under review

மண்டயம் மரபு: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
Line 1: Line 1:
[[File:Melo.jpg|thumb|மேல்கோட்டை ஆலயம்]]

மண்டயம் மரபு (பொ.யு. 11-ஆம் நூற்றாண்டு முதல்) ராமானுஜ மரபைச் சேர்ந்த தென்கலை வைணவர்களில் ஒரு பெருங்குடும்பம். மைசூர் அருகே மாண்ட்யா என்னும் ஊரைச்சேர்ந்தவர்கள். தமிழ்வரலாற்றில் இம்மரபைச் சேர்ந்த பலர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளனர். இவர்கள் ராமானுஜர் காலம் முதல் மைசூர் அருகே ராமானுஜர் வழிபட்ட மேல்கோட்டை ஆலயத்தின் பொறுப்பில் இருந்தவர்கள்.
மண்டயம் மரபு (பொ.யு. 11-ம் நூற்றாண்டு முதல்) ராமானுஜ மரபைச் சேர்ந்த தென்கலை வைணவர்களில் ஒரு பெருங்குடும்பம். மைசூர் அருகே மாண்ட்யா என்னும் ஊரைச்சேர்ந்தவர்கள். தமிழ்வரலாற்றில் இம்மரபைச் சேர்ந்த பலர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளனர். இவர்கள் ராமானுஜர் காலம் முதல் மைசூர் அருகே ராமானுஜர் வழிபட்ட மேல்கோட்டை ஆலயத்தின் பொறுப்பில் இருந்தவர்கள்.

== வரலாறு ==
== வரலாறு ==

====== பொ.யு. 11-ஆம் நூற்றான்டு ======
====== பொ.யு. 11-ம் நூற்றான்டு ======
மண்டயம் பெருங்குடும்ப வரலாறு மைசூரை அடுத்துள்ள கிரங்கூர் என்னும் அக்ரஹாரத்தில் தொடங்குகிறது. பொயு 1053-ல் அங்கே கேசவாச்சாரியார் என்ற அறிஞரின் மகனாகப் பிறந்த திருஅனந்தாழ்வார் தமிழகம் வந்து ஶ்ரீரங்கத்தில் இருந்த [[ராமானுஜர்]] கற்பித்த [[விசிஷ்டாத்வைதம்]] சார்ந்த கருத்துக்களை அறிந்து அவரது மாணவரானார். ராமானுஜர் அன்று கைவிடப்பட்ட நிலையில் காட்டுக்குள் கிடந்த வேங்கடத்துக்கு( திருப்பதி)  செல்ல விரும்பியபோது அனந்தாழ்வார் அவரை காடுவழியாக அழைத்துச்சென்றதாகவும் அவரை ஆசிரியர் 'ஆண்பிள்ளை' என்று பாராட்டியதாகவும் தொன்மம் உள்ளது.  

ராமானுஜர் திருப்பதி ஆலயத்தை அன்றைய அரசரான விட்டலராயர் என்பவரின் உதவியுடன் மீட்டு திருப்பணி செய்தார். விட்டலராயர் பிற்பாடு பாலமண்டயம் அல்லது இளைய மாண்டயம் என்று அழைக்கப்பட்ட்ட ஊரை அனந்தாழ்வாருக்குக் கொடையாக அளித்தார். அவ்வூர் இன்று மாண்ட்யா என அழைக்கப்படுகிறது. ராமானுஜரின் மாணவர்களான 30 வைணவர்கள் அங்கே குடியேறினர். அவர்களின் வழித்தோன்றல்களே 'மண்டயம் மரபு' என அழைக்கப்படுகின்றனர்.  

====== பொ.யு. 12-ஆம் நூற்றாண்டு ======
====== பொ.யு. 12-ம் நூற்றாண்டு ======
ராமானுஜர் யாதவபுரி எனப்படும் மேல்கோட்டையில் யதிராஜ மடம் என இன்று அழைக்கப்படும் மடத்தை அமைத்தார். ஹொய்சாள அரசர் விஷ்ணுவர்த்தனர் அந்த மடத்துக்கு மைசூரில் ஶ்ரீரங்கப்பட்டினம் அருகே அஷ்டகிராமம் என அழைக்கப்படும் எட்டு கிராமங்களை அளித்தார். அவை மண்டயம் மரபில் வந்த அனந்தாச்சாரியார் என்பவருக்கு 1117-ல் நிர்வாகப்பொறுப்பாக அளிக்கப்பட்டன. மண்டயம் மரபினரில் ஒரு சாரார் ஶ்ரீரங்கப்பட்டினம் அருகே குடியேறினர்.     

====== பொ.யு. 14-ஆம் நூற்றாண்டு ======
====== பொ.யு. 14-ம் நூற்றாண்டு ======
பொ.யு. பதிமூன்றாம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மேல்கோட்டை மடத்தை கொள்ளையிட, அது கைவிடப்பட்ட நிலையை அடைந்தது. விஜயநகரப்பேரரசு உருவானபோது 1380-ல் விஜயநகரப்பேரரசரின் தளபதியான ஶ்ரீரங்கராயர் 12 கிராமங்களை அனந்தாச்சாரியரின் வழித்தோன்றலாகிய திருமலை ஐயங்காருக்கு வழங்கினார்.  

====== பொ.யு. 15-ஆம் நூற்றாண்டு ======
====== பொ.யு. 15-ம் நூற்றாண்டு ======
பொ.யு. 15-ஆம் நூற்றாண்டில் இம்மரபில் வந்த திருமலாச்சாரியார் என்பவர் திம்மண்ண தண்டநாயகன் என்ற பேரில் நேரடியாக விஜயநகரப்பேரரசின் பிரதிநிதியாக நாகமண்டலா என்னும் ஊரில் இருந்து ஆட்சி செய்தார். மேல்கோட்டை மடத்தையும் நிர்வகித்தார்
பொ.யு. 15-ம் நூற்றாண்டில் இம்மரபில் வந்த திருமலாச்சாரியார் என்பவர் திம்மண்ண தண்டநாயகன் என்ற பேரில் நேரடியாக விஜயநகரப்பேரரசின் பிரதிநிதியாக நாகமண்டலா என்னும் ஊரில் இருந்து ஆட்சி செய்தார். மேல்கோட்டை மடத்தையும் நிர்வகித்தார்

====== பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு ======
====== பொ.யு. 16-ம் நூற்றாண்டு ======
பொ.யு. 1516-ல் கிருஷ்ணதேவராயர் கிருஷ்ணராஜபுரம் என்று அழைக்கப்பட்ட மாண்ட்யா உள்ளிட்ட 12  கிராமங்களை அனந்தாழ்வாரின் 12-ஆவது தலைமுறையினரான கோவிந்தராஜ உடையாருக்கு வழங்கினார். மண்டயம் ஐயங்கார்கள் என்னும் குலப்பெயர் இதன் பின்னரே காணக்கிடைக்கிறது  

====== பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு ======
====== பொ.யு. 17-ம் நூற்றாண்டு ======
பொயு 1608-ல்  ராஜ உடையார் மைசுரில் அரசரானபோது மண்டயம் திருமலை ஐயங்கார் மைசூரில் அமைச்சர் பொறுப்பை அடைந்தார்.

====== பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு ======
====== பொ.யு. 18-ம் நூற்றாண்டு ======
மைசூரை ஹைதர் அலி கைப்பற்றியபோது மண்டயம் மரபினர் கடும் தண்டனைகளுக்கு ஆளாயினர். பெரும்பாலானவர்கள் சென்னைக்கு இடம்பெயர்ந்தனர்.

====== பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு ======
====== பொ.யு. 19-ம் நூற்றாண்டு ======
1799 -ல் திப்புசுல்தான் தோற்கடிக்கப்பட்டு மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் மைசூரின் அரசராக ஆனார். பிரிட்டிஷ் அரசுக்கும் உடையாருக்குமான பேச்சுவார்த்தைகளை நிகழ்த்திய பிரதான் திருமலைராயர் மைசூரில் முதன்மை நிர்வாகியாக ஆனார். மண்டயம் குடும்பத்தினர் மீண்டும் பதவிகளை அடைந்தனர். சோதிடர் சிங்காசாரியார், நாட்டம்பள்ளி ஆண்டாழ்வார் போன்றவர்கள் புகழ்மிக்க ஆளுமைகள்

====== பொ.யு. 20-ஆம் நூற்றாண்டு ======
====== பொ.யு. 20-ம் நூற்றாண்டு ======
மண்டயம் பெருங்குடும்பம் சென்னை, பெங்களூர் என பல ஊர்களிலாகப்  பரந்தது. பொதுவாக தங்கள் பெயருடன் மண்டயம் என்று அவர்கள் சேர்த்துக்கொள்வதுண்டு.   

Revision as of 11:16, 24 February 2024

மேல்கோட்டை ஆலயம்

மண்டயம் மரபு (பொ.யு. 11-ம் நூற்றாண்டு முதல்) ராமானுஜ மரபைச் சேர்ந்த தென்கலை வைணவர்களில் ஒரு பெருங்குடும்பம். மைசூர் அருகே மாண்ட்யா என்னும் ஊரைச்சேர்ந்தவர்கள். தமிழ்வரலாற்றில் இம்மரபைச் சேர்ந்த பலர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளனர். இவர்கள் ராமானுஜர் காலம் முதல் மைசூர் அருகே ராமானுஜர் வழிபட்ட மேல்கோட்டை ஆலயத்தின் பொறுப்பில் இருந்தவர்கள்.

வரலாறு

பொ.யு. 11-ம் நூற்றான்டு

மண்டயம் பெருங்குடும்ப வரலாறு மைசூரை அடுத்துள்ள கிரங்கூர் என்னும் அக்ரஹாரத்தில் தொடங்குகிறது. பொயு 1053-ல் அங்கே கேசவாச்சாரியார் என்ற அறிஞரின் மகனாகப் பிறந்த திருஅனந்தாழ்வார் தமிழகம் வந்து ஶ்ரீரங்கத்தில் இருந்த ராமானுஜர் கற்பித்த விசிஷ்டாத்வைதம் சார்ந்த கருத்துக்களை அறிந்து அவரது மாணவரானார். ராமானுஜர் அன்று கைவிடப்பட்ட நிலையில் காட்டுக்குள் கிடந்த வேங்கடத்துக்கு( திருப்பதி) செல்ல விரும்பியபோது அனந்தாழ்வார் அவரை காடுவழியாக அழைத்துச்சென்றதாகவும் அவரை ஆசிரியர் 'ஆண்பிள்ளை' என்று பாராட்டியதாகவும் தொன்மம் உள்ளது.

ராமானுஜர் திருப்பதி ஆலயத்தை அன்றைய அரசரான விட்டலராயர் என்பவரின் உதவியுடன் மீட்டு திருப்பணி செய்தார். விட்டலராயர் பிற்பாடு பாலமண்டயம் அல்லது இளைய மாண்டயம் என்று அழைக்கப்பட்ட்ட ஊரை அனந்தாழ்வாருக்குக் கொடையாக அளித்தார். அவ்வூர் இன்று மாண்ட்யா என அழைக்கப்படுகிறது. ராமானுஜரின் மாணவர்களான 30 வைணவர்கள் அங்கே குடியேறினர். அவர்களின் வழித்தோன்றல்களே 'மண்டயம் மரபு' என அழைக்கப்படுகின்றனர்.

பொ.யு. 12-ம் நூற்றாண்டு

ராமானுஜர் யாதவபுரி எனப்படும் மேல்கோட்டையில் யதிராஜ மடம் என இன்று அழைக்கப்படும் மடத்தை அமைத்தார். ஹொய்சாள அரசர் விஷ்ணுவர்த்தனர் அந்த மடத்துக்கு மைசூரில் ஶ்ரீரங்கப்பட்டினம் அருகே அஷ்டகிராமம் என அழைக்கப்படும் எட்டு கிராமங்களை அளித்தார். அவை மண்டயம் மரபில் வந்த அனந்தாச்சாரியார் என்பவருக்கு 1117-ல் நிர்வாகப்பொறுப்பாக அளிக்கப்பட்டன. மண்டயம் மரபினரில் ஒரு சாரார் ஶ்ரீரங்கப்பட்டினம் அருகே குடியேறினர்.

பொ.யு. 14-ம் நூற்றாண்டு

பொ.யு. பதிமூன்றாம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மேல்கோட்டை மடத்தை கொள்ளையிட, அது கைவிடப்பட்ட நிலையை அடைந்தது. விஜயநகரப்பேரரசு உருவானபோது 1380-ல் விஜயநகரப்பேரரசரின் தளபதியான ஶ்ரீரங்கராயர் 12 கிராமங்களை அனந்தாச்சாரியரின் வழித்தோன்றலாகிய திருமலை ஐயங்காருக்கு வழங்கினார்.

பொ.யு. 15-ம் நூற்றாண்டு

பொ.யு. 15-ம் நூற்றாண்டில் இம்மரபில் வந்த திருமலாச்சாரியார் என்பவர் திம்மண்ண தண்டநாயகன் என்ற பேரில் நேரடியாக விஜயநகரப்பேரரசின் பிரதிநிதியாக நாகமண்டலா என்னும் ஊரில் இருந்து ஆட்சி செய்தார். மேல்கோட்டை மடத்தையும் நிர்வகித்தார்

பொ.யு. 16-ம் நூற்றாண்டு

பொ.யு. 1516-ல் கிருஷ்ணதேவராயர் கிருஷ்ணராஜபுரம் என்று அழைக்கப்பட்ட மாண்ட்யா உள்ளிட்ட 12 கிராமங்களை அனந்தாழ்வாரின் 12-ஆவது தலைமுறையினரான கோவிந்தராஜ உடையாருக்கு வழங்கினார். மண்டயம் ஐயங்கார்கள் என்னும் குலப்பெயர் இதன் பின்னரே காணக்கிடைக்கிறது

பொ.யு. 17-ம் நூற்றாண்டு

பொயு 1608-ல் ராஜ உடையார் மைசுரில் அரசரானபோது மண்டயம் திருமலை ஐயங்கார் மைசூரில் அமைச்சர் பொறுப்பை அடைந்தார்.

பொ.யு. 18-ம் நூற்றாண்டு

மைசூரை ஹைதர் அலி கைப்பற்றியபோது மண்டயம் மரபினர் கடும் தண்டனைகளுக்கு ஆளாயினர். பெரும்பாலானவர்கள் சென்னைக்கு இடம்பெயர்ந்தனர்.

பொ.யு. 19-ம் நூற்றாண்டு

1799 -ல் திப்புசுல்தான் தோற்கடிக்கப்பட்டு மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் மைசூரின் அரசராக ஆனார். பிரிட்டிஷ் அரசுக்கும் உடையாருக்குமான பேச்சுவார்த்தைகளை நிகழ்த்திய பிரதான் திருமலைராயர் மைசூரில் முதன்மை நிர்வாகியாக ஆனார். மண்டயம் குடும்பத்தினர் மீண்டும் பதவிகளை அடைந்தனர். சோதிடர் சிங்காசாரியார், நாட்டம்பள்ளி ஆண்டாழ்வார் போன்றவர்கள் புகழ்மிக்க ஆளுமைகள்

பொ.யு. 20-ம் நூற்றாண்டு

மண்டயம் பெருங்குடும்பம் சென்னை, பெங்களூர் என பல ஊர்களிலாகப் பரந்தது. பொதுவாக தங்கள் பெயருடன் மண்டயம் என்று அவர்கள் சேர்த்துக்கொள்வதுண்டு.

மண்டயம் ஆளுமைகள்

உசாத்துணை

✅Finalised Page