standardised

முதலாவிண் (வெண்முரசு நாவலின் பகுதி - 26): Difference between revisions

From Tamil Wiki
m (முற்றும்)
(Moved to Standardised)
Line 1: Line 1:


[[File:முதலாவிண் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 26).jpg|thumb|'''முதலாவிண்''' (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 26)]]
[[File:முதலாவிண் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 26).jpg|thumb|'''முதலாவிண்''' (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 26)]]
'''முதலாவிண்''' (‘[https://littamilpedia.org/index.php/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81 வெண்முரசு]’ நாவலின் பகுதி - 26) ‘வெண்முரசு’ நாவலின் 26ஆவது பகுதி. இது வெண்முரசின் இறுதிப் பகுதி. இது பக்க அளவில் மற்ற 25 பகுதிகளையும் விடச் சிறியது.  இது பாண்டவர்களின் வானப்பிரஸ்தத்தைச் சித்தரிக்கிறது. இளைய யாதவரைத் தொடர்ந்து குருகுலத்தின் மூத்தோர் ஒவ்வொருவராக உயிர்த்துறப்பதைப் பற்றி விளக்குகிறது இது.  ‘மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த’ என்ற சீவசிந்தாமணியின் முதல்வரியிலிருந்து ‘முதலாவிண்’ என்ற இந்தச் சொல்லாட்சியைத் தாம் எடுத்துக்கொண்டதாகவும் அதன் பொருள் ‘பிறக்காத, தோற்றமே அற்ற வானம்’ என்பதாகவும் எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தார். வெண்முரசு’ நாவலின் முதற்பகுதியான ‘[https://venmurasu.in/mutharkanal/chapter-1 முதற்கனல்]’ என்பதற்கு மறு எல்லையாக ‘வெண்முரசு’ நாவலின் இறுதிப் பகுதியான இந்த ‘[https://venmurasu.in/muthalaavin/chapter-1 முதலாவிண்]’ அமைந்துள்ளது.
'''முதலாவிண்'''<ref>[https://venmurasu.in/muthalaavin/chapter-1 வெண்முரசு - முதலாவிண் - 1 - வெண்முரசு (venmurasu.in)]</ref> (‘[[வெண்முரசு]]’ நாவலின் பகுதி - 26) ‘வெண்முரசு’ நாவலின் 26ஆவது பகுதி. இது வெண்முரசின் இறுதிப் பகுதி. இது பக்க அளவில் மற்ற 25 பகுதிகளையும் விடச் சிறியது.  இது பாண்டவர்களின் வானப்பிரஸ்தத்தைச் சித்தரிக்கிறது. இளைய யாதவரைத் தொடர்ந்து குருகுலத்தின் மூத்தோர் ஒவ்வொருவராக உயிர்த்துறப்பதைப் பற்றி விளக்குகிறது இது.  ‘மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த’ என்ற சீவசிந்தாமணியின் முதல்வரியிலிருந்து ‘முதலாவிண்’ என்ற இந்தச் சொல்லாட்சியைத் தாம் எடுத்துக்கொண்டதாகவும் அதன் பொருள் ‘பிறக்காத, தோற்றமே அற்ற வானம்’ என்பதாகவும் எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தார். வெண்முரசு’ நாவலின் முதற்பகுதியான ‘[[முதற்கனல் (வெண்முரசு நாவலின் முதற்பகுதி)|முதற்கனல்]]’ என்பதற்கு மறு எல்லையாக ‘வெண்முரசு’ நாவலின் இறுதிப் பகுதியான இந்த ‘முதலாவிண்’ அமைந்துள்ளது.


== பதிப்பு ==
== பதிப்பு ==


====== இணையப் பதிப்பு ======
====== இணையப் பதிப்பு ======
‘வெண்முரசு’ நாவலின் முதற் பகுதியான முதற்கனல் எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஜூலை 1, 2020 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜூலை 16, 2020இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.
‘வெண்முரசு’ நாவலின் முதற் பகுதியான முதற்கனல் எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஜூலை 1, 2020 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜூலை 16, 2020-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.


== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் [https://littamilpedia.org/index.php/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D ஜெயமோகன்]. இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.  
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் [[ஜெயமோகன்]]. இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.  


== கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் ==
Line 22: Line 22:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==


* https://venmurasu.in/muthalaavin/chapter-1
* [https://venmurasudiscussions.blogspot.com/ வெண்முரசு விவாதங்கள் (venmurasudiscussions.blogspot.com)]
 
*[https://www.goodreads.com/review/show/3724696905 Murugapandian Ramaiah (Singapore)’s review of வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண் (goodreads.com)]
* https://venmurasudiscussions.blogspot.com/
*[https://solvanam.com/2021/10/24/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/ வெண்முரசு பிள்ளைத்தமிழ் – சொல்வனம் | இதழ் 265 | 27 பிப். 2022 (solvanam.com)]
*https://www.goodreads.com/review/show/3724696905  
*[http://rajeshbalaa.blogspot.com/2017/09/venmurasu.html உறைந்த தருணங்கள் : Frozen Momentz: வெண்முரசு - முதல் நாள் சுட்டிகள் (rajeshbalaa.blogspot.com)]
*https://solvanam.com/2021/10/24/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/
*[https://www.jeyamohan.in/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D முனைவர் ப. சரவணன் | Search Results | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
*http://rajeshbalaa.blogspot.com/2017/09/venmurasu.html
*[https://www.jeyamohan.in/152302/ ‘முதலாவிண்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
*https://www.jeyamohan.in/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
 
 


== இணைப்புகள் ==
<references />
{{Standardised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{ready for review}}

Revision as of 23:27, 10 March 2022

முதலாவிண் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 26)

முதலாவிண்[1] (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 26) ‘வெண்முரசு’ நாவலின் 26ஆவது பகுதி. இது வெண்முரசின் இறுதிப் பகுதி. இது பக்க அளவில் மற்ற 25 பகுதிகளையும் விடச் சிறியது. இது பாண்டவர்களின் வானப்பிரஸ்தத்தைச் சித்தரிக்கிறது. இளைய யாதவரைத் தொடர்ந்து குருகுலத்தின் மூத்தோர் ஒவ்வொருவராக உயிர்த்துறப்பதைப் பற்றி விளக்குகிறது இது. ‘மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த’ என்ற சீவசிந்தாமணியின் முதல்வரியிலிருந்து ‘முதலாவிண்’ என்ற இந்தச் சொல்லாட்சியைத் தாம் எடுத்துக்கொண்டதாகவும் அதன் பொருள் ‘பிறக்காத, தோற்றமே அற்ற வானம்’ என்பதாகவும் எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தார். வெண்முரசு’ நாவலின் முதற்பகுதியான ‘முதற்கனல்’ என்பதற்கு மறு எல்லையாக ‘வெண்முரசு’ நாவலின் இறுதிப் பகுதியான இந்த ‘முதலாவிண்’ அமைந்துள்ளது.

பதிப்பு

இணையப் பதிப்பு

‘வெண்முரசு’ நாவலின் முதற் பகுதியான முதற்கனல் எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஜூலை 1, 2020 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜூலை 16, 2020-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

ஆசிரியர்

‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

குருஷேத்திரப் போரில் வெற்றிபெற்ற பின்னரும்கூடப் பாண்டவரால் ஒன்றிணைந்து வாழ முடியவில்லை. அவர்களின் வாழ்க்கை முற்றிலும் அலைச்சலிலேயே நிகழ்ந்துகொண்டிருந்தது. உடலும் மனமும் அலைய அவர்கள் ஒரு கணமும் நிலைகொள்ளவில்லை. ஒன்றிணைய முடியவில்லை. அதற்குக் காரணமாக முன்னைய தீச்சொல் ஒன்றினை எழுத்தாளர் ஜெயமோகன் நினைவுபடுத்துகிறார். பாணர் சீர்ஷன் தன் குரு வியாசர் எழுதிய மகாபாரதத்தை முற்றோத பாண்டிய நாட்டிற்கு வருகிறார். பாண்டியனிடம் உதவி பெற்று கடலுக்குள் மூழ்கி இருக்கும் மாகேந்திர மலையை, குரு பூர்ணிமை நாளில், கடல் நீர் மட்டம் தாழ்ந்து இருக்கும் இரவில் கண்டடைந்து, பாரதத்தை ஓதுகிறார். இளைய யாதவரைத் தொடர்ந்து குருகுலத்தின் மூத்தோர் ஒவ்வொருவராக ( திருதராஷ்டிரர், காந்தாரி, விதுரர், குந்தி) உயிர்த்துறப்பதைப் பற்றி விளக்குகிறது இது. பாண்டவர் ஐவரும் உயிர்துறக்க மனம் ஒருங்குகின்றனர். அவர்கள் ஐவரும் ஒரு குகைக்குள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பிறரைப் பற்றி எக்கவலையும் இன்றித் தன்னுடைய அகவிடுதலையை மட்டுமே நினைத்து, முன்னேறி நடக்குமாறு பணிக்கப்படுகின்றனர். ஆனால், திரௌபதி கால்தளர்ந்து அமர்கிறாள். மற்ற நால்வரும் அவளைப் பற்றிக் கவலையின்றி முன்னேறி நடக்க, பீமன் மட்டும் அவளுக்காகத் தன் நடையைத் தளர்த்தி, அவளோடு நின்றான். பெருநிலையை எய்த விழையாமல், முடியாமல் அவர்கள் அந்தக் குகைக்குள் பாதிவழியிலேயே அமர்ந்து, தங்களின் பழைய காதல் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பீமனும் திரௌபதியும் அடைந்த, எய்திய பெருநிலையின் எல்லை இதுவரைதான். இதுவே, அவர்களுக்கு உவப்பானதாக இருந்தது. அவர்கள் தங்களை அங்கேயே, அதே அகமனநிலையில் இருத்திக்கொண்டனர். அதிஉன்னதப் பாதையில் முன்னேறி இலக்கை அடையும் உயிரே பெருநிலையினைப் பெறுகிறது. அந்த வகையில், தருமர் மட்டுமே அந்த நிலையினை எய்துகிறார்.

கதை மாந்தர்கள்

பாண்டவர் ஐவரும் திரௌபதியும் இந்த முதலாவிண்ணின் முதன்மைக் கதைமாந்தர்களாக உள்ளனர்.

இலக்கிய இடம் / மதிப்பீடு

“அனைத்து வண்ணங்களும் இணைந்து வெண்மையென்றாவதுபோல. வெண்மையே அறத்தின் நிறம்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். அறத்தின் நிறம் வெள்ளை. அதில் துளி கறை இருக்க இயலாது. துளி நிறம் மாறினாலும் அது அறக்குறையாகவே இருக்கும். அறம் என்றைக்கும் முழுமையானது. ‘வெண்முரசு’ அறத்தின் முரசு. அதன் முழக்கம் வெற்றியின் ஒலி. அறம்சார்ந்த வெற்றியே நிலையானது. அதையே ‘வெண்முரசு’ குறிப்புணத்துகிறது. பேரறம் மானுடத்தின் முன் நிற்கிறது. மானுடம் அதை மீறிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு உயிரும் இந்த உலகில் ஏதோ ஒரு வகையில் பேரறத்தின் பாதையில் பயணித்தமைக்காகவே அதற்குப் பெருநிலையினை அடைவதற்குரிய ராஜபாதை திறக்கப்படுகிறது. அந்த அதிஉன்னதப் பாதையில் முன்னேறி இலக்கை அடையும் உயிரே பெருநிலையினைப் பெறுகிறது. அத்தகைய பெருநிலையை எய்தும் பேரறத்தின் உன்னதப்பாதையைக் காட்டும் வகையில், ‘வெண்முரசு’ நாவலின் ‘முதலாவிண்’ பகுதி அமைந்துள்ளது. நிலைபேற்றுடைய பேரறத்தின் பாதையை நவீனச் செவ்வியல் நடையில் இலக்கிய அனுபவமாக மாற்றிக் காட்டிய வகையில், ‘வெண்முரசு’ நாவல் நவீனச் செவ்வியல் காப்பியமாகத் தமிழ் இலக்கிய உலகில் முதலிடம் பெறுகிறது.

உசாத்துணை

இணைப்புகள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.