under review

காந்தி காதை: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
(Added First published date)
 
Line 17: Line 17:
* [http://www.tamilvu.org/courses/degree/a011/a0114.pdf இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்கள் தமிழ்வு]
* [http://www.tamilvu.org/courses/degree/a011/a0114.pdf இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்கள் தமிழ்வு]
* காந்தி காதை பாடிய கவிக்கடல்: தினமணி இதழ் கட்டுரை
* காந்தி காதை பாடிய கவிக்கடல்: தினமணி இதழ் கட்டுரை
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:39:21 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 12:03, 13 June 2024

காந்தி காதை

காந்தி காதை (1979) அரங்க. சீனிவாசன் எழுதிய மரபுக்கவிதைகளால் ஆன நூல். நவீன காலக் காவியங்களில் குறிப்பிடத்தக்கது.

எழுத்து, வெளியீடு

அரங்க. சீனிவாசன் எழுதிய இக்காவியம் திருச்சிராப்பள்ளி திருக்குறள் கழகத்தின் தலைவர் ஆ. சுப்பராயலு செட்டியாரின் உறுதுணையால், 1979-ல், வெளியானது. காந்தி பிறந்த மற்றும் வாழ்ந்த பல பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, பல மக்களை நேரில் கண்டு உரையாடி உருவான நூல் இது.

அமைப்பு

காந்தி காதை பால காண்டம், தகுதிக் காண்டம், அறப்போர்க் காண்டம், அரசியற் காண்டம், விடுதலைக் காண்டம் என ஐந்து காண்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுபத்தேழு படலங்களையும் 5000-க்கும் மேற்பட்ட பாடல்களையும் கொண்டது.

விருதுகள்

  • நூலுக்குத் தமிழக அரசின் சிறப்புப் பரிசு
  • கோவை ராமகிருஷ்ணா வித்யாலயத்தின் பரிசு
  • பாரதிய வித்யாபவன் ராஜாஜி நினைவுப் பரிசு

இலக்கிய இடம்

இந்த நூல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் மற்றும் சில தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாட நூலாக வைக்கப்பட்டது. தமிழகப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் ’காந்தி காதைப் படலம்’ பாடமாக வைக்கப்பட்டது.

நவீன காலகட்டத்தில் உருவான காவியங்களில் காந்தி காதை குறிப்பிடத்தக்கது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:39:21 IST