மன்னார்குடி நடேச பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Moved to Standardised)
No edit summary
Line 32: Line 32:


* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
{{Standardised}}
{{First Review Completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]

Revision as of 18:33, 9 April 2022

மன்னார்குடி நடேச பிள்ளை (1897 - 1972) ஒரு தவில் கலைஞர்.

பிறப்பு, கல்வி

மன்னார்குடியில் கோவிந்தஸ்வாமி பிள்ளைக்கும் தங்கம்மாளுக்கும் ஒரே மகனாக 1897-ஆம் ஆண்டு நடேச பிள்ளை பிறந்தார்.

நடேச பிள்ளை தன் சிற்றப்பா மன்னார்குடி பக்கிரிப் பிள்ளையிடம் தவிற்கலையைக் கற்றார்.

தனிவாழ்க்கை

நடேச பிள்ளை பார்வதியம்மாள் என்பவரை 1925-ஆம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு ராஜகோபால் (தவில்) என்ற மகனும் தனகோடியம்மாள் என்ற மகளும் பிறந்தனர்.

இசைப்பணி

நடேச பிள்ளை கற்பனை வளம் மிக்க கலைஞர், ஒரு முறை வாசித்ததை மறுமுறை வாசிக்காத ‘கற்பனையூற்று’ எனப் பெயர் பெற்றார். உருட்டுச் சொல் எனப்படும் வாசிப்பு முறையில் புகழ் பெற்றவர். நடேச பிள்ளை மோஹரா ஒன்றை உருட்டுச்சொற்களைக் கொண்டே வாசித்ததை பலரும் பாராட்டியிருக்கின்றனர்.

நடேச பிள்ளை நாதஸ்வரம் வாசிப்பதிலும் தேர்ந்தவர்.

உடன் வாசித்த கலைஞர்கள்

மன்னார்குடி நடேச பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

மறைவு

மன்னார்குடி நடேச பிள்ளை 1972-ஆம் ஆண்டு மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013

Template:First Review Completed