under review

கும்பகோணம் சக்ரபாணிப் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Inserted READ ENGLISH template link to English page)
(Moved categories to bottom of article)
Line 41: Line 41:
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
}
}
{{Finalised}}
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]
{{Finalised}}

Revision as of 15:36, 29 December 2022

To read the article in English: Kumbakonam Chakrapani Pillai. ‎

கும்பகோணம் சக்ரபாணிப் பிள்ளை (1859 - ஜூலை 19, 1907) ஒரு தவில் கலைஞர்.

இளமை, கல்வி

கும்பகோணத்தில் ஸ்வாமிநாதத் தவில்காரர் - செல்லம்மாள் இணையருக்கு 1859-ஆம் ஆண்டில் மூன்றாவது மகனாக சக்ரபாணிப் பிள்ளை பிறந்தார்.

தந்தையிடம் முதலில் தவில் கற்றார். பின்னர் ஆச்சாள்புரம் தருமலிங்கத் தவில்காரரிடம் மேற்பயிற்சி பெற்றார்.

தவில் பயிற்சியிடன் சேர்த்து 'கவாத்து’ எனப்படும் உடற்பயிற்சியிலும் தனிக்கவனம் செலுத்திக் கற்றுத் தேர்ந்தார்.

தனிவாழ்க்கை

சக்ரபாணிப் பிள்ளை குட்டியம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரே மகன் கும்பகோணம் சிங்காரம் பிள்ளை (தவில் கலைஞர்).

சக்ரபாணிப் பிள்ளை இடையறாத உடற்பயிற்சி காரணமாக பார்ப்தற்கு மல்யுத்த வீரரைப் போன்ற தோற்றம் கொண்டவர்.

இசைப்பணி

தாளங்களை பிரஸ்தாரம் செய்து அக்ஷரங்களைக் கணக்கிடவும், அவற்றுக்கான மோஹரா, கோர்வைகள் உடனே தயாரிக்கவும் எளிய வழிகளை சொல்லும் அரிய சுவடி சக்ரபாணிப் பிள்ளையின் குடும்பத்தில் வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது. சக்ரபாணிப் பிள்ளை ஓய்வு நேரத்தில் அவற்றைக் கற்று லயக் கணக்குகளில் வல்லவராக விளங்கினார்.

சக்ரபாணிப் பிள்ளை தன் தாய்மாமா சிதம்பரம் ஜாவளி வீராஸ்வாமி நாதஸ்வரக்காரரிடம் முதலில் தவில் வாசிக்கத் துவங்கினார். இவரது வாசிப்பைப் பாராட்டி சிதம்பரம் ஆலய தீக்ஷிதர்கள் தவிற்சீலை பரிசளிதார்கள். ராமநாதபுரம், எட்டையபுரம் சமஸ்தானங்களில் பதினோரு தங்கப் பதக்கங்களும் திருப்பதியில் ஹஸ்த கங்கணமும் சக்ரபாணிப் பிள்ளைக்கு பரிசாக வழங்கப்பட்டது.

மாணவர்கள்

கும்பகோணம் சக்ரபாணிப் பிள்ளையின் முக்கியமான சில மாணவர்கள்:

உடன் வாசித்த கலைஞர்கள்

கும்பகோணம் சக்ரபாணிப் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

மறைவு

கும்பகோணம் சக்ரபாணிப் பிள்ளை ஜூலை 19, 1907 அன்று தன் நாற்பத்தியேழாம் வயதில் காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013

}



✅Finalised Page