மகரநெடுங்குழைக்காதர்‌ பாமாலை: Difference between revisions

From Tamil Wiki
Logamadevi (talk | contribs)
No edit summary
Corrected typo errors;
 
(One intermediate revision by the same user not shown)
Line 14: Line 14:
மகரநெடுங்குழைக்காதர் பாமாலையில் உள்ள நூறு பாடல்களில் முதல் அறுபத்தைந்து பாடல்கள், நாராயண தீட்சிதர் சிறையில் வருந்தியபோது மனம் வருந்திப் பாடிய பாடல்களாகவும், மீதமுள்ள முப்பத்தைந்து பாடல்கள் சிறையிலிருந்து வடமலையப்பப்பிள்ளையால் விடுதலை செய்யப்பட்ட பின் மனம் மகிழ்ந்து பாடிய பாடல்களாகவும் அமைந்துள்ளன. எளிய நடை உடையதாகவும் பக்திச்சுவை மிக்கதாகவும் மகர நெடுங்குழைக்காதர் பாமாலை நூல் அமைந்துள்ளது.

இந்நூல் பற்றி சி. ஜெகந்நாதாச்சார்யர், “இந்தப்பாமாலை எளிய நடையினது. பக்திச்சுவை மிக்கது. தென்திருப்பேரை வட்டாரத்தார் இதனைப் பக்தியுடன் பாராயணம் செய்கின்றனர். மற்றும், க்ஷேத்ராடனம் செய்யும்போது நாடோறும் இந்நாலைப் பாராயணம் செய்வார்களாம். இதனால் துன்பங்கள் விலகி, இன்பம் பெருகும் என்பது கண்கூடு. இந்நூல் தெய்வீகசக்தியுடையது.” என்று குறிப்பிட்டார்.
இந்நூல் பற்றி சி. ஜெகந்நாதாச்சார்யர், "இந்தப்பாமாலை எளிய நடையினது. பக்திச்சுவை மிக்கது. தென்திருப்பேரை வட்டாரத்தார் இதனைப் பக்தியுடன் பாராயணம் செய்கின்றனர். மற்றும், க்ஷேத்ராடனம் செய்யும்போது நாடோறும் இந்நாலைப் பாராயணம் செய்வார்களாம். இதனால் துன்பங்கள் விலகி, இன்பம் பெருகும் என்பது கண்கூடு. இந்நூல் தெய்வீகசக்தியுடையது." என்று குறிப்பிட்டார்.

==நூல் வரலாறு ==
==நூல் வரலாறு ==
Line 62: Line 62:

{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|29-Oct-2024, 15:35:06 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:02, 22 November 2025

மகரநெடுங்குழைக்காதர் பாமாலை

மகரநெடுங்குழைக்காதர் பாமாலை (பதிப்பு: 1939) தென்திருப்பேரை எனும் ஊரில் எழுந்தருளியுள்ள திருமாலின் மீது பாடப்பட்ட மாலை இலக்கிய நூல். இந்நூலை இயற்றியவர் நாராயண தீட்சிதர். இந்நூலில் 103 பாடல்கள் இடம் பெற்றன.

பதிப்பு, வெளியீடு

மகரநெடுங்குழைக்காதர் பாமாலை, கலைமகள் இதழில், உ.வே. சாமிநாதையரின் குறிப்புரையுடன் தொடராக வெளிவந்தது. பின் கலைமகள் வெளியீடாகப் பதிப்பிக்கப்பட்டு நூலாக வெளிவந்தது. இதன் இரண்டாம் பதிப்பை உ.வே.சா. நூல் நிலையம் 1939-ல் பதிப்பித்து வெளியிட்டது. உரை எழுதிப் பதிப்பித்தவர், உ.வே.சாமிநாதையர்.

ஆசிரியர் குறிப்பு

நாராயண தீட்சிதர், நவ திருப்பதிகளில் ஒன்றான தென்திருப்பேரையில் பிறந்தவர். நம்மாழ்வார் மீது பக்தி கொண்டிருந்தார். வரி கட்டாததால் சிறையில் அடைக்கப்பட்ட இவர், வடமலையப்பப் பிள்ளையின் ஆதரவால் மீண்டார். இவரது காலம் 18 -ம் நூற்றாண்டு

நூல் அமைப்பு

மகரநெடுங்குழைக்காதர் பாமாலை, தென்திருப்பேரை எனும் ஊரில் எழுந்தருளியுள்ள திருமாலின் மீது பாடப்பட்ட மாலை என்னும் சிற்றிலக்கியம். 100 பாடல்களைக் கொண்டது. இவற்றுடன் காப்புச் செய்யுள், பெரிய திருவடிகளின் வணக்கச் செய்யுள், வாழ்த்து ஆகியன சேர்ந்து மொத்தம் 103 பாடல்களைக் கொண்டுள்ளது. கட்டளைக் கலித்துறையால் இயற்றப்பட்டது.

உள்ளடக்கம்

மகரநெடுங்குழைக்காதர் பாமாலையில் உள்ள நூறு பாடல்களில் முதல் அறுபத்தைந்து பாடல்கள், நாராயண தீட்சிதர் சிறையில் வருந்தியபோது மனம் வருந்திப் பாடிய பாடல்களாகவும், மீதமுள்ள முப்பத்தைந்து பாடல்கள் சிறையிலிருந்து வடமலையப்பப்பிள்ளையால் விடுதலை செய்யப்பட்ட பின் மனம் மகிழ்ந்து பாடிய பாடல்களாகவும் அமைந்துள்ளன. எளிய நடை உடையதாகவும் பக்திச்சுவை மிக்கதாகவும் மகர நெடுங்குழைக்காதர் பாமாலை நூல் அமைந்துள்ளது.

இந்நூல் பற்றி சி. ஜெகந்நாதாச்சார்யர், "இந்தப்பாமாலை எளிய நடையினது. பக்திச்சுவை மிக்கது. தென்திருப்பேரை வட்டாரத்தார் இதனைப் பக்தியுடன் பாராயணம் செய்கின்றனர். மற்றும், க்ஷேத்ராடனம் செய்யும்போது நாடோறும் இந்நாலைப் பாராயணம் செய்வார்களாம். இதனால் துன்பங்கள் விலகி, இன்பம் பெருகும் என்பது கண்கூடு. இந்நூல் தெய்வீகசக்தியுடையது." என்று குறிப்பிட்டார்.

நூல் வரலாறு

ஒரு சமயம் நாராயண தீட்சிதரின் வயல்களில் கடும் பஞ்சத்தால் விளைச்சல் இல்லாமல்போனது. அதனால் அவரால் வரி செலுத்த இயலவில்லை. சினம் கொண்ட பிரிட்டிஷ் அதிகாரி தீட்சிதரைக் கைது செய்து சிறையில் அடைத்தார். பலவாறாகக் கொடுமைப்படுத்தினார்.

அக்கொடுமை தாங்காமல் தினந்தோறும் மகரநெடுங்குழைக்காதர் மீது நாராயண தீட்சிதர் பாடல்களைப் பாடினார். ஒரு சமயம் அவ்வாறு பாடும்போது அப்பகுதிப் பொறுப்பாளரும், சேனாபதியுமான வடமலையப்பப் பிள்ளை பெயர் வரும்படிப் பாடினார். அதனைக் கேட்ட காவலன் ஒருவன், தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் வடமலையப்பப்பிள்ளையிடம் அத்தகவலைத் தெரிவித்தான். உடன் சிறைக்கு வந்த வடமலையப்பப் பிள்ளை நடந்த நிகழ்வுகளை அறிந்தார். நாராயண தீட்சிதரை விடுதலை செய்ததுடன் அவரது நிலங்களின் மீதான வரிகளையும் ரத்து செய்தார். காவல்துறை அதிகாரியைப் பணியிலிருந்து நீக்கினார்.

நாராயண தீட்சிதரும் மன வருத்தம் நீங்கினார். அதுவரை 65 பாமாலைகளைப் பாடியிருந்தவர், வடமலையப்பப் பிள்ளையின் வேண்டுகோளுக்கிணங்க மீதி 35 பாடல்களையும் பாடி நூலை நிறைவு செய்தார்.

பாடல்

எப்போது நின்னை நினைப்போமங் கேவந் தெதிர்முகமாய்
அப்போது நீயும்வந் தஞ்சலென் பாயடி யாருளத்தில்
மெய்ப்போத ஞான விளக்கே கராங்கெளவ வீரிட்டந்தக்
கைப்போத கஞ்சொன்ன மாலேதென் பேரையிற் காகுத்தனே

அடியா ரிடத்தில் வினைகள்வந் தாலு மவையகற்றி
நொடியாகத் தீர்ப்பது நீயல வோமின் னுடங்குவஞ்சிக்
கொடியா ரிடைச்சியர் மத்தா லடிக்கக் குழைந்துநின்ற
வடிவா கருணைக் கடலேதென் பேரையின் மாதவனே

திங்களொன் றாகச் சிறையிருந் தோமிச் சிறையகற்றி
எங்கடம் பாலிரங் காததென் னோவிசை நான்மறையின்
சங்கமுங் கீதத் தமிழ்ப்பாட லுஞ்சத்த சாகரம்போற்
பொங்குதென் பேரைப் புனிதா கருணைப் புராதனனே

வள்வார் முரசதிர் கோமான் வடமலை யப்பன்முன்னே
விள்வாரு மில்லை யினியெங்கள் காரியம் வெண்டயிற்பாற்
கள்வா வருட்கடைக் கண்பார் கருணைக் களிறழைத்த
புள்வாக னாவன்பர் வாழ்வேதென் பேரைப் புராதனனே

பாற்கொண்ட நீரன்னம் வேறாக்கு முன்னைப் பரவுமெங்கள்
மேற்கொண்ட வல்வினை வேறாக்க நீயன்றி வேறுமுண்டோ
சூற்கொண்ட செந்நெல் வயற்பேரை யந்தணர் சூழ்ந்துதொழும்
கார்க்கொண்ட லேகுழைக்காதா கருணைக் கருங்கடலே

பரனே பராபர னேபதி யேபதி கொண்டசரா
சரனே நெடும்பர தத்துவ னேசமர் வேட்டெழுந்த
கரனே முதற்பதி னாலாயி ரங்கண் டகரைவெல்லும்
உரனே நிகர் முகில் வண்ணாவிந் நாள்வந் துதவினையே

உசாத்துணை

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Oct-2024, 15:35:06 IST