கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்: Difference between revisions
SakthivelS (talk | contribs) Created page with "கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது. ==வாழ்க்கை குறிப்பு== கிடங்..." |
Added: Category:புலவர் |
||
| (4 intermediate revisions by 3 users not shown) | |||
| Line 3: | Line 3: | ||
கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பெருங்கொற்றன் என்னும் இயற்பெயர் கொண்டவர். கிடங்கில் என்னும் ஊரினை சேர்ந்தவர். காவிதி என்னும் பட்டம் வழக்கியல் துறையில் நிபுணத்துவம் கொண்ட அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டது. | கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பெருங்கொற்றன் என்னும் இயற்பெயர் கொண்டவர். கிடங்கில் என்னும் ஊரினை சேர்ந்தவர். காவிதி என்னும் பட்டம் வழக்கியல் துறையில் நிபுணத்துவம் கொண்ட அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டது. | ||
==இலக்கிய வாழ்க்கை== | ==இலக்கிய வாழ்க்கை== | ||
கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றன் பாடிய பாடல் [[நற்றிணை|நற்றிணையில்]] 364 | கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றன் பாடிய பாடல் [[நற்றிணை|நற்றிணையில்]] 364 -ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டச் சென்ற தலைவர் குறித்த காலம் கழித்தும் வாராது கண்டு எண்ணி வருந்தும் தன் துயரைத் தலைவி தோழியிடம் உரைப்பதாக [[முல்லைத் திணை|முல்லைத் திணையில்]] அமைந்துள்ள பாடல். | ||
==பாடல் வழி அறியவரும் செய்திகள்== | ==பாடல் வழி அறியவரும் செய்திகள்== | ||
* கார் காலத்தில் மழையானது பகல் நள்ளிரவு என எப்பொழுதும் பெய்து பொழுதுகளை மயங்கும்படி செய்துவிடுகிறது. பனியுடன் சேர்ந்து வாடைக்காற்று வீசுகிறது. | *கார் காலத்தில் மழையானது பகல் நள்ளிரவு என எப்பொழுதும் பெய்து பொழுதுகளை மயங்கும்படி செய்துவிடுகிறது. பனியுடன் சேர்ந்து வாடைக்காற்று வீசுகிறது. | ||
* மழைக்காலத்தில் மாலை நேரத்தில் கொட்டிலுக்கு திரும்பும் பசுக்களின் கழுத்து மணியோசை இனிமையாக ஒலிக்கும். பசுக்களை கொட்டிலில் அடைத்த பின்னர் கோவலர்கள் கொன்றை மரத்தடியில் அமர்ந்து குழல் ஊதுவர். | *மழைக்காலத்தில் மாலை நேரத்தில் கொட்டிலுக்கு திரும்பும் பசுக்களின் கழுத்து மணியோசை இனிமையாக ஒலிக்கும். பசுக்களை கொட்டிலில் அடைத்த பின்னர் கோவலர்கள் கொன்றை மரத்தடியில் அமர்ந்து குழல் ஊதுவர். | ||
* ஆடவரை பிரிந்து தனித்திருக்கும் மகளிரின் துன்பத்தை கோவலரின் குழலோசை | *ஆடவரை பிரிந்து தனித்திருக்கும் மகளிரின் துன்பத்தை கோவலரின் குழலோசை பெருகச் செய்யும். | ||
==பாடல் நடை== | ==பாடல் நடை== | ||
====நற்றிணை - 364==== | ====நற்றிணை - 364==== | ||
* திணை: முல்லை | *திணை: முல்லை | ||
* கூற்று: | *கூற்று: தலைமகள்பிரிவிடைமெலிந்தது. | ||
<poem> | <poem> | ||
சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும் | சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும் | ||
| Line 27: | Line 27: | ||
</poem> | </poem> | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
* [https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-292-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8C சங்க இலக்கிய பொருட்களஞ்சியம் - 2:தமிழ் பல்கலைகழகம்] | *[https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-292-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8C சங்க இலக்கிய பொருட்களஞ்சியம் - 2:தமிழ் பல்கலைகழகம்] | ||
*[https://vaiyan.blogspot.com/2017/01/364-natrinai-364.html நற்றிணை - 364:VaiyanBlogspot] | *[https://vaiyan.blogspot.com/2017/01/364-natrinai-364.html நற்றிணை - 364:VaiyanBlogspot] | ||
{{Finalised}} | |||
{{Fndt|22-Aug-2025, 07:52:30 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | |||
Latest revision as of 00:55, 21 December 2025
கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பெருங்கொற்றன் என்னும் இயற்பெயர் கொண்டவர். கிடங்கில் என்னும் ஊரினை சேர்ந்தவர். காவிதி என்னும் பட்டம் வழக்கியல் துறையில் நிபுணத்துவம் கொண்ட அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டது.
இலக்கிய வாழ்க்கை
கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றன் பாடிய பாடல் நற்றிணையில் 364 -ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டச் சென்ற தலைவர் குறித்த காலம் கழித்தும் வாராது கண்டு எண்ணி வருந்தும் தன் துயரைத் தலைவி தோழியிடம் உரைப்பதாக முல்லைத் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- கார் காலத்தில் மழையானது பகல் நள்ளிரவு என எப்பொழுதும் பெய்து பொழுதுகளை மயங்கும்படி செய்துவிடுகிறது. பனியுடன் சேர்ந்து வாடைக்காற்று வீசுகிறது.
- மழைக்காலத்தில் மாலை நேரத்தில் கொட்டிலுக்கு திரும்பும் பசுக்களின் கழுத்து மணியோசை இனிமையாக ஒலிக்கும். பசுக்களை கொட்டிலில் அடைத்த பின்னர் கோவலர்கள் கொன்றை மரத்தடியில் அமர்ந்து குழல் ஊதுவர்.
- ஆடவரை பிரிந்து தனித்திருக்கும் மகளிரின் துன்பத்தை கோவலரின் குழலோசை பெருகச் செய்யும்.
பாடல் நடை
நற்றிணை - 364
- திணை: முல்லை
- கூற்று: தலைமகள்பிரிவிடைமெலிந்தது.
சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும்
மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி,
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க,
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப,
இன்ன சில் நாள் கழியின், பல் நாள்
வாழலென் வாழி தோழி! ஊழின்
உரும் இசை அறியாச் சிறு செந் நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப,
பல் ஆ தந்த கல்லாக் கோவலர்
கொன்றைஅம் தீம் குழல் மன்றுதோறு இயம்ப,
உயிர் செலத் துனைதரும் மாலை,
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Aug-2025, 07:52:30 IST