under review

முத்துக்குமாரசுவாமித் தம்பிரான்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
(5 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் (இலக்கணச்சாமி) (1885-1949) ஈழத்து தமிழ் சைவ அறிஞர். சைவ நூல்களுக்கு உரைகள், ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதினார். அச்சில் இல்லாத சைவ நூல்களை மெய்ப்பு நோக்கி பதிப்பித்தார்.
முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் (இலக்கணச்சாமி) (1885- ஏப்ரல் 22,1949) ஈழத்து தமிழ் சைவ அறிஞர். சைவ நூல்களுக்கு உரைகள், ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதினார். அச்சில் இல்லாத சைவ நூல்களை மெய்ப்பு நோக்கி பதிப்பித்தார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் இலங்கை யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் வெற்றிவேற்பிள்ளைக்கு மகனாக 1885-ல் பிறந்தார்.
முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் இலங்கை யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் வெற்றிவேற்பிள்ளைக்கு மகனாக 1885-ல் பிறந்தார்.
Line 6: Line 6:
===== மாணவர்கள் =====
===== மாணவர்கள் =====
* சிவக்கவிமணி
* சிவக்கவிமணி
* சி.கே. சுப்பிர மணிய முதலியார்
* சி.கே. சுப்பிரமணிய முதலியார்
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
சிவஞான மாபாடியத்தை ஆராய்ந்து முதன்முதல் முழுநூலாக வெளியிட்டார். சிவாக்கிரயோகிகள் இயற்றிய ’சிவாக்கிரபாடியம்’, ’கிரியாதீபிகை’ என்ற இரு வடமொழி நூல்களையும் வெளியிடப்பட்டார். தருமபுர ஆதீனத்து ஆணையின்படி ’முத்திநிச்சயப்பேருரை’ முழுவதையும் ஒப்பிட்டுப் பார்த்து, ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதினார். சைவசந்நியாசபத்ததி, திருநாரையூர்ப் புராணம் ஆகிய இரு நூல்களையும் வெளியிட்டார். திருவுந்தியார், திருக்களிற்றுப்பாடியார் நூல்களுக்கு உரை எழுதினார். சிவக்கவிமணி, சி. கே. சுப்பிரமணிய முதலியார் எழுதி வெளியிட்ட பெரிய புராண உரையை எழுதினார். ’ஞானவர்ண விளக்கம்’ என்னும் நூலை ஆராய்ச்சி செய்தார். இந்நூல் வெளிவரவில்லை.
முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சிவஞான மாபாடியத்தை ஆராய்ந்து முதன்முதல் முழுநூலாக வெளியிட்டார். சிவாக்கிரயோகிகள் இயற்றிய ’சிவாக்கிரபாடியம்’, ’கிரியாதீபிகை’ என்ற இரு வடமொழி நூல்களையும் வெளியிடப்பட்டார். தருமபுர ஆதீனத்து ஆணையின்படி ’முத்திநிச்சயப்பேருரை’ முழுவதையும் ஒப்பிட்டுப் பார்த்து, ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதினார். 'சைவசந்நியாசபத்ததி', 'திருநாரையூர்ப் புராணம்' ஆகிய இரு நூல்களையும் வெளியிட்டார். [[திருவுந்தியார்]], [[திருக்களிற்றுப்படியார்]] நூல்களுக்கு உரை எழுதினார். சிவக்கவிமணி, [[சி.கே. சுப்பிரமணிய முதலியார்|சி. கே. சுப்பிரமணிய முதலியார்]] எழுதி வெளியிட்ட பெரிய புராண உரையை எழுதினார். ’ஞானவர்ண விளக்கம்’ என்னும் நூலை ஆராய்ச்சி செய்தார். இந்நூல் வெளிவரவில்லை.
== மறைவு ==
== மறைவு ==
முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் ஏப்ரல் 22, 1949-ல் காலமானார்.
முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் ஏப்ரல் 22, 1949-ல் காலமானார்.
Line 23: Line 23:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப்பிள்ளை
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப்பிள்ளை
{{ready for review}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 08:32, 24 September 2023

முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் (இலக்கணச்சாமி) (1885- ஏப்ரல் 22,1949) ஈழத்து தமிழ் சைவ அறிஞர். சைவ நூல்களுக்கு உரைகள், ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதினார். அச்சில் இல்லாத சைவ நூல்களை மெய்ப்பு நோக்கி பதிப்பித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் இலங்கை யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் வெற்றிவேற்பிள்ளைக்கு மகனாக 1885-ல் பிறந்தார்.

ஆன்மிக வாழ்க்கை

முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் பதினான்காம் வயதில் இலங்கையை விட்டு நீங்கி தலயாத்திரை தீர்த்தயாத்திரை செய்வதற்காக இந்தியா சென்றர். சிதம்பரம் செல்லப்ப சுவாமிகள், ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் ஆகியவர்களிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். சூரியனர்கோயில் ஆதீனமகாசந்நிதானம் முத்துக்குமார தேசிகரிடம், வடமொழியிலும் தென் மொழியிலும் ஞான நூல்களைக் கற்று, முத்தீட்சைகளையும் பெற்றுக் கொண்டார். சிறிது காலம்வரை அங்கே தங்கியிருந்த பின், சிதம்பரத்திற்குச் சென்று அதையே நிலையான இருப்பிடமாக்கிக்கொண்டார். சிதம்பரத்திலே தம்மை நாடிவந்த பலருக்குச் சைவசித்தாந்த நூல்களையும் இலக்கண இலக்கியங்களையும் கற்பித்தார்.

மாணவர்கள்
  • சிவக்கவிமணி
  • சி.கே. சுப்பிரமணிய முதலியார்

இலக்கிய வாழ்க்கை

முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சிவஞான மாபாடியத்தை ஆராய்ந்து முதன்முதல் முழுநூலாக வெளியிட்டார். சிவாக்கிரயோகிகள் இயற்றிய ’சிவாக்கிரபாடியம்’, ’கிரியாதீபிகை’ என்ற இரு வடமொழி நூல்களையும் வெளியிடப்பட்டார். தருமபுர ஆதீனத்து ஆணையின்படி ’முத்திநிச்சயப்பேருரை’ முழுவதையும் ஒப்பிட்டுப் பார்த்து, ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதினார். 'சைவசந்நியாசபத்ததி', 'திருநாரையூர்ப் புராணம்' ஆகிய இரு நூல்களையும் வெளியிட்டார். திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் நூல்களுக்கு உரை எழுதினார். சிவக்கவிமணி, சி. கே. சுப்பிரமணிய முதலியார் எழுதி வெளியிட்ட பெரிய புராண உரையை எழுதினார். ’ஞானவர்ண விளக்கம்’ என்னும் நூலை ஆராய்ச்சி செய்தார். இந்நூல் வெளிவரவில்லை.

மறைவு

முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் ஏப்ரல் 22, 1949-ல் காலமானார்.

நூல் பட்டியல்

பதிப்பித்தவை
  • சிவாக்கிரபாடியம்
  • கிரியாதீபிகை
ஆராய்ச்சிக் குறிப்பு
  • முத்திநிச்சயப்பேருரை
  • ஞானவர்ண விளக்கம்
உரை
  • திருவுந்தியார்
  • திருக்களிற்றுப்பாடியார்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப்பிள்ளை


✅Finalised Page