மீளிப் பெரும்பதுமனார்: Difference between revisions
; Added info on Finalised date |
Added: Category:புலவர் |
||
| Line 30: | Line 30: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | |||
Revision as of 00:54, 21 December 2025
மீளிப் பெரும்பதுமனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான நற்றிணையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
மீளிப் பெரும்பதுமனார் சங்கப் புலவர்களில் ஒருவர். பெரும்பதுமனார் என்பது இயற்பெயர். மீளி என்பது பிறந்த ஊர். பெரும்பதுமனார் என்ற இன்னொரு சங்கப்புலவர் இருப்பதால் இவருக்கு இவரின் ஊர் பெயர் முன்னோட்டாக கொடுக்கப்பட்டது. மீளி என்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மல்லி என்ற ஊரைக் குறிப்பதாக இருக்கலாம் என பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் கருதினர்.
இலக்கிய வாழ்க்கை
மீளிப் பெரும்பதுமனார் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் 109-வது பாடலாக உள்ளது. பாலைத் திணைப் பாடல். தலைவி தன் கலக்கத்திற்கான காரணத்தை தோழியிடம் சொல்லும் பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- உவமை: வாடைக்காற்றால் தலையில் கூழைக் கயிற்றால் கட்டிப் பிணிக்கப்பட்டிருக்கும் பசு வருந்துவது போல தலைவி வருந்தினாள்.
- தலைவி தலைவனின் பிரிவால் வருந்துதல்: கலக்கமுற்று பித்தாகி, நெற்றி நிறம் மாறுதல்.
பாடல் நடை
- நற்றிணை 109 (திணை: பாலை)
ஒன்றுதும் என்ற தொன்று படு நட்பின்
காதலர் அகன்றெனக் கலங்கிப் பேதுற்று
அன்னவோ இந் நன்னுதல் நிலை என
வினவல் ஆனாப் புனையிழை கேள் இனி
உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து
உச்சிக் கட்டிய கூழை ஆவின்
நிலை என ஒருவேன் ஆகி
உலமர கழியும் இப் பகல் மடி பொழுதே
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Sep-2024, 19:55:58 IST