under review

ஆதிரை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 28: Line 28:
* [https://www.commonfolks.in/bookreviews/porenum-thalaikeezhaakkam-sayanthanin-aathirai போரெனும் தலைகீழாக்கம் சுரேஷ் பிரதீப்]
* [https://www.commonfolks.in/bookreviews/porenum-thalaikeezhaakkam-sayanthanin-aathirai போரெனும் தலைகீழாக்கம் சுரேஷ் பிரதீப்]
* [https://medium.com/@itsmePurujoth/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-6e98c6532ad9 ஆதிரை வாசிப்பனுபவம் புருஜோத்தமன்]
* [https://medium.com/@itsmePurujoth/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-6e98c6532ad9 ஆதிரை வாசிப்பனுபவம் புருஜோத்தமன்]
{{Being created}}
 
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:43, 9 March 2026

ஆதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஆதி (பெயர் பட்டியல்)
ஆதிரை

ஆதிரை (2015) ஈழப்போர்ச் சூழல் குறித்து தமிழில் எழுதப்பட்ட நாவல். சயந்தன் எழுதியது. ஈழப்போர் குறித்த நாவல்களில் முதன்மையானது என்றும், தமிழில் வெளிவந்த செவ்வியல்தன்மை கொண்ட படைப்புகளில் ஒன்று என்றும் ஆதிரை கருதப்படுகிறது.

எழுத்து, வெளியீடு

சயந்தன் எழுதிய இரண்டாவது நாவலான ஆதிரை 2015 ஆம் ஆண்டு சென்னை தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

பின்புலம்

1977-ல் இலங்கையின் மலையக மக்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்பவேண்டும் என்று சிங்களர்கள் கலகம் செய்தனர். ஏராளமானவர்கள் தமிழர் வாழும் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். 1983க்குப் பின் தமிழர்கள் தனிநாடு கோரி போரைத் தொடங்கினர். அதில் சிங்களப்படையாலும், இந்திய அமைதிப்படையாலும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். விடுதலை அமைப்புகளில் பங்கேற்றனர். 2009 ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சிங்கள ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டு போர் நின்றது. ஏராளமான தமிழர்கள் உள்நாட்டு அகதிகளாக ஆயினர். இந்நாவல் 1977 முதல் 2009 வரையிலான வரலாற்றுப் பின்புலத்தில் சாமானியர்களின் வாழ்க்கையைச் சொல்கிறது.

கதைச்சுருக்கம்

ஆதிரை இலங்கையில் தமிழர் தனிநாடு கோரி நடத்திய உள்நாட்டுப்போரில் அலைக்கழிக்கப்படும் ஒரு சாதாரண குடும்பத்தின் கதை. சிங்கமலை தங்கம்மை, ஆச்சிமுத்து கிழவியின் மூத்த மகன் நடராசன் அவனது மனைவி கிளி,ஆச்சி முத்து கிழவியின் இளைய மகன் சங்கிலி அவனது மனைவி மீனாட்சி,மற்றும் அத்தார்,சந்திரா ஆகிய குடும்பங்களின் மூன்று தலைமுறைகளைப் பற்றிய முப்பதாண்டு வரலாறைப் பேசுகிறது

1991ல் சிங்கமலை மகன் லட்சுமணன் சிங்கள சிறையில் கைதியாய் இருப்பதில் தொடங்கும் நாவல். பின்னோக்கி நகர்ந்து 1977ல் சிங்களர்கள் மலையகத் தமிழர்களின் மீதான வன்முறையை சித்தரிக்கிறது. சிங்கமலை ஏழு வயதான லெட்சுமணனையும் அவனது அக்கா வல்லியாளையும் கூட்டிக்கொண்டு தனிக்கல்லடி என்னும் ஊருக்கு வகிறார். அத்தார் - சந்திரா தம்பதிகளிடம் லெட்சுமணன் பணிக்கு சேர்த்துவிடப்படுகிறான். வல்லியாள் கணபதிக்கு மணமுடித்து வைக்கப்படுகிறாள். அத்தாரின் நண்பன் சங்கிலியின் குடும்பமும் சித்தரிப்பின் வழி விரிகிறது. இக்குடும்பங்களின் வாழ்வின் தொடர் சித்தரிப்பாக ஆதிரை

காட்டிற்கு மரம் வெட்ட போகும் போது சிங்கமலை ஒரு நாள் இந்திய அமைதுப்படையால் புலிகளின் உளவாளி என குற்றம்சாட்டப்பட்டு கொல்லப்படுகிறார். கொல்லப்படுவதற்கு முன் சிங்கமலை அழுதவாறு கைகூப்பி “அய்யா நானும் இந்தியாவிலிருந்து வந்தவன் தான் ” என்கிறான். இவ்வாறு எல்லா தரப்பினராலும் அந்த எளிய குடும்பம் வேட்டையாடப்படுவதை நாவல் காட்டுகிறது..அந்தக் குடும்பத்தினர் தனிக்கல்லடியில் இருந்து போரினால் இடம்பெயர்ந்து அலைக்கழியும் இடப்பெயர்களே இந்நாவலின் கதை.

தந்தை கொல்லப்பட்டதின் வலியிலும் கோபத்திலும் லட்சுமணன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து விடுகிறான்.நாவல் விடுதலைப்புலி இயக்கத்தின் செயல்பாடுகள், அங்குள்ளவர்களின் உறவுகள் வழியாக போரின் சித்திரத்தை அளிக்கிறது. சங்கிலி மகன் வெள்ளையன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து ஒன்பதாண்டுகள் அங்கிருந்து விட்டு உடலில் குண்டு பாய்ந்த வலியுடன் இயக்கத்துக்கு துண்டு கொடுத்து விட்டு இயக்கத்திலிருந்து வெளியேறி வீட்டுக்கு வந்து விடுகிறான். இறுதிப்போர் வரை நாவல் அக்கதாபாத்திரங்களின் வாழ்க்கையை பின்தொடர்கிறது. இறுதியாக போர்க்காலத்தில் தான் புதைத்த கண்ணிவெடிகளை தானே எடுக்க நேரும் வெள்ளையனுடன் நாவல் நிறைவடைகிறது.

இலக்கிய இடம்

”ஒரு பெருங் கிழவியின் வாய்ச் சொல்லைப் போல அனுபவம் பழுத்த பார்வை சயந்தனுடையது.சயந்தனின் மொழி அவ்வளவு புதியதாய் இருக்கிறது” என்று வேலு மலையன் மதிப்புரையில் கூறுகிறார்.

“தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது" - என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

”ஆதிரை காட்டின் பச்சை மணத்தில் இருந்து துப்பாக்கி வெடிப்பின் கந்தக மணம் வரை தன்னுள் கொண்ட படைப்பு” என்று சுரேஷ் பிரதீப் மதிப்பிடுகிறார்.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.