தெல்லிப்பளை யூனியன் கல்லூரி: Difference between revisions
(Corrected Category:கல்வி நிறுவனங்கள் to Category:கல்வி நிறுவனம்) |
(Added: Category:ஈழம்) |
||
| Line 17: | Line 17: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:கல்வி நிறுவனம்]] | [[Category:கல்வி நிறுவனம்]] | ||
[[Category:ஈழம்]] | |||
Latest revision as of 01:05, 21 December 2025
தெல்லிப்பளை யூனியன் கல்லூரி (Union College) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பகுதியில் அமைந்த தெல்லிப்பளை என்ற ஊரில் அமைந்துள்ளது. இப் பாடசாலையை 1816-ம் ஆண்டில் அமெரிக்க மிஷனறியான டேனியல் பூர் (Daniel poor) நிறுவினார்.
பொது இலவசப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தமிழ்மொழிமூலம் கணிதம், புவியியல், திருமறை ஆகியன கற்பிக்கப்பட்டது. சிறிது காலத்தின் பின் ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டது. மதமாற்றமே மிஷனரிமாரின் முக்கிய நோக்கமாக இருந்த்தமையால் 1818-ல் குடும்பவிடுதிப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டபோது ஐந்து பெண்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். இவ் வகையில் பெண் கல்விக்கு முதல் வாய்ப்பளித்ததோடு முதற் கலவன் பாடசாலையாகவும் இது திகழ்ந்தது.
1940-ம் ஆண்டு அக்டோபர் முதலாம் திகதி முதல் யூனியன் கல்லூரி எனப் பெயர் மாற்றம் பெற்று இயங்கி வருகின்றது.
உசாத்துணை
- Old principal's quarters- Union College, thellippapali | Mapio.net
- தெல்லிப்பளை யூனியன் கல்லூரி - நூலகம் (noolaham.org)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:28 IST