ஹென்றி பவர்: Difference between revisions
(Finalised) |
(Corrected year suffix text; ; Added info on Finalised date) |
||
| Line 7: | Line 7: | ||
ஹென்றி பவர் ஜனவரி 17, 1813-ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில். பிரான்சுவா போவா (Francois Bouvier) என்னும் பிரெஞ்சு போர்வீரருக்கும் இந்தியப் பெண்ணான ஜஸ்டினாவுக்கும் மகனாகப் பிறந்தார். | ஹென்றி பவர் ஜனவரி 17, 1813-ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில். பிரான்சுவா போவா (Francois Bouvier) என்னும் பிரெஞ்சு போர்வீரருக்கும் இந்தியப் பெண்ணான ஜஸ்டினாவுக்கும் மகனாகப் பிறந்தார். | ||
பவர் ஜனவரி 17, | பவர் ஜனவரி 17, 1813-ல் பிறந்ததாக ஜார்ஜ் கோட்டையில் உள்ள தூய மேரி ஆலயப் பதிவேடு குறிப்பிடுகிறது. ஆனால் பவர் குடும்பத்தார் டிசம்பர் 18, 1812 என்ற தேதியையே பவரின் பிறந்த நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். பாளையங்கோட்டையில் உள்ள பவர் கல்லறையில் டிசம்பர் 18, 1812-ல் பிறந்ததாகவும் செப்டம்பர் 2, 1885-ல் இறந்ததாகவும் பொறிக்கப்பட்டுள்ளது என பேராசிரியர் சிட்னி சுதந்திரன் தன் நூலில் குறிப்பிடுகிறார். | ||
ஆங்கிலேயரிடம் போர்க்கைதியாக பிடிபட்ட போவா விரைவிலேயே பிரான்ஸ் திரும்பிவிட பவர் அனாதை ஆனார். ராணுவ அனாதை விடுதியில் தங்கி தொடக்கக் கல்வியை பயின்றார். சென்னை ஆளுநரின் உதவியாளர் கர்னல் ஜான் கார்ஃப்ரே (Col. John Carfrae) உதவியால் கல்வி கற்றார். 1832-ம் ஆண்டு கர்னல் கார்ஃப்ரேயுடன் இங்கிலாந்துக்குச் சென்ற பவர். 1833-ல் லண்டன் மிஷனரி சங்கம் நடத்திய மத ஊழியர் பயிற்சிசாலையில் சேர்ந்து கல்வி கற்றார். 1837-ம் ஆண்டு இந்தியா திரும்பினார். | ஆங்கிலேயரிடம் போர்க்கைதியாக பிடிபட்ட போவா விரைவிலேயே பிரான்ஸ் திரும்பிவிட பவர் அனாதை ஆனார். ராணுவ அனாதை விடுதியில் தங்கி தொடக்கக் கல்வியை பயின்றார். சென்னை ஆளுநரின் உதவியாளர் கர்னல் ஜான் கார்ஃப்ரே (Col. John Carfrae) உதவியால் கல்வி கற்றார். 1832-ம் ஆண்டு கர்னல் கார்ஃப்ரேயுடன் இங்கிலாந்துக்குச் சென்ற பவர். 1833-ல் லண்டன் மிஷனரி சங்கம் நடத்திய மத ஊழியர் பயிற்சிசாலையில் சேர்ந்து கல்வி கற்றார். 1837-ம் ஆண்டு இந்தியா திரும்பினார். | ||
| Line 21: | Line 21: | ||
ஜான் பவர் தொடக்கத்தில் லண்டன் மிஷன் அமைப்பில் போதகராக பணியாற்றினார். 1842ல் லண்டன் மிஷனில் இருந்து எஸ்.பி.ஜி (நற்செய்தி பரப்பு சங்கம்) அமைப்பில் சேர்ந்து [[கால்டுவெல்]]லுடன் இணைந்து பணியாற்றினார் 1845ல் எஸ்.பி.ஜி அமைப்பின் அருட்பணியாளராக திருப்பொழிவு செய்யப்பட்டார். தஞ்சாவூர் அருகே வேதியர்புரம் என்னுமிடத்தில் இறையியல் கல்லூரியை நிறுவினார். | ஜான் பவர் தொடக்கத்தில் லண்டன் மிஷன் அமைப்பில் போதகராக பணியாற்றினார். 1842ல் லண்டன் மிஷனில் இருந்து எஸ்.பி.ஜி (நற்செய்தி பரப்பு சங்கம்) அமைப்பில் சேர்ந்து [[கால்டுவெல்]]லுடன் இணைந்து பணியாற்றினார் 1845ல் எஸ்.பி.ஜி அமைப்பின் அருட்பணியாளராக திருப்பொழிவு செய்யப்பட்டார். தஞ்சாவூர் அருகே வேதியர்புரம் என்னுமிடத்தில் இறையியல் கல்லூரியை நிறுவினார். | ||
பவர் 1864 | பவர் 1864-ம் ஆண்டு சென்னை வேப்பேரியில் இருந்த தூய பவுல் ஆலயத்தின் குருவாக பணியாற்றினார். 1872-ம் ஆண்டு திருச்சிக்கு இறைப்பணியாற்றச் சென்றார். அதன்பின் திருநெல்வேலியில் மதப்பணியாற்றினார். மீண்டும் வேப்பேரியிலேயே மதப்பணியாற்ற திரும்பிவந்தார். | ||
1877ல் காண்டர்பரி ஆர்ச்பிஷப் பவருக்கு இறையியல் முனைவர் (Doctor of Divinity) என்னும் பட்டத்தை வழங்கினார். பவர் [[ஜான் ஸ்கட்டர்]], [[ஜான் டக்கர்]] போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றினார். | 1877ல் காண்டர்பரி ஆர்ச்பிஷப் பவருக்கு இறையியல் முனைவர் (Doctor of Divinity) என்னும் பட்டத்தை வழங்கினார். பவர் [[ஜான் ஸ்கட்டர்]], [[ஜான் டக்கர்]] போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றினார். | ||
| Line 34: | Line 34: | ||
பவர் தஞ்சாவூருக்கு அருகே வேதியர்புரம் என்னும் ஊரை உருவாக்கி, அங்கே ஓர் இறையியல் கல்வி நிலையத்தை தொடங்கினார். | பவர் தஞ்சாவூருக்கு அருகே வேதியர்புரம் என்னும் ஊரை உருவாக்கி, அங்கே ஓர் இறையியல் கல்வி நிலையத்தை தொடங்கினார். | ||
1871 | 1871-ம் ஆண்டு பவர் சென்னை பல்கலை கழகத்தின் சிறப்பு உறுப்பினர் பதவியை வகித்தார். | ||
பவர் 1868 | பவர் 1868-ம் ஆண்டு சீவகசிந்தாமணியின் முதல் பகுதியான நாமகள் இலம்பகத்தை, நச்சினார்க்கினியர் உரையுடனும், ஆங்கில முன்னுரையுடனும் வேப்பேரியில் இருந்த எஸ்.பி.சி.கே அச்சகத்தின் வழியாக வெளியிட்டார். | ||
பவர் பகவத் கீதை, நன்னூல் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். | பவர் பகவத் கீதை, நன்னூல் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். | ||
| Line 45: | Line 45: | ||
== மறைவு == | == மறைவு == | ||
பவர் செப்டெம்பர் 2, | பவர் செப்டெம்பர் 2, 1885-ல் மறைந்தார். அவருடைய கல்லறை பாளையங்கோட்டை மிலிடரி லைனில் உள்ள கிறிஸ்து ஆலய கல்லறைத்தோட்டத்தில் உள்ளது. | ||
== வாழ்க்கை வரலாறு == | == வாழ்க்கை வரலாறு == | ||
| Line 69: | Line 69: | ||
* புனித வேதாகமத்தின் வரலாறு | * புனித வேதாகமத்தின் வரலாறு | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|06-Nov-2024, 20:27:18 IST}} | |||
[[Category:கிறிஸ்தவ இறையியலாளர்]] | [[Category:கிறிஸ்தவ இறையியலாளர்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 01:03, 7 November 2024
ஹென்றி பவர் (ஜனவரி 17, 1813 - செப்டெம்பர் 2, 1885 ) (Henri Bower, ஹென்றி போவர்). கிறிஸ்தவ இறையியலாளர். கல்வியாளர். இந்தியாவில் தொடக்ககால கிறிஸ்தவ மதப்பணிகளை ஆவணப்படுத்திய எழுத்தாளர். சீர்திருத்தசபைகள் ஏற்றுக்கொண்ட பைபிளின் திருத்தப்பட்ட மொழியாக்கத்தை தலைமையேற்று நடத்தியவர்.
பிறப்பு, கல்வி
ஹென்றி பவர் ஜனவரி 17, 1813-ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில். பிரான்சுவா போவா (Francois Bouvier) என்னும் பிரெஞ்சு போர்வீரருக்கும் இந்தியப் பெண்ணான ஜஸ்டினாவுக்கும் மகனாகப் பிறந்தார்.
பவர் ஜனவரி 17, 1813-ல் பிறந்ததாக ஜார்ஜ் கோட்டையில் உள்ள தூய மேரி ஆலயப் பதிவேடு குறிப்பிடுகிறது. ஆனால் பவர் குடும்பத்தார் டிசம்பர் 18, 1812 என்ற தேதியையே பவரின் பிறந்த நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். பாளையங்கோட்டையில் உள்ள பவர் கல்லறையில் டிசம்பர் 18, 1812-ல் பிறந்ததாகவும் செப்டம்பர் 2, 1885-ல் இறந்ததாகவும் பொறிக்கப்பட்டுள்ளது என பேராசிரியர் சிட்னி சுதந்திரன் தன் நூலில் குறிப்பிடுகிறார்.
ஆங்கிலேயரிடம் போர்க்கைதியாக பிடிபட்ட போவா விரைவிலேயே பிரான்ஸ் திரும்பிவிட பவர் அனாதை ஆனார். ராணுவ அனாதை விடுதியில் தங்கி தொடக்கக் கல்வியை பயின்றார். சென்னை ஆளுநரின் உதவியாளர் கர்னல் ஜான் கார்ஃப்ரே (Col. John Carfrae) உதவியால் கல்வி கற்றார். 1832-ம் ஆண்டு கர்னல் கார்ஃப்ரேயுடன் இங்கிலாந்துக்குச் சென்ற பவர். 1833-ல் லண்டன் மிஷனரி சங்கம் நடத்திய மத ஊழியர் பயிற்சிசாலையில் சேர்ந்து கல்வி கற்றார். 1837-ம் ஆண்டு இந்தியா திரும்பினார்.
மொழியறிவு மிக்கவராக இருந்த பவர், கிரேக்கம், லத்தீன், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ், கன்னடம், இந்துஸ்தானி மொழிகளை அறிந்திருந்தார். சமணத்தையும் தமிழையும் சாஸ்திரம் புலவர் என்னும் சமண அறிஞரிடமிருந்து கற்றுக்கொண்டார்.
தனிவாழ்க்கை
ஹென்றி பவர் எம்மா டெய்லர் (Emma Taylor) என்ற பெண்ணை மே 9, 1838-ல் மணந்தார். அவர்களுக்கு அனா பவர் , ஜான் பவர் என்னும் இரண்டு குழந்தைகள் பிறந்தனர். எம்மா 1844-ம் ஆண்டு மறைந்தார். பவர் அதன் பின் எலிசா ஜெஸி பிளாக்கர் (Eliza Jessie Blacker) என்ற பெண்ணை மே 10, 1847-ல் மறுமணம் செய்தார். இவர்களுக்கு ஹென்றி பிரான்ஸிஸ் பவர், வில்லியம் லோன் பவர், பிரடிரிக் கார்டான் பவர், அலெக்ஸாண்டர் ஜார்ஜ் பவர், எம்மா எலிசா பவர், ராபர்ட் ஸ்டீபன் பவர் என ஆறு குழந்தைகள் பிறந்தனர்.
பவர் சென்னை, திருச்சி, தஞ்சை, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் மதப்பணியாளராக பணியாற்றினார். இறுதிக்காலத்தை குற்றாலத்தில் கழித்தார்.
மதப்பணி
ஜான் பவர் தொடக்கத்தில் லண்டன் மிஷன் அமைப்பில் போதகராக பணியாற்றினார். 1842ல் லண்டன் மிஷனில் இருந்து எஸ்.பி.ஜி (நற்செய்தி பரப்பு சங்கம்) அமைப்பில் சேர்ந்து கால்டுவெல்லுடன் இணைந்து பணியாற்றினார் 1845ல் எஸ்.பி.ஜி அமைப்பின் அருட்பணியாளராக திருப்பொழிவு செய்யப்பட்டார். தஞ்சாவூர் அருகே வேதியர்புரம் என்னுமிடத்தில் இறையியல் கல்லூரியை நிறுவினார்.
பவர் 1864-ம் ஆண்டு சென்னை வேப்பேரியில் இருந்த தூய பவுல் ஆலயத்தின் குருவாக பணியாற்றினார். 1872-ம் ஆண்டு திருச்சிக்கு இறைப்பணியாற்றச் சென்றார். அதன்பின் திருநெல்வேலியில் மதப்பணியாற்றினார். மீண்டும் வேப்பேரியிலேயே மதப்பணியாற்ற திரும்பிவந்தார்.
1877ல் காண்டர்பரி ஆர்ச்பிஷப் பவருக்கு இறையியல் முனைவர் (Doctor of Divinity) என்னும் பட்டத்தை வழங்கினார். பவர் ஜான் ஸ்கட்டர், ஜான் டக்கர் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
ஜெபப்புத்தக மொழியாக்கம்
ஆங்கிலிகன் சபையின் ஜெபப்புத்தகத்தை தமிழாக்கம் செய்யும் குழுவில் பவர் தலைமை வகித்தார்.
வேதாகம மொழியாக்கம்
பைபிள் தமிழில் சீகன்பால்கு , ஜோஹான் பிலிப் பப்ரிஷியஸ், இரேனியஸ், பீட்டர் பெர்சிவல் என பலரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சென்னை வேதாகம சங்கம் எல்லா சீர்திருத்த கிறிஸ்தவ சபைகளுக்கும் ஏற்புடையதாக ஒரு மொழிபெயர்ப்பை உருவாக்க எண்ணம் கொண்டது. அதற்காக 1853ல் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. பன்னிரண்டு பேர் அடங்கிய குழுவில் பவர் தலைமை வகித்தார். கால்டுவெல், சார்ஜெண்ட், திரேசி ஆகியோருடன் முத்தையா என்பவரும் இடம்பெற்றார். ஏப்ரல் 29, 1861-ல் மொழிபெயர்ப்பாளர்களின் முதற்கூடுகை கூடியது. ஏப்ரல் 12, 1869-ல் கூடிய இறுதி கூட்டத்தில் மொழியாக்கம் அறுதி செய்யப்பட்டது. 1869ல் வேப்பேரி டயோசீசன் அச்சகத்தில் அச்சுப்பணி தொடங்கியது. 5000 பிரதிகள் முதலில் அச்சிடப்பட்டன. முழு வேதாகமமும் 1871ல் மக்களுக்குக் கிடைத்தது. இந்த மொழியாக்கம் பவர் மொழியாக்கம் என்றே அழைக்கப்படுகிறது.
கல்விப்பணி
பவர் தஞ்சாவூருக்கு அருகே வேதியர்புரம் என்னும் ஊரை உருவாக்கி, அங்கே ஓர் இறையியல் கல்வி நிலையத்தை தொடங்கினார்.
1871-ம் ஆண்டு பவர் சென்னை பல்கலை கழகத்தின் சிறப்பு உறுப்பினர் பதவியை வகித்தார்.
பவர் 1868-ம் ஆண்டு சீவகசிந்தாமணியின் முதல் பகுதியான நாமகள் இலம்பகத்தை, நச்சினார்க்கினியர் உரையுடனும், ஆங்கில முன்னுரையுடனும் வேப்பேரியில் இருந்த எஸ்.பி.சி.கே அச்சகத்தின் வழியாக வெளியிட்டார்.
பவர் பகவத் கீதை, நன்னூல் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
பவர் வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களுடன் அணுக்கமான உறவு கொண்டிருந்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
பவர் கிறிஸ்தவ மார்க்கம் இந்து தேசத்தில் விருத்தியான சரித்திரம் என்னும் நூலில் தொடக்ககால கிறிஸ்தவ மதப்பணிகளை ஆவணப்படுத்தினார். நியாயப்பிரமாண விளக்கம், விசுவாசப்பிரமாண விளக்கம் போன்ற கிறிஸ்தவ இறையியல் விளக்க நூல்களை எழுதினார்
மறைவு
பவர் செப்டெம்பர் 2, 1885-ல் மறைந்தார். அவருடைய கல்லறை பாளையங்கோட்டை மிலிடரி லைனில் உள்ள கிறிஸ்து ஆலய கல்லறைத்தோட்டத்தில் உள்ளது.
வாழ்க்கை வரலாறு
- ஹென்றி பவரும் தமிழ் வேதாகமும் - பேரா. சிட்னி சுதந்திரன்
நூல்கள்
- கிறிஸ்தவ மார்க்கம் இந்து தேசத்தில் விருத்தியான சரித்திரம் 1879
- வேத அகராதி 1841
- நியாயப்பிரமாண விளக்கம் 1847
- விசுவாசப்பிரமாண விளக்கம் 1851
- இந்து மதத்துக்கும் பாப்பு மதத்துக்கும் இருக்கிற சம்பந்த விளக்கம் 1851
- பத மஞ்சரி 1852
- தர்மசாஸ்திர சாரம் 1857
- சாதிவித்தியாச விளக்கம் 1857
- பிரசங்க ரத்னாவளி 1875
உசாத்துணை
- ஹென்றி போவர்: மரித்தும் பேசுகிற தமிழறிஞர்!
- ஹென்றி பொவர் புன்னைவனம்
- புனித வேதாகமத்தின் வரலாறு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Nov-2024, 20:27:18 IST