ஹிரியண்ணா: Difference between revisions
No edit summary |
|||
| (4 intermediate revisions by 2 users not shown) | |||
| Line 3: | Line 3: | ||
[[File:800px-M. Hiriyanna's family L to R Wife Lakshmidevamma & Daughter Rukkamma.jpg|thumb|ஹிரியண்ணா மனைவி, மகள்]] | [[File:800px-M. Hiriyanna's family L to R Wife Lakshmidevamma & Daughter Rukkamma.jpg|thumb|ஹிரியண்ணா மனைவி, மகள்]] | ||
[[File:M. Hiriyanna with A. R. Wadia & S. Radhakrishnan.jpg|thumb|ஹிரியண்ணா மைசூர் பல்கலையில் ராதாகிருஷ்ணன், வாடியாவுடன்]] | [[File:M. Hiriyanna with A. R. Wadia & S. Radhakrishnan.jpg|thumb|ஹிரியண்ணா மைசூர் பல்கலையில் ராதாகிருஷ்ணன், வாடியாவுடன்]] | ||
ஹிரியண்ணா | ஹிரியண்ணா (மே 7, 1871 - செப்டெம்பர் 19, 1950)(பேராசிரியர் மைசூர் ஹிரியண்ணா, எம்.ஹிரியண்ணா). இந்திய தத்துவ ஆய்வாளர், கல்வியாளர். இந்திய தத்துவத்திலும் இலக்கியத்திலும் முன்னோடியான ஆய்வுகளைச் செய்தவர். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
| Line 11: | Line 11: | ||
====== பிறப்பு ====== | ====== பிறப்பு ====== | ||
ஹிரியண்ணா மைசூரில் 7 | ஹிரியண்ணா மைசூரில் மே 7, 1871-ல் எம். நஞ்சுண்டய்யா மற்றும் லட்சுமிதேவி ஆகியோருக்குப் பிறந்தார். ஹிரியண்ணா ஐந்தாவது குழந்தை. எட்டாவது குழந்தையான தம்பி எம்.என்.கிருஷ்ணராவ், மைசூர் அரசர் ஜெயசாமராஜேந்திர உடையாரின் திவானாக இருந்தார். | ||
====== கல்வி ====== | ====== கல்வி ====== | ||
ஹிரியண்ணா மைசூரில் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்தார். பேரிஸ்வாமி திருமலாச்சார்யா ,காசி சேஷராமசாஸ்திரி ஆகியோரிடம் சமஸ்கிருதம் கற்றார். ஹிரியண்ணா இளங்கலை தத்துவம், முதுகலை தத்துவம் ஆகியவற்றை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்றார். அங்கே [[வில்லியம் மில்லர்]] அவருக்கு ஆசிரியராக இருந்தார். மைசூர் ஆஸ்தான வித்வான் மடிகல்லு ராம சாஸ்திரி, கஸ்தூரிரங்க ஐயங்கார் | ஹிரியண்ணா மைசூரில் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்தார். பேரிஸ்வாமி திருமலாச்சார்யா, காசி சேஷராமசாஸ்திரி ஆகியோரிடம் சமஸ்கிருதம் கற்றார். ஹிரியண்ணா இளங்கலை தத்துவம், முதுகலை தத்துவம் ஆகியவற்றை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்றார். அங்கே [[வில்லியம் மில்லர்]] அவருக்கு ஆசிரியராக இருந்தார். மைசூர் ஆஸ்தான வித்வான் மடிகல்லு ராம சாஸ்திரி, கஸ்தூரிரங்க ஐயங்கார் ஆகியோரும் அவருக்கு ஆசிரியர்களாக இருந்தனர். | ||
பட்டப்படிப்பு முடித்தபின் இடைக்காலம் மைசூரில் பணியாற்றிவிட்டு சென்னைக்கு சென்று பயிற்றியியலில் எல்.டி. பட்டம் பெற்றார். | பட்டப்படிப்பு முடித்தபின் இடைக்காலம் மைசூரில் பணியாற்றிவிட்டு சென்னைக்கு சென்று பயிற்றியியலில் எல்.டி. பட்டம் பெற்றார். | ||
| Line 22: | Line 22: | ||
== கல்விப்பணி == | == கல்விப்பணி == | ||
ஹிரியண்ணா மைசூர் கீழைத்தேய நூலகத்தில் (மைசூர் ஓரியண்டல் லைப்ரரி) | ஹிரியண்ணா மைசூர் கீழைத்தேய நூலகத்தில் (மைசூர் ஓரியண்டல் லைப்ரரி, இன்றைய ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்) நூலகராக 1891-ல் பணிக்குச் சேர்ந்தார். ஆசிரியர் பயிற்சி பெற்றபின் 1896-ல் அரசுப்பள்ளி ஆசிரியராகச் சேர்ந்தார். 1907-ல் தலைமை ஆசிரியராக ஆனார். | ||
மைசூர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் எச்.வி. நஞ்சுண்டய்யாவின் பரிந்துரையின் பேரில், ஹிரியண்ணா 1912 | மைசூர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் எச்.வி. நஞ்சுண்டய்யாவின் பரிந்துரையின் பேரில், ஹிரியண்ணா 1912-ல் மைசூர் மகாராஜா கல்லூரியில் சமஸ்கிருத விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். 1914-ல் சமஸ்கிருத உதவிப் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். | ||
எம். ஹிரியண்ணா 1919 | எம். ஹிரியண்ணா 1919-ம் ஆண்டு மைசூர் மகாராஜா கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பதவியேற்றார். எட்டு ஆண்டுகள் சம்ஸ்கிருதப் பேராசிரியராகப் பதவி வகித்து 1927-ம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்றார். | ||
== இலக்கிய நட்புகள் == | == இலக்கிய நட்புகள் == | ||
மைசூர் மகாராஜா கல்லூரியில் தத்துவவியல் துறையின் தலைவராக இருந்த ஏ.ஆர்.வாடியாவுடன் அணுக்கமாக இருந்தார். அப்போது [[சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்|சர்வப்பள்ளி ராதாகிருஷ்ண]]னும் மைசூர் பல்கலைக்கழகத்தில் | மைசூர் மகாராஜா கல்லூரியில் தத்துவவியல் துறையின் தலைவராக இருந்த ஏ.ஆர்.வாடியாவுடன் அணுக்கமாக இருந்தார். அப்போது [[சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்|சர்வப்பள்ளி ராதாகிருஷ்ண]]னும் மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராக இருந்தார். ஹிரியண்ணா மைசூரில் பணியாற்றிய பாலக்காடு நாராயண சாஸ்திரியுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரான [[குப்புசுவாமி சாஸ்திரி]]யுடனும் மதராஸில் கடிதப் பரிமாற்றம் செய்து வந்தார். எம். ஹிரியண்ணாவின் மறைவுக்குப் பிறகு, மயிலாப்பூரில் உள்ள "குப்புசுவாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு" அவரது புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. | ||
== மாணவர்கள் == | == மாணவர்கள் == | ||
| Line 35: | Line 35: | ||
== ஆய்வுப்பணிகள் == | == ஆய்வுப்பணிகள் == | ||
ஹிரியண்ணா இந்தியவியல் ஐரோப்பாவில் தோன்றி வலுப்பெற்றுவிட்டிருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இந்தியவியலில் இந்தியர்களின் பங்களிப்பு நிகழத்தொடங்கிய காலகட்டத்தில் எழுதிய முன்னோடிகளில் ஒருவர். ஆகவே ஐரோப்பிய இந்தியவியலாளர்களின் பார்வையை விரிவாக்கியும், தேவையான இடங்களில் மறுதலித்தும் தன் பார்வைகளை முன்வைத்தார். ஐரோப்பியர்களிடமிருந்து கற்றுக்கொண்ட | ஹிரியண்ணா இந்தியவியல் ஐரோப்பாவில் தோன்றி வலுப்பெற்றுவிட்டிருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இந்தியவியலில் இந்தியர்களின் பங்களிப்பு நிகழத்தொடங்கிய காலகட்டத்தில் எழுதிய முன்னோடிகளில் ஒருவர். ஆகவே ஐரோப்பிய இந்தியவியலாளர்களின் பார்வையை விரிவாக்கியும், தேவையான இடங்களில் மறுதலித்தும் தன் பார்வைகளை முன்வைத்தார். ஐரோப்பியர்களிடமிருந்து கற்றுக்கொண்ட மேலைத் தத்துவம் சார்ந்த ஆய்வுமுறையை இந்திய தத்துவசிந்தனைமேல் செலுத்தியவர்களில் ஒருவர். | ||
ஹிரியண்ணாவின் | ஹிரியண்ணாவின் மேலைத் தத்துவம் சார்ந்த ஆய்வுநோக்குக்கு சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், ஏ.ஆர். வாடியா ஆகியோர் ஊக்கமளித்தனர். இந்திய மரபார்ந்த பார்வைக்கு பாலக்காடு நாராயண சாஸ்திரி, குப்புசுவாமி சாஸ்திரி ஆகியோர் உதவினார்கள். மைசூர் கீதைத்தேய நூலகத்தில் பணியாற்றியதனால் ஏராளமான மூலநூல்களை பயில அவருக்கு வாய்ப்பு அமைந்தது. 1653 அச்சுப்பிரதிகளையும் 1358 ஓலைச்சுவடிகளையும் பழங்கால சமஸ்கிருதம் மற்றும் கன்னடத்தில் இருந்து பதிப்பிப்பதில் அவர் பங்களிப்பாற்றினார். | ||
====== பயிற்றியல் ====== | ====== பயிற்றியல் ====== | ||
ஹிரியண்ணா இந்திய கல்விமுறையை உருவாக்குவதிலும் பங்களிப்பாற்றிய முன்னோடி. 'கற்பித்தல் கலை' (போதன க்ரமம் - 1906) என்னும் ஆய்வுக் கட்டுரை ஹிரியண்ணாவை ஆய்வுலகம் கவனிக்க வைத்தது. எஸ். ராதாகிருஷ்ணன் எம். ஹிரியண்ணாவின் வகுப்பறைக் குறிப்புகளை புத்தக வடிவில் வெளியிட ஆலன் & அன்வின் என்ற வெளியீட்டாளர்களுக்கு பரிந்துரைத்தார், அது 'இந்திய தத்துவத்தின் வரைவுச்சித்திரம்' (Outlines of Indian Philosophy) என்ற பெயரில் வெளிவந்தது. | |||
====== பதிப்பு,உரை ====== | ====== பதிப்பு, உரை ====== | ||
ஹிரியண்ணா பழைய சம்ஸ்கிருத நூல்களை ஆய்வுரையுடன் பதிப்பித்தார். ஈஸாவாஸ்யோபனிஷத் (1911), கேனோபநிஷத் (1912), கட உபனிஷத் (1915) ஆகிய நீள்கட்டுரைகள் வெளியாயின. | ஹிரியண்ணா பழைய சம்ஸ்கிருத நூல்களை ஆய்வுரையுடன் பதிப்பித்தார். ஈஸாவாஸ்யோபனிஷத் (1911), கேனோபநிஷத் (1912), கட உபனிஷத் (1915) ஆகிய நீள்கட்டுரைகள் வெளியாயின. 1919-ல் பிரதாரண்யகோபநிஷத் - பாகம் 1 வெளிவந்தது. இந்திய சிந்தனையின் பல்வேறு சிந்தனை மரபுகளைப் பற்றி விரிவான கட்டுரைகளை வெளியிட்டார், அவை பின்னர் நூல்களாக ஆயின. | ||
====== அழகியல் ====== | ====== அழகியல் ====== | ||
சமஸ்கிருத மொழியியலில் பயிற்சி கொண்டிருந்த ஹிரியண்ணா சம்ஸ்கிருத இலக்கணம் மற்றும் | சமஸ்கிருத மொழியியலில் பயிற்சி கொண்டிருந்த ஹிரியண்ணா சம்ஸ்கிருத இலக்கணம் மற்றும் பிற மொழிகளுடனனான ஒப்பீட்டாய்வு ஆகியவை சார்ந்து ஏராளமாக எழுதியுள்ளார். சம்ஸ்கிருத கலைக்கொள்கைகளான அலங்கார சாஸ்திரம், த்வனி கோட்பாடு சார்ந்தும் எழுதியுள்ளார். | ||
====== மொழியாக்கம் ====== | ====== மொழியாக்கம் ====== | ||
ஹிரியண்ணா பாசனின் ஸ்வப்ன வாசவதத்தை நூலை The Dream Queen என்ற பேரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். | ஹிரியண்ணா பாசனின் ஸ்வப்ன வாசவதத்தை நூலை The Dream Queen என்ற பேரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். | ||
====== | ====== தத்துவ நூல்கள் ====== | ||
அத்வைதத்தில் ஈடுபாடு கொண்டிருந்த | அத்வைதத்தில் ஈடுபாடு கொண்டிருந்த ஹிரியண்ணா நைஷ்காமிய சித்தி, வேதாந்த சார, இஷ்டசித்தி போன்ற அத்வைத நூல்களை எழுதினார். இம்மானுவேல் காண்ட் மீது பெரும் பற்று கொண்டிருந்த ஹிரியண்ணா, தத்துவத்தின் நோக்கம் (1960) என்னும் நூலில் காண்டின் தத்துவங்களை விவாதிக்கிறார். | ||
== மறைவு == | == மறைவு == | ||
ஹிரியண்ணா செப்டெம்பர் 19, 1950-ல் மறைந்தார். | |||
== ஏற்புகள் == | == ஏற்புகள் == | ||
* 1935 | * 1935-ம் ஆண்டு மைசூரில் நடைபெற்ற அகில இந்திய கீழையியல் மாநாட்டிற்கு ஹிரியண்ணா தலைமை தாங்கினார். | ||
* 1939 | * 1939-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற அகில இந்திய தத்துவ மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார் | ||
* 1940 | * 1940-ல், மதராஸில் தத்துவம் பற்றி வில்லியம் மில்லர் நினைவு விரிவுரையை வழங்கினார். | ||
* | * 1940-ல் மெட்ராஸ் சமஸ்கிருத அகாடமி அவருக்கு "சம்ஸ்க்ருதசேவாதுரினா" என்ற பட்டத்தை வழங்கியது. | ||
* 1952 ல் ஹிரியண்ணாவின் நூற்றாண்டை ஒட்டி அவருடைய மாணவர்களால் ஹிரியண்ணா ஆய்வுக்களஞ்சியம் ( Prof M. Hiriyanna Felicitation Volume) வெளியிடப்பட்டது. | * 1952-ல் ஹிரியண்ணாவின் நூற்றாண்டை ஒட்டி அவருடைய மாணவர்களால் ஹிரியண்ணா ஆய்வுக்களஞ்சியம் ( Prof M. Hiriyanna Felicitation Volume) வெளியிடப்பட்டது. | ||
* | * 1952-ல் ஹிரியண்ணா நூற்றாண்டு மலர் வெளியிடப்பட்டது | ||
== வரலாற்று இடம் == | == வரலாற்று இடம் == | ||
ஹிரியண்ணா இந்தியவியலில் | ஹிரியண்ணா இந்தியவியலில் இந்தியர்களின் நோக்கை வெளிப்படுத்திய முன்னோடி ஆய்வாளர் என மதிக்கப்படுகிறார். இந்திய தத்துவத்தை மூலமொழியிலேயே ஆராய்ந்தவர். மேலைத்தத்துவ மரபின் நவீன ஆய்வுநோக்கை கொண்டவர். இந்த இணைப்பால் அவருடைய நூல்கள் புறவயத்தன்மையும் நடுநிலையும் கொண்ட தத்துவ ஆய்வுகளாக கருதப்படுகின்றன. ஐரோப்பிய இந்தியவியலாளர்களை போலன்றி இலக்கியம், தத்துவம், அழகியல் ஆகியவற்றை இணைத்து அடைந்த ஒருங்கிணைந்த பார்வையும் கொண்டிருந்தார். வேதாந்த நோக்கு கொண்டிருந்த ஹிரியண்ணாவின் வேதாந்த விளக்கநூல்களும் முக்கியமானவை. | ||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
* Bhasha Prabodhini | |||
* | * Bodhana Krama (1907) | ||
* | * Ishavasyopanishad (1911) | ||
* | * Kenopanishad (1912) | ||
* | * Katakopanishad (1915) | ||
* | * Brhadaranyakopansihad - Part 1 (1919) | ||
* | * Indian aesthetics (1919) - First Oriental Conference | ||
* | * The Ethics of the Upaniṣads (1924) | ||
* | * Naishkarmya-siddhi - Sureshwaracharya (1925) | ||
* | * Vedanta-sara - Sadananda (1929) | ||
* | * Ishta-siddhi - Vimukthathman (1933) | ||
* | * Outlines of Indian Philosophy (1932) | ||
* | * The Two-fold way of life (1935) - Eighth Oriental Conference - Presidential Address | ||
* | * The Essentials of Indian Philosophy (1949) | ||
* | * The Quest for Perfection (1952) | ||
* | * Popular Essays in Indian philosophy (1952) | ||
* | * Art Experience (1954) | ||
* | * Sanskrit Studies (1954) | ||
* | * Indian Philosophical Studies - I (1957) | ||
* | * Indian Philosophical Studies - II (1972) | ||
* | * The Mission of Philosophy (1960) | ||
* | * Reviews (1970) | ||
* | * Indian Conception of Values (1975) | ||
* | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
| Line 102: | Line 101: | ||
* [https://www.prekshaa.in/revisiting-hiriyanna Revisiting Hiriyanna] | * [https://www.prekshaa.in/revisiting-hiriyanna Revisiting Hiriyanna] | ||
* [https://thesouthfirst.com/karnataka/m-hiriyanna-peerless-scholar-of-indian-philosophy-and-aesthetics/ M Hiriyanna, peerless scholar of Indian philosophy and aesthetics] | * [https://thesouthfirst.com/karnataka/m-hiriyanna-peerless-scholar-of-indian-philosophy-and-aesthetics/ M Hiriyanna, peerless scholar of Indian philosophy and aesthetics] | ||
{{Finalised}} | |||
{{Fndt|13-Nov-2024, 21:45:09 IST}} | |||
[[Category:Tamil Content]] | |||
[[Category:தத்துவ அறிஞர்]] | |||
[[Category:கல்வியாளர்]] | |||
Latest revision as of 15:46, 12 October 2026




ஹிரியண்ணா (மே 7, 1871 - செப்டெம்பர் 19, 1950)(பேராசிரியர் மைசூர் ஹிரியண்ணா, எம்.ஹிரியண்ணா). இந்திய தத்துவ ஆய்வாளர், கல்வியாளர். இந்திய தத்துவத்திலும் இலக்கியத்திலும் முன்னோடியான ஆய்வுகளைச் செய்தவர்.
பிறப்பு, கல்வி
முன்னோர்
ஹிரியண்ணாவின் முன்னோர் விஜயநகர பேரரசின் காலகட்டத்தில் ஆந்திரத்தில் இருந்து கர்நாடகத்துக்கு குடிபெயர்ந்தவர்கள். உலுசுகம்மா என்னும் பிராமண துணைப்பிரிவினர். தும்கூர் மாவட்டத்தில் சிக்கெனெநாயக்கனஹள்ளி அருகே பாரிகேஹள்ளி என்னும் ஊரில் குடியேறினர்.
பிறப்பு
ஹிரியண்ணா மைசூரில் மே 7, 1871-ல் எம். நஞ்சுண்டய்யா மற்றும் லட்சுமிதேவி ஆகியோருக்குப் பிறந்தார். ஹிரியண்ணா ஐந்தாவது குழந்தை. எட்டாவது குழந்தையான தம்பி எம்.என்.கிருஷ்ணராவ், மைசூர் அரசர் ஜெயசாமராஜேந்திர உடையாரின் திவானாக இருந்தார்.
கல்வி
ஹிரியண்ணா மைசூரில் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்தார். பேரிஸ்வாமி திருமலாச்சார்யா, காசி சேஷராமசாஸ்திரி ஆகியோரிடம் சமஸ்கிருதம் கற்றார். ஹிரியண்ணா இளங்கலை தத்துவம், முதுகலை தத்துவம் ஆகியவற்றை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்றார். அங்கே வில்லியம் மில்லர் அவருக்கு ஆசிரியராக இருந்தார். மைசூர் ஆஸ்தான வித்வான் மடிகல்லு ராம சாஸ்திரி, கஸ்தூரிரங்க ஐயங்கார் ஆகியோரும் அவருக்கு ஆசிரியர்களாக இருந்தனர்.
பட்டப்படிப்பு முடித்தபின் இடைக்காலம் மைசூரில் பணியாற்றிவிட்டு சென்னைக்கு சென்று பயிற்றியியலில் எல்.டி. பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
எம்.ஹிரியண்ணா லட்சுமிதேவம்மாவை பட்டப்படிப்பு படிக்கும்போதே மணந்துகொண்டார். அவர்களுக்கு ருக்கம்மா என்ற பெண் குழந்தை இருந்தது.
கல்விப்பணி
ஹிரியண்ணா மைசூர் கீழைத்தேய நூலகத்தில் (மைசூர் ஓரியண்டல் லைப்ரரி, இன்றைய ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்) நூலகராக 1891-ல் பணிக்குச் சேர்ந்தார். ஆசிரியர் பயிற்சி பெற்றபின் 1896-ல் அரசுப்பள்ளி ஆசிரியராகச் சேர்ந்தார். 1907-ல் தலைமை ஆசிரியராக ஆனார்.
மைசூர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் எச்.வி. நஞ்சுண்டய்யாவின் பரிந்துரையின் பேரில், ஹிரியண்ணா 1912-ல் மைசூர் மகாராஜா கல்லூரியில் சமஸ்கிருத விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். 1914-ல் சமஸ்கிருத உதவிப் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.
எம். ஹிரியண்ணா 1919-ம் ஆண்டு மைசூர் மகாராஜா கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பதவியேற்றார். எட்டு ஆண்டுகள் சம்ஸ்கிருதப் பேராசிரியராகப் பதவி வகித்து 1927-ம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
இலக்கிய நட்புகள்
மைசூர் மகாராஜா கல்லூரியில் தத்துவவியல் துறையின் தலைவராக இருந்த ஏ.ஆர்.வாடியாவுடன் அணுக்கமாக இருந்தார். அப்போது சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனும் மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராக இருந்தார். ஹிரியண்ணா மைசூரில் பணியாற்றிய பாலக்காடு நாராயண சாஸ்திரியுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரான குப்புசுவாமி சாஸ்திரியுடனும் மதராஸில் கடிதப் பரிமாற்றம் செய்து வந்தார். எம். ஹிரியண்ணாவின் மறைவுக்குப் பிறகு, மயிலாப்பூரில் உள்ள "குப்புசுவாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு" அவரது புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
மாணவர்கள்
ஹிரியண்ணாவின் புகழ்பெற்ற மாணவர்கள் எம்.வி.சீதாராமையா, பி.டி.நரசிம்மாச்சார், வி. சீதாராமையா. டி.வி குண்டப்பா.
ஆய்வுப்பணிகள்
ஹிரியண்ணா இந்தியவியல் ஐரோப்பாவில் தோன்றி வலுப்பெற்றுவிட்டிருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இந்தியவியலில் இந்தியர்களின் பங்களிப்பு நிகழத்தொடங்கிய காலகட்டத்தில் எழுதிய முன்னோடிகளில் ஒருவர். ஆகவே ஐரோப்பிய இந்தியவியலாளர்களின் பார்வையை விரிவாக்கியும், தேவையான இடங்களில் மறுதலித்தும் தன் பார்வைகளை முன்வைத்தார். ஐரோப்பியர்களிடமிருந்து கற்றுக்கொண்ட மேலைத் தத்துவம் சார்ந்த ஆய்வுமுறையை இந்திய தத்துவசிந்தனைமேல் செலுத்தியவர்களில் ஒருவர்.
ஹிரியண்ணாவின் மேலைத் தத்துவம் சார்ந்த ஆய்வுநோக்குக்கு சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், ஏ.ஆர். வாடியா ஆகியோர் ஊக்கமளித்தனர். இந்திய மரபார்ந்த பார்வைக்கு பாலக்காடு நாராயண சாஸ்திரி, குப்புசுவாமி சாஸ்திரி ஆகியோர் உதவினார்கள். மைசூர் கீதைத்தேய நூலகத்தில் பணியாற்றியதனால் ஏராளமான மூலநூல்களை பயில அவருக்கு வாய்ப்பு அமைந்தது. 1653 அச்சுப்பிரதிகளையும் 1358 ஓலைச்சுவடிகளையும் பழங்கால சமஸ்கிருதம் மற்றும் கன்னடத்தில் இருந்து பதிப்பிப்பதில் அவர் பங்களிப்பாற்றினார்.
பயிற்றியல்
ஹிரியண்ணா இந்திய கல்விமுறையை உருவாக்குவதிலும் பங்களிப்பாற்றிய முன்னோடி. 'கற்பித்தல் கலை' (போதன க்ரமம் - 1906) என்னும் ஆய்வுக் கட்டுரை ஹிரியண்ணாவை ஆய்வுலகம் கவனிக்க வைத்தது. எஸ். ராதாகிருஷ்ணன் எம். ஹிரியண்ணாவின் வகுப்பறைக் குறிப்புகளை புத்தக வடிவில் வெளியிட ஆலன் & அன்வின் என்ற வெளியீட்டாளர்களுக்கு பரிந்துரைத்தார், அது 'இந்திய தத்துவத்தின் வரைவுச்சித்திரம்' (Outlines of Indian Philosophy) என்ற பெயரில் வெளிவந்தது.
பதிப்பு, உரை
ஹிரியண்ணா பழைய சம்ஸ்கிருத நூல்களை ஆய்வுரையுடன் பதிப்பித்தார். ஈஸாவாஸ்யோபனிஷத் (1911), கேனோபநிஷத் (1912), கட உபனிஷத் (1915) ஆகிய நீள்கட்டுரைகள் வெளியாயின. 1919-ல் பிரதாரண்யகோபநிஷத் - பாகம் 1 வெளிவந்தது. இந்திய சிந்தனையின் பல்வேறு சிந்தனை மரபுகளைப் பற்றி விரிவான கட்டுரைகளை வெளியிட்டார், அவை பின்னர் நூல்களாக ஆயின.
அழகியல்
சமஸ்கிருத மொழியியலில் பயிற்சி கொண்டிருந்த ஹிரியண்ணா சம்ஸ்கிருத இலக்கணம் மற்றும் பிற மொழிகளுடனனான ஒப்பீட்டாய்வு ஆகியவை சார்ந்து ஏராளமாக எழுதியுள்ளார். சம்ஸ்கிருத கலைக்கொள்கைகளான அலங்கார சாஸ்திரம், த்வனி கோட்பாடு சார்ந்தும் எழுதியுள்ளார்.
மொழியாக்கம்
ஹிரியண்ணா பாசனின் ஸ்வப்ன வாசவதத்தை நூலை The Dream Queen என்ற பேரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார்.
தத்துவ நூல்கள்
அத்வைதத்தில் ஈடுபாடு கொண்டிருந்த ஹிரியண்ணா நைஷ்காமிய சித்தி, வேதாந்த சார, இஷ்டசித்தி போன்ற அத்வைத நூல்களை எழுதினார். இம்மானுவேல் காண்ட் மீது பெரும் பற்று கொண்டிருந்த ஹிரியண்ணா, தத்துவத்தின் நோக்கம் (1960) என்னும் நூலில் காண்டின் தத்துவங்களை விவாதிக்கிறார்.
மறைவு
ஹிரியண்ணா செப்டெம்பர் 19, 1950-ல் மறைந்தார்.
ஏற்புகள்
- 1935-ம் ஆண்டு மைசூரில் நடைபெற்ற அகில இந்திய கீழையியல் மாநாட்டிற்கு ஹிரியண்ணா தலைமை தாங்கினார்.
- 1939-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற அகில இந்திய தத்துவ மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்
- 1940-ல், மதராஸில் தத்துவம் பற்றி வில்லியம் மில்லர் நினைவு விரிவுரையை வழங்கினார்.
- 1940-ல் மெட்ராஸ் சமஸ்கிருத அகாடமி அவருக்கு "சம்ஸ்க்ருதசேவாதுரினா" என்ற பட்டத்தை வழங்கியது.
- 1952-ல் ஹிரியண்ணாவின் நூற்றாண்டை ஒட்டி அவருடைய மாணவர்களால் ஹிரியண்ணா ஆய்வுக்களஞ்சியம் ( Prof M. Hiriyanna Felicitation Volume) வெளியிடப்பட்டது.
- 1952-ல் ஹிரியண்ணா நூற்றாண்டு மலர் வெளியிடப்பட்டது
வரலாற்று இடம்
ஹிரியண்ணா இந்தியவியலில் இந்தியர்களின் நோக்கை வெளிப்படுத்திய முன்னோடி ஆய்வாளர் என மதிக்கப்படுகிறார். இந்திய தத்துவத்தை மூலமொழியிலேயே ஆராய்ந்தவர். மேலைத்தத்துவ மரபின் நவீன ஆய்வுநோக்கை கொண்டவர். இந்த இணைப்பால் அவருடைய நூல்கள் புறவயத்தன்மையும் நடுநிலையும் கொண்ட தத்துவ ஆய்வுகளாக கருதப்படுகின்றன. ஐரோப்பிய இந்தியவியலாளர்களை போலன்றி இலக்கியம், தத்துவம், அழகியல் ஆகியவற்றை இணைத்து அடைந்த ஒருங்கிணைந்த பார்வையும் கொண்டிருந்தார். வேதாந்த நோக்கு கொண்டிருந்த ஹிரியண்ணாவின் வேதாந்த விளக்கநூல்களும் முக்கியமானவை.
நூல்கள்
- Bhasha Prabodhini
- Bodhana Krama (1907)
- Ishavasyopanishad (1911)
- Kenopanishad (1912)
- Katakopanishad (1915)
- Brhadaranyakopansihad - Part 1 (1919)
- Indian aesthetics (1919) - First Oriental Conference
- The Ethics of the Upaniṣads (1924)
- Naishkarmya-siddhi - Sureshwaracharya (1925)
- Vedanta-sara - Sadananda (1929)
- Ishta-siddhi - Vimukthathman (1933)
- Outlines of Indian Philosophy (1932)
- The Two-fold way of life (1935) - Eighth Oriental Conference - Presidential Address
- The Essentials of Indian Philosophy (1949)
- The Quest for Perfection (1952)
- Popular Essays in Indian philosophy (1952)
- Art Experience (1954)
- Sanskrit Studies (1954)
- Indian Philosophical Studies - I (1957)
- Indian Philosophical Studies - II (1972)
- The Mission of Philosophy (1960)
- Reviews (1970)
- Indian Conception of Values (1975)
உசாத்துணை
- Acharya M Hiriyanna: The Joyous Radiance of Sanatana Erudition and Scholarship
- EVENT ANNOUNCEMENT: REVISITING PROF M. HIRIYANNA
- https://www.srikanta-sastri.org/mhiriyanna
- The Relevance of Acharya M Hiriyanna to the Contemporary Time
- Revisiting Hiriyanna
- M Hiriyanna, peerless scholar of Indian philosophy and aesthetics
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Nov-2024, 21:45:09 IST