under review

ஆர்.ஆர். கெய்தான்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
 
(12 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
[[File:Kaithan.png|thumb|கெய்த்தான்]]
[[File:Mildred-Richard-Keithahn oneiu7.jpg|thumb|கெய்த்தான் மனைவியுடன்]]
[[File:Mildred-Richard-Keithahn oneiu7.jpg|thumb|கெய்த்தான் மனைவியுடன்]]
ஆர்.ஆர்.கெய்த்தான் ( Rev. Ralph Richard Keithahn/ Dick Keithahn ) (1898) அமெரிக்க கிறிஸ்தவ போதகர். பெங்களூரிலும் திண்டுக்கல்லிலும் ஏழைமக்களிடையே சேவைபுரிந்தார். இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டார். சங்கரலிங்கம் ஜெகந்நாதனுடன் இணைந்து கிராம முன்னேற்றப்பணிகளிலும் காந்தியப் போராட்டங்களிலும் பங்கெடுத்தார்.
[[File:Inserts Ram-Guha-14-1-1- 1 .jpg|thumb|மில்ரெட் கெய்தான்]]
ஆர்.ஆர்.கெய்தான் ( Rev. Ralph Richard Keithahn/ Dick Keithahn ) (1898-1984) (ஆர்.ஆர்.கெய்த்தான்) அமெரிக்க கிறிஸ்தவ போதகர். பெங்களூரிலும் திண்டுக்கல்லிலும் ஏழைமக்களிடையே சேவைபுரிந்தார். இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டார். சங்கரலிங்கம் ஜெகந்நாதனுடன் இணைந்து கிராம முன்னேற்றப்பணிகளிலும் காந்தியப் போராட்டங்களிலும் பங்கெடுத்தார்.

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
கெய்த்தான் அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில் ஃபையர்மான்ட் (Fairmont) என்னும் ஊரில் 1898ல் பிறந்தார்.  
கெய்தான் அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில் ஃபையர்மான்ட் (Fairmont) என்னும் ஊரில் 1898ல் பிறந்தார்.1924ல் சீர்திருத்த கிறிஸ்தவ மதகுருவாக குருத்துவப் பட்டம் பெற்றார். 1925ல் இந்தியாவுக்கு [[அமெரிக்க மதுரை மிஷன்]] ஊழியராக வந்தார். மதுரை பசுமலையில் இருந்த குருத்துவப் பயிற்சிநிலையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.  

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
கெய்த்தானின் மனைவியின் பெயர் மில்ரெட். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மில்ரெட் கெய்தானைப் பிரிந்து அமெரிக்கா சென்றார். கெய்த்தானின் மகன் அவரை அமெரிக்காவுக்கு அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார். இது என் கர்மபூமி, நான் இங்கேயே மறைவேன் என்று சொன்னார்.  
கெய்தானின் மனைவியின் பெயர் மில்ரெட். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். டாக்டர்.மில்ரெட் (Dr Mildred Mckie) காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். மருத்துவப்பணிகளிலும் ஈடுபட்டார். ஆனால் பின்னர் கெய்தானைப் பிரிந்து அமெரிக்கா சென்றார். கெய்த்தானின் மகன் அவரை அமெரிக்காவுக்கு அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார். இது என் கர்மபூமி, நான் இங்கேயே மறைவேன் என்று சொன்னார். மில்ரெட்டின் இறப்புச்செய்தியில் கெய்த்தான் பற்றி எந்தச் செய்தியும் இல்லை என ராமச்சந்திர குகா பதிவு செய்கிறார். ஆனால் கெய்த்தான் மனைவியின் புடவை ஒன்றை வைத்திருந்தார் என்றும் அதை பிரியத்துடன் அவ்வப்போது எடுத்து மடித்து வைப்பதுண்டு என்றும் காந்திகிராமம் துணைவேந்தராக இருந்த டாக்டர் கே.எம்.நடராஜன் கூறியதாகப் பதிவுசெய்கிறார்.
 
== மருத்துவப் பணி ==
கெய்தான் 1940 முதல் பெங்களூரில் தீன சர்வ சேவா சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கி குடிசைப்பகுதிகளில் பணியாற்றினார். எம்.எம்.தாமஸ், டாக்டர் தரியன் போன்றவர்கள் அவருடைய அக்கால மாணவர்கள். தரியன் பின்னர் ஒட்டன்சத்திரத்தில் கெய்த்தான் வழிகாட்டலின்படி ஒட்டன் சத்திரம் கிறிஸ்து குருகுல மருத்துவமனையை உருவாக்கினார்.  

== சுதந்திரப் போராட்டம் ==
== சுதந்திரப் போராட்டம் ==
கெய்த்தான் இந்தியாவிற்கு மதுரை அமெரிக்க மிஷன் சார்பில்  1925 ல் மதப்பணிகளுக்காக வந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மதகுருப் பயிற்சி நிலையத்தில் பணியாற்றினார். 1930 முதல் காந்தியுடன் கடிதத் தொடர்பில் இருந்தார்.  1930ல் பிரிட்டிஷ் அரசு அவரை நாடுகடத்துவதாக அச்சுறுத்தியது. 1940ல் மதுரை அமெரிக்க மிஷனுடன் தன் தொடர்புக்ளை துண்டித்துக்கொண்டார். மதுரையில் நிகழ்ந்த மாணவர்போராட்டங்களில் கலந்துகொண்டார். பெங்களூரில் என்னும் அமைப்பை நிறுவி அங்கே மக்களிடையே தேசியக்கருத்துக்களை உருவாக்கினார். பிரிட்டிஷ் அரசின் கோரிக்கையின்படி 1944 செப்டெம்பரில் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
கெய்த்தான் 1930 முதல் காந்தியுடன் கடிதத் தொடர்பில் இருந்தார்.  1930ல் பிரிட்டிஷ் அரசு அவரை நாடுகடத்துவதாக அச்சுறுத்தியது. 1940ல் மதுரை அமெரிக்க மிஷனுடன் தன் தொடர்புகளை துண்டித்துக்கொண்டார். மதுரையில் நிகழ்ந்த மாணவர்போராட்டங்களில் கலந்துகொண்டார். பெங்களூரில் தீனசேவா சங்கம் என்னும் அமைப்பை நிறுவி அங்கே மக்களிடையே தேசியக்கருத்துக்களை உருவாக்கினார். பிரிட்டிஷ் அரசின் கோரிக்கையின்படி 1944 செப்டெம்பரில் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். [[என்.எம்.ஆர். சுப்பராமன்]] , [[சங்கரலிங்கம் ஜெகந்நாதன்]] ஆகியோருடன் இணைந்து விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டார்.

== கிராமசேவை ==
== கிராமசேவை ==
கெய்த்தான் இந்திய விடுதலைக்குப் பின் இந்தியாவின் கிராமப்புற வறுமை ஒழிப்புக்காகவும், உழுபவர் நிலம் பெறுவதற்காகவும் நிகழ்ந்த போராட்டங்களில் கலந்துகொண்டார்.
====== காந்திகிராமம் ======
திண்டுக்கல்லில் [[டி.ஏ. சௌந்தரம்]] அவர்களுடனும் [[ஜே.சி. குமரப்பா]]வுடனும் இணைந்து கிராமிய கைத்தொழில்பயிற்சிக்காக காந்திகிராமம் என்னும் அமைப்பை உருவாக்கினார். பின்னர் அது நிகர்நிலைப் பல்கலையாக வளர்ந்தது
====== ஊழியரகம் ======
சங்கரலிங்கம் ஜெகந்நாதனுடனும் கிருஷ்ணம்மாளுடனும் இணைந்து  திண்டுக்கல் காந்திகிராமம் அருகே ஊழியரகம் என்னும் அமைப்பை உருவாக்கி காந்திய ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்தார்.
====== கிறிஸ்துகுல ஆசிரமம் ======
கெய்த்தான் ஒட்டன்சத்திரம் அருகே பாச்சலூரில் 1955  கிறித்துகுல ஆசிரமம் (Christian fellowship ashram) என்னும் அமைப்பையும் மருத்துவமனையையும் உருவாக்கினார். அவருடைய மாணவர் தரியன் அதன் முதல் மருத்துவர்.

== மறைவு ==
== மறைவு ==
கெய்த்தான் ஒட்டன்சத்திரத்தில் ஒரு சிறு மருத்துவமனையில் 1984ல் மறைந்தார்
கெய்த்தான் ஒட்டன்சத்திரத்தில் கிறிஸ்துகுல மருத்துவமனையில் 1984-ல் மறைந்தார்
 
== இடம் ==
கெய்த்தான் இந்தியாவில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட மிகச்சில வெளிநாட்டவர்களில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார். பிற வெளிநாட்டவர் இந்தியவிடுதலை மற்றும் காந்தி கொலைக்குப் பின்னர் இந்தியாவை விட்டு சென்றார்கள் என்றாலும் கெய்த்தான் காந்திய வழியில் கிராமநிர்மாணப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டார். மருத்துவம், கல்வி, கைத்தொழில்பயிற்சி ஆகிய சேவைகளை கிராமமக்களுக்கு அளித்தார்.

== நூல்கள் ==
== நூல்கள் ==
* A glimpse of some pioneering Christian rural service in South India
* A glimpse of some pioneering Christian rural service in South India
* Integrated rural development: Rev. Dr. R. R. Keithahn felicitation volume
* Integrated rural development: Rev. Dr. R. R. Keithahn felicitation volume
Line 26: Line 43:
* The Function of Miracles in First Century Christianity
* The Function of Miracles in First Century Christianity
* A Farm Boy Goes to Carleton
* A Farm Boy Goes to Carleton

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
 
* [https://www.thekodaichronicle.com/culture/rock-of-vision-richard-keithahn-kodais-american-satyagrahi/#:~:text=An%20unlikely%20hero%2C%20Ralph%20Richard,its%20way%20back%20to%20us. Rock of Vision: Richard Keithahn, Kodai's American satyagrahi]
* [https://www.thekodaichronicle.com/culture/rock-of-vision-richard-keithahn-kodais-american-satyagrahi/#:~:text=An%20unlikely%20hero%2C%20Ralph%20Richard,its%20way%20back%20to%20us. Rock of Vision: Richard Keithahn, Kodai’s American satyagrahi]
* https://openlibrary.org/authors/OL1955650A/Ralph_Richard_Keithahn
* https://openlibrary.org/authors/OL1955650A/Ralph_Richard_Keithahn
* S[https://www.firstpost.com/explainers/india75-the-seven-westerners-who-fought-for-indias-independence-11035941.html even-westerners-who-fought-for-indias-independence-]
* S[https://www.firstpost.com/explainers/india75-the-seven-westerners-who-fought-for-indias-independence-11035941.html even-westerners-who-fought-for-indias-independence-]
* [https://www.kalw.org/podcast/sandip-roys-dispatches-from-kolkata/2023-10-04/americans-in-gandhis-india Americans in Gandhi's India]
* [https://www.kalw.org/podcast/sandip-roys-dispatches-from-kolkata/2023-10-04/americans-in-gandhis-india Americans in Gandhi's India]
* [https://writerpaavannan.blogspot.com/2020/11/blog-post_8.html?m=1 கெய்த்தான் : சோர்வும் துயரமும் தொண்டருக்கில்லை - பாவண்ணன்]
{{Finalised}}
{{Fndt|25-Oct-2025, 19:50:31 IST}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 13:00, 30 December 2025

கெய்த்தான்
கெய்த்தான் மனைவியுடன்
மில்ரெட் கெய்தான்

ஆர்.ஆர்.கெய்தான் ( Rev. Ralph Richard Keithahn/ Dick Keithahn ) (1898-1984) (ஆர்.ஆர்.கெய்த்தான்) அமெரிக்க கிறிஸ்தவ போதகர். பெங்களூரிலும் திண்டுக்கல்லிலும் ஏழைமக்களிடையே சேவைபுரிந்தார். இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டார். சங்கரலிங்கம் ஜெகந்நாதனுடன் இணைந்து கிராம முன்னேற்றப்பணிகளிலும் காந்தியப் போராட்டங்களிலும் பங்கெடுத்தார்.

பிறப்பு, கல்வி

கெய்தான் அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில் ஃபையர்மான்ட் (Fairmont) என்னும் ஊரில் 1898ல் பிறந்தார்.1924ல் சீர்திருத்த கிறிஸ்தவ மதகுருவாக குருத்துவப் பட்டம் பெற்றார். 1925ல் இந்தியாவுக்கு அமெரிக்க மதுரை மிஷன் ஊழியராக வந்தார். மதுரை பசுமலையில் இருந்த குருத்துவப் பயிற்சிநிலையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

தனிவாழ்க்கை

கெய்தானின் மனைவியின் பெயர் மில்ரெட். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். டாக்டர்.மில்ரெட் (Dr Mildred Mckie) காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். மருத்துவப்பணிகளிலும் ஈடுபட்டார். ஆனால் பின்னர் கெய்தானைப் பிரிந்து அமெரிக்கா சென்றார். கெய்த்தானின் மகன் அவரை அமெரிக்காவுக்கு அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார். இது என் கர்மபூமி, நான் இங்கேயே மறைவேன் என்று சொன்னார். மில்ரெட்டின் இறப்புச்செய்தியில் கெய்த்தான் பற்றி எந்தச் செய்தியும் இல்லை என ராமச்சந்திர குகா பதிவு செய்கிறார். ஆனால் கெய்த்தான் மனைவியின் புடவை ஒன்றை வைத்திருந்தார் என்றும் அதை பிரியத்துடன் அவ்வப்போது எடுத்து மடித்து வைப்பதுண்டு என்றும் காந்திகிராமம் துணைவேந்தராக இருந்த டாக்டர் கே.எம்.நடராஜன் கூறியதாகப் பதிவுசெய்கிறார்.

மருத்துவப் பணி

கெய்தான் 1940 முதல் பெங்களூரில் தீன சர்வ சேவா சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கி குடிசைப்பகுதிகளில் பணியாற்றினார். எம்.எம்.தாமஸ், டாக்டர் தரியன் போன்றவர்கள் அவருடைய அக்கால மாணவர்கள். தரியன் பின்னர் ஒட்டன்சத்திரத்தில் கெய்த்தான் வழிகாட்டலின்படி ஒட்டன் சத்திரம் கிறிஸ்து குருகுல மருத்துவமனையை உருவாக்கினார்.

சுதந்திரப் போராட்டம்

கெய்த்தான் 1930 முதல் காந்தியுடன் கடிதத் தொடர்பில் இருந்தார். 1930ல் பிரிட்டிஷ் அரசு அவரை நாடுகடத்துவதாக அச்சுறுத்தியது. 1940ல் மதுரை அமெரிக்க மிஷனுடன் தன் தொடர்புகளை துண்டித்துக்கொண்டார். மதுரையில் நிகழ்ந்த மாணவர்போராட்டங்களில் கலந்துகொண்டார். பெங்களூரில் தீனசேவா சங்கம் என்னும் அமைப்பை நிறுவி அங்கே மக்களிடையே தேசியக்கருத்துக்களை உருவாக்கினார். பிரிட்டிஷ் அரசின் கோரிக்கையின்படி 1944 செப்டெம்பரில் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். என்.எம்.ஆர். சுப்பராமன் , சங்கரலிங்கம் ஜெகந்நாதன் ஆகியோருடன் இணைந்து விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டார்.

கிராமசேவை

கெய்த்தான் இந்திய விடுதலைக்குப் பின் இந்தியாவின் கிராமப்புற வறுமை ஒழிப்புக்காகவும், உழுபவர் நிலம் பெறுவதற்காகவும் நிகழ்ந்த போராட்டங்களில் கலந்துகொண்டார்.

காந்திகிராமம்

திண்டுக்கல்லில் டி.ஏ. சௌந்தரம் அவர்களுடனும் ஜே.சி. குமரப்பாவுடனும் இணைந்து கிராமிய கைத்தொழில்பயிற்சிக்காக காந்திகிராமம் என்னும் அமைப்பை உருவாக்கினார். பின்னர் அது நிகர்நிலைப் பல்கலையாக வளர்ந்தது

ஊழியரகம்

சங்கரலிங்கம் ஜெகந்நாதனுடனும் கிருஷ்ணம்மாளுடனும் இணைந்து திண்டுக்கல் காந்திகிராமம் அருகே ஊழியரகம் என்னும் அமைப்பை உருவாக்கி காந்திய ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

கிறிஸ்துகுல ஆசிரமம்

கெய்த்தான் ஒட்டன்சத்திரம் அருகே பாச்சலூரில் 1955 கிறித்துகுல ஆசிரமம் (Christian fellowship ashram) என்னும் அமைப்பையும் மருத்துவமனையையும் உருவாக்கினார். அவருடைய மாணவர் தரியன் அதன் முதல் மருத்துவர்.

மறைவு

கெய்த்தான் ஒட்டன்சத்திரத்தில் கிறிஸ்துகுல மருத்துவமனையில் 1984-ல் மறைந்தார்

இடம்

கெய்த்தான் இந்தியாவில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட மிகச்சில வெளிநாட்டவர்களில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார். பிற வெளிநாட்டவர் இந்தியவிடுதலை மற்றும் காந்தி கொலைக்குப் பின்னர் இந்தியாவை விட்டு சென்றார்கள் என்றாலும் கெய்த்தான் காந்திய வழியில் கிராமநிர்மாணப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டார். மருத்துவம், கல்வி, கைத்தொழில்பயிற்சி ஆகிய சேவைகளை கிராமமக்களுக்கு அளித்தார்.

நூல்கள்

  • A glimpse of some pioneering Christian rural service in South India
  • Integrated rural development: Rev. Dr. R. R. Keithahn felicitation volume
  • Pilgrimage in India: an autobiographical fragment.
  • Nation-building in a Free India Rural Reconstruction and Welfare
  • Bhoomi Dan: Land Tenure and the New Society
  • Co-operation and Compromise
  • The Function of Miracles in First Century Christianity
  • A Farm Boy Goes to Carleton

உசாத்துணை

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Oct-2025, 19:50:31 IST