வெள்ளியந்தின்னனார்: Difference between revisions

From Tamil Wiki
Jayashree (talk | contribs)
No edit summary
 
(3 intermediate revisions by 3 users not shown)
Line 2: Line 2:


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
வெள்ளியந்தின்னனார் பற்றிய பிற தகவல்கள் கிடைக்கவில்லை. அவர் பாடிய பாடலில் வெள்ளி போல் இருக்கும் மீன் அல்லது இறாலின் குப்பைக் குவியல் புன்னை மர நிழலில் குவித்து வைக்கும் பரதவர் பற்றிப் பாடியதால் இப்பெயர் பெற்றார்.
வெள்ளியந்தின்னனார் பற்றிய பிற தகவல்கள் கிடைக்கவில்லை. அவர் பாடிய பாடலில் வெள்ளி போல் இருக்கும் மீன் அல்லது இறாலின் குவியலைக் காய்வதற்காக புன்னை மர நிழலில் குவித்து வைக்கும் பரதவர் பற்றிப் பாடியதால் இப்பெயர் பெற்றார்.


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
Line 26: Line 26:
* [https://vaiyan.blogspot.com/2016/04/natrinai-101.html நற்றிணை 101 - vaiyan]
* [https://vaiyan.blogspot.com/2016/04/natrinai-101.html நற்றிணை 101 - vaiyan]


{{Second review completed}}
{{Finalised}}
{{Fndt|17-Sep-2024, 16:57:48 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Latest revision as of 00:54, 21 December 2025

வெள்ளியந்தின்னனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத் தொகை நூலான நற்றிணையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

வெள்ளியந்தின்னனார் பற்றிய பிற தகவல்கள் கிடைக்கவில்லை. அவர் பாடிய பாடலில் வெள்ளி போல் இருக்கும் மீன் அல்லது இறாலின் குவியலைக் காய்வதற்காக புன்னை மர நிழலில் குவித்து வைக்கும் பரதவர் பற்றிப் பாடியதால் இப்பெயர் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

வெள்ளியந்தின்னனார் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் 101-வது பாடலாக உள்ளது. தலைவன் தோழியிடம் சொல்வதாக பாடல் உள்ளது. முன்பு இன்பம் தந்த இடம் தற்போது தலைவியின் அன்பைப் பெறாத காலத்தில் துன்பம் தருகிறது என்ற பொருளில் பாடல் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • நெய்தல் திணை: வலை வீசி மீன் பிடிக்கும் பரதவர். உப்பங்கழியில் மேய்ந்த இறா மீனின் காய்ந்த குவியலைப் புன்னை மர நிழலுக்குக் கொண்டுவந்து பரப்புவர். பசுமஞ்சள் நிறத்திலான முற்றத்தைக் கொண்டிருப்பர்.

பாடல் நடை

திணை: நெய்தல்; பின்னின்ற தலைமகன் தோழி கேட்பச் சொல்லியது

முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ் கழி இறவின்
கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்
துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி
இனிதுமன் அளிதோ தானே துனி தீர்ந்து
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின்
மீன் எறி பரதவர் மட மகள்
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Sep-2024, 16:57:48 IST