being created

நெ.து. சுந்தரவடிவேலு: Difference between revisions

From Tamil Wiki
Line 6: Line 6:
மாணவர்களால் நடத்தப்பட்ட வனமலர்ச் சங்கம் என்னும் சமுதாய சிர்திருத்த இயக்கத்தில் சேர்ந்து பங்காற்றினார்.
மாணவர்களால் நடத்தப்பட்ட வனமலர்ச் சங்கம் என்னும் சமுதாய சிர்திருத்த இயக்கத்தில் சேர்ந்து பங்காற்றினார்.
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
 
[[File:N.thu.es..jpg|thumb|பெரியாருடன் நெ.து.சு]]
நெ.து. சுந்தரவடிவேலு பெரியாரின் நண்பர் வரதராஜுலு  நடத்திய 'தமிழ்நாடு' பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார். டிசம்பர் 1934-ல்  உதவிப் பஞ்சாயத்து அலுவலர் பணியில் சேர்ந்தார்.  1942-ல் மாவட்டக் கல்வி இயக்குனராக கோவையில் பணியில் சேர்ந்தார்.
நெ.து. சுந்தரவடிவேலு பெரியாரின் நண்பர் வரதராஜுலு  நடத்திய 'தமிழ்நாடு' பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார். டிசம்பர் 1934-ல்  உதவிப் பஞ்சாயத்து அலுவலர் பணியில் சேர்ந்தார்.  1942-ல் மாவட்டக் கல்வி இயக்குனராக கோவையில் பணியில் சேர்ந்தார்.


Line 14: Line 14:


== கல்விப்பணிகள் ==
== கல்விப்பணிகள் ==
[[File:Conf.jpg|thumb|தமிழ்நாடு அடிப்படைக் கல்வி மாநாடு-1964  வலமிருந்து இடம் -குடியரசு துணைத்தலைவர் ஜாகிர் ஹுசன், பக்தவத்சலம், நெ.து.சு, ஜி.ராமச்சந்திரன், ராஜாஜி]]
'தமிழ்நாடு' நாளிதழின் துணையாசிரியர். செங்கல்பட்டு மாவட்டத்தின் உதவிப் பஞ்சாயத்து அலுவலர்பத்திரிக்கை துணையாசிரியர் , துணைப் பஞ்சாயத்து அலுவலர், பொன்னேரியில் இளந்துணைப் பள்ளி ஆய்வாளர் பதவி  
'தமிழ்நாடு' நாளிதழின் துணையாசிரியர். செங்கல்பட்டு மாவட்டத்தின் உதவிப் பஞ்சாயத்து அலுவலர்பத்திரிக்கை துணையாசிரியர் , துணைப் பஞ்சாயத்து அலுவலர், பொன்னேரியில் இளந்துணைப் பள்ளி ஆய்வாளர் பதவி  


Line 85: Line 86:


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://rssairam.blogspot.com/2012/10/blog-post_8916.html http://rssairam.blogspot.com/2012/10/blog-post_8916.html]
[https://www.tamilvu.org/library/nationalized/pdf/34-sundaravadivelu/nenaivualigal-1.pdf நினைவு அலைகள்-1 நெ.து.சுந்தரவடிவேலு]


[https://www.tamilvu.org/library/nationalized/pdf/34-sundaravadivelu/ninaivualaigal2.pdf நினைவு அலைகள்-2 நெ.து.சுந்தரவடிவேலு]
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/34-sundaravadivelu/nenaivualigal-1.pdf நினைவு அலைகள்-1 நெ.து.சுந்தரவடிவேலு]
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/34-sundaravadivelu/ninaivualaigal2.pdf நினைவு அலைகள்-2 நெ.து.சுந்தரவடிவேலு]
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/34-sundaravadivelu/ninaivualikal-3.pdf நினைவு அலைகள்-3 நெ.து.சுந்தரவடிவேலு]
* [https://www.hindutamil.in/news/opinion/columns/507260-kamarajar-a-decade-of-guidance-4.html காமராஜரின் 1954-1963: வழிகாட்டும் ஒரு தசாப்தம்-தமிழ்ஹிந்து!]


[https://www.tamilvu.org/library/nationalized/pdf/34-sundaravadivelu/ninaivualikal-3.pdf நினைவு அலைகள்-3 நெ.து.சுந்தரவடிவேலு]


[https://www.hindutamil.in/news/opinion/columns/507260-kamarajar-a-decade-of-guidance-4.html காமராஜரின் 1954-1963: வழிகாட்டும் ஒரு தசாப்தம்-தமிழ்ஹிந்து!]தமிழ்ஹிந்து







Revision as of 09:36, 25 April 2023

நெ.து. சுந்தரவடிவேலு (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு; அக்டோபர் 12, 1912 - ஏப்ரல் 12, 1993) கல்வியாளர், எழுத்தாளர், பேச்சாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருமுறை பதவி வகித்தார். தமிழ்நாடு அரசின் கல்வித்துறை ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் பணியாற்றினார். இலவசக்கல்வி, இலவசச் சீருடைத்திட்டம், இலவச மதிய உணவுத்திட்டம், செயல்படுத்தபடுவதில் காமராஜருடன் இணைந்து செயல்பட்டார். தமிழகத்தின் கல்விப் புரட்சியில் அவரது பணி குறிப்பிடத்தக்கது. கல்விப்பணிகளுக்காக இந்திய அரசின் பத்மஶ்ரீ விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

நெ.து. சுந்தரவடிவேலு காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள நெய்யாடுபாக்கத்தில் அக்டோபர் 12, 1912 அன்று துரைசாமி-சாரதாம்பாள் இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இளைய சகோதரர்கள் நால்வர். நெய்யாடுபாக்கத்தில் திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பெற்றார். காஞ்சிபுரம் தேவல்ல இராமசாமி ஐயர் நடுநிலைப் பள்ளியிலும், யு.எஃப்.சி.எம் உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக்கல்வியை முடித்தார். 1932-ல் மாநிலக் கல்லூரியில் பொருளாதாரத்தில் சிறப்பு (Honors) இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்லூரிக் காலத்தில் ஓ.வி. அழகேசன், சி. சுப்பிரமணியம், பெரியசாமித் தூரன் ஆகியோருடன் நட்பில் இருந்தார். கா. நமச்சிவாய முதலியார் அவரது ஆசிரியராக இருந்தார்.

மாணவர்களால் நடத்தப்பட்ட வனமலர்ச் சங்கம் என்னும் சமுதாய சிர்திருத்த இயக்கத்தில் சேர்ந்து பங்காற்றினார்.

தனிவாழ்க்கை

பெரியாருடன் நெ.து.சு

நெ.து. சுந்தரவடிவேலு பெரியாரின் நண்பர் வரதராஜுலு நடத்திய 'தமிழ்நாடு' பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார். டிசம்பர் 1934-ல் உதவிப் பஞ்சாயத்து அலுவலர் பணியில் சேர்ந்தார். 1942-ல் மாவட்டக் கல்வி இயக்குனராக கோவையில் பணியில் சேர்ந்தார்.

நெ.து.சு பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்த குத்தூசி குருசாமியின் உறவினர் காந்தம்மாளை சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டார். காந்தம்மள் முதுகலைப்பட்டமும், ஆசிரியர் பயிற்சியும் பெற்றவர். ஆசிரியர், தலைமை ஆசிரியர், சென்னை மாநகராட்சிக் கல்வி அலுவலர் ஆகிய பதவிகளை காந்தம்மாள் வகித்தார். இரு முறை சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இவர்களின் ஒரே மகன் திருவள்ளுவன் 1959-ல் தனது பத்தாவது வயதில் இறந்தார்.

கல்விப்பணிகள்

தமிழ்நாடு அடிப்படைக் கல்வி மாநாடு-1964 வலமிருந்து இடம் -குடியரசு துணைத்தலைவர் ஜாகிர் ஹுசன், பக்தவத்சலம், நெ.து.சு, ஜி.ராமச்சந்திரன், ராஜாஜி

'தமிழ்நாடு' நாளிதழின் துணையாசிரியர். செங்கல்பட்டு மாவட்டத்தின் உதவிப் பஞ்சாயத்து அலுவலர்பத்திரிக்கை துணையாசிரியர் , துணைப் பஞ்சாயத்து அலுவலர், பொன்னேரியில் இளந்துணைப் பள்ளி ஆய்வாளர் பதவி

சுந்தரவடிவேலு 1938-ஆம் ஆண்டு கோவையில் இளம் துணைக் கல்வி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். வறுமையாலும் சாதியப் பாகுபாட்டாலும் பள்ளிக்கூடம் வராத மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதில் வெற்றி கண்டார். பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பாது வீட்டிலேயே வேலைக்கு வைத்துக்கொண்ட பெற்றோரிடம் பேசி கல்வியின் அவசியத்தை உணர்த்தினார்.

1939-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த 'மெட்றாஸ் ஸ்டேட்'டில் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவியேற்றார். அதன்பின் சேலம் மாவட்டக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டர்.

1940-ல் சென்னை மாநகராட்சியின் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்றார். சென்னையில் சில இடங்களில் பொதுமக்கள் நன்கொடை மூலம் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் பொதுக்கல்வித்துறை துணை இயக்குனராகப் பத்வியேற்றார்.

1953-ல் பொதுக்கல்வித்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவரைவிட பணியில் மூத்தவர்களும் ஆட்சிப்பணி அதிகாரிகளும் இருந்தபோதும் நெ.து.சு வின் நிர்வாகத் திறனை கருத்தில் கொண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அவரை இப்பதவியில் நியமித்தார். 1955-ல் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை வடிவமைத்தார். அத்திட்டம் மூன்று கட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

1955- ல் முதியோர் கல்விப் பட்டறையின் மூலம் வயது வந்தோர் கற்பதற்கான நூல்களை உருவாக்கினார்.

காமராஜர் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தை முன்வைத்தபோது செலவைக் கருதி மறுப்புகள் எழுந்தன. குறைந்த செலவில் மதிய உணவு அளிக்கும் திட்டத்தை இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்வைத்து அதை நிறவேற்றுவதில் காமராஜருக்கு உறுதுணையாகவும், திட்டம் வெற்றி பெற முக்கியக் காரணமாகவும் திகழ்ந்தார். தமிழகத்தில் கட்டாய இலவசக்கல்வி, இலவசச் சீருடைத்திட்டம், செயல்படுத்தபடுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

சென்னைப் பல்கலைக்கழக பட்டதாரி ஆசிரியர் பயிற்சிக்காக தமிழ் கலைச்சொல்லாக்கக் குழுவின் செயலராக இருந்தார்

பள்ளிச் சீரமைப்புத் திட்டத்தின்கீழ் ஊர்மக்களின் நன்கொடைகளைக் கொண்டு பள்ளிகளை சீரமைக்கும் திட்டத்தை ஏற்படுத்தினார்.. மாணவர்கள் குறைவாக உள்ள பகுதிகளில் ஓராசிரியர் பள்ளிகளை ஏற்படுத்தினார். தமிழ்நாட்டில் முதன்முதலாக ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

1966-ல் மத்தியக் கல்வி அமைச்சகத்தில், இணைக் கல்வி ஆலோசகராகப் பணியேற்றார். உழவர்களுக்கான எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்த திட்டக்குழுவின் ஒப்புதல் பெற்றார். அப்போது தில்லி வந்த தமிழக முதலமைச்சர் அண்ணாத்துரையின் அழைப்பின்பேரில் தமிழகத்தில் வயது வந்தோர்க்கான எழுத்தறிவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணியை ஏற்றார்.

1969-ல் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அன்றைய முதல்வர் மு. கருணாநிதியின் அனுமதியுடன் புகுமுக வகுப்பில் இலவசக் கல்வியைக் கொண்டுவந்தார். உயர் கல்விக்கும் ஆராய்ச்சிப் படிப்புக்கும் அதிக இடங்களை ஒதுக்கினார். சென்னையிலேயே ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடத்துவதால் தொலைதூரங்களிலிருந்து வருவதில் மாணவர்களுக்கு உள்ள சிரமங்களை உணர்ந்து அந்தந்தக் கல்லூரிகளிலேயே பட்டங்களை வழங்கிக் கொள்ளலாம் என்று விதியை மாற்றினார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக மாலைநேர வகுப்புகளைத் துவக்கினார்

1978-ல் மாநில முதியோர் கல்வி வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

தமிழகத்தில் இலவசக்கல்வி, இலவசச் சீருடைத்திட்டம், இலவச மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தபடுவதற்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளார்

நெ.து.சு. பொது நூலக இயக்குநராக இருந்த போது தமிழகம் முழுவதும் நானூறுக்கும் மேற்பட்ட கிளை நூலகங்களை ஏற்படுத்தினார். மாவட்ட நூலகங்களுக்குக் கட்டிடங்கள் கட்டித்தந்துள்ளார்

பல்கலைக்கழகங்களில் பூட்டிவைக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் சிறந்தனவற்றை நூல்களாகப் பதிப்பித்து வெளியிட்டார். புகுமுக வகுப்பிலும் பட்டப்படிப்பிலும் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டுவந்தார்.

இந்திய சோவியத் நல்லுறவை

உதகை அரசினர் கலைக்கல்லூரியை உருவாக்கினார்.

பாரதி நூற்றாண்டு விழா சமயத்தில் பாரதி பாடல்களைப் பரப்பினார்

இலக்கியப் பணிகள்

சிறுவர்களுக்கான பதின்மூன்று நூல்களையும், வயது வந்தவர்களுக்காக முப்பதுக்கு மேற்பட்ட நூல்களையும் எழுதி

சோவியத் ரஷ்யாவிலும் ஐரொப்பிய நாடுகளிலும் சிற்றுப்பயணம் செய்தபோது தான் கண்டவற்றை 'அங்கும் இங்கும்' என்ற நூலாக எழுதினார்.

மறைவு

நெ.து. சுந்தரவடிவேலு ஏப்ரல் 12, 1993 அன்று காலமானார்.

விருதுகள், பரிசுகள்

  • பத்மஸ்ரீ விருது (1961)
  • சென்னைப் பல்கலைக்கழகத்தின் (Dlitt) பட்டம்
  • சோவியத் ரஷ்யாவின் நேரு விருது
  • சுந்தரவடிவேலு நினைவாக உத்தரமேரூர் ஒன்றியம், நெய்யாடுபாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நெ. து. சுந்தரவடிவேலு அரசு உயர்நிலைப் பள்ளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அக்டோபர் 12, 1872 அன்று ஈ.வே. ராமசாமிப் பெரியாரின் தலைமையில் அவரது மணிவிழா நடைபெற்றது)

படைப்புகள்

  • அங்கும் இங்கும்
  • உலகத்தமிழ்
  • எல்லோரும் வாழ்வோம்
  • சுதந்திரம் காப்போம்
  • சோவியத் கல்வி முறை
  • சோவியத் மக்களோடு
  • நான் கண்ட சோவியத் ஒன்றியம்
  • நினைவு அலைகள்-1
  • நினைவு அலைகள்-2
  • நினைவு அலைகள்-3
  • புதிய ஜெர்மனியில்
  • பூவும் கனியும்
  • வாழ்விக்க வந்த பாரதி

உசாத்துணை









🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.