சம்யுக்தா மாயா: Difference between revisions
SakthivelS (talk | contribs) m (→இணைப்புகள்: added recent articles and speeches on her poetry) |
|||
| (2 intermediate revisions by 2 users not shown) | |||
| Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Samyuktha Maya|Title of target article=Samyuktha Maya}} | |||
[[File:Samyu.jpg|thumb|சம்யுக்தா மாயா]] | [[File:Samyu.jpg|thumb|சம்யுக்தா மாயா]] | ||
[[File:சம்யுக்தா மாயா.jpg|thumb|347x347px|சம்யுக்தா மாயா]] | [[File:சம்யுக்தா மாயா.jpg|thumb|347x347px|சம்யுக்தா மாயா]] | ||
| Line 26: | Line 27: | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* [https://samyukthamaya.blogspot.com/ சம்யுக்தா மாயா - வலைதளம்] | * [https://samyukthamaya.blogspot.com/ சம்யுக்தா மாயா - வலைதளம்] | ||
* [https://www.kavithaigal.in/2026/05/blog-post_665.html சம்யுக்தா மாயா நேர்காணல் - மதார்] | |||
* [https://www.youtube.com/watch?v=_Am6DZW8wjc&t=124s சம்யுக்தா மாயா கவிதைகள் | குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2026 | எழுத்தாளர் ஜெயமோகன்] | |||
* [https://www.kavithaigal.in/2026/05/blog-post_573.html சுடரிழையும் அரூப முத்தும் - சபரிநாதன் | சம்யுக்தா கவிதைகள்] | |||
* [https://www.kavithaigal.in/2026/05/blog-post_210.html தட்டழியும் தவிப்பின் கவிதைகள் - ரம்யா | சம்யுக்தா கவிதைகள்] | |||
* [https://www.kavithaigal.in/search/label/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE சம்யுக்தா கவிதைகள் சிறப்பிதழ்] | |||
* [https://www.sramakrishnan.com/%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b9%e0%af%86%e0%ae%b3%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81/ டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு கவிதை - எஸ். ராமகிருஷ்ணன்] | * [https://www.sramakrishnan.com/%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b9%e0%af%86%e0%ae%b3%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81/ டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு கவிதை - எஸ். ராமகிருஷ்ணன்] | ||
* [https://www.youtube.com/watch?v=nvaXo1bCXEM சம்யுக்தா மாயா - டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு | தாரா கணேசன் | சிறப்புரை: இந்திரன் | * [https://www.youtube.com/watch?v=nvaXo1bCXEM சம்யுக்தா மாயா - டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு | தாரா கணேசன் | சிறப்புரை: இந்திரன்] | ||
* [https://www.youtube.com/watch?v=2qb8TTL777U தாரா கணேசன் உரை | சம்யுக்தா மாயாவின் "தீ நின்ற பாதம்" நூல் வெளியீடு | * [https://www.youtube.com/watch?v=2qb8TTL777U தாரா கணேசன் உரை | சம்யுக்தா மாயாவின் "தீ நின்ற பாதம்" நூல் வெளியீடு] | ||
* [https://uyirmmai.com/?s=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE சம்யுக்தா மாயா கவிதைகள் - உயிர்மை தளம்] | * [https://uyirmmai.com/?s=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE சம்யுக்தா மாயா கவிதைகள் - உயிர்மை தளம்] | ||
* [https://nutpam.site/poems/6349/ சம்யுக்தா மாயா கவிதைகள் - நுட்பம்] | * [https://nutpam.site/poems/6349/ சம்யுக்தா மாயா கவிதைகள் - நுட்பம்] | ||
* [https://www.youtube.com/watch?v=-oTq28jwByI சம்யுக்தா மாயா குமரகுருபரன் விழா உரையாடல்] | * [https://www.youtube.com/watch?v=-oTq28jwByI சம்யுக்தா மாயா குமரகுருபரன் விழா உரையாடல்] | ||
* [https://www.youtube.com/watch?v=tLnxWfBdWCs&t=1s சம்யுக்தா மாயா கவிதைகள் | குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2026 | ஈரோடு விஜயராகவன்] | |||
* [https://www.youtube.com/watch?v=MI0wlPFEfI8&t=203s சம்யுக்தா மாயா கவிதைகள் | குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2026 | கவிஞர் ச.துரை] | |||
* [https://www.youtube.com/watch?v=piUUy5WQUBI&t=223s சம்யுக்தா மாயா ஏற்புரை | குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2026] | |||
Latest revision as of 16:54, 14 June 2026
To read the article in English: Samyuktha Maya.
சம்யுக்தா மாயா (பிறப்பு: மே 17, 1982) தமிழில் எழுதிவரும் கவிஞர். இணைய இதழ்களில் கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
சம்யுக்தா மாயா (இயற்பெயர் உமா மகேஸ்வரி) தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கோபாலகிருஷ்ணன், சாந்திமதி இணையருக்கு மே 17, 1982-ல் பிறந்தார்.உடன்பிறந்தவர் ஒரு தம்பி. போடிநாயக்கனூரிலுள்ள சிசம்(SCISM) மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மதுரை வேளாண் கல்லூரியில் வேளாண்மையில் இளங்கலைப்பட்டம் பெற்றார். கோவை வேளாண் கல்லூரியில் சூழலியல் அறிவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
சம்யுக்தா மாயா ஜூன் 7, 2015-ல் ஆனந்த் என்பவரை மணந்தார். மகள் அமெய்ரா நிவ்ரிதி.
இலக்கிய வாழ்க்கை
சம்யுக்தா மாயாவின் முதல் கவிதை 2008-ல் வெளியானது. அவரது படைப்புகள் உயிரெழுத்து, உயிர்மை, ஆனந்த விகடன், கணையாழி, தினகரன், கல்குதிரை ஆகிய இதழ்களில் வெளிவந்தன. முதல் கவிதைத் தொகுப்பு 'டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு' 2016-ல் உயிர்மை பதிப்பகம் வெளியீடாக வந்தது. 'தீ நின்ற பாதம்' இரண்டாவது கவிதைத் தொகுப்பு (2023 சால்ட் பதிப்பகம்).
சம்யுக்தா இணைய இதழ்களிலும் கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார்.
விருதுகள்
இலக்கிய இடம்
"இக்கவிதைகளின் தனித்துவம் எளிய வார்த்தைகளின் வழியே உருவாகும் மகத்தான அனுபவங்களாகும். புதிய கவித்துவ மொழியில் உணர்ச்சிபூர்வமாக கிளைவிடுகின்றன வரிகள். அதில் வெளிப்படும் படிமங்களும் உவமைகளும் சிறப்பாக உள்ளன. மாயாவின் கவிதைகளில் பெருமளவு புதிய சொற்கள் பிரயோகங்களைக் காணமுடிகிறது. பிரிவும் தனிமையும் அன்பிற்கான ஏக்கமும் கொண்ட இக்கவிதைகள் சுய இரக்கத்தை முன் வைக்கவில்லை. மாறாகப் பிரிவை, துயரை, தனிமையை எதிர்கொண்ட விதத்தை அழுத்தமாக முன்வைக்கின்றன. தனிமையை மிக நுண்மையாக உணர்ந்த ஒருவரின் மென்குரல் போலவே கவிதைகள் ஒலிக்கின்றன." என எஸ். ராமகிருஷ்ணன் சம்யுக்தா மாயாவின் 'டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு' கவிதைத் தொகுப்பு குறித்து மதிப்பிடுகிறார்.
நூல் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு (2016, உயிர்மை பதிப்பகம்)
- தீ நின்ற பாதம் (2023, சால்ட் பதிப்பகம்)
இணைப்புகள்
- சம்யுக்தா மாயா - வலைதளம்
- சம்யுக்தா மாயா நேர்காணல் - மதார்
- சம்யுக்தா மாயா கவிதைகள் | குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2026 | எழுத்தாளர் ஜெயமோகன்
- சுடரிழையும் அரூப முத்தும் - சபரிநாதன் | சம்யுக்தா கவிதைகள்
- தட்டழியும் தவிப்பின் கவிதைகள் - ரம்யா | சம்யுக்தா கவிதைகள்
- சம்யுக்தா கவிதைகள் சிறப்பிதழ்
- டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு கவிதை - எஸ். ராமகிருஷ்ணன்
- சம்யுக்தா மாயா - டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு | தாரா கணேசன் | சிறப்புரை: இந்திரன்
- தாரா கணேசன் உரை | சம்யுக்தா மாயாவின் "தீ நின்ற பாதம்" நூல் வெளியீடு
- சம்யுக்தா மாயா கவிதைகள் - உயிர்மை தளம்
- சம்யுக்தா மாயா கவிதைகள் - நுட்பம்
- சம்யுக்தா மாயா குமரகுருபரன் விழா உரையாடல்
- சம்யுக்தா மாயா கவிதைகள் | குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2026 | ஈரோடு விஜயராகவன்
- சம்யுக்தா மாயா கவிதைகள் | குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2026 | கவிஞர் ச.துரை
- சம்யுக்தா மாயா ஏற்புரை | குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2026
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
19-Jun-2024, 18:42:39 IST