யோ. ஞான சந்திர ஜாண்சன்: Difference between revisions
| (3 intermediate revisions by 2 users not shown) | |||
| Line 1: | Line 1: | ||
{{ | {{Read English|Name of target article=Y. Gnanachandra Johnson|Title of target article=Y. Gnanachandra Johnson}} | ||
[[File:ஞானசந்திரஜான்சன்.jpg|thumb|ஞானசந்திர ஜாண்சன்]] | [[File:ஞானசந்திரஜான்சன்.jpg|thumb|ஞானசந்திர ஜாண்சன்]] | ||
[[File:Johnson.jpg|thumb|ஞானசந்திர ஜாண்சன்]] | [[File:Johnson.jpg|thumb|ஞானசந்திர ஜாண்சன்]] | ||
| Line 53: | Line 52: | ||
* மில்லர் என்னும் மாமனிதர் (2012 - எம்.சி.சி. கல்லூரி வெளியீடு) | * மில்லர் என்னும் மாமனிதர் (2012 - எம்.சி.சி. கல்லூரி வெளியீடு) | ||
* சென்னை கிறித்தவக் கல்லூரியின் வாழ்வும் வளமரபும் (2016 - கீர்த்தனா பதிப்பகம்) | * சென்னை கிறித்தவக் கல்லூரியின் வாழ்வும் வளமரபும் (2016 - கீர்த்தனா பதிப்பகம்) | ||
* அமைதிக் கல்வி (2017 | * அமைதிக் கல்வி (2017 - எம்.சி.சி. கல்லூரி வெளியீடு) | ||
===== பதிப்பாசிரியர் ===== | ===== பதிப்பாசிரியர் ===== | ||
* கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம்: ஓர் அறிமுகம் (2008 - ஆசியவியல் நிறுவனம்) | * கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம்: ஓர் அறிமுகம் (2008 - ஆசியவியல் நிறுவனம்) | ||
| Line 73: | Line 73: | ||
* [https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-33180-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 கிறிஸ்தவ இலக்கியத் திரட்டு இணையநூலகம்] | * [https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-33180-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 கிறிஸ்தவ இலக்கியத் திரட்டு இணையநூலகம்] | ||
* [https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU1kZty.TVA_BOK_0006377/TVA_BOK_0006377_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_djvu.txt கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம்: ஓர் அறிமுகம் இணையநூலகம்] | * [https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU1kZty.TVA_BOK_0006377/TVA_BOK_0006377_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_djvu.txt கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம்: ஓர் அறிமுகம் இணையநூலகம்] | ||
* [https://www.andhimazhai.com/literature/interview/gnanachandra-johnson-interview-17072026 யோ. | * [https://www.andhimazhai.com/literature/interview/gnanachandra-johnson-interview-17072026 யோ. ஞான சந்திர ஜாண்சன் நேர்காணல் - அருள் செல்வன் - அந்திமழை இதழ்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
Latest revision as of 17:35, 7 August 2026
To read the article in English: Y. Gnanachandra Johnson.
யோ. ஞான சந்திர ஜாண்சன் (பிறப்பு: ஆகஸ்ட் 11, 1957) தமிழ் ஆய்வாளர், பேராசிரியர். தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியங்களை ஆய்வு செய்வதில் ஈடுபாடு கொண்டவர். தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியத்திற்கு பங்களிப்பாற்றியவர்கள், தமிழ்க் கிறித்தவக் கீர்த்தனைகள், தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள் ஆகியவற்றைப் பற்றிய இவரின் நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.
பிறப்பு, கல்வி
யோ. ஞான சந்திர ஜாண்சன் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமாரி மாவட்டத்தில் மயிலாடியில் ஆகஸ்ட் 11, 1957-ல் பிறந்தார். தந்தை பெயர் ஞா.யோவான், அம்மா பெயர் யோ.பரமாயி. உடன் பிறந்தவர்கள் இரண்டு தம்பி, ஒரு தங்கை. ஆரம்பகல்வியை கீழவளவு அரசு ஆரம்பப்பள்ளியில் பயின்றார். பின் மயிலாடி, திருவட்டாறு, மார்த்தாண்டம், மணவாளக்குறிச்சி, நாகர்கோவில் அரசு பள்ளிகளில் பயின்றார். ஒன்பதாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை ஆரல்வாய்மொழி அரசு பள்ளியில் பயின்றார்.
அறிஞர் அண்ணா கல்லூரி, ஆரல்வாய்மொழியில் இளங்கலை பி.ஏ வரலாறு பயின்றார். நாகர்கோவிலிலுள்ள தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப்பட்டம், ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றார். புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் பி.எட் பட்டம் பெற்றார். 'நீல பத்மநாபன் நாவல்களில் பாத்திரப்படைப்பு' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்தார்.
தனிவாழ்க்கை
ஞானசந்திர ஜாண்சனின் மனைவி பெயர் ஷீபா நேசகுமாரி. மகள் கீர்த்தனா கேலப், மகன் இம்மானுவேல் ஜாண்சன்.
ஆசிரியப்பணி
யோ. ஞான சந்திர ஜாண்சன் சென்னை கிறித்தவக் கல்லூரி தமிழ்த் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி துறைத்தலைவராக மே 2016-ல் ஓய்வுபெற்றார். இவரது மேற்பார்வையின் கீழ் இருபத்தைந்து பேர் முனைவர் பட்டமும், முப்பத்தியிரண்டு பேர் இளநிலை ஆய்வுப் பட்டமும் பெற்றுள்ளனர். 'ஆய்வு சுவடுகள்' என்ற தலைப்பில் மாணவர்களின் ஆய்வுகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்.
ஆய்வு வாழ்க்கை
யோ. ஞான சந்திர ஜாண்சன் தமிழ்க்கிறிஸ்தவ இலக்கிய ஆய்வாளராக அறியப்படுகிறார். பேராசிரியர் அ.கா. பெருமாளின் மாணவர்.
ஞானசந்திர ஜாண்சன் ஆய்வுநூல்களாகவும், தொகைநூல்களாகவும், ஆய்வுப்பதிப்புகளாகவும் கிறிஸ்தவ இலக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றியவர். 'கிறித்தவக் கீர்த்தனைக் கவிஞர்கள்' என்னும் நூலை கீர்த்தனா பதிப்பகத்தின் மூலம் 2003-ல் வெளியிட்டார். இந்நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பு 2009-ல் வெளியானது. மேலும் விரிவாக்கப்பட்டு 2017, 2024-ல் வெளிவந்துள்ளது. 'எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை', 'ஜெர்மானிய இறைத்தொண்டர் ரிங்கல்தெளபே', 'அருட்பணியாளர் இராபர்ட் கால்டுவெல்', 'வேதநாயக சாஸ்திரியார் போன்றவை குறிப்பிடத்தக்க நூல்கள்., 'ம.பொ.சி. யின் வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள்', 'மில்லர் என்னும் மாமனிதர்', 'Dr. William Miller' போன்றவை இவர் அறிஞர்களைப் பற்றி எழுதிய நூல்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆதித்திருச்சபையாகிய மயிலாடி திருச்சபையின் 200-ம் ஆண்டு விழாவின் போது வெளியிடப்பட்ட சிறப்பு மலரின் தொகுப்பாசிரியர். 2008-ல் "எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை", 2021-ல் "வேதநாயக சாஸ்திரியார்" என்னும் இவரின் நூல்கள் சாகித்ய அகாடமி வெளியீடாக வந்து. சென்னை கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறையின் மூலம் இரு தொகுதிகளாக வெளிவந்த 'கிறித்தவத் தமிழியல் ஆய்வுக்கோவை' என்னும் நூலின் பதிப்பாசிரியர். சென்னை ஆசியவியல் நிறுவனத்தின் வாயிலாக 2244 பக்கங்களில் மூன்று தொகுதிகளாக வெளிவந்த 'கிறித்தவத் தமிழ்க் கீர்த்தனைகள் - ஓர் ஆய்வு பதிப்பு' என்னும் நூலில் 2221 கிறிஸ்தவ பாரம்பரிய கீர்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. 'கிறித்தவ கீர்த்தனை கவிஞர்கள்' நூல் 91 கிறிஸ்தவ கவிஞர்களைப் பற்றிய தகவல் கொண்ட தொகுப்பு.
விருதுகள்
- உலக கிறித்தவத் தமிழ்ப் பேரவை 'தமிழ்மாமணி' விருது வழங்கியது.
- 2026 ஆண்டுக்கான தமிழ் விக்கி- தூரன் விருது
இலக்கிய இடம்
யோ.ஞானசந்திர ஜாண்சன் தமிழ் கிறிஸ்தவ இலக்கிய மரபின் ஆய்வாளர்களில் முக்கியமானவர். மறைந்துவிடும் நிலையில் இருந்த கிறிஸ்தவ காப்பியங்கள், கிறிஸ்தவ கீர்த்தனைகள் ஆகியவற்றை முழுமையாகத் தேடித்தொகுத்து வெளியிடும் முயற்சியில் முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவருகிறார். கிறிஸ்தவ இலக்கிய முன்னோடிகளைப் பற்றிய விரிவான வாழ்க்கைவரலாற்றுப் பதிவுகளையும் உருவாக்கியிருக்கிறார்.
நூல் பட்டியல்
ஆய்வுநூல்கள்
- கிறித்தவக் கீர்த்தனைக் கவிஞர்கள் (2003, 2009, 2017, 2024 - கீர்த்தனா பதிப்பகம்)
- எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை (2008, 2021 - சாகித்திய அகாடமி வெளியீடு)
- ம.பொ.சி. யின் வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள் (2009 - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்)
- நம்பி அகப்பொருள் விளக்கம் (2010 - பாரி நிலையம்)
- ஜெர்மானிய இறைத்தொண்டர் ரிங்கல்தெளபே (2016, 2023 - கீர்த்தனா பதிப்பகம்)
- அருட்பணியாளர் இராபர்ட் கால்டுவெல் (2019 - மோரியா ஊழியகங்கள்)
- வேதநாயக சாஸ்திரியார் (2020, 2021 - சாகித்திய அகாடமி வெளியீடு)
- கிறித்தவக் காப்பியங்கள் (2024 - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
- கிறித்தவ இலக்கியம் நானூறு (2026 - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
ஆங்கிலம்
- Dr. William Miller (2023) (Editor - கீர்த்தனா பதிப்பகம்)
- Reflections from a Christian College (2024) (Editor - எம்.சி.சி. கல்லூரி வெளியீடு)
மொழிபெயர்ப்பு
- மில்லர் என்னும் மாமனிதர் (2012 - எம்.சி.சி. கல்லூரி வெளியீடு)
- சென்னை கிறித்தவக் கல்லூரியின் வாழ்வும் வளமரபும் (2016 - கீர்த்தனா பதிப்பகம்)
- அமைதிக் கல்வி (2017 - எம்.சி.சி. கல்லூரி வெளியீடு)
பதிப்பாசிரியர்
- கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம்: ஓர் அறிமுகம் (2008 - ஆசியவியல் நிறுவனம்)
- கிறிஸ்தாயனம் (2008, 2020 - ஆசியவியல் நிறுவனம்)
- கிறித்தவத் தமிழியல் ஆய்வுக்கோவை, இரண்டு தொகுதிகள் (2008 - எம்.சி.சி கல்லூரி தமிழ்த்துறை வெளியீடு)
- கிறித்தவ இலக்கிய வளம் (2009 - முல்லை நிலையம்)
- கிறித்தவ இலக்கியத் திறன் (2013 - கீர்த்தனா பதிப்பகம்)
- கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு (2015 - ஆசியவியல் நிறுவனம்)
- கிறிஸ்தவப் பஜனைக் கீதங்கள் (2015 - கீர்த்தனா பதிப்பகம்)
- ஆய்வுச் சுவடுகள் (2019 - கீர்த்தனா பதிப்பகம்)
- விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியம் (2020 - ஆசியவியல் நிறுவனம்)
- கிறிஸ்தவத் தமிழ்க் கீர்த்தனைகள் - ஆய்வுப்பதிப்பு (2021) (3 தொகுதிகள், தொகுப்பாசிரியர், ஆசியவியல் நிறுவனம்)
உசாத்துணை
- கிறித்தவக் காப்பியங்கள் - முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன் - tamildigitallibrary
- கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள் - ஜெயமோகன் தளம்
- ஞானசந்திர ஜாண்சன் இணையப்பக்கம்
- மைலாடி சி.எஸ்.ஐ சர்ச் இணையப்பக்கம்
- கிறிஸ்தவ இலக்கியத் திரட்டு இணையநூலகம்
- கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம்: ஓர் அறிமுகம் இணையநூலகம்
- யோ. ஞான சந்திர ஜாண்சன் நேர்காணல் - அருள் செல்வன் - அந்திமழை இதழ்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
30-May-2024, 09:08:43 IST
