பாசி நிலை: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(; Added info on Finalised date) |
||
| Line 21: | Line 21: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|10-Jul-2025, 10:46:20 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 03:44, 11 July 2025
பாசி நிலை உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. நீரிடைப் பாசி போல நெருங்கியும் விலகியும் இருவகை மறவரும் மோதும் போர் ஆதலின் பாசிநிலை எனப் பெற்றது.
பார்க்க : நொச்சித்திணையின் மறனுடைப் பாசி
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் உழிஞை மறவர்கள் தம் பகைவராகிய நொச்சியாரின் வலி அழியும்படி அவர்கள் அகழியிடத்தே போர் புரிந்தது பாசி நிலை என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
அடங்காதார் மிடல் சாயக்
கிடங்கிடைப் போர் மலைந்தன்று(கொளு 6.17)
வெண்பா
நாவாயும் தோணியும் மேல் கொண்டு நள்ளாதார்
ஓவார் விலங்கி உடலவும் - பூ ஆர்
அகழி பரந்து ஒழுகும் செங்குருதிச் சேற்றுப்
பகழிவாய் ஆழ்ந்தார் பலர் (111)
பொருள்: பகைவராகிய நொச்சி மறவர் ஒழிவில்லாமல், ஓடம், மரத்தோணி ஆகியவற்றின் மேல் ஏறிக் கொண்டு, போர்மேல் வரும் உழிஞை மறவரைத் தடுக்கின்றனர்; சினக்கின்றனர். உழிஞை மறவர் பலர் கிடங்கிடத்தே குருதிச் சேற்றிலே, அப்பகைவர் எய்த அம்புகளால் இறந்தனர்.
உசாத்துணை
உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jul-2025, 10:46:20 IST