being created

டி. ராமகிருஷ்ண பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Moved template to bottom of article)
(Para Added, Image Added, Inter Link Created;)
Line 1: Line 1:
[[File:Thottakadu pillai 1.jpg|thumb|தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை]]
[[File:Thottakadu pillai 1.jpg|thumb|தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை]]
டி. ராமகிருஷ்ண பிள்ளை (தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை; 1854-1920) ஆங்கிலத்தில் வரலாற்று நாவல் எழுதிய முதல் தமிழர். ராயல் ஹிஸ்டரிகல் சொசைட்டியின் உறுப்பினர். பல மொழிகள் அறிந்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் துபாஷியாகப் பணியாற்றினார்.  சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். சென்னை ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியின் தலைவராகப் பணிபுரிந்தார். இவர் எழுதிய ‘பத்மினி’ என்ற வரலாற்று நாவல், 1903-ல் லண்டனில் அச்சிடப்பட்டது. இந்நூல், தமிழர் ஒருவர் எழுதிய முதல் ஆங்கில வரலாற்று நாவலாகக் கருதப்படுகிறது.
[[File:T. Ramakrishna Pillai.jpg|thumb|டி. ராமகிருஷ்ண பிள்ளை]]
 
டி. ராமகிருஷ்ண பிள்ளை (தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை; 1854-1920) ஆங்கிலத்தில் வரலாற்று நாவல் எழுதிய முதல் தமிழர். ராயல் ஹிஸ்டரிகல் சொசைட்டியின் உறுப்பினர். பல மொழிகள் அறிந்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் துபாஷியாகப் பணியாற்றினார். இவர் எழுதிய ‘பத்மினி’ என்ற வரலாற்று நாவல், 1903-ல் லண்டனில் அச்சிடப்பட்டது.  
பிறப்பு, கல்வி
 
== பிறப்பு, கல்வி ==
டி. ராமகிருஷ்ண பிள்ளை, ஜனவரி 1, 1854-ல், சென்னையை அடுத்த செங்கற்பட்டில், டி. வரதப்பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயின்றார். பின், உயர் கல்வியை ஃப்ரி சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்து மிஷன் பள்ளியில் (Free church of Scotlad mission school) கற்றார். பட்டப்படிப்பை சென்னை கிறிஸ்தவக் கலாசாலையில் படித்தார். டாக்டர் [[வில்லியம் மில்லர்|வில்லியம் மில்ல]]ரின் அன்பிற்குரிய மாணவர்களுள் ஒருவராக இருந்தார். ஆய்வுக்கு வந்த சென்னை கவர்னர் நேப்பியரின் அன்பைப் பெற்றார். எஃப்.ஏ. (F.A) பட்டம் பெற்றபின், 1876-ல், பி.ஏ. பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் புலமை உடையவராக இருந்தார்.

தொடர்ந்து இங்கிலாந்து சென்று சட்டம் பயில விரும்பினார். தந்தையும் அதனை ஊக்குவித்தார். ஆனால், மகன் பிரிவைத் தாங்க இயலாததாலும், ‘ஓர் இந்து கடல் கலந்து செல்லக் கூடாது’ என்ற நம்பிக்கையாலும், ராமகிருஷ்ண பிள்ளையின் தாயார் அதனை எதிர்த்தார். அதனால், அம்முயற்சி கைகூடவில்லை.

== தனி வாழ்க்கை ==
டி. ராமகிருஷ்ண பிள்ளை, சென்னை உயர்நீதி மன்றத்தில், துபாஷி (Interpreter) ஆகப் பணியாற்றினார். இவரது திருமண வாழ்க்கை, குடும்பம் பற்றிய தெளிவான விவரங்களை அறிய இயலவில்லை. புதுச்சேரியில் ‘துபாஷி’ ஆகப் பணியாற்றிய ஆனந்தரங்கம் பிள்ளை, ராமகிருஷ்ணப் பிள்ளையின் உறவினர்.
[[File:Ramakrishna Pillai Books in English.jpg|thumb|டி. ராமகிருஷ்ண பிள்ளை எழுதிய நூல்கள் (ஆங்கிலம்)]]
[[File:T.Ramakrishna Pillai - Tamil Books.jpg|thumb|டி. ராமகிருஷ்ணப் பிள்ளை - தமிழ் நூல்கள்]]

== இலக்கிய வாழ்க்கை ==
டி. ராமகிருஷ்ண பிள்ளை, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி முதல்வர், போதகர், வில்லியம் மில்லரின் அன்பிற்குரியவராக இருந்தார். அவரது போதனைகளாலும், ஆசிரியர்களின் ஊக்குவிப்பினாலும் ஆங்கில இலக்கியங்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். லார்ட் டென்னிஸனின் கவிதைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டார். தனது 21-ம் வயதில், 'Seetha Rama: A Tale of Indian Famine' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நூல் ஒன்றை எழுதினார். அதுவே இவரது முதல் நூல். அதை ராமகிருஷ்ண பிள்ளையின் ஆசிரியர்கள் வாசித்து ஊக்குவித்தனர். இதழ்களிலும் பாராட்டு விமர்சனங்கள் வெளிவந்தன. தொடர்ந்து ‘Tales of Ind' என்ற நூலை எழுதினார். இதற்கு, ராமகிருஷ்ண பிள்ளையின் ஆசிரியர் மில்லர் முன்னுரை எழுதினார். டி. ராமகிருஷ்ண பிள்ளை இந்த நூலை, லார்ட் டென்னிஸனுக்குச் சமர்ப்பித்திருந்தார்.

இந்த நூலை வாசித்த லார்ட் டென்னிஸன் (Alfred, Lord Tennyson) பாராட்டுக் கடிதம் எழுதினார். சென்னைக் கவர்னராகப் பணியாற்றிய கிராண்ட் டஃப் (M.E. Grant Duff), ஆங்கிலக் கவிஞர் ஆல்பிரட் ஆஸ்டின் (Alfred Austin), ஜேம்ஸ் ப்ரைஸ் (James Bryce), ஆண்ட்ரூ ஹெச். எல். ஃப்ராசர் (Sir Andrew H. L. Fraser) [[சாமுவேல் சத்தியநாதன்]] உள்ளிட்ட பலர் இந்த நூலைப் பாராட்டினர். ‘[[சாடர்டே ரிவியூ’]] (The Saturday Review) இதழும் பாராட்டி விமர்சித்தது. இதனைத் தொடர்ந்து, டி. ராமகிருஷ்ண பிள்ளை, ராஜாங்க சபை (Fellow of the Royal Historical Society)யின் உறுப்பினரானார். தொடர்ந்து ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதினார்.  

தமிழிலும் தேர்ந்த ராமகிருஷ்ணப் பிள்ளை, [[பூவை கலியாணசுந்தரனார்|பூவை கலியாணசுந்தரனா]]ரின் ’[[செய்யுளிலக்கணம்]]’, சி.ஆர். கோவிந்தராஜ முதலியாரின் ’[[வாக்கிய இலக்கண சிந்தாமணி]]’ போன்ற நூல்களுக்கு சாற்றுக்கவிக் குறிப்பை வழங்கினார். இவரது நூல்கள் சில மலையாளத்திலும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கால்டுவெல்லின் மறைவிற்குப் பிறகு, கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலின் மூன்றாம் பதிப்பிற்கு கால்டுவெல்லின் மருமகன் ஜெ.எல். வ்யாட் (J.L.Wyatt) உடன் இணைந்து பதிப்பாசிரியராகச் செயல்பட்டார் ராமகிருஷ்ண பிள்ளை. (இவர்கள் இருவரும் இணைந்து கால்டுவெல் எழுதிய பல பக்கங்களை நீக்கி விட்டதாக ஒரு சர்ச்சை உள்ளது. பார்க்க: <nowiki>https://www.keetru.com/index.php/2009-10-07-12-27-44/matruveli-aug09/462-2009-09-13-16-12-11</nowiki><ref group="Sai School">https://www.keetru.com/index.php/2009-10-07-12-27-44/matruveli-aug09/462-2009-09-13-16-12-11</ref>)
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Being created}}
{{Being created}}

Revision as of 00:31, 30 November 2022

தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை
டி. ராமகிருஷ்ண பிள்ளை

டி. ராமகிருஷ்ண பிள்ளை (தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை; 1854-1920) ஆங்கிலத்தில் வரலாற்று நாவல் எழுதிய முதல் தமிழர். ராயல் ஹிஸ்டரிகல் சொசைட்டியின் உறுப்பினர். பல மொழிகள் அறிந்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் துபாஷியாகப் பணியாற்றினார். இவர் எழுதிய ‘பத்மினி’ என்ற வரலாற்று நாவல், 1903-ல் லண்டனில் அச்சிடப்பட்டது.  

பிறப்பு, கல்வி

டி. ராமகிருஷ்ண பிள்ளை, ஜனவரி 1, 1854-ல், சென்னையை அடுத்த செங்கற்பட்டில், டி. வரதப்பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயின்றார். பின், உயர் கல்வியை ஃப்ரி சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்து மிஷன் பள்ளியில் (Free church of Scotlad mission school) கற்றார். பட்டப்படிப்பை சென்னை கிறிஸ்தவக் கலாசாலையில் படித்தார். டாக்டர் வில்லியம் மில்லரின் அன்பிற்குரிய மாணவர்களுள் ஒருவராக இருந்தார். ஆய்வுக்கு வந்த சென்னை கவர்னர் நேப்பியரின் அன்பைப் பெற்றார். எஃப்.ஏ. (F.A) பட்டம் பெற்றபின், 1876-ல், பி.ஏ. பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் புலமை உடையவராக இருந்தார்.

தொடர்ந்து இங்கிலாந்து சென்று சட்டம் பயில விரும்பினார். தந்தையும் அதனை ஊக்குவித்தார். ஆனால், மகன் பிரிவைத் தாங்க இயலாததாலும், ‘ஓர் இந்து கடல் கலந்து செல்லக் கூடாது’ என்ற நம்பிக்கையாலும், ராமகிருஷ்ண பிள்ளையின் தாயார் அதனை எதிர்த்தார். அதனால், அம்முயற்சி கைகூடவில்லை.

தனி வாழ்க்கை

டி. ராமகிருஷ்ண பிள்ளை, சென்னை உயர்நீதி மன்றத்தில், துபாஷி (Interpreter) ஆகப் பணியாற்றினார். இவரது திருமண வாழ்க்கை, குடும்பம் பற்றிய தெளிவான விவரங்களை அறிய இயலவில்லை. புதுச்சேரியில் ‘துபாஷி’ ஆகப் பணியாற்றிய ஆனந்தரங்கம் பிள்ளை, ராமகிருஷ்ணப் பிள்ளையின் உறவினர்.

டி. ராமகிருஷ்ண பிள்ளை எழுதிய நூல்கள் (ஆங்கிலம்)
டி. ராமகிருஷ்ணப் பிள்ளை - தமிழ் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

டி. ராமகிருஷ்ண பிள்ளை, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி முதல்வர், போதகர், வில்லியம் மில்லரின் அன்பிற்குரியவராக இருந்தார். அவரது போதனைகளாலும், ஆசிரியர்களின் ஊக்குவிப்பினாலும் ஆங்கில இலக்கியங்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். லார்ட் டென்னிஸனின் கவிதைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டார். தனது 21-ம் வயதில், 'Seetha Rama: A Tale of Indian Famine' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நூல் ஒன்றை எழுதினார். அதுவே இவரது முதல் நூல். அதை ராமகிருஷ்ண பிள்ளையின் ஆசிரியர்கள் வாசித்து ஊக்குவித்தனர். இதழ்களிலும் பாராட்டு விமர்சனங்கள் வெளிவந்தன. தொடர்ந்து ‘Tales of Ind' என்ற நூலை எழுதினார். இதற்கு, ராமகிருஷ்ண பிள்ளையின் ஆசிரியர் மில்லர் முன்னுரை எழுதினார். டி. ராமகிருஷ்ண பிள்ளை இந்த நூலை, லார்ட் டென்னிஸனுக்குச் சமர்ப்பித்திருந்தார்.

இந்த நூலை வாசித்த லார்ட் டென்னிஸன் (Alfred, Lord Tennyson) பாராட்டுக் கடிதம் எழுதினார். சென்னைக் கவர்னராகப் பணியாற்றிய கிராண்ட் டஃப் (M.E. Grant Duff), ஆங்கிலக் கவிஞர் ஆல்பிரட் ஆஸ்டின் (Alfred Austin), ஜேம்ஸ் ப்ரைஸ் (James Bryce), ஆண்ட்ரூ ஹெச். எல். ஃப்ராசர் (Sir Andrew H. L. Fraser) சாமுவேல் சத்தியநாதன் உள்ளிட்ட பலர் இந்த நூலைப் பாராட்டினர். ‘சாடர்டே ரிவியூ’ (The Saturday Review) இதழும் பாராட்டி விமர்சித்தது. இதனைத் தொடர்ந்து, டி. ராமகிருஷ்ண பிள்ளை, ராஜாங்க சபை (Fellow of the Royal Historical Society)யின் உறுப்பினரானார். தொடர்ந்து ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதினார்.  

தமிழிலும் தேர்ந்த ராமகிருஷ்ணப் பிள்ளை, பூவை கலியாணசுந்தரனாரின் ’செய்யுளிலக்கணம்’, சி.ஆர். கோவிந்தராஜ முதலியாரின் ’வாக்கிய இலக்கண சிந்தாமணி’ போன்ற நூல்களுக்கு சாற்றுக்கவிக் குறிப்பை வழங்கினார். இவரது நூல்கள் சில மலையாளத்திலும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கால்டுவெல்லின் மறைவிற்குப் பிறகு, கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலின் மூன்றாம் பதிப்பிற்கு கால்டுவெல்லின் மருமகன் ஜெ.எல். வ்யாட் (J.L.Wyatt) உடன் இணைந்து பதிப்பாசிரியராகச் செயல்பட்டார் ராமகிருஷ்ண பிள்ளை. (இவர்கள் இருவரும் இணைந்து கால்டுவெல் எழுதிய பல பக்கங்களை நீக்கி விட்டதாக ஒரு சர்ச்சை உள்ளது. பார்க்க: https://www.keetru.com/index.php/2009-10-07-12-27-44/matruveli-aug09/462-2009-09-13-16-12-11[Sai School 1])

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

Cite error: <ref> tags exist for a group named "Sai School", but no corresponding <references group="Sai School"/> tag was found