under review

பாலைபாடிய பெருங்கடுங்கோ: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "பாலைபாடிய பெருங்கடுங்கோ சங்க காலப் புலவர். அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய சங்க நூல்களில் இவருடைய பாடல்கள் உள்ளன. == வாழ்க்கைக் குறிப்பு == ’சேரமான் பாலை...")
 
No edit summary
 
(5 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
பாலைபாடிய பெருங்கடுங்கோ சங்க காலப் புலவர். அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய சங்க நூல்களில் இவருடைய பாடல்கள் உள்ளன.

== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
’சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பேய்மகள் இளவெயினி பாடியது’ என்பதால் இவர் ஒரு சேர மன்னன் என அறியலாம். புகழூரிலுள்ள தமிழ் கல்வெட்டு அசோகன் காலத்தை சேர்ந்தது. இந்தக் கல்வெட்டில் இவரது தந்தைபெயர் 'கோ ஆதன் செல் இரும்பொறை’ எனவும் இவரது பெயர் ’பெருங்கடுங்கோ’ எனவும் இவரது மகன் பெயர் ’இளங்கடுங்கோ' என்றும் உள்ளது. ஐந்திணைகளில் பாலைத்திணையை விரித்துப் பாடியதால் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்று அழைக்கப்பட்டார். பொருநை பாயும் கருவூரை ஆட்சி செய்தார்.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் அறுபத்தியேழு உள்ளன. இவற்றில் ஒன்று மட்டும் புறத்திணையைச் சேர்ந்தது. அகப்பொருள் பாடல்களில் குறிஞ்சிப் பொருள் ஒன்றும், மருதப்பொருள் ஒன்றும், அறுபத்தி நான்கு பாலைத்திணைப் பாடல்களும் உள்ளன. பாலைத்திணையின் பழந்தமிழ் வரலாற்றை இவரின் பாடல்கள் வழி அறியலாம். பாலைத்திணையில் பாலை நிகழ்ச்சி, பாலையின் களவு, கற்பு ஆகிய செய்திகள் உள்ளன.

===== பாடிய பாடல்கள் =====
===== பாடிய பாடல்கள் =====
* அகநானூறு 5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 337, 379,
* [[அகநானூறு]]: 5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 337, 379,
* கலித்தொகை பாலைக்கலி 35
* [[கலித்தொகை]] பாலைக்கலி: 35
* குறுந்தொகை 16, 27, 124, 135, 137, 209, 231(மருதம்), 262, 283, 398
* [[குறுந்தொகை]]: 16, 27, 124, 135, 137, 209, 231(மருதம்), 262, 283, 398
* நற்றிணை 9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391
* [[நற்றிணை]]: 9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391
* புறநானூறு 282
* [[புறநானூறு|புறநானூறு:]] 282
 
== பாடல் நடை ==
== பாடல் நடை ==
* புறநானூறு 282
* புறநானூறு 282
Line 31: Line 27:
</poem>
</poem>
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3]
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ புலவர் கா. கோவிந்தன் – திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3]
 
{{Finalised}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 09:45, 25 November 2023

பாலைபாடிய பெருங்கடுங்கோ சங்க காலப் புலவர். அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய சங்க நூல்களில் இவருடைய பாடல்கள் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

’சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பேய்மகள் இளவெயினி பாடியது’ என்பதால் இவர் ஒரு சேர மன்னன் என அறியலாம். புகழூரிலுள்ள தமிழ் கல்வெட்டு அசோகன் காலத்தை சேர்ந்தது. இந்தக் கல்வெட்டில் இவரது தந்தைபெயர் 'கோ ஆதன் செல் இரும்பொறை’ எனவும் இவரது பெயர் ’பெருங்கடுங்கோ’ எனவும் இவரது மகன் பெயர் ’இளங்கடுங்கோ' என்றும் உள்ளது. ஐந்திணைகளில் பாலைத்திணையை விரித்துப் பாடியதால் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்று அழைக்கப்பட்டார். பொருநை பாயும் கருவூரை ஆட்சி செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் அறுபத்தியேழு உள்ளன. இவற்றில் ஒன்று மட்டும் புறத்திணையைச் சேர்ந்தது. அகப்பொருள் பாடல்களில் குறிஞ்சிப் பொருள் ஒன்றும், மருதப்பொருள் ஒன்றும், அறுபத்தி நான்கு பாலைத்திணைப் பாடல்களும் உள்ளன. பாலைத்திணையின் பழந்தமிழ் வரலாற்றை இவரின் பாடல்கள் வழி அறியலாம். பாலைத்திணையில் பாலை நிகழ்ச்சி, பாலையின் களவு, கற்பு ஆகிய செய்திகள் உள்ளன.

பாடிய பாடல்கள்

பாடல் நடை

  • புறநானூறு 282

எகுஉளம் கழிய இருநில மருங்கின்
அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை,
யாண்டுளனோ?வென, வினவுதி ஆயின்,
. . . . . . . . . . . . 5
வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்
அருங்கடன் இறுமார் வயவர் எறிய,
உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே,
மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய 10
பலகை அல்லது, களத்துஒழி யதே;
சேண்விளங்கு நல்லிசை நிறீஇ,
நாநவில் புலவர் வாய் உளானே.

உசாத்துணை

✅Finalised Page