under review

சிறுவர் இதழ்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
(Corrected typo errors in article)
Line 1: Line 1:
சிறுவர் இதழ்கள் (சிறார் இதழ்கள்) (குழந்தை இலக்கியம்) தமிழில் 1840 முதல் தொடர்ச்சியாக சிறுவர் இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பாடநூல்களுக்கு வெளியே குழந்தைகளின் வாசிப்பை நிலைநிறுத்தும்பொருட்டு இவை உருவாயின. தமிழகத்தில்  1947ல் இந்தியச் சுதந்தித்திற்குப்பின் ஆரம்பப் பள்ளி இயக்கம் உருவானபோது பள்ளிகளில் சிறுவர் இதழ்கள் ஏராளமாக வாங்கப்பட்டன. பின்னர் 2000-த்துக்குபின் ஆங்கில வழிக்கல்வி பரவலானபோது சிறுவர் இதழ்களின் செல்வாக்கு குறைந்தது. பல சிறுவர் இதழ்கள் நின்றுவிட்டன.
சிறுவர் இதழ்கள் (சிறார் இதழ்கள்) (குழந்தை இலக்கியம்) தமிழில் 1840 முதல் தொடர்ச்சியாக சிறுவர் இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பாடநூல்களுக்கு வெளியே குழந்தைகளின் வாசிப்பை நிலைநிறுத்தும்பொருட்டு இவை உருவாயின. தமிழகத்தில்  1947-ல் இந்தியச் சுதந்தித்திற்குப்பின் ஆரம்பப் பள்ளி இயக்கம் உருவானபோது பள்ளிகளில் சிறுவர் இதழ்கள் ஏராளமாக வாங்கப்பட்டன. பின்னர் 2000-த்துக்குபின் ஆங்கில வழிக்கல்வி பரவலானபோது சிறுவர் இதழ்களின் செல்வாக்கு குறைந்தது. பல சிறுவர் இதழ்கள் நின்றுவிட்டன.
== தோற்றம் ==
== தோற்றம் ==
1840-ம் ஆண்டில் கிறிஸ்தவ அமைப்பினரால் வெளியிடப்பட்ட பாலதீபிகை என்னும் இதழ் தமிழில் வெளிவந்த முதல் சிறுவர் இதழ் எனப்படுகிறது.  சுமார் 22-ஆண்டுகள் வெளிவந்த அவ்விதழ் நின்று போனது. தமிழில் வெளிவந்த முதல் சிறுவர் இதழ் என பூவண்ணன் தனது 'குழந்தை இலக்கிய வரலாறு’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Revision as of 12:44, 12 July 2024

சிறுவர் இதழ்கள் (சிறார் இதழ்கள்) (குழந்தை இலக்கியம்) தமிழில் 1840 முதல் தொடர்ச்சியாக சிறுவர் இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பாடநூல்களுக்கு வெளியே குழந்தைகளின் வாசிப்பை நிலைநிறுத்தும்பொருட்டு இவை உருவாயின. தமிழகத்தில் 1947-ல் இந்தியச் சுதந்தித்திற்குப்பின் ஆரம்பப் பள்ளி இயக்கம் உருவானபோது பள்ளிகளில் சிறுவர் இதழ்கள் ஏராளமாக வாங்கப்பட்டன. பின்னர் 2000-த்துக்குபின் ஆங்கில வழிக்கல்வி பரவலானபோது சிறுவர் இதழ்களின் செல்வாக்கு குறைந்தது. பல சிறுவர் இதழ்கள் நின்றுவிட்டன.

தோற்றம்

1840-ம் ஆண்டில் கிறிஸ்தவ அமைப்பினரால் வெளியிடப்பட்ட பாலதீபிகை என்னும் இதழ் தமிழில் வெளிவந்த முதல் சிறுவர் இதழ் எனப்படுகிறது. சுமார் 22-ஆண்டுகள் வெளிவந்த அவ்விதழ் நின்று போனது. தமிழில் வெளிவந்த முதல் சிறுவர் இதழ் என பூவண்ணன் தனது 'குழந்தை இலக்கிய வரலாறு’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

வளர்ச்சி

1940-களில் இந்தியாவில் ஆரம்பக் கல்வி வலுப்பெற தொடங்கியது. 1950 களில் ஆரம்பக்கல்வி இயக்கம் நிகழ்ந்தது. அதையொட்டி ஏராளமான சிறுவர் இதழ்கள் உருவாயின. புகழ்பெற்ற வணிக இதழ்களான குமுதம் (ஜிங்லி) கல்கி (கோகுலம்) கலைமகள் (கண்ணன்) போன்றவையும் சிறுவர் இதழ்களை நடத்தின. 1947-ல் வெளிவரத் தொடங்கிய அம்புலி மாமா இதழ் சிறுவர் இதழ்களில் மிகப்புகழ்பெற்றது.

குழந்தை எழுத்தாளர்களும் 1950 முதல் நாற்பதாண்டுக்காலம் தொடர்ச்சியாகச் செயல்பட்டனர். பூவண்ணன் (கரும்பு) அழ.வள்ளியப்பா (பூஞ்சோலை) மகிழ்ச்சிக் கண்ணன் (மத்தாப்பு) சக்தி கோவிந்தன் (அணில்) நாரா. நாச்சியப்பன் (முத்து) சௌந்தர் (ரேடியோ) வாண்டு மாமா (வானவில், கிங்கிணி) எஸ்.வஜ்ரவேலு (பூந்தோட்டம் ) ரா.கி.ரங்கராஜன் (வானரசேனை) ஓவியர் சந்தனு (சித்திரக் குள்ளன்) புலிவேந்தன் (அணில்) நவீனன் (யுவன் ) கலைவாணன் (மான்)

சிறுவர் இதழ்கள்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Mar-2023, 06:16:51 IST