திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்: Difference between revisions
(Created page with "thumb|திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ( 1856) ராபர்ட் கால்டுவெல் எழுதிய மொழியியல் நூல். A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages என்ற தலைப்பில் ஆங்கிலத்...") |
|||
| Line 10: | Line 10: | ||
கிளாஸ்கோ பல்கலையில் மொழியியல் பயின்றவரான கால்டுவெல் தென்னிந்தியாவில் பேசப்பட்ட 9 மொழிகளை ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் கண்டார். இவற்றை திராவிட மொழிகள் என அடையாளப்படுத்தினார். ஏற்கனவே [[பிரான்ஸிஸ் வைட் எல்லிஸ்]] தென்னிந்திய மொழிகள் சம்ஸ்கிருதம் அல்லாத ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை, அவற்றை திராவிட மொழிகள் என்று சொல்லலாம் என அடையாளப்படுத்தியிருந்தார். கால்டுவெல் விரிவான மொழியியல் சான்றுகளின் அடிப்படையில் திராவிட மொழிகள் தங்களுக்கான தனித்த இலக்கணம் கொண்டவை என்று நிறுவினார். | கிளாஸ்கோ பல்கலையில் மொழியியல் பயின்றவரான கால்டுவெல் தென்னிந்தியாவில் பேசப்பட்ட 9 மொழிகளை ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் கண்டார். இவற்றை திராவிட மொழிகள் என அடையாளப்படுத்தினார். ஏற்கனவே [[பிரான்ஸிஸ் வைட் எல்லிஸ்]] தென்னிந்திய மொழிகள் சம்ஸ்கிருதம் அல்லாத ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை, அவற்றை திராவிட மொழிகள் என்று சொல்லலாம் என அடையாளப்படுத்தியிருந்தார். கால்டுவெல் விரிவான மொழியியல் சான்றுகளின் அடிப்படையில் திராவிட மொழிகள் தங்களுக்கான தனித்த இலக்கணம் கொண்டவை என்று நிறுவினார். | ||
== | இரண்டாம் பதிப்பில் கால்டுவெல் திராவிட மொழிக்குடும்பத்தில் 12 மொழிகள் உள்ளன என வகைப்படுத்துகிறார். தமிழ், மலையாளம் ,தெலுங்கு, கன்னடம், துளு, குடகு ஆகியவை திருந்திய மொழிகள். தோடர், கோடர், கோண்டு, கூயி , ஒராவன், ராஜ்மகால் ஆகியவை திருந்தா மொழிகள் என கால்டுவெல் கூறுகிறார். தன் நூலின் முதல்பதிப்பில் குடகு மொழி கன்னடத்தின் துணைமொழி என நினைத்திருந்தார். இரண்டாம்பதிப்பில் அது திருந்திய மொழி என வரையறை செய்தார். குருக் என்னும் மொழியை ஒராவன் மொழி என கால்டுவெல் குறிப்பிடுகிறார். | ||
கால்டுவெல் கனோரி என்னும் ஆப்ரிக்கமொழியுடன் திராவிடமொழிகளுக்கு இருக்கும் தொடர்பை குறிப்பிடுகிறார். லத்தீன் உள்ளிட்ட உலகமொழிகளில் திராவிட மொழியின் சொற்கள் இடம்பெற்றிருப்பதையும் குறிப்பிடுகிறார். | |||
இந்திய மொழிகள் அனைத்துக்கும் சம்ஸ்கிருதமே மூலமொழி என்னும் கருத்து திகழ்ந்திருந்த காலகட்டத்தில் கால்டுவெல்லின் இந்த ஆய்வுகள் ஆய்வுலகில் பெரிய திருப்புமுனையாகத் திகழ்ந்தன. | |||
== நூல் அமைப்பு == | |||
கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலின் அமைப்பு இதுவாகும் | |||
====== முன்னுரை ====== | |||
கால்டுவெல் தன் நூலில் ஏறத்தாழ 150 பக்கம் கொண்ட நீண்ட முன்னுரை ஒன்றை எழுதினார். இதில் திராவிடம் என்னும் சொல்லாட்சி, திராவிடமொழிகள் பற்றிய் வரையறை, திராவிடமொழிகளின் இலக்கணம் ஆகியவற்றையும் திராவிட நாகரீகத்தின் தனித்தன்மையையும் அதைப்பற்றிய சம்ஸ்கிருத நூல்களின் சான்றுகளையும் விரிவாகத் தொகுத்தளிக்கிறார். திராவிட மொழிகளில் முதன்மையான திருந்திய மொழி தமிழ் என்று கூறுகிறார். முன்னுரையில் தமிழிலக்கியங்களின் காலம் பற்றிய ஊகங்களை அளிக்கிறார். ஏழு காலகட்டங்களாக தமிழிலக்கியங்கள் உருவான காலத்தைப் பகுத்து அளிக்கிறார். இக்காலகட்டத்தில் சங்க இலக்கியங்கள் பதிப்பிக்கப்படவில்லை. பல முக்கியமான தமிழ் நூல்கள் பதிப்பில் இல்லை. ஆகவே கால்டுவெல்லின் இந்த பகுப்பு முறை ஒரு தொடக்கமுயற்சியாகவே கருதத்தக்கது. | |||
கால்டுவெல் தமிழிலக்கிய காலகட்டங்களை கால அடிப்படையில் அன்றி ஏழு அறிவு வட்டங்களாக பிரிக்கிறார். | |||
# சமணவட்டம்: தொல்காப்பியர் முதல் திருக்குறள் வரையிலான நூல்களை சமணர்களால் இயற்றப்பட்டவை என்று கருதும் கால்டுவெல் கிபி 9 முதல் 13 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை இவை என்கிறார் | |||
# தமிழ் இராமாயண வட்டம்: கம்பராமாயணத்தையும் அதனுடன் ஒப்பிடத்தக்க பிற நூல்களையும் சோழர் வரலாற்றுண்ட இணைத்து ஒரு காலக்கணிப்பை முன்வைக்கிறார். கிபி 13க்கு ப்பிறகு இந்த வட்டம் அமைகிறது | |||
# புதுப்பிக்கப்பட்ட சைவ வட்டம்: சைவத் திருமுறைகளின் காலம் | |||
# வைணவவட்டம்: வைணவநூல்களும் அவற்றுக்கான உரைநூல்களும் இணைந்த காலகட்டம் | |||
# புதுப்பிக்கப்பட்ட இலக்கிய வட்டம்: அதிவீரராமபாண்டியனின் நடைந்தம் முதல் சம்ஸ்கிருத நூல்களின் மொழியாக்கம் உள்ளிட்டவை உருவான ஒரு இடைக் காலகட்டம் இது. சிவஞானபோதம் போன்றநூல்களும் இந்தவட்டத்தைச் சேர்ந்தவை. சிற்றிலக்கியங்களின் காலம் இது | |||
# எதிர்பார்ப்பனிய வட்டம்: சித்தர்மரபின் பாடல்கள். திருமூலர் திருமந்திரம் போன்றவை. இவை பிராமணிய, வைதிக கருத்துக்களுக்கு எதிரானவை | |||
# சமகாலப்படைப்பாளிகள். பதினெட்டு, பத்தொன்பதாம்நூற்றாண்டின் படைப்பாளிகள். வீரமாமுனிவர், தாயுமானவர் போன்றவர்கள். நவீன அகராதிநூல்கள். இலக்கணநூல்கள். ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள். | |||
இந்த முன்னுரையில் கால்டுவெல் திராவிடமொழிகளின் எழுத்துக்கணக்குகள் பற்றி விரிவாக ஒப்பிட்டு ஆராய்கிறார் | |||
====== பொருளடக்கம் ====== | |||
* ஒலிகள்: திராவிடமொழிகளின் ஒலியமைப்பு பற்றிய ஆய்வு. அசைபிரித்தல், ஒலிமாற்றங்கள் ஆகியவை பேசப்படுகின்றன | |||
* வேர்ச்சொற்கள்: திராவிட மொழிகளிலுள்ள சொற்களின் வேர்பற்றிய ஆய்வுகள் | |||
* பெயர்ச்சொல்: பால்.எண்,வேற்றுமை பற்றிய ஆய்வுகள் | |||
* எண்: எண் பெயர்கள் எண்ணிக்கை கணக்குகள் | |||
* இடப்பெயர்: தமிழ் உள்ளிட்ட மொழிகளின் இடப்பெயர்கள், ஆகுபெயர்கள் பற்றிய ஆய்வு | |||
* வினைச்சொல் : திராவிடமொழிகளில் தன்வினை, பிறவினை போன்றவை அமைந்திருக்கும் முறை | |||
* சொல்லொற்றுமை: திராவிட மொழிகளில் ஒரே சொற்கள் அமைந்திருக்கும் விதம் | |||
====== பின்னிணைப்பு ====== | |||
92 பக்கங்கள் கொண்ட விரிவான பின்னிணைப்பை ஏழு தலைப்புகளிலாக கால்டுவெல் அளித்துள்ளார் | |||
# பிராகுயி மற்றும் சிறிய திராவிட மொழிகள் | |||
# கோவரின் தென்னிந்திய நாட்டுப்புறப் பாடல்தொகுப்பிலுள்ள மொழியியல் குறிப்புகள் | |||
# சுந்தரபாண்டியன் பற்றிய குறிப்புகள் | |||
# தென்னிந்திய பறையர்கள் திராவிடர்களா எனும் ஆய்வு | |||
# திராவிடர்களின் உடலமைப்பு | |||
# திராவிடர்களின் தொல்சமயம் | |||
== அறிவியக்க இடம் == | |||
* [https://archive.org/details/comparativegramm00caldrich/page/ii/mode/2up A comparative grammar of the Dravidian or South-Indian family of languages இணையநூலகம்] | * [https://archive.org/details/comparativegramm00caldrich/page/ii/mode/2up A comparative grammar of the Dravidian or South-Indian family of languages இணையநூலகம்] | ||
Revision as of 17:26, 31 October 2024
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ( 1856) ராபர்ட் கால்டுவெல் எழுதிய மொழியியல் நூல். A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. தென்னிந்தியாவில் பேசப்பட்ட மொழிகளின் இலக்கண அமைப்பை ஒப்பிட்டு அவை ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கால்டுவெல் இந்நூலில் நிறுவுகிறார். அவற்றை திராவிட மொழிகள் என்று அடையாளப்படுத்துகிறார். பின்னாளில் தென்னிந்தியாவில் திராவிட அரசியல்பார்வை உருவாக அடித்தளமிட்ட நூல் இது.
எழுத்து வெளியீடு
ராபர்ட் கால்டுவெல் A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் இந்நூலை எழுதினார். இதன் முதல்பதிப்பு 1956ல் வெளிவந்தது. இரண்டாவது திருத்தியபதிப்பு லண்டனில் உள்ள டர்ப்னர் அண்ட் கோ நிறுவனத்தாரால் 1875 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின் தொடர்ச்சியாக ஆய்வுப்பதிப்புகள் பல வெளியாகியுள்ளன.
இந்நூலை தமிழில் காழி. கண்ணுசாமிப்பிள்ளை, கா.அப்பாத்துரை ஆகியோர் 1941ல் முதலில் மொழியாக்கம் செய்தனர். பின்னர் பல மொழியாக்கங்கள் வெளியாகியுள்ளன.
உள்ளடக்கம்
கிளாஸ்கோ பல்கலையில் மொழியியல் பயின்றவரான கால்டுவெல் தென்னிந்தியாவில் பேசப்பட்ட 9 மொழிகளை ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் கண்டார். இவற்றை திராவிட மொழிகள் என அடையாளப்படுத்தினார். ஏற்கனவே பிரான்ஸிஸ் வைட் எல்லிஸ் தென்னிந்திய மொழிகள் சம்ஸ்கிருதம் அல்லாத ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை, அவற்றை திராவிட மொழிகள் என்று சொல்லலாம் என அடையாளப்படுத்தியிருந்தார். கால்டுவெல் விரிவான மொழியியல் சான்றுகளின் அடிப்படையில் திராவிட மொழிகள் தங்களுக்கான தனித்த இலக்கணம் கொண்டவை என்று நிறுவினார்.
இரண்டாம் பதிப்பில் கால்டுவெல் திராவிட மொழிக்குடும்பத்தில் 12 மொழிகள் உள்ளன என வகைப்படுத்துகிறார். தமிழ், மலையாளம் ,தெலுங்கு, கன்னடம், துளு, குடகு ஆகியவை திருந்திய மொழிகள். தோடர், கோடர், கோண்டு, கூயி , ஒராவன், ராஜ்மகால் ஆகியவை திருந்தா மொழிகள் என கால்டுவெல் கூறுகிறார். தன் நூலின் முதல்பதிப்பில் குடகு மொழி கன்னடத்தின் துணைமொழி என நினைத்திருந்தார். இரண்டாம்பதிப்பில் அது திருந்திய மொழி என வரையறை செய்தார். குருக் என்னும் மொழியை ஒராவன் மொழி என கால்டுவெல் குறிப்பிடுகிறார்.
கால்டுவெல் கனோரி என்னும் ஆப்ரிக்கமொழியுடன் திராவிடமொழிகளுக்கு இருக்கும் தொடர்பை குறிப்பிடுகிறார். லத்தீன் உள்ளிட்ட உலகமொழிகளில் திராவிட மொழியின் சொற்கள் இடம்பெற்றிருப்பதையும் குறிப்பிடுகிறார்.
இந்திய மொழிகள் அனைத்துக்கும் சம்ஸ்கிருதமே மூலமொழி என்னும் கருத்து திகழ்ந்திருந்த காலகட்டத்தில் கால்டுவெல்லின் இந்த ஆய்வுகள் ஆய்வுலகில் பெரிய திருப்புமுனையாகத் திகழ்ந்தன.
நூல் அமைப்பு
கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலின் அமைப்பு இதுவாகும்
முன்னுரை
கால்டுவெல் தன் நூலில் ஏறத்தாழ 150 பக்கம் கொண்ட நீண்ட முன்னுரை ஒன்றை எழுதினார். இதில் திராவிடம் என்னும் சொல்லாட்சி, திராவிடமொழிகள் பற்றிய் வரையறை, திராவிடமொழிகளின் இலக்கணம் ஆகியவற்றையும் திராவிட நாகரீகத்தின் தனித்தன்மையையும் அதைப்பற்றிய சம்ஸ்கிருத நூல்களின் சான்றுகளையும் விரிவாகத் தொகுத்தளிக்கிறார். திராவிட மொழிகளில் முதன்மையான திருந்திய மொழி தமிழ் என்று கூறுகிறார். முன்னுரையில் தமிழிலக்கியங்களின் காலம் பற்றிய ஊகங்களை அளிக்கிறார். ஏழு காலகட்டங்களாக தமிழிலக்கியங்கள் உருவான காலத்தைப் பகுத்து அளிக்கிறார். இக்காலகட்டத்தில் சங்க இலக்கியங்கள் பதிப்பிக்கப்படவில்லை. பல முக்கியமான தமிழ் நூல்கள் பதிப்பில் இல்லை. ஆகவே கால்டுவெல்லின் இந்த பகுப்பு முறை ஒரு தொடக்கமுயற்சியாகவே கருதத்தக்கது.
கால்டுவெல் தமிழிலக்கிய காலகட்டங்களை கால அடிப்படையில் அன்றி ஏழு அறிவு வட்டங்களாக பிரிக்கிறார்.
- சமணவட்டம்: தொல்காப்பியர் முதல் திருக்குறள் வரையிலான நூல்களை சமணர்களால் இயற்றப்பட்டவை என்று கருதும் கால்டுவெல் கிபி 9 முதல் 13 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை இவை என்கிறார்
- தமிழ் இராமாயண வட்டம்: கம்பராமாயணத்தையும் அதனுடன் ஒப்பிடத்தக்க பிற நூல்களையும் சோழர் வரலாற்றுண்ட இணைத்து ஒரு காலக்கணிப்பை முன்வைக்கிறார். கிபி 13க்கு ப்பிறகு இந்த வட்டம் அமைகிறது
- புதுப்பிக்கப்பட்ட சைவ வட்டம்: சைவத் திருமுறைகளின் காலம்
- வைணவவட்டம்: வைணவநூல்களும் அவற்றுக்கான உரைநூல்களும் இணைந்த காலகட்டம்
- புதுப்பிக்கப்பட்ட இலக்கிய வட்டம்: அதிவீரராமபாண்டியனின் நடைந்தம் முதல் சம்ஸ்கிருத நூல்களின் மொழியாக்கம் உள்ளிட்டவை உருவான ஒரு இடைக் காலகட்டம் இது. சிவஞானபோதம் போன்றநூல்களும் இந்தவட்டத்தைச் சேர்ந்தவை. சிற்றிலக்கியங்களின் காலம் இது
- எதிர்பார்ப்பனிய வட்டம்: சித்தர்மரபின் பாடல்கள். திருமூலர் திருமந்திரம் போன்றவை. இவை பிராமணிய, வைதிக கருத்துக்களுக்கு எதிரானவை
- சமகாலப்படைப்பாளிகள். பதினெட்டு, பத்தொன்பதாம்நூற்றாண்டின் படைப்பாளிகள். வீரமாமுனிவர், தாயுமானவர் போன்றவர்கள். நவீன அகராதிநூல்கள். இலக்கணநூல்கள். ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள்.
இந்த முன்னுரையில் கால்டுவெல் திராவிடமொழிகளின் எழுத்துக்கணக்குகள் பற்றி விரிவாக ஒப்பிட்டு ஆராய்கிறார்
பொருளடக்கம்
- ஒலிகள்: திராவிடமொழிகளின் ஒலியமைப்பு பற்றிய ஆய்வு. அசைபிரித்தல், ஒலிமாற்றங்கள் ஆகியவை பேசப்படுகின்றன
- வேர்ச்சொற்கள்: திராவிட மொழிகளிலுள்ள சொற்களின் வேர்பற்றிய ஆய்வுகள்
- பெயர்ச்சொல்: பால்.எண்,வேற்றுமை பற்றிய ஆய்வுகள்
- எண்: எண் பெயர்கள் எண்ணிக்கை கணக்குகள்
- இடப்பெயர்: தமிழ் உள்ளிட்ட மொழிகளின் இடப்பெயர்கள், ஆகுபெயர்கள் பற்றிய ஆய்வு
- வினைச்சொல் : திராவிடமொழிகளில் தன்வினை, பிறவினை போன்றவை அமைந்திருக்கும் முறை
- சொல்லொற்றுமை: திராவிட மொழிகளில் ஒரே சொற்கள் அமைந்திருக்கும் விதம்
பின்னிணைப்பு
92 பக்கங்கள் கொண்ட விரிவான பின்னிணைப்பை ஏழு தலைப்புகளிலாக கால்டுவெல் அளித்துள்ளார்
- பிராகுயி மற்றும் சிறிய திராவிட மொழிகள்
- கோவரின் தென்னிந்திய நாட்டுப்புறப் பாடல்தொகுப்பிலுள்ள மொழியியல் குறிப்புகள்
- சுந்தரபாண்டியன் பற்றிய குறிப்புகள்
- தென்னிந்திய பறையர்கள் திராவிடர்களா எனும் ஆய்வு
- திராவிடர்களின் உடலமைப்பு
- திராவிடர்களின் தொல்சமயம்
அறிவியக்க இடம்
- A comparative grammar of the Dravidian or South-Indian family of languages இணையநூலகம்
- கால்டுவெல் ஒப்பிலக்கணம்- கழகவெளியீடு இணையநூலகம்
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் மொழியாக்கம் கா.கோவிந்தன்- சிங்காரவேலு. இணையநூலகம்
- கால்டுவெல் ஒப்பிலக்கண நூல். காழி கண்ணுசாமிப்பிள்ளை கா அப்பாத்துரைப்பிள்ளை மொழியாக்கம்