மு. பாலசுப்பிரமணியன்: Difference between revisions

From Tamil Wiki
Corrected typo errors;
Jayashree (talk | contribs)
No edit summary
Line 60: Line 60:
* [https://www.amazon.in/Puducherry-Siruvar-Ilakkiya-Varalaru-Tamil-ebook/dp/B0D9RXJ4DR புதுச்சேரி சிறுவர் இலக்கிய வரலாறு, ஆர்.வி. பதி, அமேசான் தளம்]
* [https://www.amazon.in/Puducherry-Siruvar-Ilakkiya-Varalaru-Tamil-ebook/dp/B0D9RXJ4DR புதுச்சேரி சிறுவர் இலக்கிய வரலாறு, ஆர்.வி. பதி, அமேசான் தளம்]
* [https://www.commonfolks.in/books/d/tharkaala-siraar-ezhuthalargal தற்கால சிறார் எழுத்தாளர்கள், ஆர்.வி. பதி]
* [https://www.commonfolks.in/books/d/tharkaala-siraar-ezhuthalargal தற்கால சிறார் எழுத்தாளர்கள், ஆர்.வி. பதி]
{{Ready for review}}
{{Second review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 05:20, 7 May 2026

மு. பாலசுப்பிரமணியன்

மு. பாலசுப்பிரமணியன் (புதுவை மு. பாலசுப்பிரமணியன்; பரிதியன்பன்; பரிதி அன்பன்) (பிறப்பு: பிப்ரவரி 06, 1965) கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர். சிறார்களுக்கான நூல்களை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

மு. பாலசுப்பிரமணியன், பிப்ரவரி 06, 1965 அன்று, புதுச்சேரியில், முனுசாமி - காளியம்மாள் இணையருக்குப் பிறந்தார். பொறியியலில் இளநிலைப் பட்டம் (பி.ஈ.) பெற்றார். 1987-ல், புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். செயற் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் எனப் பதவி உயர்வுகள் பெற்று, 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: பா. ஜெயந்தி. இவர்களுக்கு பா. இளம்பரிதி, பா. அன்பன் என இரு மகன்கள். மகள்: பா. யாழினி.

கவிஞர் மு. பாலசுப்பிரமணியன்

இலக்கிய வாழ்க்கை

மு. பாலசுப்பிரமணியன், தொடக்க காலத்தில் புதுக்கவிதைகளை, ஹைக்கூ கவிதைகளை எழுதினார். பின் இதழ்களில் சிறார்களுக்கான பாடல்களையும், கவிதைகளையும் எழுதினார். அவை தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. சிறார் பாடல் நூலான 'நடைவண்டி' குறிப்பிடத்தகுந்த நூலாக அறியப்படுகிறது. தனது இரு மகன்களின் பெயரையும் இணைத்து 'பரிதியன்பன்' என்ற புனை பெயரில் எழுதினார்.

அமைப்புச் செயல்பாடுகள்

மு. பாலசுப்பிரமணியன், சாகித்ய அகாதெமி நடத்திய சிறுவர் இலக்கியப் படைப்பாளர்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கில் பங்கேற்றார். புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயற்குழு உறுப்பினராகப் பணிபுரிந்தார். 'நடைவண்டி சிறுவர் கலை இலக்கியக் கழகம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பல சிறார் இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

பொறுப்பு

  • புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர்
  • புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயற்குழு உறுப்பினர்

விருதுகள்

  • புதுச்சேரி அரசின் நேரு குழந்தைகள் இலக்கியப் பரிசு - நடைவண்டி நூலுக்காக
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் குன்றக்குடி அடிகளார் சிறுவர் இலக்கிய விருது - 'அன்னப்பறவை' நூலுக்கு
  • அழ.வள்ளியப்பா இலக்கிய வட்டம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு (2013 மற்றும் 2014)
  • பிரான்சு கம்பன் கழகம் வழங்கிய கம்பன் பட்டயம்
  • சென்னைக் கம்பன் கழகத்தின் தமிழ்நிதி விருது
  • கவிஞர் தமிழ் ஒளி இலக்கிய விருது
  • புலவர் அரிமதி தென்னகனார் இலக்கிய விருது
  • புதுச்சேரி அரசு வழங்கிய கம்பன் புகழ் இலக்கியப் பரிசு
  • பாரதி பாவேந்தர் கலை இலக்கியக் கழகம் அளித்த குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருது
  • மக்கள் கலைக்கழகம் வழங்கிய எழுச்சிக்கவி விருது
  • மீறல் இலக்கிய அமைப்பு வழங்கிய பாரி விருது
  • சமூக இலக்கியச் சுடர் விருது
  • தமிழ்மாமணி விருது
  • இளந்தேவன் தமிழ் விருது
  • இலக்கியக் கலைமணி விருது
  • புதுவை அரசின் கலைமாமணி விருது

மதிப்பீடு

மு. பாலசுப்பிரமணியன், புதுவை வாழ் எழுத்தாளர்களுள் ஒருவர். புதுக் கவிதைகளையும், ஹைக்கூ கவிதைகளையும் எழுதினார். கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சிறார் படைப்பாளி ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • வாழப்பிறந்தோம்
  • வெள்ளைத் திமிர்
  • மானாவாரி
  • கொதிக்கும் பூமி
  • அரைக்கீரை விற்கிறான் அம்பானி (ஹைக்கூ தொகுப்பு)
  • பாட்டரங்கில் பாலா
சிறார் நூல்கள்
  • நடைவண்டி
  • சிட்டுக்குருவி
  • அன்னப் பறவை

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.