first review completed

பண விடு தூது: Difference between revisions

From Tamil Wiki
(Page Created; Para Added; Link Created: Proof Checked.)
 
No edit summary
Line 29: Line 29:
* [https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2013/sep/15/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%C2%A0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE-744755.html தினமணி இதழ் கட்டுரை]  

* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0005562_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81.pdf பணவிடு தூது: வித்துவான் வே. அண்ணாமலை: தமிழ் இணைய மின்னூலகம்]  

{{Ready for review}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 09:14, 22 July 2023

தூது, தமிழின் 96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று. கலிவெண்பாவால் பாடப்படுவது. தூது இலக்கியங்களில் நெஞ்சு விடு தூது, தமிழ் விடு தூது, கிளி விடு தூது, அன்னம் விடு தூது, தென்றல் விடு தூது, புகையிலை விடு தூது எனப் பல்வேறு நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று பண விடு தூது. தூது, அகத்தூது, புறத்தூது என இருவகைப்படும்.

அகத்தூது

காதல் கொண்ட தலைவனும் தலைவியும் ஒருவர் பால் ஒருவர் தங்கள் காதலைத் தெரிவிக்க உயர்திணை மற்றும் அஃறிணைப் பொருட்களைத் தூதாக அனுப்புவதே அகத்தூது.

புறத்தூது

புலவர்கள் வள்ளல்கள், புரவலர்களிடம் தூது அனுப்புவது புறத்தூது.

பண விடு தூது

பண விடு தூது புறத் தூது வகையைச் சேர்ந்ததாகும். வறுமையில் வாழும் புலவர்கள் தங்களை ஆதரிக்க வேண்டி வள்ளல்கள், புரவலர்கள், அரசர்களிடம் பணத்தைத் தூதாக அனுப்புவதே பண விடு தூது. காதலியர்களிடம் தங்களிடம் உள்ள பணத்தைத் தூதாக அனுப்பும் வகையிலும் சில புலவர்கள் பண விடு தூது நூலைப் பாடியுள்ளனர்.

பண விடு தூது மூலம் தமிழகத்தின் பல்வேறு சிற்றரசர்கள், வள்ளல்கள், புரவலர்களின் வாழ்க்கை பற்றி அறிய முடிகிறது. முன்னோர்கள் காலத்தில் பணத்திற்கு வழங்கி வந்த பெயர்களை பல்லங்கிக் காசு, சம்பங்கிக் காசு புல்லவட்டக் காசு, வெட்டு, மட்டம், கம்பட்டம், சக்கரம், வராகன், கோழி விழுங்கல், துட்டு போன்ற அக்காலமக்கள் பயன்படுத்திய நாணயத்தின் பெயர்களை அறிய முடிகிறது. தமிழ் மொழியின் மொழி வளம், சொல் வளம், தமிழரின் பண்பாட்டு வளர்ச்சி, நாகரிக வளர்ச்சியை அறிந்துகொள்ள முடிகிறது.

பண விடு தூது நூல்கள்

தமிழில் பண விடு தூது நூல்கள் பலரால் இயறப்பட்டுள்ளன. அவற்றுள் சில:

  • முத்து விஜய ரகுநாத சேதுபதி பேரில்  சொக்கநாதக் கவிராயன் பாடிய பண விடு தூது
  • அஷ்டாவதானம் சரவணப்பெருமாள் கவிராயர் இயற்றிய பணவிடு தூது
  • திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் மீது திரிசிரபுரம் வித்துவான் அமிர்தம் சுந்தரநாதப் பிள்ளை பொன் விடு தூது
  • மதுரைச் சொக்கநாதர் பண விடு தூது
  • இராமேசுரம் இராமலிங்கேசர் பணவிடு தூது
  • மாதை வேங்கடேசேந்திரன் பணவிடு தூது
  • புல்லைக் குமரேசர் பணவிடு தூது
  • சின்ன வன்னியனார் பணவிடு தூது
  • கவியரசர் பணவிடு தூது

உசாத்துணை

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.