under review

திருவாரூர் ஆடற்கலை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:தியாகேசர் விஷ்ணு மார்பில்.jpg|thumb|திருமால் மார்பில் அஜபா நடனம் புரியும் தியாகேசர்]]
[[File:தியாகேசர் விஷ்ணு மார்பில்.jpg|thumb|திருமால் மார்பில் அஜபா நடனம் புரியும் தியாகேசர்]]
திருவாரூர் கோவில் ஓவியம், இசை, ஆடல் மூன்று கலைகளுக்கு முக்கியமான இடம். திருவாரூர் கோவில் மூலவர் தியாகேசர் அமர்ந்த நிலையில் நடனத்தைப் பார்ப்பவராகவும், அமர்ந்த வண்ணம் அஜபா நடனம் புரிபவராகவும் கருதப்படுகிறார். திருவாரூர் கோவிலில் நடனத்திற்கு உள்ள முக்கியத்துவம் பற்றி சிற்ப, கல்வெட்டு, நூல் ஆதாரங்கள் பல கிடைக்கின்றன.  
திருவாரூர் கோவில் ஓவியம், இசை, ஆடல் மூன்று கலைகளுக்கும் முக்கியமான இடம். திருவாரூர் கோவில் மூலவர் தியாகேசர் அமர்ந்த நிலையில் நடனத்தைப் பார்ப்பவராகவும், அமர்ந்த வண்ணம் அஜபா நடனம் புரிபவராகவும் கருதப்படுகிறார். திருவாரூர் கோவிலில் நடனத்திற்கு உள்ள முக்கியத்துவம் பற்றி சிற்ப, கல்வெட்டு, நூல் ஆதாரங்கள் பல கிடைக்கின்றன.  

பார்க்க: [[திருவாரூர் தியாகராஜர் கோவில்]]
பார்க்க: [[திருவாரூர் தியாகராஜர் கோவில்]]
Line 18: Line 18:
== கீழை ராஜகோபுரம் ==
== கீழை ராஜகோபுரம் ==
[[File:ஶ்ரீபலி.jpeg|thumb|ஶ்ரீ பலியின் போது நிகழும் நடனம்]]
[[File:ஶ்ரீபலி.jpeg|thumb|ஶ்ரீ பலியின் போது நிகழும் நடனம்]]
மூன்றாம் குலோத்துங்கனின் சேர, பாண்டிய வெற்றி சின்னமாக எடுக்கப்பட்ட கீழை ராஜகோபுரத்தில் எட்டுத் திக்கிலும் கபோதத்தின் கீழே கால் பலகையின் மெல் பரதக் கலையின் கரணங்கள் காட்டும் பாவைகள் சிற்பம் இடம்பெற்றுள்ளன. தஞ்சையிலும், தில்லையிலும் புடைப்புச் சிற்பமாக உள்ள இப்பாவைகள் திருவாரூரில் முழு சிற்பமாக உள்ளது.
மூன்றாம் குலோத்துங்கனின் சேர, பாண்டிய வெற்றி சின்னமாக எடுக்கப்பட்ட கீழை ராஜகோபுரத்தில் எட்டுத் திக்கிலும் கபோதத்தின் கீழே கால் பலகையின் மேல் பரதக் கலையின் கரணங்கள் காட்டும் பாவைகளின் சிற்பங்கள் உள்ளன. தஞ்சையிலும், தில்லையிலும் புடைப்புச் சிற்பமாக உள்ள இப்பாவைகள் திருவாரூரில் முழுச் சிற்பங்களாக உள்ளன.

== அஜபா கல்பம் ==
== அஜபா கல்பம் ==
திருவாரூர் மூலவர் தியாகேசர் (சோமாஸ்கந்தமூர்த்தி) ஆடும் நடனம் அஜபா. ஜபமல்லாது இயற்கையாக நிகழும் தியானம் எனப் பொருள். திருவாரூர் கோவிலில் இருக்கும் சோமாஸ்கந்தர் திருமாலின் இதயத்தில் இந்நடனம் புரிவதாகக் கருதப்படுகிறது. இதனை பற்றி விளக்கும் வடமொழி நூல் அஜபா கல்பம். திருவாரூர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் போது 'அஜபா நடன விழா' நிகழ்கிறது. இந்நடனம் பற்றிய கல்வெட்டு குறிப்பு பொ.யு. 14-ம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்கர் காலத்திலே கிடைக்கின்றன.  
திருவாரூர் மூலவர் தியாகேசர் (சோமாஸ்கந்தமூர்த்தி) ஆடும் நடனம் அஜபா. ஜபமல்லாது இயற்கையாக நிகழும் தியானம் எனப் பொருள். திருவாரூர் கோவிலில் இருக்கும் சோமாஸ்கந்தர் திருமாலின் இதயத்தில் இந்நடனம் புரிவதாகக் கருதப்படுகிறது. இதனைப் பற்றி விளக்கும் வடமொழி நூல் [[அஜபாகல்பம்|அஜபா கல்பம்]]. திருவாரூர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் போது 'அஜபா நடன விழா' நிகழ்கிறது. இந்நடனம் பற்றிய தஞ்சை நாயக்கர் காலத்தின் பொ.யு. 14-ம் நூற்றாண்டு கல்வெட்டு குறிப்புகள் கிடைத்துள்ளன.  

பார்க்க: [[அஜபாகல்பம்]]
பார்க்க: [[அஜபாகல்பம்]]
Line 27: Line 27:
== தஞ்சை தளிச்சேரி ==
== தஞ்சை தளிச்சேரி ==
[[File:விஷ்ணு விநாயகர் ஆடல்.JPG|thumb|விஷ்ணு சக்கராயுதத்திற்காக விநாயகர் முன் ஆடும் நடனம்]]
[[File:விஷ்ணு விநாயகர் ஆடல்.JPG|thumb|விஷ்ணு சக்கராயுதத்திற்காக விநாயகர் முன் ஆடும் நடனம்]]
ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலில் ஆடும் ஆடற்மகளிர் நாநூறு பேரை சோழ மண்டலத்திலிருந்து தேர்ந்தெடுத்தான். இதில் 51 ஆடற்மகளிர் திருவாரூர் கோவிலை சேர்ந்தவர்கள். இவர்களில் சிலரது பெயரும் கல்வெட்டில் கிடைத்துள்ளது. மழலைச் சிலம்பு ஆரா அமுது, நாராயணி, ஜோதி விளக்கு, வீதிவிடங்கி, பூலோக மாணிக்கம், அனவரத சுந்தரி, ராஜசூளாமணி, வில்லவன் மாதேவி ஆகிய ஆடற்மகளிர் திருவாரூர் கோவிலான பூங்கோவில், அரநெறி, அருமொழி ஈஸ்வரம், உலகீஸ்வரம், பிரம்மீஸ்வரம், திருமண்டளி கோவிலைச் சேர்ந்தவர்கள்.
ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலில் ஆடும் ஆடற்மகளிர் நாநூறு பேரை சோழ மண்டலத்திலிருந்து தேர்ந்தெடுத்தான். இதில் 51 ஆடற்மகளிர் திருவாரூர் கோவிலைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சிலரது பெயரும் கல்வெட்டில் கிடைத்துள்ளது. மழலைச் சிலம்பு ஆரா அமுது, நாராயணி, ஜோதி விளக்கு, வீதிவிடங்கி, பூலோக மாணிக்கம், அனவரத சுந்தரி, ராஜசூளாமணி, வில்லவன் மாதேவி ஆகிய ஆடற்மகளிர் திருவாரூர் கோவில்களான பூங்கோவில், அரநெறி, அருமொழி ஈஸ்வரம், உலகீஸ்வரம், பிரம்மீஸ்வரம், திருமண்டளி கோவிலைச் சேர்ந்தவர்கள்.

பார்க்க: [[தஞ்சை தளிச்சேரி]]
பார்க்க: [[தஞ்சை தளிச்சேரி]]

== தேவாசிரியன் ஓவியங்கள் ==
== தேவாசிரியன் ஓவியங்கள் ==
தேவாசிரியன் மண்டபத்தில் காணப்படும் ஓவியங்களிலும் நடனக்காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. ஓவியங்கள் தியாகராஜரின் புராணக்கதையை கூறும் வண்ணம் நடனக்காட்சியும் காட்டப்பட்டுள்ளது. இவ்வோவியங்கள் பொ.யு. 18-ம் நூற்றாண்டில் தஞ்சை மராட்டியர்கள் காலத்தில் வரையப்பட்டவை. முசுகுந்தன் அயோத்தியில் இருக்க அவன் முன் நடனக்காட்சி இசை தாளங்களுடன் காட்டப்பட்டுள்ளது. இதே போல் தேவமங்கையரன ஊர்வசி, திலோத்தமை, ரம்பை, மேனகை ஆடும் காட்சி உள்ளது. அவர்கள் ஆடுவதற்கு கீழே அவர்களின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. திருவாரூர் கோவிலிலும், வீதியிலும் நிகழும் நடனத்தின் பெயர் நட்டுவனார்களின் நட்டுவாங்கம், முட்டுக்காரர்களின் தாளம் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.  
தேவாசிரியன் மண்டபத்தில் காணப்படும் ஓவியங்களிலும் நடனக்காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. தியாகராஜரின் புராணக்கதையை கூறும் வண்ணம் நடனக்காட்சியும் உள்ளது. இவ்வோவியங்கள் பொ.யு. 18-ம் நூற்றாண்டில் தஞ்சை மராட்டியர்கள் காலத்தில் வரையப்பட்டவை. முசுகுந்தன் அயோத்தியில் இருக்க அவன் முன் நடனக்காட்சி இசை தாளங்களுடன் காட்டப்பட்டுள்ளது. இதே போல் தேவமங்கையரன ஊர்வசி, திலோத்தமை, ரம்பை, மேனகை ஆடும் காட்சி உள்ளது. அவர்களின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. திருவாரூர் கோவிலிலும், வீதியிலும் நிகழும் நடனன்களின்  பெயர்களால  நட்டுவனார்களின் நட்டுவாங்கம், முட்டுக்காரர்களின் தாளம் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.  

பார்க்க: [[திருவாரூர் தேவாசிரியன் மண்டபம் ஓவியங்கள்]]
பார்க்க: [[திருவாரூர் தேவாசிரியன் மண்டபம் ஓவியங்கள்]]

Revision as of 02:15, 27 October 2025

திருமால் மார்பில் அஜபா நடனம் புரியும் தியாகேசர்

திருவாரூர் கோவில் ஓவியம், இசை, ஆடல் மூன்று கலைகளுக்கும் முக்கியமான இடம். திருவாரூர் கோவில் மூலவர் தியாகேசர் அமர்ந்த நிலையில் நடனத்தைப் பார்ப்பவராகவும், அமர்ந்த வண்ணம் அஜபா நடனம் புரிபவராகவும் கருதப்படுகிறார். திருவாரூர் கோவிலில் நடனத்திற்கு உள்ள முக்கியத்துவம் பற்றி சிற்ப, கல்வெட்டு, நூல் ஆதாரங்கள் பல கிடைக்கின்றன.

பார்க்க: திருவாரூர் தியாகராஜர் கோவில்

தேவாசிரியன் மண்டபம்

வீதி உலாவின் போது நடனமாடும் நாட்டிய நங்கை

சோழர் காலத்தில் திருவாரூர் கோவில் தேவாசிரியன் மண்டபம் கலை, இலக்கிய அரங்கேற்றத்திற்கு முக்கியமான இடமாக இருந்துள்ளது. திருவாரூர் கோவிலில் வீதிவிடங்கரான சிவன் அனைத்து கலைகளையும் தேவாசிரியன் மண்டபத்தில் அமர்ந்து பார்ப்பதாக ஐதீகம். வீதிவிடங்கர் இம்மண்டபத்தில் எழுந்தருளி ஆடலும், பாடலும் காண்பார் என்ற கல்வெட்டு சான்றுகளும் உள்ளன. தேவார நால்வருள் ஒருவரான சுந்தரர் திருத்தொண்டத்தொகை நூலை தேவாசிரியன் மண்டபத்திலேயே அரங்கேற்றினார்.

முதல் குலோத்துங்க சோழனின் 49-வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு (பொ.யு. 1118 - 19) வீதிவிடங்கர் தேவாசிரியன் மண்டபத்தில் எழுந்தருளப் புக்கத்துறை வல்லவத் தலைக்கோலி என்ற ஆடல் அணங்கின் நடனத்தைக் கண்டு களித்ததாகக் கூறுகிறது.

விக்கிரம சோழனின் கல்வெட்டு தொடரில் சித்திரை மாத சதய விழா பற்றிய குறிப்பு உள்ளது. இதில் வீதிவிடங்கப் பெருமான் தேவாசிரிய மண்டப சிம்மாசனத்தில் வீற்றிருந்த போது தியாக வினோதத் தலைக்கோலி என்ற திருக்கோவில் ஆடல்மகள் ஒருத்தி பன்னடம் புரிந்ததாள் என்ற குறிப்பு உள்ளது. மற்றொரு மன்னனின் கல்வெட்டு குறிப்பில் வீதிவிடங்கர் நடனம் கண்டதோடு வீரசோழ "அணுக்க விஜயம்"[1] என்னும் கூத்தின் பாடலையும் ஒருங்கே கேட்டதாகக் கூறுகிறது.

சிற்பம்

மன்னன் முசுகுந்தன் பார்க்கும் நாட்டிய காட்சி

தேவாசிரியன் மண்டபத்தின் வடக்கு பக்கம் விதானத்தில் சிற்ப வரிசை ஒன்றுள்ளது. இதில் சபை நடுவே சோமாஸ்கந்தர் வீற்றிருக்கிறார். அவர் அருகே சிவகாமசுந்தரி இருக்கிறாள். விநாயகர், முருகன் இருவரும் நின்ற படி ஆடல் பார்க்கின்றனர். திருமால் தன் தேவியுடன் நின்ற கோலத்தில் உள்ளார். நந்தி தேவர் குடமுழா வாசிக்க ஊர்த்துவ தாண்டமூர்த்தி ஊர்த்துவம் காட்டி நிற்க அருகே காளி நாணத்துடன் நிற்பது போல் காட்டப்பட்டுள்ளது. இச்சிற்ப தொகையை அடுத்து ஆடல் மகளிர் பலர் நடனம் புரியும் சிற்பம் உள்ளது. இதில் நடனத்தின் முத்திரைகள் காட்டப்பட்டுள்ளன. மண்டபத்தின் கூரை விளிம்புகளிலும் ஆடல் மகளிரின் சிற்பங்கள் உள்ளன.

கீழை ராஜகோபுரம்

ஶ்ரீ பலியின் போது நிகழும் நடனம்

மூன்றாம் குலோத்துங்கனின் சேர, பாண்டிய வெற்றி சின்னமாக எடுக்கப்பட்ட கீழை ராஜகோபுரத்தில் எட்டுத் திக்கிலும் கபோதத்தின் கீழே கால் பலகையின் மேல் பரதக் கலையின் கரணங்கள் காட்டும் பாவைகளின் சிற்பங்கள் உள்ளன. தஞ்சையிலும், தில்லையிலும் புடைப்புச் சிற்பமாக உள்ள இப்பாவைகள் திருவாரூரில் முழுச் சிற்பங்களாக உள்ளன.

அஜபா கல்பம்

திருவாரூர் மூலவர் தியாகேசர் (சோமாஸ்கந்தமூர்த்தி) ஆடும் நடனம் அஜபா. ஜபமல்லாது இயற்கையாக நிகழும் தியானம் எனப் பொருள். திருவாரூர் கோவிலில் இருக்கும் சோமாஸ்கந்தர் திருமாலின் இதயத்தில் இந்நடனம் புரிவதாகக் கருதப்படுகிறது. இதனைப் பற்றி விளக்கும் வடமொழி நூல் அஜபா கல்பம். திருவாரூர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் போது 'அஜபா நடன விழா' நிகழ்கிறது. இந்நடனம் பற்றிய தஞ்சை நாயக்கர் காலத்தின் பொ.யு. 14-ம் நூற்றாண்டு கல்வெட்டு குறிப்புகள் கிடைத்துள்ளன.

பார்க்க: அஜபாகல்பம்

தஞ்சை தளிச்சேரி

விஷ்ணு சக்கராயுதத்திற்காக விநாயகர் முன் ஆடும் நடனம்

ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலில் ஆடும் ஆடற்மகளிர் நாநூறு பேரை சோழ மண்டலத்திலிருந்து தேர்ந்தெடுத்தான். இதில் 51 ஆடற்மகளிர் திருவாரூர் கோவிலைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சிலரது பெயரும் கல்வெட்டில் கிடைத்துள்ளது. மழலைச் சிலம்பு ஆரா அமுது, நாராயணி, ஜோதி விளக்கு, வீதிவிடங்கி, பூலோக மாணிக்கம், அனவரத சுந்தரி, ராஜசூளாமணி, வில்லவன் மாதேவி ஆகிய ஆடற்மகளிர் திருவாரூர் கோவில்களான பூங்கோவில், அரநெறி, அருமொழி ஈஸ்வரம், உலகீஸ்வரம், பிரம்மீஸ்வரம், திருமண்டளி கோவிலைச் சேர்ந்தவர்கள்.

பார்க்க: தஞ்சை தளிச்சேரி

தேவாசிரியன் ஓவியங்கள்

தேவாசிரியன் மண்டபத்தில் காணப்படும் ஓவியங்களிலும் நடனக்காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. தியாகராஜரின் புராணக்கதையை கூறும் வண்ணம் நடனக்காட்சியும் உள்ளது. இவ்வோவியங்கள் பொ.யு. 18-ம் நூற்றாண்டில் தஞ்சை மராட்டியர்கள் காலத்தில் வரையப்பட்டவை. முசுகுந்தன் அயோத்தியில் இருக்க அவன் முன் நடனக்காட்சி இசை தாளங்களுடன் காட்டப்பட்டுள்ளது. இதே போல் தேவமங்கையரன ஊர்வசி, திலோத்தமை, ரம்பை, மேனகை ஆடும் காட்சி உள்ளது. அவர்களின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. திருவாரூர் கோவிலிலும், வீதியிலும் நிகழும் நடனன்களின் பெயர்களால நட்டுவனார்களின் நட்டுவாங்கம், முட்டுக்காரர்களின் தாளம் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.

பார்க்க: திருவாரூர் தேவாசிரியன் மண்டபம் ஓவியங்கள்

நூல்கள்

தஞ்சை மராட்டியர் மன்னர் சாஹோஜி காலத்தில் நாட்டிய நாடக நூல்களான 'பல்லக்கி சேவா ப்ரபந்தம்', 'சங்கர காளீ நடன சம்வாதம்' இயற்றப்பட்டுள்ளன. பல்லக்கி சேவா பிரபந்தம் தெலுங்கு மொழியில் இசையையும், ஆடலையும் மையமாகக் கொண்டு ஆரூர் தியாகேசர் பெருமைகளைப் பாடும் நூல், சங்கர காளீ சம்வாதம் மராட்டிய மொழியில் இயற்றப்பட்ட நூலின் சுவடி தெலுங்கு லிபியில் கிடைக்கிறது. சங்கரனுக்கும், பார்வதிக்கும் நடந்த நடன போட்டியை விளக்கும் நூல்.

பார்க்க: பல்லக்கி சேவா பிரபந்தம், சங்கர காளீ சம்வாதம்

உசாத்துணை

  • திருவாரூர் திருக்கோவில் டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன்

அடிக்குறிப்புகள்

  1. அணுக்க விஜயம் நூல் பூங்கோயில் தியாகேசர் பற்றி பூங்கோயில் நம்பியால் பாடப்பட்டது.

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.