு எழுத்தாக நீக்க, வேறுவேறு பொருள்‌ தருமாறு அமைந்திருக்கும்‌ செய்யுள்‌. இதனை முத்துவீரியம்‌ எழுத்தழிவு என்றும்‌, சுவாமிநாதம்‌ எழுத்துச்‌ சுதம்‌ என்றும்‌ கூறுகின்றன

தண்டியலங்காரம் இதன் இலக்கணத்தை

ஓரடி யொழிந்தன தேருங் காலை
யிணைமுதல் விகற்ப மேழு நான்கு
மடைவுறும் பெற்றியி னறியத் தோன்றும்

ஒருபொருள்‌ பயந்தஒரு தொடர்‌ மொழியாய்‌
வருவதை ஓர் எழுத்தாய்க்‌ குறை வகுப்பில்‌
சுருங்குபு பலபொருள்தோன்‌ றுவதுஆய
அருங்கவி அக்கரச்சுதகம்‌ ஆகும்‌ (மாறனலங்காரம் 277)

என்று மாறனலங்காரம் அக்கரச்சுதகத்தின் இலக்கணத்தைக் கூறுகிறது.

சில சொற்கள் முதலிலோ, கடைசியிலோ ஒரு எழுத்தை நீக்க நீக்க வேறொரு பொருளுள்ள சொல் வருமாறு அமைந்தவை

உதாரணங்கள்

  • தலைவாழை, தலைவா, தலை
  • விநாயகன், நாயகன், அகன்
  • விசுவாசம், சுவாசம், வாசம்

எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டு-1

பொற்றூணில் வந்தசுடர் பொய்கை பயந்த வண்ணல்
சிற்றாயன் முன்வனிதை யாகி யளித்த செம்மல்
மற்றியார்கொ லென்னின் மலர்தாவி வணங்கி நாளுங்,
கற்றோர் பரவுங் கநகாரி நகாரி காரி

இங்கே எடுத்துக்கொண்ட சொல் கநகாரி என்பது. அதன் முதலெழுத்தாகிய 'க'கரத்தை நீக்க நகாரி . நகாரி யில் முதலெழுத்தாகிய நகரத்தை நீக்கக் காரி.

பொற்றூணில் வந்த சுடர் கநகாரி - பொன்தூணிலிருந்து வந்த சுடர் (நரசிம்ம அவதாரம்)- திருமால் (கநகாரி)

பொய்கை பயந்த வண்ணல் நகாரி- சரவணப் பொய்கையில் பிறந்த அண்ணல்- முருகன் (நகாரி)

சிற்றாயன் முன்வனிதை யாகி யளித்த செம்மல் காரி -சிறிய ஆயனான கண்ணன் மோகினியாகிப் பெற்றெடுத்த செம்மல் - மாசாத்தன், ஐயப்பன் (காரி)

மூவரும் கற்றோர் மலர்தூவி வணங்கும் தெய்வங்கள்.

எடுத்துக்காட்டு-2

ஒளிகொண்டபுத்‌தூர்உறை கோதை தீந்தேன்‌
துளிகொண்ட பூந்‌துளபத்‌ தோன்றலாற் கீந்த
தளிகொண்டதை அணிந்த தன்றதனைப்பற்ற
களிவண்டிமிர்‌ தேங்கமழ்‌ வாசிகை சிகை கை (மாறனலங்காரம் மேற்கோள் பாடல் 777)

இங்கே எடுத்துக்கொண்ட சொல் வாசிகை. 'வா' வை நீக்கினால் சிகை. 'சி' யை நீக்கினால் கை.

ஒளிகொண்டபுத்‌ தூர்உறை கோதை தீந்தேன்‌ வாசிகை (மாலை)

துளிகொண்டபூந்‌ துளபத்‌ தோன்ற லாற்கீந்த சிகை( கூந்தல்)

தளிகொண்டதை அணிந்த தன்றதனைப்பற்ற கை (கரம்)

உசாத்துணை

தண்டியலங்காரம்,நூலகம்.ஆர்க்

சித்திரகவிக் களஞ்சியம் (2007) , சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்‌ பேரகராதித்‌ திருத்தப்பணித்‌ திட்ட வெளியீடு: 4 7, தமிழ் இணைய கல்விக் கழகம்

இணைப்புகள்

அக்கர சுதகம், எழுத்து.காம்


✅Finalised Page