under review

அருணோதயம் பதிப்பகம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 175: Line 175:
*[https://books.dinamalar.com/list-of-book-publishers/arunodhayam/338 அருணோதயம் பதிப்பக நூல்கள், தினமலர்]
*[https://books.dinamalar.com/list-of-book-publishers/arunodhayam/338 அருணோதயம் பதிப்பக நூல்கள், தினமலர்]
*[https://www.noolulagam.com/books?publisherId=130 அருணோதயம் பதிப்பக நூல்கள், நூலகம் தளம்]
*[https://www.noolulagam.com/books?publisherId=130 அருணோதயம் பதிப்பக நூல்கள், நூலகம் தளம்]
{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:33, 4 August 2026

அருணோதயம் பதிப்பகம் (1953) தமிழ்நாட்டின் பதிப்பக நிறுவனங்களுள் ஒன்று. கவிஞர் கண்ணதாசனின் 'ஈழத்து ராணி'யை முதல் நூலாக வெளியிட்டது. இதனை நிறுவியவர் அருணோதயம் அருணன். பல்வேறு தலைப்புகளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது.

தோற்றம்

அருணோதயம் பதிப்பகம், 1953-ல், சென்னை தியாகராய நகரில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கியவர் அருணன்.

நோக்கம்

அருணோதயம் பதிப்பகம், கண்ணதாசனின் எழுத்துக்களின் மேல் ஈர்ப்புக் கொண்ட அருணனால், கண்ணதாசனின் நூல்களை வெளியிடும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு தொடங்கப்பட்டது. அருணன், தனது மனைவியின் பங்குப் பத்திரங்களை அடமானம் வைத்து ரூ.500 முதலீட்டில், 1953-ல், 'அருணோதயம்' பதிப்பகத்தைத் தொடங்கினார்.

வெளியீடுகள்

அருணோதயம் பதிப்பகம், கவிஞர் கண்ணதாசனின் 'ஈழத்து ராணி'யை வெளியிட்டது. அந்நூல் தான் கண்ணதாசனின் அச்சில் வந்த முதல் நூல். அருணோதயம் பதிப்பகத்தின் முதல் நூலும் அதுவே. இரண்டாவது நூல், 'இலக்கியக் காதல்', காரைமுத்துப் புலவர் என்ற புனை பெயரில் கண்ணதாசன் எழுதிய கவிதை நூல் அது. அருணோதயம் பதிப்பகம் தொடர்ந்து நாவல்கள், வாழ்க்கை வரலாறுகள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரை நூல்கள் போன்றவற்றைப் பதிப்பித்து வெளியிட்டது. உலக நீதிக்கதை வரிசை, ஆத்திசூடிக் கதை வரிசை, கொன்றை வேந்தன் கதை வரிசை, வரலாற்றுக் கதை வரிசை, இராமாயணக் கதை வரிசை, மகாபாரதக் கதை வரிசை எனப் பல வகைகளில் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டது. திருக்குறள், நந்திக் கலம்பகம், முத்தொள்ளாயிரம் முதலிய சிறந்த தமிழ் இலக்கிய நூல்களைக் குறைந்த விலையில் மக்கள் பதிப்பாக வெளியிட்டது. கன்னட இலக்கியகர்த்தா மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் நூல்களை முதன்முறையாகத் தமிழில் மொழிபெயா்த்து வாசகா்களிடம் கொண்டு சோ்த்தது அருணோதயம் பதிப்பகம் தான்.

ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்றோரின் நூல்களை தொடக்க காலம் முதலே வெளியிட்டது.

ரமணி சந்திரனின் நூலை முதன் முதலில் வெளியிட்டது அருணோதயம் பதிப்பகம். ரமணி சந்திரனின் 200-க்கும் மேற்பட்ட நூல்களை அருணோதயம் பதிப்பகம் வெளியிட்டது. வாஸந்தி, அனுராதா ரமணன் போன்றோரின் நூல்களையும் வெளியிட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்களின் நூல்களை அறிமுகம் செய்துள்ளது. முத்துலட்சுமி ராகவன், காஞ்சனா ஜெயதிலகா், அருணா நந்தினி, என். சீதாலெட்சுமி, பிரேமா, அமுதவல்லி கல்யாணசுந்தரம், பிரேமலதா பாலசுப்ரமணியம், சியாமளா கோபு, திருமதி லாவண்யா, தமிழ் நிவேதா, ராஜேஸ்வரி என 50-க்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்களின் நூல்களை அருணோதயம் பதிப்பகம் வெளியிட்டது. அருணனின் மகன் அரு.வெங்கடாசலம் தற்போது அருணோதயம் பதிப்பகத்தின் நிர்வாகியாக உள்ளார்.

நூல்கள்

அருணோதயம் பதிப்பகம் கீழ்காணும் நூல்கள் உள்படப் பல நூல்களை வெளியிட்டது.

  • ஈழத்து ராணி
  • கொன்றை வேந்தன் நீதிக் கதைகள்
  • ஆத்திச்சூடி நீதிக் கதைகள்
  • சிறுவர் பக்திக் கதைகள்
  • அருள்நெறிக் கதைகள்
  • மூதுரைக் கதைகள்
  • புதிய விநோதக் கதைகள்
  • மகேந்திரபுரி மாவீரன்
  • அனாதை ஆனந்தன்
  • காஞ்சனா
  • மருதூர் மாணிக்கம்
  • சரித்திரம் பேசுகிறது!
  • சதுரங்கம்
  • வளரும் தமிழ்
  • பெருங்கதை ஆராய்ச்சி
  • பாரதிதாசன் ஓர் உலகக் கவிஞர்
  • வளரும் தமிழ்
  • இக்காலத் தமிழ்க் கவிதை உத்திகள்
  • உண்மையைத் தவிர வேறில்லை!
  • நவம்பர் நிலா
  • பின்னிரவில் நதியருகில்
  • ஜன்னல்கள் திறக்கின்றன
  • தேவதையின் தீர்ப்பு
  • இதயத்தில் இடம் கொடு
  • உயிரே உறவாக வா
  • நாயகி
  • நிலா நேசம்
  • நிலவே மலர்ந்திடு
  • பிருந்தாவனம்
  • நானாகிய நீ...
  • பூ மலரின் பாதையில்
  • பூவை நெஞ்சம்
  • அன்பெனும் மழையில்
  • பூந்தென்றலே பூமாலையாக வா!
  • யாருக்கு யாரோ...!
  • நினைக்கத் தெரிந்த மனமே!...
  • உன்னைச் சரண்டைந்தேன்
  • காதல் பரிசு
  • பூமிக்குப் புதியவன்
  • பாலைவனச் சோலை
  • என்னுயிர் சகியே...
  • யாரின் மனம் யாருக்கென்று...!
  • இந்து மதத் தத்துவங்கள்
  • கந்த புராணம்
  • தெய்வத்தை நம்புங்கள் நிம்மதி கொள்ளுங்கள்
  • பாரதி ஒரு தேசீய சகாப்தம்
  • நந்திக் கலம்பகம்
  • இறையியல் நடனம்
  • வைரமலர்
  • பழமொழி இலக்கியம்
  • கட்டுரை களஞ்சியம்
  • கண்ணம்மா
  • தொடுகோடுகள்
  • ஜனனம்
  • ஒரு சங்கமத்தை தேடி
  • வர்மா
  • சுப்பண்ணா
  • சீன ஜப்பான் கதைகள்
  • இலங்கை தீவு
  • காதோடு ஒரு காதல் கதை
  • கனவுகள் கோடி
  • இலக்கியச் சோலை
  • இலக்கியம் படைத்த மேதைகள்
  • பெண்ணே பெரியவள்
  • நாடோடிப் பாடல்கள்
  • அசோகன்
  • பறவைகள் பலவிதம்
  • தமிழ் வரலாறு
  • அறிவியல் அரங்கில்...
  • அறிவியல் மலர்கள்
  • அறிவியல் துணுக்குகள்
  • சிலம்பொலி
  • தமிழ் தந்த இன்பம்
  • பால் நிலவு
  • வாழை வளர்ப்பு
  • பணம் தரும் காய்கறித் தோட்டம்
  • அருணோதயம் - சமூக நாடகம்
  • தாகூரின் நகைச்சுவை நாடகங்கள்
  • பாரதிதாசன் ஓர் உலகக் கவிஞர்
  • ரத்த அழுத்தம்
  • இதய நோய்களும் நீக்கும் வழிகளும்
  • சிங்கார செல்வங்கள்
  • மலர்மனம்
  • 2000 பழமொழிகள்
  • சமையல் கலை
  • செட்டிநாட்டு பலகாரங்கள்
  • அசைவ சமையல்
  • இந்திய ஆலயங்கள்
  • தையற்கலை
  • வருமான வரி சட்டம்
  • நோய் தீர்க்கும் உணவு முறைகள்
  • மகப்பேறு கால பிரச்சனைகளும் நீக்கும் வழிகளும்
  • அன்பு நெறிக் கதைகள்
  • ராணி நூர்ஜகான்
  • அறிவியல் அதிசயங்கள்
  • பஞ்சதந்திரக் கதைகள்
  • தியாகி திருப்பூர் குமரன்
  • சிலப்பதிகாரக் கதைகள்
  • பேரறிஞர் கதைகள்
  • சின்னச் சின்ன பூக்கள்
  • வியாபாரத்தை பெருக்குவது எப்படி?
  • தமிழ்நாடு சுற்றுலா
  • காவல்துறையின் கதை
  • இலக்கியத் தமிழ் காவியங்கள்
  • அறிவியல் கதம்பம்
  • கரடி மனிதன்
  • புதுமைப்பெண்
  • இயற்கை சிரிக்கிறது
  • மனிதன் வாழ்கிறான்
  • காரியதரிசி உமா
  • மன அமைதிக்கு புதிய வழிகள்
  • சதுரங்கம்
  • மருந்தில்லா மருத்துவம்
  • ராணி சமையல்
  • ஜோதிடம் மூலம் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?
  • மனதளர்ச்சியை நீக்குவது எப்படி?
  • உலக மக்களில் பழக்கவழக்கங்கள்
  • சத்துணவுத் திட்டம்
  • ஆடு வளர்ப்பு
  • தியானமும் மனக்கட்டுப்பாடும்
  • ஜோதிடம் மூலம் தொழிலை அறிவது எப்படி?
  • நாடி சாஸ்திரம்
  • நவகிரகங்கள் நின்ற ஸ்தான பலன்கள்
  • மருந்தில்லாமல் வாழலாம்
  • கீதாசாரம்
  • அறிவு வளர்க்கும் அற்புதச் செய்திகள்
  • ஆனந்தமாக வாழ ஆயிரம் வழிகள்
  • சுதந்திரத்தின் கதை
  • பக்தி மார்க்கம்
  • வருமான வரிச் சட்டம்
  • உங்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டா?
  • இனியவை 200
  • இதிகாசங்களின் ஆன்மீக தத்துவங்கள்
  • பாவம் தீர்க்கும் பாகவதம்
  • திருக்குறள் பேசுகிறது
  • அப்பரடிகள்
  • கடவுளை போற்று! மனிதனை நினை!
  • தெய்வத் திருவிளையாடல்கள்
  • இணையில்லா இந்து மதம்
  • தெய்வ வழிச் சிந்தனைகள்
  • இரு நேர்முக வரிகள்
  • தெய்வச் சேக்கிழார்
  • 12 ஜோதிலிங்கங்களின் வரலாறு
  • வெற்றியின் வரலாறு
  • சுகமான குடும்ப வாழ்விற்குச் சுலபமான வழிகள்

விருது

அருணோதயம் பதிப்பகம் தனது பத்துக்கும் மேற்பட்ட வெளியீடுகளுக்காக தமிழக அரசின் பரிசைப் பெற்றுள்ளது. பல்வேறு அமைப்புகளின் பரிசுகளையும் அருணோதயம் பதிப்பக நூல்கள் பெற்றுள்ளன.

மதிப்பீடு

அருணோதயம் பதிப்பகம் நாவல்கள், கட்டுரைகள், பொது அறிவு, ஆன்மீகம், சிறார் நூல்கள், நாடக நூல்கள், சமையல் நூல்கள், விவசாயம், இலக்கியம், ஜோதிடம், சித்த மருத்துவம், குடும்பம், சமூகம் எனப் பல்வேறு வகைமைகளில், பல்வேறு தலைப்புகளில் 4000-த்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது. தமிழின் குறிப்பிடத்தகுந்த பதிப்பு நிறுவனங்களுள் ஒன்றாகவும், நகரத்தார் தொடங்கி நடத்திய குறிப்பிடத்தகுந்த பதிப்பகமாகவும் அருணோதயம் பதிப்பகம் அறியப்படுகிறது.

உசாத்துணை

‎


✅Finalised Page