under review

சந்திரவதனா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 25: Line 25:
* [https://www.sirukathaigal.com/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/ சந்திரவதனா செல்வகுமாரன் சிறுகதைகள்]
* [https://www.sirukathaigal.com/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/ சந்திரவதனா செல்வகுமாரன் சிறுகதைகள்]
* [https://old.thinnai.com/author/Cantiravatanacelvakumaran/ AUTHOR: சந்திரவதனா செல்வகுமாரன்: திண்ணை]
* [https://old.thinnai.com/author/Cantiravatanacelvakumaran/ AUTHOR: சந்திரவதனா செல்வகுமாரன்: திண்ணை]


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|13-Mar-2024, 11:22:33 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:54, 13 June 2024

சந்திரவதனா
சந்திரவதனா

சந்திரவதனா (சந்திரவதனா செல்வகுமாரன்) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், இலக்கியச் செயற்பாட்டாளர். சிறுகதைகள், கவிதைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

சந்திரவதனா இலங்கை பருத்தித்துறை, ஆத்தியடி, மேலைப்புலோலியூரில் மு.ச.தியாகராஜா, சிவகாமசுந்தரி இணையருக்குப் பிறந்தார். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். கணிதத் துறையில் ஆர்வம் கொண்டவர். 1986-ல் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சந்திரவதனா 1975 முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்காக எழுதத் தொடங்கினார். சிறுகதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரின் படைப்புக்கள் எரிமலை, களத்தில் ஈழமுரசு, ஈழநாடு, குமுதம், இளங்காற்று, புலம், சக்தி, பெண்கள் சந்திப்பு மலர் (பெண்கள் இதழ்), உயிர்ப்பு, பூவரசு, வெற்றிமணி, முழக்கம், தங்கதீபம், வடலி, குருத்து மாதஇதழ், செம்பருத்தி, யாழ், சூரியன், பதிவுகள் (இணைய இதழ்), திண்ணை, அக்கினி, யுகமாயினி ஆகிய பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் வெளிவந்தன. இவரது ‘வழக்கம் போல் அடுப்படிக்குள்’ என்ற கவிதை தமிழ்த்துறை அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 'மனஓசை' என்ற வலைப்பதிவில் சமூக, அரசியல், இலக்கிய மற்றும் சுய உணர்வுகள் சார்ந்து எழுதி வருகிறார்.

விருதுகள்

  • 2009-ல் மனஓசை சிறுகதை நூலுக்காக திருப்பூர் மத்திய அரிமா சங்கம் வழங்கும் அரிமா சக்தி விருது

நூல் பட்டியல்

  • மனஓசை சிறுகதைத் தொகுப்பு (ஆவணி 2007)
  • அலையும் மனமும் வதியும் புலமும் (2019)
  • நாளைய பெண்கள் சுயமாக வாழ (2019)
பதிப்பித்த நூல்கள்
  • தீட்சண்யம் (கவிதைத்தொகுப்பு, 2009)
  • தொப்புள் கொடி (நாவல், 2009)
  • மூனாவின் நெஞ்சில் நின்றவை (பத்தி, 2019)
  • மூனாவின் கிறுக்கல்கள் (2019)
  • மறந்து போக மறுக்கும் மனசு (பத்தி, 2019)
  • பெருநினைவின் சிறு துளிகள் (2020)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Mar-2024, 11:22:33 IST