காலெறி கடிகையார்: Difference between revisions

From Tamil Wiki
Logamadevi (talk | contribs)
No edit summary
 
(2 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:
காலெறி கடிகையார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில்  இடம்பெற்றுள்ளது.
காலெறி கடிகையார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில்  இடம்பெற்றுள்ளது.
==வாழ்க்கை குறிப்பு==
==வாழ்க்கை குறிப்பு==
காலெறி கடிகையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவரது பாடலில் இடம்பெற்றுள்ள ' கரும்பின் காலெறி கடிகைக்கண் அயின்றன்ன ’ என்ற உவமையின் சிறப்பை முன்னிட்டு,  அதையே புலவரின் பெயராக கொண்டனர்.
காலெறி கடிகையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவரது பாடலில் இடம்பெற்றுள்ள ' கரும்பின் காலெறி கடிகைக்கண் அயின்றன்ன ' என்ற உவமையின் சிறப்பை முன்னிட்டு,  அதையே புலவரின் பெயராக கொண்டனர்.
==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
காலெறி கடிகையார் பாடிய ஒரு பாடல் [[குறுந்தொகை]]யில் 267-வது பாடலாக அமைந்துள்ளது. நிலையற்ற வாழ்க்கைக்காக பொருளீட்டும் பொருட்டு தலைவியை விட்டுப் பிரிந்து செல்வது, அவளால் உண்டாகப்பெறும் இளமை இன்பத்தை வீணாக்குவது என்று தலைவன் கூறுவதாக அமைந்துள்ள பாடல்

Line 12: Line 12:
[[பாலைத் திணை]]                                     
[[பாலைத் திணை]]                                     

துறை:  ”மேனின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின் நாமும் பொருட்குப் பிரிதும்”என்னும் நெஞ்சிற்கு,நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறிச் செலவழுங்கியது
துறை:  "மேனின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின் நாமும் பொருட்குப் பிரிதும்"என்னும் நெஞ்சிற்கு,நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறிச் செலவழுங்கியது
<poem>
<poem>
இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம்
இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம்
Line 28: Line 28:

{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|12-Nov-2024, 12:19:59 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Latest revision as of 00:54, 21 December 2025

காலெறி கடிகையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

காலெறி கடிகையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவரது பாடலில் இடம்பெற்றுள்ள ' கரும்பின் காலெறி கடிகைக்கண் அயின்றன்ன ' என்ற உவமையின் சிறப்பை முன்னிட்டு, அதையே புலவரின் பெயராக கொண்டனர்.

இலக்கிய வாழ்க்கை

காலெறி கடிகையார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 267-வது பாடலாக அமைந்துள்ளது. நிலையற்ற வாழ்க்கைக்காக பொருளீட்டும் பொருட்டு தலைவியை விட்டுப் பிரிந்து செல்வது, அவளால் உண்டாகப்பெறும் இளமை இன்பத்தை வீணாக்குவது என்று தலைவன் கூறுவதாக அமைந்துள்ள பாடல்

பாடல் வழி அறியவரும் செய்திகள்

பொருளீட்டுவதற்காக தலைவியை பிரிந்து செல்வது வீண் செயல் என உளம் கொண்ட தலைவனின் எண்ணத்தை கூறும் பாடல்.

  • உலகத்தில் உள்ள செல்வம் அனைத்தையும் ஈட்டமுடியும் என்றாலும், நாள் தவறாது தனது கொலைத் தொழிலைச் செய்யும் எமனின் பார்வை நம்மீது விழும் நேரத்தை அறிய முடியாது. எனவே அறிவுள்ளோர் செல்வம் சேர்ப்பதன் பொருட்டு இளமை இன்பத்தை துறக்க மாட்டார்.
  • உவமை: வளையல்கள் அணிந்த திரண்ட தோள்களை உடைய தலைவியின் வாயிலிருந்து ஊறும் உமிழ் நீரானது, வெட்டப்பட்ட அடிக்கரும்பில் இருந்து வடியும் இனிய சுவையுள்ள சாற்றுக்கு நிகரானது.

பாடல் நடை

குறுந்தொகை - 267

பாலைத் திணை

துறை: "மேனின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின் நாமும் பொருட்குப் பிரிதும்"என்னும் நெஞ்சிற்கு,நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறிச் செலவழுங்கியது

இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம்
ஒருங்குடன் இயைவ தாயினுங் கரும்பின்
காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன
வாலெயி றூறிய வசையில் தீநீர்க்
கோலமை குறுந்தொடிக் குறுமக ளொழிய
ஆள்வினை மருங்கிற் பிரியார் நாளும்
உறன்முறை மரபிற் கூற்றத்
தறனில் கோணற் கறிந்திசி னோரே

உசாத்துணை

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Nov-2024, 12:19:59 IST