under review

பெண்கள் சந்திப்பு மலர்

From Tamil Wiki
பெண்கள் சந்திப்பு மலர்

பெண்கள் சந்திப்பு மலர் (1990) புலம்பெயர் பெண்கள் இதழ். தமிழ்ப் பெண்கள் குழு (Tamil Women's Forum) சார்பில் ஜெர்மனியிலிருந்து வெளியானது.

வெளியீடு

1990-ல் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பு ஒன்றின் கூடல் மலராக 'பெண்கள் சந்திப்பு மலர்' வெளியானது. Tamil Women's Forum சார்பில் பெண்கள் சந்திப்பு வெளியீடுக்குழு ஒவ்வொரு சந்திப்பின் பின்னரும் வெளியீடு செய்தது. இது ஆரம்பத்தில் ஜெர்மனியிலிருந்து வெளியானது. பின்னைய சந்திப்புக்களின் இடம் மாறியது.

நோக்கம்

பெண்கள் சந்திப்பு மலர் பெண்களின் உணர்வுகளை, வெற்றிகளை, சோகங்களை, ஆற்றல்களை அவர்களின் மொழியில் இலக்கியப் பரப்பிற்கு கொண்டு சேர்க்கும் பெண்ணியம் சார்ந்த இதழாக அமைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டது. 'Magazine of the Tamil Women Forum' என்ற தலைப்பை ஏந்தி வந்தது.

உள்ளடக்கம்

பெண்கள் சந்திப்பு மலரில் பெண்களின் பிரச்சனைகளை வெளியுலகுக்கு வெளிக்காட்டும் பல கட்டுரைகள் வெளியாகின. முதன்மையாக 'Tamil Women's Forum' கூட்டத்தில் பேசப்பட்ட தலைப்புகள் கட்டுரைகளாக வெளிவந்தன. பெண்ணின் உரிமைகள் பற்றிய கட்டுரைகளும், புலம்பெயர் பெண்கள் சந்திக்கும் சவால்கள், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஆகியவற்றிற்கு எதிரான கண்டனங்கள் பற்றிய கட்டுரைகளும் வெளிவந்தன. பெண்களின் கவிதைகளும், ஓவியங்களும் இடம்பெற்றன.

ஆவணம்

உசாத்துணை


✅Finalised Page