under review

குஞ்சித்தம்பி பண்டிதர்: Difference between revisions

From Tamil Wiki
(Reset to Stage 1)
(Corrected Category:நாடகக் கலைஞர்கள் to Category:நாடகக் கலைஞர்Corrected Category:புலவர்கள் to Category:புலவர்)
 
(8 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
குஞ்சித்தம்பி பண்டிதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர், நாடகக் கலைஞர்.
{{OtherUses-ta|TitleSection=பண்டிதர்|DisambPageTitle=[[பண்டிதர் (பெயர் பட்டியல்)]]}}
குஞ்சித்தம்பி பண்டிதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர், நாடகக் கலைஞர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
குஞ்சித்தம்பி பண்டிதர் இலங்கை அம்பாறை, தம்பிலுவிலைச் சேர்ந்த கவிஞர். மட்டக்களப்பு தூய மிக்கேல் கல்லூரியில் ஆங்கிலத்தில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். மதுரைத் தமிழ்ச் சங்கக் கலாசாலையில் கற்றார்.

Line 7: Line 8:
குஞ்சித்தம்பி பண்டிதர் நாடக நடிகர், நாடகங்கள் பல எழுதி அரங்காற்றுகை செய்தார். சிறுத்தொண்டர் சரித்திரத் தினையும், அலாவுதீன் என்னும் அரேபியக் கதையினையும் இவர் நாடகமாக இயற்றி நடித்தார்.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
குஞ்சித்தம்பி பண்டிதர் இயற்றிய பஜனாமிர்தம், வருக்கமாலை பாடல்நூல்கள் 1953இல் வெளிவந்தன. "திருக்கோவிற் சிவசுப்பிரமணியக் கடவுள் மீது வருக்க மாலை" (1953), "கண்ணகை யம்மன் பேரிற் பஜனமிர்தம்" (1953) ஆகிய நூல்களை இயற்றினார்.
குஞ்சித்தம்பி பண்டிதர் இயற்றிய பஜனாமிர்தம், வருக்கமாலை பாடல்நூல்கள் 1953-ல் வெளிவந்தன. "திருக்கோவிற் சிவசுப்பிரமணியக் கடவுள் மீது வருக்க மாலை" (1953), "கண்ணகை யம்மன் பேரிற் பஜனமிர்தம்" (1953) ஆகிய நூல்களை இயற்றினார்.
== மறைவு ==
== மறைவு ==
இவர் தமது நாற்பதாவது வயதில் காலமானார்.
இவர் தமது நாற்பதாவது வயதில் காலமானார்.
Line 17: Line 18:
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D ஆளுமை:குஞ்சித்தம்பி பண்டிதர்: noolaham]

* [http://arayampathy.lk/personalities/323-pulavarmani புலவர்மணி ஏ. பெரியதம்பி பிள்ளை காலமும் கருத்தும்: arayampathy]

{{First review completed}}
 
{{Finalised}}
 
{{Fndt|28-Feb-2023, 06:32:41 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]
[[Category:நாடகக் கலைஞர்]]

Latest revision as of 12:12, 17 November 2024

பண்டிதர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பண்டிதர் (பெயர் பட்டியல்)

குஞ்சித்தம்பி பண்டிதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர், நாடகக் கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

குஞ்சித்தம்பி பண்டிதர் இலங்கை அம்பாறை, தம்பிலுவிலைச் சேர்ந்த கவிஞர். மட்டக்களப்பு தூய மிக்கேல் கல்லூரியில் ஆங்கிலத்தில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். மதுரைத் தமிழ்ச் சங்கக் கலாசாலையில் கற்றார்.

ஆசிரியப்பணி

குஞ்சித்தம்பி பண்டிதர் இந்தியாவின் பல இடங்களிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். தாய்நாடு வந்து மட்டக்களப்பில் சைவமும் தமிழும் வளர்த்தார். சிலகாலம் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரிய கலாசாலையில் தமிழ்ப்பண்டிதராகப் பணியாற்றினார். இரண்டாம் உலக யுத்தகாலத்தில் திருகோணமலைக் கடற்படையில் எழுத்தாளராகப் பணியாற்றினார். சுவாமி விபுலானந்தர் இவரின் மாணவர்.

நாடக வாழ்க்கை

குஞ்சித்தம்பி பண்டிதர் நாடக நடிகர், நாடகங்கள் பல எழுதி அரங்காற்றுகை செய்தார். சிறுத்தொண்டர் சரித்திரத் தினையும், அலாவுதீன் என்னும் அரேபியக் கதையினையும் இவர் நாடகமாக இயற்றி நடித்தார்.

இலக்கிய வாழ்க்கை

குஞ்சித்தம்பி பண்டிதர் இயற்றிய பஜனாமிர்தம், வருக்கமாலை பாடல்நூல்கள் 1953-ல் வெளிவந்தன. "திருக்கோவிற் சிவசுப்பிரமணியக் கடவுள் மீது வருக்க மாலை" (1953), "கண்ணகை யம்மன் பேரிற் பஜனமிர்தம்" (1953) ஆகிய நூல்களை இயற்றினார்.

மறைவு

இவர் தமது நாற்பதாவது வயதில் காலமானார்.

நூல் பட்டியல்

  • திருக்கோவிற் சிவசுப்பிரமணியக் கடவுள் மீது வருக்க மாலை (1953)
  • கண்ணகை யம்மன் பேரிற் பஜனமிர்தம் (1953)

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Feb-2023, 06:32:41 IST