under review

ஏ. கே. செட்டியார்: Difference between revisions

From Tamil Wiki
(Inserted READ ENGLISH template link to English page)
(changed template text)
Line 66: Line 66:
*[https://tamilandvedas.com/2016/12/29/%e0%ae%8f-%e0%ae%95%e0%af%87-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae-2/ ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 2]
*[https://tamilandvedas.com/2016/12/29/%e0%ae%8f-%e0%ae%95%e0%af%87-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae-2/ ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 2]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{finalised}}
{{Finalised}}

Revision as of 13:38, 15 November 2022

To read the article in English: A. K. Chettiyar. ‎

ஏ.கே. செட்டியார்

ஏ. கே. செட்டியார் (அண்ணாமலை கருப்பன் செட்டியார்; 1911-1983), தமிழில் பயண இலக்கியம், ஆவணப் படம் என்று பல தளங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். காந்தி பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்தவர். 'உலகம் சுற்றிய தமிழன்’ என்று போற்றப்பட்டவர். காந்தியக் கொள்கைகளைப் பரப்புவதற்காக 'குமரி மலர்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தியவர்.

பிறப்பு, கல்வி

அண்ணாமலை கருப்பன் செட்டியார் என்னும் இயற்பெயர் கொண்ட ஏ. கே. செட்டியார், காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூரில் நவம்பர் 3, 1911-ல், அ ராம. அண்ணாமலை செட்டியாருக்குப் பிறந்தார். அவரது இளமைப்பருவம் செட்டிநாட்டிலும் திருவண்ணாமலையிலும் கழிந்தது. பள்ளிப்படிப்பை திருவண்ணாமலையில் நிறைவு செய்தார்.

பள்ளியில் படிக்கும்போதே காந்தியின் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தார். படிக்கும் போதே சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் ஏ. கே. செட்டியார் குடும்ப வணிகத்தை மேற்பார்வை செய்வதற்காக பர்மா சென்றார். அங்கு சில வருடங்கள் நகரத்தார்கள் சார்பில் வெளிவந்த 'தனவணிகன்’ இதழுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1935-ல் ஜப்பானுக்குச் சென்று இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில் புகைப்படக்கலை பயின்றார். அதன் பிறகு சிறப்புப் பயிற்சிக்காக 1937-ல், நியூயார்க் சென்றார். அங்கு போட்டோகிராபிகல் இன்ஸ்டிட்டியூட்டில் ஓராண்டு பயின்று புகைப்படக் கலையில் சிறப்பு டிப்ளமோ பட்டம் பெற்றார்.

ஏ.கே. செட்டியாரின் குமரி மலர்

இலக்கிய வாழ்க்கை

தமிழகம் திரும்பிய ஏ.கே. செட்டியார் தனது குடும்பம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டார். ஏ.கே. செட்டியாரின் முதல் மற்றும் ஒரே சிறுகதையான, 'சாரதாம்பாள் - சிறு தமாஷ்’ என்ற கதை, 1928-ல், ஆனந்தவிகடன் இதழில் வெளியானது. அதன் பிறகு சக்தி, ஆனந்தவிகடன், ஹனுமான், ஜோதி, ஹிந்துஸ்தான் எனப் பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியிருக்கும் ஏ. கே. செட்டியார், சிறுகதை முயற்சிகளில் ஈடுபடவில்லை. இலக்கியம் மீது ஆர்வமற்றவராக இருந்தார், குமரி மலர் இதழில் புனைவுகள் எதையும் வெளியிடவுமில்லை.

குமரி மலர்

அக்காலத்தில் செட்டிநாட்டில் புகழ்பெற்றிருந்த 'குமரன்', 'ஊழியன்', 'தமிழ்நாடு', 'நவசக்தி' போன்ற இதழ்களால் ஏ.கே. செட்டியார் ஈர்க்கப்பட்டார். மக்களிடையே காந்தியத் தத்துவங்களைப் பரப்புவதையும், பொது அறிவைப் பரவலாகச் செய்வதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு, ஏப்ரல் 1943-ல், குமரி மலர் மாத இதழைத் தொடங்கினார். ஒரே மாதிரியான முகப்புப் படத்தில் வண்ணங்கள் மட்டும் இதழுக்கு இதழ் மாற்றப்பட்டு இவ்விதழ் வெளிவந்தது. ராஜாஜி, கல்கி உள்ளிட்ட பலரது கட்டுரைகள் குமரி மலரில் வெளியாகின. 'அழகின் சிரிப்பை' எழுத பாரதிதாசனை ஊக்குவித்து, அதை குமரி மலரில் வெளியிட்டவர் ஏ. கே. செட்டியார்தான். பாரதியின் அரிய படைப்புகளைத் தேடிக் கண்டறிந்து வெளியிட்டார். (பார்க்க குமரி மலர்)

இந்தியப் பயணங்கள் - ஏ.கே. செட்டியார்
பயணக் கட்டுரை நூல்கள்

உலக நாடுகள் பலவற்றிற்கும் பயணம் மேற்கொண்டிருந்த ஏ.கே. செட்டியார், தனது பயண நூல்கள் அனைத்தையும் ’குமரி மலர்’ பதிப்பு மூலம் வெளியிட்டார். 1850-1925 காலப் பகுதியில், பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து  'பயணக் கட்டுரைகள்' என்ற தலைப்பில் ஆறு நூல்களாக வெளியிட்டார். பயணக் கும்மி, ஜட்கா சவாரி, பஸ் பயணம், கப்பல் வண்டி, ரயில் வண்டி போன்ற புதிய வாகனங்களின் வருகை, மின்சார சாதனங்களின் நுழைவு, அவை மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்க்கங்கள் போன்றவை இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அக்காலத்தில் நிலவிய பிளேக், காலரா போன்ற நோய்களின் பரவல் பற்றிய கட்டுரைகளும் காணப்படுகின்றன

ஏ.கே. செட்டியாரின் தொகுப்பு நூல்களில் முக்கியமானது 'தமிழ்நாட்டுப் பயணக் கட்டுரைகள்'. இது 1968-ல் புத்தமாக வெளிவந்தது. இது சுமார் 300 பக்கங்கள் கொண்டது. ஏ.கே.செட்டியாரின் பயண நூல்கள் எளிமையும், தெளிவும் கொண்டவை.

ஏ. கே. செட்டியார் எழுதிய மொத்த நூல்கள் 17. முதல் நூல் "ஜப்பான்'. இறுதியாக அவர் வெளியிட்ட நூல் 'உணவு’. ஜப்பான் நாட்டில் புகைப்படக் கலையைப் படிப்பதற்காகத் தங்கியிருந்த இரண்டு ஆண்டுகளில் கிடைத்த அனுபவத்தைக்கொண்டு எழுதிய நூல் தான் 'ஜப்பான்'. இது முதலில் 'தனவணிகன்’ இதழில் தொடராக வெளிவந்து, பின் நூலாக வெளிவந்தது.

ஏ. கே. செட்டியாரின் காந்தி (தமிழில்)
ஏ. கே. செட்டியாரின் காந்தி தமிழ் ஆவணப் படம் வெளியீட்டுக் குறிப்பு

காந்தி ஆவணப்படம்

ஏ.கே.செட்டியாரின் சாதனைகளில் முக்கியமானதாக காந்தி பற்றிய ஆவணப்படம் கருதப்படுகிறது

பார்க்க : ஏ. கே. செட்டியாரின் காந்தி ஆவணப்படம்

மறைவு

ஏ.கே. செட்டியார், வயது மூப்புக் காரணமாக, செப்டம்பர் 10, 1983-ல் சென்னையில் காலமானார்.

ஆவணம்

  • ஏ. கே. செட்டியாரின் குமரி மலர் இதழ்கள் சில தமிழ் இணைய நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
  • ஏ.கே.செட்டியாரின் காந்தி பற்றிய ஆவணப்படத்தின் பிரதியும் பாதுகாக்கப்பட்டுள்ளது. யூ-ட்யூப் தளத்தில் காணக் கிடைக்கிறது.

இலக்கிய/வரலாற்று இடம்

எழுத்தாளர், இதழாளர், புகைப்படக் கலைஞர், ஆவணப்படத் தயாரிப்பாளர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்தவர் ஏ.கே. செட்டியார். தமிழில் பொதுஅறிவு, அறிவியல், பயணம் ஆகியவை சார்ந்த நூல்களை வெளியிட்ட முன்னோடிப் பதிப்பாளர்களுள் ஒருவராக அவர் மதிக்கப்படுகிறார்.

முதன் முதலில் தமிழில் மிக விரிவான ஆவணப் படம் ஒன்றை எடுத்த முன்னோடி ஏ. கே. செட்டியார்தான். காந்தி ஆய்வுகளில் ஏ.கே.செட்டியாரின் ஆவணப்படம் முதன்மையான ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஜப்பான் - ஏ.கே. செட்டியாரின் முதல் பயணக் கட்டுரை நூல் - 1936
ஏ. கே. செட்டியார் ’குமரி மலர்’ மூலம் பதிப்பித்த நூல்கள்

நூல்கள்

தொகுத்த நூல்கள்
  • புண்ணியவான் காந்தி
  • பண்பு
  • கொய்த மலர்கள்
  • உணவு
பதிப்பித்த நூல்கள்
  • ஜப்பான் கட்டுரைகள்
  • உலகம் சுற்றும் தமிழன்
  • பிரயாண நினைவுகள்
  • பயணக் கட்டுரைகள்
  • அண்டை நாடுகள்
  • மலேயா முதல் கனடா வரை
  • கரிபியன் கடலும் கயானாவும்
  • கயானா முதல் காஸ்பியன் கடல் வரை
  • அமெரிக்க நாட்டிலே
  • ஐரோப்பா வழியாக
  • குடகு
  • இட்ட பணி
  • திரையும் வாழ்வும்

உசாத்துணை


✅Finalised Page