வாடாப் பிரமந்தன்: Difference between revisions
(; Added info on Finalised date) |
(Added: Category:புலவர்) |
||
| Line 30: | Line 30: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | |||
Latest revision as of 00:55, 21 December 2025
வாடாப் பிரமந்தன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
வாடாப் பிரமந்தன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். வாடாப் பிரபந்தன் மற்றும் வாடாப் பிரமாந்தன் என வேறு இரு பெயர்களிலும் ஏடுகளில் குறிக்கப்படுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
வாடாப் பிரமந்தன் பாடிய பாடல் குறுந்தொகையில் 331-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவி, தலைவன் பொருளீட்டுவதற்காக தன்னை பிரிந்து சென்று விடுவான் என வருந்தினாள். உம்மை விட சிறந்த பொருள் தலைவர்க்கு வேறு இல்லையாதலால் பிரிந்து செல்ல மாட்டார் என தலைவிக்கு தோழி ஆறுதல் உரைப்பதாக பாலைத் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- பொருளீட்ட ஆடவர் செல்லும் வழியானது மூங்கில்கள் வெப்பத்தால் உலர்ந்து நீரின்றிக் காணப்படும் பாலை நிலமாகும்.
- பாலை நிலத்தில் வாழும் மறவர் இன மக்கள் மறைந்து நின்று அவ்வழி செல்வோரைத் தாக்கி கொள்ளையிட்டு செல்வர்.
- கொடிய காட்டு யானைகள் மனிதர்களை தாக்கி கொல்லும் வழிப்பாதையில் பயணம் செய்து பொருளீட்டல் வேண்டும்.
- உவமை: தலைவியின் மேனி நிறம் பருத்த அடிப்பாகத்தையுடைய மாமரத்தில் எழும் இளந்தளிரின் பொன்னிறத்தை ஒத்தது.
பாடல் நடை
குறுந்தொகை - 331
- திணை: பாலை துறை:செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
நெடுங்கழை திரங்கிய நீரி லாரிடை
ஆறுசெல் வம்பலர் தொலைய மாறுநின்று
கொடுஞ்சிலை மறவர் கடறுகூட் டுண்ணும்
கடுங்கண் யானைக் கான நீந்தி
இறப்பர்கொல் வாழி தோழி நறுவடிப்
பைங்கால் மாஅத் தந்தளி ரன்ன
நன்மா மேனி பசப்ப
நம்மினுஞ் சிறந்த அரும்பொருள் தரற்கே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - பேயனார் முதலிய 39 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- குறுந்தொகை - 331:nallakurunthogai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 19:11:05 IST