ஜான் டக்கர்
ஜான் டக்கர் (1792-1873) (John Thomas Tucker) கிறிஸ்தவ இறைப்பணியாளர். சென்னையிலும் பின்னர் தூத்துக்குடி மாவட்டத்திலும் கிறிஸ்தவ இறைப்பணியாற்றினார். லண்டன் மிஷன் சொசைட்டியில் செயல்பட்டார். சென்னையில் இன்றுள்ள டக்கர் ஆலயத்தின் போதகராக பணியாற்றினார். இவருடைய சகோதரி சாரா டக்கர்.
பிறப்பு, கல்வி
ஜான் டக்கர் இங்கிலாந்தில் கெண்ட் மாநிலத்தில் சௌத்பரோ பகுதியில் 1792ல் பிறந்தார். சாரா டக்கர் இவருடைய சகோதரி.
இறைப்பணி
ஜான் டக்கர் 1832ல் குருப்பட்டம் பெற்று சென்னையில் லண்டன் மிஷன் அமைப்பின் இறைச் செய்தியாளராக பணியாற்றினார். தூத்துக்குடி மாவட்டத்தில் சர்ச் மிஷனரி சொசைட்டி (சி.எம்.எஸ்) அமைப்பின் சார்பில் பனைவிளை என்னும் ஊரில் ஏமி கார்மிக்கேலுடன் இணைந்து பணியாற்றினார். ஜான் டக்கர் கால்டுவெல்லுடன் இணைந்து தூத்துக்குடியில் இறைப்பணியாற்றினார்.
கல்விப்பணி
ஜான் டக்கர் பாளையங்கோட்டையில் தன் சகோதரி சாரா டக்கர் அளித்த பணத்தில் 1895-ல் சாரா டக்கர் பள்ளியை உருவாக்கினார். அது இப்போது சாரா டக்கர் கல்லூரியாக உள்ளது. தமிழகத்தின் முதல் பெண்கள் கல்லூரியாக அது கருதப்படுகிறது.
ஜான் டக்கர் சென்னை மண்ணடி பகுதியில் பணியாற்றிய ஆலயம் 1820-ல் கட்டப்பட்டது. அந்த ஆலயம் 1901-ல் விரிவாக்கிக் கட்டப்பட்டபோது அதற்கு ஜான் டக்கர் ஆலயம் என்று பெயரிடப்பட்டது.
மறைவு
ஜான் டக்கர் இங்கிலாந்தில் வெஸ்ட் ஹென்ட்ரெட் பகுதியி பெர்க்ஸ் ஊரில் ஜனவரி 16, 1873-ல் மறைந்தார்.
உசாத்துணை
- Ttcker-church-and-centenary-hall.
- Tucker Manuscripts- Documents
- REV. JOHN THOMAS TUCKER
- ஆக்ஸ்போர்ட் ரெபரன்ஸ் ஜான் டக்கர்
- தக்கர் காணொளி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Nov-2024, 20:13:47 IST