under review

அஷ்ட லிங்க வழிபாடு: Difference between revisions

From Tamil Wiki
(Page created; Para Added, Images Added)
 
m (Spell Check done)
 
(23 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
[[File:Annamalai 1.jpg|thumb|திருவண்ணாமலை]]
அஷ்டலிங்க வழிபாடு: சிவபெருமானை எட்டு வகைகளில் சிவலிங்கமாக வழிபடும் முறை. தமிழகத்திலும் கர்நாடகத்திலும் வெவ்வேறு வகையில் இந்த வழிபாட்டுமுறை உள்ளது. சைவ மரபில் இது அட்ட மூர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது.
புனித மலையான திருவண்ணாமலையை மக்கள் வலம் வந்து வழிபடுவது ‘கிரிவலம்’ என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுவதால், ஆலயங்களில் இறைவனை வலம் வந்து வழிபடுவதைப் போல, பக்தர்கள் மலையை வலம் வந்து வழிபடுகின்றனர். கிரிவலப் பாதையில் ‘அஷ்ட லிங்கங்கள்’ அமைந்துள்ளன. பக்தர்கள் இந்த லிங்கங்களைத் தரிசித்து தங்கள் வழிபாட்டைத் தொடர்கின்றனர்.
== அட்டமூர்த்தம் ==
[[File:Ashta lingam 2.jpg|thumb|அஷ்டலிங்க அமைவிடம்]]
நிலம், தீ, நீர், காற்று, வானம் என்னும் ஐந்து பருப்பொருட்களிலும், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய மூன்று ஆலயங்களிலும் உள்ளுறைந்து இருக்கும் சிவனை சிவலிங்கமாக நிறுவி வழிபடுவது அட்ட மூர்த்த வழிபாடு எனப்படுகிறது. பிரம்மனுக்கு சிவன் இவ்வண்ணம் தோற்றமளித்து படைப்புத்தொழிலை அறிவித்தார் எனப்படுகிறது. சிவலிங்க தத்துவத்தின் அடிப்படைகளில் ஒன்று அட்டமூர்த்தக் கொள்கை. அறிதற்கு அப்பாற்பட்ட அருவ வடிவமான ஆதிசிவம் தன் பருப்பொருள் வடிவை இந்த எட்டு வகையில் தானே உருவாக்கிக் கொண்டது. அவற்றிலிருந்தே இப்பிரபஞ்சம் உருவானது என சைவதத்துவம் சொல்கிறது.  
 
==அஷ்டதிக்கு லிங்கம்==
== அஷ்ட லிங்கங்கள் ==
எட்டு திசைகளுக்கும் உரிய எட்டு தேவர்களால் வழிபடப்பட்ட எட்டு லிங்கங்களை வழிபடும் வழக்கமும் உள்ளது. இவையும் அஷ்டலிங்கம் எனப்படுகின்றன. பெரும்பாலான இடங்களில் சிவதத்துவத்தின் விளக்கமான அட்டலிங்கங்கள் காலப்போக்கில் அந்த அடிப்படைக் கொள்கைகள் மறக்கப்பட்டு, எட்டு திசைக்காவலுக்குரிய லிங்கங்களாக எளிமையான மறுவிளக்கம் அளிக்கப்பட்டு, வழிபடப்படுகின்றன. திருவண்ணாமலை, திருவேற்காடு போன்ற ஊர்களில் உள்ளவை அஷ்டதிக்கு லிங்கங்கள் எனப்படுகின்றன (பார்க்க [[அஷ்டலிங்கங்கள், திருவண்ணாமலை]] )
திருவண்ணாமலையில், மலை வலம் வருதல் என்பது தொன்று தொட்டுப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு முறைகளுள் ஒன்றாக உள்ளது.  கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டு மக்கள் கிரிவலத்தைத் தொடர்கின்றனர்.
==அஷ்டபைரவ லிங்கம்==
 
தமிழகத்தில் சில ஆலயங்களில் எட்டு சிவலிங்கங்கள் சிவபைரவனின் எட்டு தோற்றங்களாக வழிபடப்படுகின்றன. அவை அஷ்டலிங்கங்கள் எனப்படுவதும் உண்டு. காஞ்சீபுரம் பிள்ளையார்ப்பாளையம் சோளீஸ்வரர் ஆலயத்தில் உள்ள எட்டு லிங்கங்கள் அஷ்டபைரவ லிங்கங்கள் எனப்படுகின்றன. (பார்க்க [[அஷ்ட பைரவர்]])
திருவண்ணாமலையைக் காக்கும் எண்திசைக் காவல் தெய்வங்களாக, அஷ்ட திக்கு பாலகர்களாக ‘அஷ்ட லிங்கங்கள்’ கருதப்படுகின்றன. பௌர்ணமி நாள் அன்று அஷ்ட லிங்கங்களை வழிப்பட்டால் சகல பிரச்சினைகளும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
== அஷ்டவீரட்ட தலங்கள் ==
 
சிவபெருமானின் எட்டு வீரச்செயல்கள் நிகழ்ந்த எட்டு தலங்கள் அஷ்டவீரட்ட தலங்கள் எனப்படுகின்றன. இவற்றையும் அஷ்டலிங்கங்கள் என்று சொல்வதுண்டு. இந்த புராணமும் அட்டமூர்த்தங்கள் என்னும் அடிப்படை தத்துவத்தில் இருந்து உருவாக்கப்பட்டதே. (பார்க்க [[அஷ்ட வீரட்டானம்]])  
* இந்திர லிங்கம்
==அஷ்டலிங்க பத்ரகா பத்மம்==
* அக்னி லிங்கம்
சைவத்தின் தாந்த்ரிக மரபில் அஷ்டலிங்கங்கள் (அட்டமூர்த்தங்கள்) [[மண்டலம்|மண்டல]]ங்களாக வரையப்பட்டு, [[மேரு]]க்களாக உருவாக்கப்பட்டு வழிபடப்பட்டன. இவை அஷ்டலிங்க பத்ரகா பத்மம் என அழைக்கப்பட்டன. அவற்றை வரைவது, வழிபடுவது ஆகியவற்றை பழைய தாந்திரிக நூல்கள் விவரிக்கின்றன. தமிழகத்தில் அந்த தாந்த்ரிக மரபு புழக்கத்தில் இல்லை. கேரள நூல்களிலேயே குறிப்புகள் உள்ளன.
* எம லிங்கம்
== உசாத்துணை ==
* நிருதி லிங்கம்
*[https://aalayamkanden.blogspot.com/2014/06/ashtalingams-around-thiruverkadu.html திருவேற்காடு அஷ்டலிங்கங்கள்]
* வருண லிங்கம்
*[https://veludharan.blogspot.com/2020/05/shri-soleeswarar-temple-aka-ashhta.html Shri Soleeswarar Temple aka Ashta Linga Bhairavar Sthalam, Pillayarpalayam, Kanchipuram, Tamil Nadu.]
* வாயு லிங்கம்
*[https://archive.org/stream/sanathanmal/%E0%B4%A8%E0%B4%AE%E0%B5%8D%E0%B4%AA%E0%B5%82%E0%B4%A4%E0%B4%BF%E0%B4%B0%E0%B4%BF%E0%B4%AD%E0%B4%BE%E0%B4%B7%E0%B4%BE%20%E0%B4%B6%E0%B4%AC%E0%B5%8D%E0%B4%A6%E0%B4%95%E0%B5%8B%E0%B4%B6%E0%B4%82_djvu.txt சனாதன தர்ம கிரந்தாவலி (பழைய மலையாளம்) இணையநூலகம்]
* குபேரலிங்கம்
*[https://www.youtube.com/watch?v=vgeDrvpiCWg&ab_channel=RK_MANDALAS அஷ்டலிங்க பத்ரக பத்மம் வரைதல் காணொளி]
* ஈசான்ய லிங்கம்
{{Finalised}}
 
- ஆகிய எட்டு லிங்கங்களும் அஷ்ட லிங்கங்களாகப் போற்றி வழிபடப்படுகின்றன.
[[File:Ashta Lingangal.jpg|thumb|அஷ்ட லிங்கங்கள்]]
[[File:Annamalaiyar-Unnamalai Amman.jpg|thumb|அண்ணாமலையார் - உண்ணாமுலை அம்மன்]]
[[File:Annamalai new.jpg|thumb|திருவண்ணாமலை - புனிதக் கோபுரங்கள்]]
 
== அஷ்டலிங்க வழிபாடு ==
 
===== இந்திர லிங்கம் (கிழக்கு) =====
திருவண்ணாமலை தேரடி சாலையில் ராஜகோபுரத்திற்குச் சற்றுத் தொலைவில் அமைந்துள்ள லிங்கம் இந்திர லிங்கம். அஷ்ட திக்குப் பாலகர்களில் இந்திரன் கிழக்குத் திசையின் அதிபதி. ஐராவதம் என்னும் யானையை உடையவன். தேவர்களுக்குத் தலைவனான அவன், தனது இந்திர பதவி நிலைத்திருக்க வேண்டி தவம் செய்து அண்ணாமலையாரை வணங்கி வழிபட்டான். அவ்வாறு அவன் வழிபட்ட லிங்கம்,  அவன் பெயரில் ‘இந்திர லிங்கம்’ என அழைக்கப்படுகிறது.
 
===== அக்னி லிங்கம் (தென் கிழக்கு) =====
அக்னிப் பிழம்பான அண்ணாமலையாரை, அக்னிக் கடவுள் வழிபட்ட லிங்கமே அக்னி லிங்கம். பஞ்சபூதத் தலங்களில் நெருப்பைக் குறிக்கும் இத்தல ஈசனை, வேத வழிபாட்டில் மிக முக்கிய இடம் பிடித்த வேள்விக் கடவுளான அக்னி, வழிபட்டு புனிதமடைந்தான்.
 
இந்த லிங்கத்தின் அருகில் அக்னி தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தம், அண்ணாமலையில் உள்ள 360 புனித தீர்த்தங்களுள் ஒன்று.
 
===== ஸ்ரீ எமலிங்கம் (தெற்கு) =====
எமன் அறக்கடவுள். தர்மராஜன் என்று போற்றப்படுபவன். வேண்டியவர், வேண்டாதவர் பாராது தன் கடமைகளைச் செய்கிறவன். அவன் பூஜித்த லிங்கம் இது. எமன் கட்டளை நிறைவேற்றும் கிங்கரர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்ற நம்பிக்கை உள்ளது.
 
===== நிருதி லிங்கம் (தென்மேற்கு) =====
தென்மேற்கு திசைக்கு அதிபதி நிருதி. இவர், தாணு என்ற இயற்பெயர் கொண்டவர். பிரம்மாவின் புத்திரர். நீண்ட தவம் செய்து அஷ்டவசுக்கள் ஆகும் பாக்கியம் பெற்றார். இவர் அண்ணாமலைக்கு வந்து தவம் செய்து சிவனைப் பூஜித்து வழிப்பட்டார். அந்த லிங்கமே லிங்கம் ’நிருதி லிங்கம்’ என அழைக்கப்படுகிறது. இதன் அருகே ’சனி தீர்த்தம்’ உள்ளது.
 
நிருதி லிங்கத்தின் அருகே, பார்வதி தேவிக்கு, சிவபெருமான், ரிஷப வாகனத்தில்  காட்சி அளித்தார். இங்கிருந்து மலையைக் காணும்போது ’நந்தி’யின் (ரிஷபம்) முகம் தெரியும். வேறு எங்கிருந்தும் இந்தத் தோற்றம் தெரியாது என்பது இதன் சிறப்பு.
 
===== ஸ்ரீ வருண லிங்கம் (மேற்கு திசை) =====
மழைக்கடவுளான வருணன், சிவபெருமானைப் பூஜித்து வழிபட்ட லிங்கம் வருண லிங்கம். இதன் அருகே வருண தீர்த்தம் உள்ளது.
 
===== ஸ்ரீ வாயு லிங்கம் (வட மேற்குத்திசை) =====
காற்றுக் கடவுள். ஜீவராசிகள் உயிர் வாழ அடிப்படைத் தேவையான காற்றின் தெய்வம் வாயு பகவான் என்று போற்றப்படுகிறார். அவர், திருவண்ணாமலையில் தவம் செய்து வழிபட்டார். காற்றுக் கடவுள் வழிபட்ட லிங்கம், ‘வாயு லிங்கம்’ என அழைக்கப்படுகிறது. இதன் அருகே ‘வாயு தீர்த்தம்’ உள்ளது.
 
===== குபேர லிங்கம் (வடக்கு) =====
செல்வங்களுக்கு அதிபதியாகப் போற்றப்படும் குபேரன் வழிபட்ட லிங்கம், குபேர லிங்கம். சாபத்தால் தன் செல்வங்களை இழந்த குபேரன், இங்கு இறைவனை பூஜித்து, இழந்த செல்வங்களை திரும்பப் பெற்றதாக ஐதீகம்.  
 
===== ஈசான்ய லிங்கம் (வட கிழக்கு) =====
ஈசான்ய திசைக்கு அதிபதி ஈசானன். ஸ்ரீ ருத்ரரின் அம்சமுள்ளவன். அவன் பூஜித்த லிங்கமே ஈசான லிங்கம். அன்னை பார்வதி தேவி கிரிவலம் வருகையில், வடகிழக்குப் பகுதியான ஈசான்ய திசைக்கு வந்தபோது, சிவபெருமான்,  ரிஷப வாகனத்தில் அன்னைக்கு காட்சி அளித்தார். அன்னைக்கு இடப்பாகம் தந்து அரவணைத்தார்.
 
ஈசான்ய லிங்கம், கிரிவலப்பாதையின் முடிவில் இடுகாட்டை ஒட்டி அமைந்துள்ளது. இதன் எதிரே ஈசான்ய மடமும், அம்மணி அம்மாளின் சமாதி ஆலயமும் அமைந்துள்ளன. அஷ்ட லிங்க வழிபாட்டில் இதுவே இறுதி லிங்க வழிபாடாகும்.  
 
கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்க வரிசையில் சேராத சூரிய லிங்கம், சந்திர லிங்கம் போன்றவையும் உள்ளன. சூரிய தேவனும், சந்திர தேவனும் அண்ணாமலைக்கு வந்து தவம் செய்து வழிபட்ட லிங்கங்களாக இவை கருதப்படுகின்றன.
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 17:50, 10 July 2023

அஷ்டலிங்க வழிபாடு: சிவபெருமானை எட்டு வகைகளில் சிவலிங்கமாக வழிபடும் முறை. தமிழகத்திலும் கர்நாடகத்திலும் வெவ்வேறு வகையில் இந்த வழிபாட்டுமுறை உள்ளது. சைவ மரபில் இது அட்ட மூர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது.

அட்டமூர்த்தம்

நிலம், தீ, நீர், காற்று, வானம் என்னும் ஐந்து பருப்பொருட்களிலும், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய மூன்று ஆலயங்களிலும் உள்ளுறைந்து இருக்கும் சிவனை சிவலிங்கமாக நிறுவி வழிபடுவது அட்ட மூர்த்த வழிபாடு எனப்படுகிறது. பிரம்மனுக்கு சிவன் இவ்வண்ணம் தோற்றமளித்து படைப்புத்தொழிலை அறிவித்தார் எனப்படுகிறது. சிவலிங்க தத்துவத்தின் அடிப்படைகளில் ஒன்று அட்டமூர்த்தக் கொள்கை. அறிதற்கு அப்பாற்பட்ட அருவ வடிவமான ஆதிசிவம் தன் பருப்பொருள் வடிவை இந்த எட்டு வகையில் தானே உருவாக்கிக் கொண்டது. அவற்றிலிருந்தே இப்பிரபஞ்சம் உருவானது என சைவதத்துவம் சொல்கிறது.

அஷ்டதிக்கு லிங்கம்

எட்டு திசைகளுக்கும் உரிய எட்டு தேவர்களால் வழிபடப்பட்ட எட்டு லிங்கங்களை வழிபடும் வழக்கமும் உள்ளது. இவையும் அஷ்டலிங்கம் எனப்படுகின்றன. பெரும்பாலான இடங்களில் சிவதத்துவத்தின் விளக்கமான அட்டலிங்கங்கள் காலப்போக்கில் அந்த அடிப்படைக் கொள்கைகள் மறக்கப்பட்டு, எட்டு திசைக்காவலுக்குரிய லிங்கங்களாக எளிமையான மறுவிளக்கம் அளிக்கப்பட்டு, வழிபடப்படுகின்றன. திருவண்ணாமலை, திருவேற்காடு போன்ற ஊர்களில் உள்ளவை அஷ்டதிக்கு லிங்கங்கள் எனப்படுகின்றன (பார்க்க அஷ்டலிங்கங்கள், திருவண்ணாமலை )

அஷ்டபைரவ லிங்கம்

தமிழகத்தில் சில ஆலயங்களில் எட்டு சிவலிங்கங்கள் சிவபைரவனின் எட்டு தோற்றங்களாக வழிபடப்படுகின்றன. அவை அஷ்டலிங்கங்கள் எனப்படுவதும் உண்டு. காஞ்சீபுரம் பிள்ளையார்ப்பாளையம் சோளீஸ்வரர் ஆலயத்தில் உள்ள எட்டு லிங்கங்கள் அஷ்டபைரவ லிங்கங்கள் எனப்படுகின்றன. (பார்க்க அஷ்ட பைரவர்)

அஷ்டவீரட்ட தலங்கள்

சிவபெருமானின் எட்டு வீரச்செயல்கள் நிகழ்ந்த எட்டு தலங்கள் அஷ்டவீரட்ட தலங்கள் எனப்படுகின்றன. இவற்றையும் அஷ்டலிங்கங்கள் என்று சொல்வதுண்டு. இந்த புராணமும் அட்டமூர்த்தங்கள் என்னும் அடிப்படை தத்துவத்தில் இருந்து உருவாக்கப்பட்டதே. (பார்க்க அஷ்ட வீரட்டானம்)

அஷ்டலிங்க பத்ரகா பத்மம்

சைவத்தின் தாந்த்ரிக மரபில் அஷ்டலிங்கங்கள் (அட்டமூர்த்தங்கள்) மண்டலங்களாக வரையப்பட்டு, மேருக்களாக உருவாக்கப்பட்டு வழிபடப்பட்டன. இவை அஷ்டலிங்க பத்ரகா பத்மம் என அழைக்கப்பட்டன. அவற்றை வரைவது, வழிபடுவது ஆகியவற்றை பழைய தாந்திரிக நூல்கள் விவரிக்கின்றன. தமிழகத்தில் அந்த தாந்த்ரிக மரபு புழக்கத்தில் இல்லை. கேரள நூல்களிலேயே குறிப்புகள் உள்ளன.

உசாத்துணை


✅Finalised Page