அஸ்மின் மர்ஹூம் உதுமாலெவ்வை: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(; Added info on Finalised date) |
||
| Line 50: | Line 50: | ||
*[https://www.tamilauthors.com/10/16.html அஸ்மின் மர்ஹூம் உதுமாலெவ்வை நேர்காணல் - கோகிலவாணி] | *[https://www.tamilauthors.com/10/16.html அஸ்மின் மர்ஹூம் உதுமாலெவ்வை நேர்காணல் - கோகிலவாணி] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|24-Apr-2026, 17:50:41 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 03:44, 25 April 2026
அஸ்மின் மர்ஹூம் உதுமாலெவ்வை (யூ.எல்.எம்.அஸ்மின், பொத்துவில் அஸ்மின், ஈழநிலா) (பிறப்பு: மே 2, 1983) ஈழத்து எழுத்தாளர், மரபுக் கவிஞர், இதழாசிரியர், திரைப்படப் பாடலாசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர். கவிதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், பாடல்கள் எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
அஸ்மின் மர்ஹூம் உதுமாலெவ்வை இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம் பொத்துவிலை என்ற ஊரில் மே 2, 1983-ல் பிறந்தார். தந்தை மர்ஹூம் உதுமாலெவ்வை. தாய் ஆயிஷா. இவரது பூர்வீகம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ல தேவிப்பட்டினம். இவரது தாத்தா காலத்தில் இலங்கைக்கு குடியேறினர். பொத்துவில் மத்திய கல்லூரியில் பள்ளிக்கல்வி பயின்றார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்துக்கான கலைமாணி பட்டம் பெற்றார்.
இதழியல்
தேடல்
அஸ்மின் மர்ஹூம் உதுமாலெவ்வை 2000-ல் பொத்துவில் பிரதேசத்தை மையமாக கொண்டு வெளிவந்த 'தேடல்' எனும் கலை, இலக்கியச் காலாண்டிதழின் ஆசிரியராக இருந்தார்.
சுடர் ஒளி
சுடர் ஒளி என்ற வார வெளியீட்டின் கவிதைப் பகுதி ஆசிரியராகவும் பணிபுரிந்தார். இதில் இவர் உணர்வுகள் என்ற பகுதியில் 'ஈழநிலா' என்ற புனைபெயரில் ஈழத்தின் இலக்கிய நிகழ்வுகள், எழுத்தாளர்கள் குறித்துத் தனது மனப்பதிவுகளை எழுதினார்.
இலக்கிய வாழ்க்கை
யூ.எல்.எம்.அஸ்மின், பொத்துவில் அஸ்மின், ஈழநிலா ஆகிய புனைபெயர்களில் எழுதினார். இவரது முதல் கவிதை மார்ச் 25, 2000-ல் தினக்குரல்' பத்திரிகையில் "என்ன தவம் செய்தாயோ" எனும் தலைப்பில் வெளியானது. ஜூலை 1, 2004-ல் இவரின் இரண்டு சிறுகதைகளும், நாற்பது கவிதைகளும், மூன்று கட்டுரைகளும் வெளிவந்தன. தினக்குரல், தினகரன், வீரகேசரி, நவமணி, ஜனனி, தேடல், தமிழ் உலகம், முஸ்லிம்குரல், இளங்கதிர் ஆகிய பத்திரிகைகள் சஞ்சிகைகளில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன.
வைரமுத்து தொகுத்த 'கலைஞர்100 கவிதைகள் 100' கலைஞர் நூற்றாண்டு கவிதை நூலில் இவரது கவிதையும் இடம்பெற்றது. இவரது படைப்புக்கள் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் இடம்பெற்று வருகின்றன. இலங்கை ஊடகங்களில் மட்டுமல்லாது, தமிழகத்தின் தொலைக்காட்சிகளிலும், மற்றும் புலம்பெயர் தமிழ் ஊடகங்களிலும் இவரது படைப்புகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.
திரை வாழ்க்கை
யூ.எல்.எம்.அஸ்மின் டான் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் டான் தமிழ் ஒலி வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் சிறிது காலம் பணிபுரிந்தார். வசந்தம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்தார். வசந்தம் தொலைக்காட்சியில் இவர் தயாரித்து வழங்கும் தூவானம் கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி மூன்று முறை சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சிக்கான அரச விருதினைப் பெற்றது. இவர் வசந்தம் தொலைக்காட்சியில் 'தேன் சிந்தும் ராகங்கள்' என்ற நிகழ்ச்சியினை தயாரித்து தொகுத்து வழங்குகினார்.
திரை வாழ்க்கை
2012-ல் விஜய் ஆண்டனியின் நடிப்பிலும் இசையிலும் வெளிவந்த 'நான்' திரைப்படத்தில் "தப்பெல்லாம் தப்பே இல்லை" பாடலை எழுதியதன் வழியாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக உருவானார். பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
விருது
- இலங்கை ஜனாதிபதி விருது
- அகஸ்தியர் விருது (இலங்கை 'தடாகம்' கலை, இலக்கிய வட்டம்)
- கவியரசு கண்ணதாசன் விருது, கலைமுத்து விருது, கலைத்தீபம், கவிவித்தகன், எடிசன் விருது, கவிப்பிறை விருது, கலைச்சுடர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றார்.
- சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு தடவை
- 2003-ல் அகில இலங்கை இந்து மாமன்றம் தேசிய ரீதியாக நடத்திய சொல்லோவியப் போட்டியில் சிறப்புச் சான்றிதழையும், 2003-ல் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் பவளவிழாவை முன்னிட்டு தேசியரீதியாக பாடசாலை சிரேஷ்ட மட்டத்தில் நடத்திய கவிதைப் போட்டியில் முதலாமிடத்தையும், விபவி கலாசார மையம் அகில இலங்கை மட்டத்தில் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புச் சான்றிதழையும் பெற்றார்.
- மலேசியாவில் 2011-ல் நடைபெற்ற 6-வது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கலந்துகொண்டு கவிதை பாடினார்.
- லக்ஸ்டோ ஊடக அமைப்பினால் கலை, இலக்கிய, ஊடகத்துறையில் ஆற்றிவரும் பணிக்காக 2011-ல் 'தங்கப்பதக்கம்' வழங்கப்பட்டு கலைமுத்து பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கபட்டார்.
நூல் பட்டியல்
- விடைதேடும் வினாக்கள் (2002)
- விடியலின் ராகங்கள் (2003)
- பாம்புகள் குளிக்கும் நதி (2013)
- ரத்தமில்லாத யுத்தம் (கவிதைத்தொகுதி)
- காணாமல் போன கனவுகள் (நாவல்)
- நிலவு உறங்கும் டயறி (சிறுகதைத்தொகுதி)
படைப்புக்கள் இடம்பெற்றுள்ள நூல்கள்
- முகவரி தொலைந்த முகங்கள் - 2000 (கவிதை நூல்)
- அடையாளம் - 2010 (கவிதை நூல் - தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் சங்க வெளியீடு)
- இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் விபரத்திரட்டு பாகம் மூன்று .- 2003
- ஜீவநதி நேர்காணல்கள் - 2010(15 ஈழத்து எழுத்தாளர்களின் நேர்காணல்கள்)
- வியர்வையின் ஓவியம் 2010 (தொகுப்பு நூல்)
- பட்சிகளின் உரையாடல்-2011 (கவிதை நூல்)
உசாத்துணை
- கவிஞர் அஸ்மின் - வலைதளம்
- Pottuvil Asmin Official - youtube
- ஆளுமை:அஸ்மின், மர்ஹூம் உதுமாலெவ்வை - நூலகம்
- அஸ்மின் மர்ஹூம் உதுமாலெவ்வை நேர்காணல் - கோகிலவாணி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Apr-2026, 17:50:41 IST