under review

நட. சிவகுமார்: Difference between revisions

From Tamil Wiki
 
(One intermediate revision by the same user not shown)
Line 14: Line 14:


==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
நட.சிவகுமார், பள்ளி நாள்களிலேயே வாசிப்பார்வம் கொண்டிருந்தார்.  மாதம் ஒருமுறை  'இது தாண்டா பத்திரிகை' , 'இனிய சுரஙகள்',  ஆகிய கையெழுத்துப் பத்திரிகைகளை இரண்டு வருடங்களாக நடத்தினார். 90-களின் தொடக்கத்தில் மாலை முரசில் பரிசுக் கதை வெளியானது. தொடர்ந்து குமரிமுரசு,வாசுகி, [[சுமஙகலி|சுமங்கலி]] ,[[கல்கி (வார இதழ்)|கல்கி]] போன்ற இதழ்களில் கதைகளும் கவிதைகளிலும் வெளி வந்தன. குமரி மாவட்டத்திலிருந்து வெளிவந்த சிநேகம் மாத இதழில் திரைப்பட பாடல்கள் குறித்த ஆய்வு தொடர் 'பட்டுக்கோட்டை முதல் பழனிபாரதி வரை' என்ற தலைப்பில் ஒரு வருடத்திற்கும் மேலாக வெளி வந்தது.அதன் பிறகு  சிற்றிதழ்களில் பல படைப்புகள்  வெளிவந்தன முதல் கவிதை நூல் 1997-ல் வெளிவந்தது.  
நட.சிவகுமார், பள்ளி நாள்களிலேயே வாசிப்பார்வம் கொண்டிருந்தார்.  மாதம் ஒருமுறை  'இது தாண்டா பத்திரிகை' , 'இனிய சுரஙகள்',  ஆகிய கையெழுத்துப் பத்திரிகைகளை இரண்டு வருடங்களாக நடத்தினார். 90-களின் தொடக்கத்தில் மாலை முரசில் பரிசுக் கதை வெளியானது. தொடர்ந்து குமரிமுரசு,வாசுகி, [[சுமங்கலி|சுமங்கலி]] ,[[கல்கி (வார இதழ்)|கல்கி]] போன்ற இதழ்களில் கதைகளும் கவிதைகளிலும் வெளி வந்தன. குமரி மாவட்டத்திலிருந்து வெளிவந்த சிநேகம் மாத இதழில் திரைப்பட பாடல்கள் குறித்த ஆய்வு தொடர் 'பட்டுக்கோட்டை முதல் பழனிபாரதி வரை' என்ற தலைப்பில் ஒரு வருடத்திற்கும் மேலாக வெளி வந்தது.அதன் பிறகு  சிற்றிதழ்களில் பல படைப்புகள்  வெளிவந்தன முதல் கவிதை நூல் 1997-ல் வெளிவந்தது.  


நட.சிவகுமார் சங்க இலக்கியம் ,சித்தர்கள், பின்காலனிய, பின்நவீனத்துவ இலக்கிய போக்குகள் குறித்தும் மொழிபெயர்ப்பு கதை உலகம் குறித்தும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர். மதுரையில் ,2013-ல்  சாகித்ய அகாதமியால் ஒருங்கிணைக்கப்பட்ட North west south zone மூன்று நாள் கருத்தரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தென்னிந்திய தலித் எழுத்தாளர் சிறப்பு கருத்தரங்கில் கேரள அரசின் சார்பில் கலந்து கொண்டார். உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டார்.
நட.சிவகுமார் சங்க இலக்கியம் ,சித்தர்கள், பின்காலனிய, பின்நவீனத்துவ இலக்கிய போக்குகள் குறித்தும் மொழிபெயர்ப்பு கதை உலகம் குறித்தும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர். மதுரையில் ,2013-ல்  சாகித்ய அகாதமியால் ஒருங்கிணைக்கப்பட்ட North west south zone மூன்று நாள் கருத்தரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தென்னிந்திய தலித் எழுத்தாளர் சிறப்பு கருத்தரங்கில் கேரள அரசின் சார்பில் கலந்து கொண்டார். உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டார்.
Line 22: Line 22:


==அமைப்புச் செயல்பாடுகள்==
==அமைப்புச் செயல்பாடுகள்==
நட. சிவகுமார் [[தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்]] தக்கலை கிளையின் செயலாளராக இருபத்தைந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தார். இவர் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் ஏலாதி, கரிசலாஙகண்ணி, கருந்துளசி முதலிய இலக்கிய தரம் வாய்ந்த ஆண்டுமலர்கள் வெளிவந்தன. இலக்கியத்திற்கான ஏலாதி இலக்கிய விருது அறிவிக்கப்பட்டு [[தமிழச்சி தங்கபாண்டியன்]], [[கீரனூர் ஜாகீர்ராஜா]], [[கரிகாலன் (கவிஞர்)|கரிகாலன்]] ,[[அ.வெண்ணிலா,]] [[ஆதவன் தீட்சண்யா]], [[ஈழத்து கவி இளஙகோ கண்ணா கருப்பையா]], [[எம்.ஜி சுரேஷ்]]ஆகியோர்களுக்கு வழஙகப்பட்டது. ஏலாதி சிந்தனை பள்ளி தொடஙகப்பட்டு படைப்பிலக்கியத்திற்கான ஆய்வரங்கமும், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கான கோட்பாட்டு அரஙகமும் நடத்தப்பட்டது.  
நட. சிவகுமார் [[தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்]] தக்கலை கிளையின் செயலாளராக இருபத்தைந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தார். இவர் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் ஏலாதி, கரிசலாஙகண்ணி, கருந்துளசி முதலிய இலக்கிய தரம் வாய்ந்த ஆண்டுமலர்கள் வெளிவந்தன. இலக்கியத்திற்கான ஏலாதி இலக்கிய விருது அறிவிக்கப்பட்டு [[தமிழச்சி தங்கபாண்டியன்]], [[கீரனூர் ஜாகீர்ராஜா]], [[கரிகாலன் (கவிஞர்)|கரிகாலன்]] ,[[அ. வெண்ணிலா]] [[ஆதவன் தீட்சண்யா]], [[ஈழத்து கவி இளஙகோ கண்ணா கருப்பையா]], [[எம்.ஜி. சுரேஷ்]]ஆகியோர்களுக்கு வழஙகப்பட்டது. ஏலாதி சிந்தனை பள்ளி தொடஙகப்பட்டு படைப்பிலக்கியத்திற்கான ஆய்வரங்கமும், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கான கோட்பாட்டு அரஙகமும் நடத்தப்பட்டது.  


==இலக்கிய இடம்==
==இலக்கிய இடம்==

Latest revision as of 14:27, 23 October 2026

நட சிவகுமார்

நட. சிவகுமார் (பிறப்பு: ஜூலை 30, 1971) (நட சிவக்குமார், நட.சிவக்குமார்) தமிழ்க் கவிஞர், சிறுகதையாசிரியர், இலக்கிய விமர்சகர், இடதுசாரி இலக்கியச் செயல்பாட்டாளர்.

பிறப்பு, கல்வி

நட. சிவகுமார் கன்யாகுமரி மாவட்டம் தக்கலையில் ஜூலை 30, 1971 அன்று இ.நடராஜனுக்கும் எம்.கோமதிக்கும் மூத்தமகனாகப் பிறந்தார்.

தொடக்ககல்வியை தக்கலை அரசு முஸ்லிம் தொடக்கப்பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மேனிலைப் படிப்பை இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியிலிலும் பயின்றார்.

இளங்கலை தமிழிலக்கிய கல்லூரிப் படிப்பை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிருத்தவ கல்லூரியிலும் , முதுகலை தமிழிலக்கியம் முதல் முனைவர் பட்டப் படிப்பு வரை நாகர்கோயில் தெ.தி இந்து கல்லூரியிலும் பயின்றார்.

தனிவாழ்க்கை

நட. சிவகுமார் 2004-ல் ய. ரமணியை மணந்தார். மகன் சி.கவிசாகர், மகள் சி.காயத்ரி. குடும்பத்துடன் தக்கலையில் வாழ்கிறார். நட.சிவகுமாரின் மனவி ரமணி எய்ட்ஸ் கவுன்சிலராக குட்டக்குழி ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரிகிறார்.

நட. சிவக்குமார் தக்கலை நூருல் இஸ்லாம் கலைக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார்.

இலக்கிய வாழ்க்கை

நட.சிவகுமார், பள்ளி நாள்களிலேயே வாசிப்பார்வம் கொண்டிருந்தார். மாதம் ஒருமுறை 'இது தாண்டா பத்திரிகை' , 'இனிய சுரஙகள்', ஆகிய கையெழுத்துப் பத்திரிகைகளை இரண்டு வருடங்களாக நடத்தினார். 90-களின் தொடக்கத்தில் மாலை முரசில் பரிசுக் கதை வெளியானது. தொடர்ந்து குமரிமுரசு,வாசுகி, சுமங்கலி ,கல்கி போன்ற இதழ்களில் கதைகளும் கவிதைகளிலும் வெளி வந்தன. குமரி மாவட்டத்திலிருந்து வெளிவந்த சிநேகம் மாத இதழில் திரைப்பட பாடல்கள் குறித்த ஆய்வு தொடர் 'பட்டுக்கோட்டை முதல் பழனிபாரதி வரை' என்ற தலைப்பில் ஒரு வருடத்திற்கும் மேலாக வெளி வந்தது.அதன் பிறகு சிற்றிதழ்களில் பல படைப்புகள் வெளிவந்தன முதல் கவிதை நூல் 1997-ல் வெளிவந்தது.

நட.சிவகுமார் சங்க இலக்கியம் ,சித்தர்கள், பின்காலனிய, பின்நவீனத்துவ இலக்கிய போக்குகள் குறித்தும் மொழிபெயர்ப்பு கதை உலகம் குறித்தும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர். மதுரையில் ,2013-ல் சாகித்ய அகாதமியால் ஒருங்கிணைக்கப்பட்ட North west south zone மூன்று நாள் கருத்தரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தென்னிந்திய தலித் எழுத்தாளர் சிறப்பு கருத்தரங்கில் கேரள அரசின் சார்பில் கலந்து கொண்டார். உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டார்.

இதழியல்

நட. சிவகுமார் இடதுசாரி இலக்கிய இதழான திணை காலாண்டிதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் பொறுப்பாசிரியராக பணிபுரிந்த காலகட்டத்தில் சிறந்த சிற்றிதழுக்கான சுஜாதா விருதை திணை காலண்டிதழ் பெற்றது.

அமைப்புச் செயல்பாடுகள்

நட. சிவகுமார் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தக்கலை கிளையின் செயலாளராக இருபத்தைந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தார். இவர் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் ஏலாதி, கரிசலாஙகண்ணி, கருந்துளசி முதலிய இலக்கிய தரம் வாய்ந்த ஆண்டுமலர்கள் வெளிவந்தன. இலக்கியத்திற்கான ஏலாதி இலக்கிய விருது அறிவிக்கப்பட்டு தமிழச்சி தங்கபாண்டியன், கீரனூர் ஜாகீர்ராஜா, கரிகாலன் ,அ. வெண்ணிலா ஆதவன் தீட்சண்யா, ஈழத்து கவி இளஙகோ கண்ணா கருப்பையா, எம்.ஜி. சுரேஷ்ஆகியோர்களுக்கு வழஙகப்பட்டது. ஏலாதி சிந்தனை பள்ளி தொடஙகப்பட்டு படைப்பிலக்கியத்திற்கான ஆய்வரங்கமும், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கான கோட்பாட்டு அரஙகமும் நடத்தப்பட்டது.

இலக்கிய இடம்

நட சிவகுமார் இடதுசாரி பார்வை கொண்டவர். தலித் இலக்கியம சார்ந்தும் இயங்கி வருகிறார். புரத வண்ணார் சமூக வாழ்வியலை தன் கவிதைகளில் தொடர்ச்சியாகப் பதிவுசெய்து வருகிறார்.

நூல்கள்

  • உவர்மண்-கவிதை
  • வெட்டிமுறிப்பு களம் -கவிதை
  • தம்புராட்டியின் பரியங்கம் -கவிதை
  • ஐங்கோலத்தைலம்- கவிதை
  • பஞ்ச வர்ண குகை( சிறுகதை)

விருதுகள்

  • சிறந்த கவிதை நூலுக்காக நியூ செஞ்சுவரி புத்தக நிறுவனம் வழஙகிய மாநில அளவிலான விருது 3 முறை.
  • அசோகமித்தன் படைப்பூக்க விருது
  • எழுச்சி தமிழர் இலக்கிய விருது

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Aug-2025, 19:07:10 IST