under review

ஔவை நடராசன்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
No edit summary
 
Line 19: Line 19:
நடராசன் தஞ்சை சரபோஜி கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.  பல பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகச் செயல்பட்டிருக்கிறார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1992 முதல் 1995 வரை பதவி வகித்தார். 2014 ஆம் ஆண்டில் [[செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்|செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில்]] துணைத்தலைவராக இருந்தார். 2015 முதல் சென்னையிலுள்ள பாரத் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பொறுப்பேற்றார்.

==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
ஔவை நடராஜன் சென்னை ராமலிங்கர் மன்றத்தின் செயலாளராக இருந்தபோது [[நா. மகாலிங்கம்]] அவர்களின்  தொடர்பால் [[இராமலிங்க வள்ளலார்]] மேல் ஈடுபாடு ஏற்பட்டது. வள்ளலாரைப் பற்றி 'வாழ்விக்க வந்த வள்ளலார்' என்ற நூலையும், பல ஆய்வுக்கட்டுரைகளும் எழுதினார்.  
ஔவை நடராஜன் சென்னை ராமலிங்கர் மன்றத்தின் செயலாளராக இருந்தபோது [[நா. மகாலிங்கம்|நா. மகாலிங்கத்தின்]] தொடர்பால் [[இராமலிங்க வள்ளலார்]] மேல் ஈடுபாடு ஏற்பட்டது. வள்ளலாரைப் பற்றி 'வாழ்விக்க வந்த வள்ளலார்' என்ற நூலையும், பல ஆய்வுக்கட்டுரைகளும் எழுதினார்.  

ஔவை நடராஜன் கல்வித்துறை சார்ந்த இலக்கிய ஆய்வுநூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். சொற்பொழிவாளராகவும் அறியப்பட்டார். பல்கலைக்கழகக் கருத்தரங்குகளில்  நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். அரசால் தமிழ் மொழி வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளில் பங்களித்தார். பல இலக்கியப் பட்டிமன்றங்களில் நடுவராக இருந்தார்.  

Latest revision as of 09:50, 26 November 2025

நடராஜன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நடராஜன் (பெயர் பட்டியல்)
Auvaii.jpg

ஔவை து. நடராசன் (ஔவை நடராஜன்)(Avvai D.Natarajan; ஏப்ரல் 24, 1936 - நவம்பர் 21, 2022) தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர், பேச்சாளர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பத்மஶ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார்.

பிறப்பு,கல்வி

ஔவை நடராசன் தற்போதைய திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றுக்கருகே ஔவைக்குப்பத்தில் லோகாம்பாள்- ஒளவை துரைசாமி இணையருக்கு மகனாக ஏப்ரல் 24, 1936 அன்று பிறந்தார். உடன்பிறந்தவர்கள்: 4 சகோதரிகள் 5 சகோதரர்கள். புகழ்பெற்ற மருத்துவர் ஔவை மெய்கண்டார் அவரது சகோதரர். தந்தை துரைசாமிப் பிள்ளை பல பழந்தமிழ் நூல்களுக்கு உரையெழுதி, 'உரைவேந்தர்' என அழைக்கப்பட்டவர்.

நடராசன் மதுரை தியாகராஜா கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1958-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 'சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு' என்னும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டமும், 'சங்க காலப் புலமைச் செவ்வியர்' என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழிகளிலும் புலமை கொண்டவர்.

தனி வாழ்க்கை

ஔவை நடராசன் மருத்துவர் தாராவை மணந்துகொண்டார். குழந்தைகள் கண்ணன் நடராசன், அருள் நடராசன், பரதன் நடராசன். அருள் நடராசன் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறைத் தலைவர்.

அலுவல் பணிகள்

நடராஜன் டெல்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சென்னையிலுள்ள இராமலிங்கர் பணி மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றினார். தமிழ்நாட்டு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் துணை இயக்குநராக 1975 முதல் 1984 வரை பணியாற்றினார். பின்னர் 1984 முதல் 1992 வரை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறைச் செயலாளராகப் பணியாற்றினார். முதன் முறையாக இந்திய ஆட்சிப் பணி அலுவலராக இல்லாமல் இருந்தும் அரசின் செயலர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கல்விப்பணிகள்

நடராசன் தஞ்சை சரபோஜி கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பல பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகச் செயல்பட்டிருக்கிறார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1992 முதல் 1995 வரை பதவி வகித்தார். 2014 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக இருந்தார். 2015 முதல் சென்னையிலுள்ள பாரத் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பொறுப்பேற்றார்.

இலக்கிய வாழ்க்கை

ஔவை நடராஜன் சென்னை ராமலிங்கர் மன்றத்தின் செயலாளராக இருந்தபோது நா. மகாலிங்கத்தின் தொடர்பால் இராமலிங்க வள்ளலார் மேல் ஈடுபாடு ஏற்பட்டது. வள்ளலாரைப் பற்றி 'வாழ்விக்க வந்த வள்ளலார்' என்ற நூலையும், பல ஆய்வுக்கட்டுரைகளும் எழுதினார்.

ஔவை நடராஜன் கல்வித்துறை சார்ந்த இலக்கிய ஆய்வுநூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். சொற்பொழிவாளராகவும் அறியப்பட்டார். பல்கலைக்கழகக் கருத்தரங்குகளில் நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். அரசால் தமிழ் மொழி வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளில் பங்களித்தார். பல இலக்கியப் பட்டிமன்றங்களில் நடுவராக இருந்தார்.

அமைப்புப் பங்களிப்புகள்

  • சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கவிஞர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பாகப் பங்கேற்றார் (1982)
  • மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் பொதுச்செயலாளராக இருந்தார் (1988)
  • மொரிசியசில் நடைபெற்ற ஏழாம் உலகத் தமிழ் மாநாட்டின் குழுவில் உறுப்பினராக இருந்தார்.((1989) )
  • தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் மருத்துவத் தொழில்நுட்ப சொல்லாக்கர் குழுத் துணைத்தலைவராகப் பங்கேற்றார்
  • திருவள்ளுவர் பல்கலைக்கழக இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் விழாப் பேருரையாற்றினார்.

விருதுகள், பரிசுகள்

  • கலைமாமணி விருது (2009)
  • பேரறிஞர் அண்ணா விருது (2010)
  • பத்மஶ்ரீ விருது (2011)
  • கம்பன் புகழ் விருது (2012)
  • தன்னேரில்லாத தமிழ்மகன் விருது-இலங்கைத் தமிழ்ச் சங்கம் (2014)
  • சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது (2014)

இறப்பு

ஔவை நடராசன் தமது 87-வது வயதில் நவம்பர் 21, 2022 அன்று சென்னையில் காலமானார்.

ஆவணம்

'ஔவை நடராஜனைப்பற்றி 'The Milestones' என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது.

இடம்

ஔவை நடராசன் மரபான பார்வை கொண்ட கல்வியாளர். இலக்கிய ஆய்வுநூல்களையும் மரபான பார்வையில் கல்விகூடத் தேவைகளுக்காக எழுதியவர்.

நூல்கள்

தமிழ்
  • வாழ்விக்க வந்த வள்ளலார்
  • கம்பர் விருது
  • கம்பர் மாட்சி
  • பேரறிஞர் அண்ணா
  • திருப்பாவை விளக்கம்
  • திருவெம்பாவை விளக்கம்
  • அங்க இலக்கியப் பெண்பால் புலவர்கள்
  • அருளுக்கு ஔவை சொன்னது

மற்றும் பல

ஆங்கிலம்

  • Art Panaroma of Tamils
  • Self Confidence
  • Saying of Stalwart
  • Thirukkovaiyar

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Jul-2024, 09:04:47 IST