under review

ராஜாமடம் ஷண்முகசுந்தரம் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 23: Line 23:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|27-Oct-2023, 09:54:27 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]

Latest revision as of 16:23, 13 June 2024

ராஜாமடம் ஷண்முகசுந்தரம் பிள்ளை (1883-1931) ஒரு நாதஸ்வர கலைஞர்.

இளமை, கல்வி

ஷண்முகசுந்தரம் பிள்ளை தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டணம் அருகே ராஜாமடம் என்னும் சிற்றூரில் 1883-ம் ஆண்டு ராஜாயி அம்மாளுக்குப் பிறந்தார்.

தன் மகனை உயர்கல்வி படிக்க வைக்க வேண்டுமென ராஜாயி அம்மாள் ஆசைப்பட்டார். ஷண்முகசுந்தரம் பி.ஏ பட்டம் பெற்றார். உறவினர்கள் சிலர் இவருக்கு நாதஸ்வரம் வாசிக்கத் தெரியாது, இசை என்பது புத்தகம் படிப்பதுபோல் எளிதல்ல என பரிகாசம் செய்யவும் நாதஸ்வரம் கற்கும் முடிவை எடுத்தார். கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றார். நான்கு ஆண்டுகளில் நல்ல இசைத்தேர்ச்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

ஷண்முகசுந்தரம் பிள்ளை 1915-ம் ஆண்டு ராமாமிருதம் அம்மாள் என்பவரை மணந்தார்.

இசைப்பணி

தனியாகக் கச்சேரிகள் செய்யத் தொடங்கிய ஷண்முகசுந்தரம் சேகல் சோமுப்பிள்ளை என்பவருடன் சேர்ந்தும் வாசித்து வந்தார். காரைக்குடி கொப்புடையம்மன் கோவில் தர்மகர்த்தா ஷண்முகசுந்தரம் பிள்ளையின் பல்லவி வாசிப்புக்கு தங்கமுலாம் பூசிய வெள்ளி நாதஸ்வரம் பரிசளித்தார்.

ஒரே சமயத்தில் எட்டு வித்வான்கள் வெவ்வேறான எட்டுத் தாளங்கள் வாசிக்க ஷண்முகசுந்தரம் பிள்ளை ’ஒராறுமுகனே ஆறுமுகனே’ என்ற பல்லவியை வாசித்து 'அஷ்டவர்க்கம் - ஷண்முகசுந்தரம்’ என்ற பட்டத்தைப் பெற்றார்.

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலில் நடந்த ஒரு போட்டியில் கடினமான ரக்தியை திரிகாலமும் வாசித்து தங்கப்பதக்கம் வென்றார்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

ஷண்முகசுந்தரம் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மாணவர்கள்

ராஜாமடம் ஷண்முகசுந்தரம் பிள்ளையின் மாணவர்களில் முக்கியமானவர் யாழ்ப்பாணம் நல்லூர் முருகய்யா பிள்ளை.

மறைவு

ராஜாமடம் ஷண்முகசுந்தரம் பிள்ளை ராஜபிளவை ஏற்பட்டு 1931-ம் ஆண்டு மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2023, 09:54:27 IST