under review

செந்தமிழ்ச் செல்வி: Difference between revisions

From Tamil Wiki
(category & stage updated)
Line 25: Line 25:
*https://www.thamizham.net/ithazh/oldmag/om/om015-u8.htm
*https://www.thamizham.net/ithazh/oldmag/om/om015-u8.htm


{{being created}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 12:51, 20 February 2022

செந்தமிழ்ச்செல்வி 1924

செந்தமிழ்ச் செல்வி (1924) தமிழ் இலக்கிய மாத இதழ். பழந்தமிழ் ஆய்வுக்காக வெளிவருவது. திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் தொடங்கப்பட்டது.

வெளியீடு

செந்தமிழ்ச்செல்வி 1923 ல் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நிறுவனத்தின் தலைவர் வ.சுப்பையா பிள்ளை யால் தொடங்கப்பட்டது. முதலில் திருநெல்வேலியில் இருந்தும் பின்னர் சென்னையில் இருந்தும் வெளிவந்தது. சுப்பையா பிள்ளைக்குப்பின் இரா.முத்துக்குமாரசுவாமி இவ்விதழின் ஆசிரியராக இருந்து நடத்தினார்.

மதுரையில் பாண்டித்துரைத் தேவர் உருவாக்கிய நான்காம் தமிழ்ச்சங்கம் 1902 முதல் செந்தமிழ் (இதழ்) வெளியிட்டு வந்தது. அதன் ஆசிரியராக இருந்த மு. இராகவையங்கார் இதழின் நோக்கத்தை கைவிட்டு பொதுவான செய்திகளை வெளியிடுவதாகவும், தனித்தமிழ் இயக்கச் சிந்தனைகளை வெளியிட மறுப்பதாகவும் கா.சுப்ரமணிய பிள்ளை, தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட அறிஞர்கள் குறைப்பட்டதனர். அக்குறை நீங்க செந்தமிழ்ச்செல்வி தொடங்கப்பட்டது.

உள்ளடக்கம்

செந்தமிழ்ச்செல்வி 1952

செந்தமிழ்ச் செல்வி ஆலோசகர்களின் குழு ஒன்றை வைத்திருந்தது. கா. சுப்பிரமணிய பிள்ளை,எசு. சச்சிதானந்தம் பிள்ளையவர்கள் பாடசாலை டிப்டி இன்ஸ்பெக்டர், சைதாப்பேட்டை பிரிவு, ந.மு. வேங்கடசாமி நாட்டார், தலைமைத் தமிழாசிரியர், கீபர் கலாசாலை, திருச்சி, துடிசைக் கிழார், போலீஸ் சர்கிள் இன்ஸ்பெக்டர், பல்மனெரி, வித்துவான் மு,கதிரேச செட்டியாரவர்கள், மகிபாலன் பட்டி ஆகியோர் 1925 ஆண்டில் ஆசிரியர் குழுவாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதியுள்ள தமிழ்ப் புலவர் வரலாறு தொடராக 1926 முதல் வெளிவந்தது.

தேவநேயப் பாவாணர், மதுரை இரா. இளங்குமரன், க.ப. அறவாணன், இசை அறிஞர் வீ.ப.கா. சுந்தரம், பி.எல் சாமி போன்ற புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் இவ்விதழில் எழுதிவந்துள்ளனர்.செந்தமிழ்ச்செல்வியின் பெரும்பாலான இதழ்கள் தமிழ் இணைய நூலகச் சேமிப்பில் உள்ளன. செந்தமிழ்ச்செல்வி உறுதியான தனித்தமிழ்க் கொள்கை கொண்டது. எல்லா கட்டுரைகளையும் தனித்தமிழில் வெளியிட்டது. ஆசிரியர் பெயர்கள், ஊர்ப்பெயர்கள்கூட தனித்தமிழிலேயே அளிக்கப்பட்டன.

செந்தமிழ் செல்வியின் பெரும்பாலான இதழ்கள் தமிழ் இணைய நூலகச் சேமிப்பில் உள்ளன (செந்தமிழ்ச் செல்வி, தமிழ் இணையநூலகம்)

ஆய்வு

அ.மரிய தனபால் செந்தமிழ்ச்செல்வி இதழின் தமிழ்ப்பணி பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார்.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.