first review completed

நட்டுவச் சுப்பையனார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 10: Line 10:
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* [https://noolaham.net/project/01/38/38.htm கனகி புராணம்: நட்டுவச் சுப்பையனார்: நூலகம்]
* [https://noolaham.net/project/01/38/38.htm கனகி புராணம்: நட்டுவச் சுப்பையனார்: நூலகம்]
{{Standardised}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 11:12, 23 November 2022

நட்டுவச் சுப்பையனார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

நட்டுவச் சுப்பையனார் இலங்கை யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் பிறந்தார். மேளக்கார வகுப்பைச் சேர்ந்தவர். இளமையில் தெல்லிப்பழையிலிருந்த அமெரிக்க மிஷனரிமாரைச் சேர்ந்து கிறித்தவராக சிலகாலம் இருந்தார். பின் சைவசமயத்தவராக மாறி, தனது இறுதிக்காலம் வரை சைவராகவே இருந்தார். ஏழாலையிலே திருமணம் செய்து அவ்வூரில் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலில் அக்காலத்திலிருந்த தாசிகளுள் ஒருத்தியாகிய 'கனகி'பேரில் கனகி புராணம் பாடினார். இந்நூல் முழுவதும் கிடைக்கவில்லை. நவாலியூர் ந.சி. கந்தையாபிள்ளை தமக்குக் கிடைத்த கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து 1937-ல் வெளியிட்டார். வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் முந்தய கவிதைளுடன் தமக்குக் கிடைத்த கவிதைளையும் வைத்து ஆராய்ந்து, பொழிப்புரை குறிப்புரைகளுடன் பதிப்பினை 1961-ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

நூல் பட்டியல்

  • கனகி புராணம்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை

இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.