அருணோதயம் (இதழ்): Difference between revisions
(Page Created by ASN) |
(Para Added and Edited) |
||
Line 1: | Line 1: | ||
[[File:Arunothayam Christian Magazine.jpg|thumb|அருணோதயம் இதழ்]] | [[File:Arunothayam Christian Magazine.jpg|thumb|அருணோதயம் இதழ்]] | ||
அருணோதயம் (1863) கிறித்தவ மாத இதழ். தரங்கம்பாடி லுத்தரன் திருச்சபை சார்பாக வெளிவந்தது. 2014 முதல் மாதமிருமுறை இதழாக வெளிவந்தது, அக்டோபர் 2015-ல் நின்று போனது. | அருணோதயம் (1863) கிறித்தவ மாத இதழ். தரங்கம்பாடி லுத்தரன் திருச்சபை சார்பாக வெளிவந்தது. 2014 முதல் மாதமிருமுறை இதழாக வெளிவந்தது, அக்டோபர் 2015-ல் நின்று போனது. | ||
== வெளியீடு == | |||
’மிசியோன் பத்திரிகை’ என்ற தலைப்பில் வெளியான அருணோதயம் இதழ், ஜூலை 1863-ல், தரங்கம்பாடியில் இருந்து வெளியானது. லுத்தரன் திருச்சபை சார்பில் வெளிவந்த இந்த இதழ், தரங்கம்பாடி மிஷன் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. | |||
பிற்காலத்தில் அருணோதயம் இதழ், ஏ. ஞானப்பிரகாசம் அவர்களால் வேப்பேரி மிஷன் அச்சுக்கூடத்திலிருந்து அச்சிடப்பட்டு வெளியானது. தொடக்க காலங்களில் [[ஞா. சாமுவேல்]] இதன் ஆசிரியராக இருந்தார். பிற்காலத்தில் அவரது மகன் ரெவரண்ட் ஞானமாணிக்கம் ஆசிரியராகப் பணியாற்றினார். ரெவரண்ட் ராஜரிகம், ஜி.டி.வில்லியம்ஸ் போன்றோரும் இதழின் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர். | |||
150 ஆண்டுகளாக வெளிவந்த இந்த இதழ், 2014-ல், ஆறு இதழ்கள் மட்டுமே வெளிவந்தது. அக்டோபர் 2015-ல் மூன்று இதழ்கள் மட்டுமே வெளியானது. பின் நின்று போனது. | |||
== உள்ளடக்கம் == | |||
அருணோதயம் இதழின் முதல் பக்கத்தில் ‘தரங்கன்பாடி மிசியோனின் பத்திரிகை’ என்ற குறிப்பு இடம் பெற்றது. முதல் பக்கத்தில் விவிலியத்தின் கருத்து விளக்கங்கள் இடம் பெற்றன. சீகன்பால்கு, பெப்ரீசியஸ் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகள் வெளியாகின. கார்த்தாகோவின் கண்காணியான சீப்பிரியானின் சரித்திரம் வெளியானது. | |||
அவ்வப்போது அருணோதயம் இதழ் தன் வடிவமைப்பை மாற்றிக் கொண்டது. பிற்காலத்தில் கிறித்தவ நூல்கள் பற்றிய புத்தக மதிப்புரை, திருச்சபைச் செய்திகள், கிறித்தவத் திருவிழாக்கள் பற்றிய செய்திகள் வெளியாகின. பத்திராதிபர் குறிப்புகள், சொற்பொழிவுகள் குறித்த தகவல்கள், ஜெர்ம போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டப்படும் விதம் போன்ற செய்திகள் இடம் பெற்றன. மிஷனரி வரலாற்றுடன் கிறித்தவம் சார்ந்த கவிதை, சிறுகதை, கட்டுரைகளும் பிற்கால இதழ்களில் இடம்பெற்றன. | |||
== மதிப்பீடு == | |||
தமிழின் தொடக்கக் காலக் கிறித்தவ இதழ்களில் ஒன்று அருணோதயம். தமிழகத்தில் சீர்திருத்தக் கிறித்தவப் பிரிவை வளர்த்தெடுத்ததில் முதன்மையானபங்களித்த இதழாக அருணோதயம் இதழ் அறியப்படுகிறது. | |||
உசாத்துணை | |||
Revision as of 15:58, 9 June 2024
அருணோதயம் (1863) கிறித்தவ மாத இதழ். தரங்கம்பாடி லுத்தரன் திருச்சபை சார்பாக வெளிவந்தது. 2014 முதல் மாதமிருமுறை இதழாக வெளிவந்தது, அக்டோபர் 2015-ல் நின்று போனது.
வெளியீடு
’மிசியோன் பத்திரிகை’ என்ற தலைப்பில் வெளியான அருணோதயம் இதழ், ஜூலை 1863-ல், தரங்கம்பாடியில் இருந்து வெளியானது. லுத்தரன் திருச்சபை சார்பில் வெளிவந்த இந்த இதழ், தரங்கம்பாடி மிஷன் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது.
பிற்காலத்தில் அருணோதயம் இதழ், ஏ. ஞானப்பிரகாசம் அவர்களால் வேப்பேரி மிஷன் அச்சுக்கூடத்திலிருந்து அச்சிடப்பட்டு வெளியானது. தொடக்க காலங்களில் ஞா. சாமுவேல் இதன் ஆசிரியராக இருந்தார். பிற்காலத்தில் அவரது மகன் ரெவரண்ட் ஞானமாணிக்கம் ஆசிரியராகப் பணியாற்றினார். ரெவரண்ட் ராஜரிகம், ஜி.டி.வில்லியம்ஸ் போன்றோரும் இதழின் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.
150 ஆண்டுகளாக வெளிவந்த இந்த இதழ், 2014-ல், ஆறு இதழ்கள் மட்டுமே வெளிவந்தது. அக்டோபர் 2015-ல் மூன்று இதழ்கள் மட்டுமே வெளியானது. பின் நின்று போனது.
உள்ளடக்கம்
அருணோதயம் இதழின் முதல் பக்கத்தில் ‘தரங்கன்பாடி மிசியோனின் பத்திரிகை’ என்ற குறிப்பு இடம் பெற்றது. முதல் பக்கத்தில் விவிலியத்தின் கருத்து விளக்கங்கள் இடம் பெற்றன. சீகன்பால்கு, பெப்ரீசியஸ் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகள் வெளியாகின. கார்த்தாகோவின் கண்காணியான சீப்பிரியானின் சரித்திரம் வெளியானது.
அவ்வப்போது அருணோதயம் இதழ் தன் வடிவமைப்பை மாற்றிக் கொண்டது. பிற்காலத்தில் கிறித்தவ நூல்கள் பற்றிய புத்தக மதிப்புரை, திருச்சபைச் செய்திகள், கிறித்தவத் திருவிழாக்கள் பற்றிய செய்திகள் வெளியாகின. பத்திராதிபர் குறிப்புகள், சொற்பொழிவுகள் குறித்த தகவல்கள், ஜெர்ம போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டப்படும் விதம் போன்ற செய்திகள் இடம் பெற்றன. மிஷனரி வரலாற்றுடன் கிறித்தவம் சார்ந்த கவிதை, சிறுகதை, கட்டுரைகளும் பிற்கால இதழ்களில் இடம்பெற்றன.
மதிப்பீடு
தமிழின் தொடக்கக் காலக் கிறித்தவ இதழ்களில் ஒன்று அருணோதயம். தமிழகத்தில் சீர்திருத்தக் கிறித்தவப் பிரிவை வளர்த்தெடுத்ததில் முதன்மையானபங்களித்த இதழாக அருணோதயம் இதழ் அறியப்படுகிறது.
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.