under review

சக்திதாசன் சுப்ரமணியன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(One intermediate revision by one other user not shown)
Line 2: Line 2:
[[File:திருவிக வாழ்க்கை.png|thumb|திருவிக வாழ்க்கை]]
[[File:திருவிக வாழ்க்கை.png|thumb|திருவிக வாழ்க்கை]]
[[File:ஜலஜா சக்திதாசன்.png|thumb|ஜலஜா சக்திதாசன்]]
[[File:ஜலஜா சக்திதாசன்.png|thumb|ஜலஜா சக்திதாசன்]]
சக்திதாசன் சுப்ரமணியன் ( ) இதழாளர். திரு.வி.கவின் மாணவர், அவருடன் மறைவுக்காலம் வரை உடனிருந்து நவசக்தி இதழை நடத்தியவர். திரு.வி.கவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்
சக்திதாசன் சுப்ரமணியன் (1912- ) இதழாளர். திரு.வி.கவின் மாணவர், அவருடன் மறைவுக்காலம் வரை உடனிருந்து நவசக்தி இதழை நடத்தியவர். திரு.வி.கவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
சக்திதாசன் சுப்ரமணியன் திருவாரூரில் 1912ல் பிறந்தார். திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் வித்வான் படிப்பை முடித்தார்.
சக்திதாசன் சுப்ரமணியன் திருவாரூரில் 1912-ல் பிறந்தார். திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் வித்வான் படிப்பை முடித்தார்.

== இதழியல் ==
== இதழியல் ==
சக்திதாசன் 1935 ல் [[சுதந்திரச் சங்கு]] என்னும் இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் [[நவசக்தி]] இதழில் 1936 முதல் துணை ஆசிரியராக பணியாற்றினார்.ஜனவரி 1941 ல் நவசக்தி பொறுப்பில் இருந்து திரு.வி.க விலகிக்கொண்டார். அப்பொறுப்பு அதன் துணையாசிரியராக இருந்த சக்திதாசன் சுப்ரமணியன் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.
சக்திதாசன் 1935-ல் [[சுதந்திரச் சங்கு]] என்னும் இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் [[நவசக்தி]] இதழில் 1936 முதல் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். ஜனவரி 1941-ல் நவசக்தி பொறுப்பில் இருந்து திரு.வி.க விலகிக்கொண்டார். அப்பொறுப்பு அதன் துணையாசிரியராக இருந்த சக்திதாசன் சுப்ரமணியனுக்கு அளிக்கப்பட்டது.

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
Line 14: Line 14:

== திரு.வி.கவுடன் ==
== திரு.வி.கவுடன் ==
சக்திதாசன் சுப்ரமணியன் 1936 முதல் [[திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்]] அவர்களுடன் உடனிருந்தார். திரு.வி.க. மறைவது வரை அவருடன் இருந்தார். நவசக்தி இதழை திருவிகவுக்காக நடத்தினார். திருவிக வாழ்க்கை வரலாற்றை திரு.வி.க வாழ்வும் தொண்டும் என்னும் தலைப்பில் எழுதினார். திருவிக பற்றி திரு.வி.க உள்ளமும் உயர்நூல்களும் என்ற ஆய்வுநூலையும் எழுதினார்.
சக்திதாசன் சுப்ரமணியன் 1936 முதல் [[திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்]] அவர்களுடன் உடனிருந்தார். திரு.வி.க. மறைவது வரை அவருடன் இருந்தார். நவசக்தி இதழை திருவிகவுக்காக நடத்தினார். திருவிக வாழ்க்கை வரலாற்றை 'திரு.வி.க வாழ்வும் தொண்டும்' என்னும் தலைப்பில் எழுதினார். திருவிக பற்றி திரு.வி.க உள்ளமும் உயர்நூல்களும் என்ற ஆய்வுநூலையும் எழுதினார்.

சக்திதாசன் கம்ப ராமாயண கதைவிளக்கம் உட்பட ஏராளமான பக்திநூல்களை எழுதினார். அவர்  எழுதிய 44 நூல்களில் இருபது நூல்கள் அவர் தன் மனைவி ஜலஜா சக்திதாசனுடன் இணைந்து எழுதியவை.
சக்திதாசன் 'கம்ப ராமாயண கதைவிளக்கம்' உட்பட ஏராளமான பக்திநூல்களை எழுதினார். அவர்  எழுதிய 44 நூல்களில் இருபது நூல்கள் அவர் தன் மனைவி ஜலஜா சக்திதாசனுடன் இணைந்து எழுதியவை.

== நாட்டுடைமை ==
== நாட்டுடைமை ==
சக்திதாசன் நூல்களை தமிழக அரசு ல் நாட்டுடைமை ஆக்கியது. சக்திதாசன் 44 நூல்களை எழுதியதாக குறிப்பு உள்ளது.  
சக்திதாசன் நூல்களை தமிழக அரசு 2008-ல் [[நூல்கள் நாட்டுடைமை|நாட்டுடைமை]] ஆக்கியது. சக்திதாசன் 44 நூல்களை எழுதியதாகக் குறிப்பு உள்ளது.  

== நூல்கள் ==
== நூல்கள் ==
Line 42: Line 42:
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0003979_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf திரு.வி.க. வாழ்க்கை வரலாறு வசக்திதாசன் சுப்ரமணியன் இணைய நூலகம்]

* [https://web.archive.org/web/20140331105656/http://tamilvu.org/library/nationalized/html/naauthor-4.htm சக்திதாசனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள். இணைய நூலகம்]
* [https://web.archive.org/web/20140331105656/http://tamilvu.org/library/nationalized/html/naauthor-4.htm சக்திதாசனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள். இணைய நூலகம்]
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 21:46, 2 April 2024

சக்திதாசன்
திருவிக வாழ்க்கை
ஜலஜா சக்திதாசன்

சக்திதாசன் சுப்ரமணியன் (1912- ) இதழாளர். திரு.வி.கவின் மாணவர், அவருடன் மறைவுக்காலம் வரை உடனிருந்து நவசக்தி இதழை நடத்தியவர். திரு.வி.கவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்

பிறப்பு, கல்வி

சக்திதாசன் சுப்ரமணியன் திருவாரூரில் 1912-ல் பிறந்தார். திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் வித்வான் படிப்பை முடித்தார்.

இதழியல்

சக்திதாசன் 1935-ல் சுதந்திரச் சங்கு என்னும் இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் நவசக்தி இதழில் 1936 முதல் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். ஜனவரி 1941-ல் நவசக்தி பொறுப்பில் இருந்து திரு.வி.க விலகிக்கொண்டார். அப்பொறுப்பு அதன் துணையாசிரியராக இருந்த சக்திதாசன் சுப்ரமணியனுக்கு அளிக்கப்பட்டது.

தனிவாழ்க்கை

சக்திதாசனின் மனைவி ஜலஜா சக்திதாசன். அவரும் ஓர் எழுத்தாளர்.

திரு.வி.கவுடன்

சக்திதாசன் சுப்ரமணியன் 1936 முதல் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்களுடன் உடனிருந்தார். திரு.வி.க. மறைவது வரை அவருடன் இருந்தார். நவசக்தி இதழை திருவிகவுக்காக நடத்தினார். திருவிக வாழ்க்கை வரலாற்றை 'திரு.வி.க வாழ்வும் தொண்டும்' என்னும் தலைப்பில் எழுதினார். திருவிக பற்றி திரு.வி.க உள்ளமும் உயர்நூல்களும் என்ற ஆய்வுநூலையும் எழுதினார்.

சக்திதாசன் 'கம்ப ராமாயண கதைவிளக்கம்' உட்பட ஏராளமான பக்திநூல்களை எழுதினார். அவர் எழுதிய 44 நூல்களில் இருபது நூல்கள் அவர் தன் மனைவி ஜலஜா சக்திதாசனுடன் இணைந்து எழுதியவை.

நாட்டுடைமை

சக்திதாசன் நூல்களை தமிழக அரசு 2008-ல் நாட்டுடைமை ஆக்கியது. சக்திதாசன் 44 நூல்களை எழுதியதாகக் குறிப்பு உள்ளது.

நூல்கள்

  • உலகம் பிறந்த கதை; 1957; சுதேசமித்திரன், சென்னை-2
  • கம்பன் கவித் திரட்டு பகுதி 1
  • கம்பன் கவித் திரட்டு பகுதி2, 3
  • கம்பன் கவித் திரட்டு பகுதி 4, 5, 6
  • கலித்தொகைக் காட்சிகள்
  • சோஷலிஸ்ட் ஜவஹர்
  • திரு.வி.க. உள்ளமும் உயர்நூல்களும்
  • திரு.வி.க. வாழ்வும் தொண்டும்
  • நவசக்தி
  • பாரதி லீலை
  • மகாகவி பாரதியார் (புதுமைக்கண்ணோட்டம்)
  • மீண்டும் சிருங்கேரி சென்றேன்
  • புகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்
  • மனிதகுலம் வளர்ந்த கதை

உசாத்துணை

✅Finalised Page