சோ. தர்மன்: Difference between revisions
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
(Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்Corrected Category:சிறுகதையாசிரியர்கள் to Category:சிறுகதையாசிரியர்Corrected Category:நாவலாசிரியர்கள் to Category:நாவலாசிரியர்) |
||
(2 intermediate revisions by the same user not shown) | |||
Line 6: | Line 6: | ||
சோ.தர்மன் (சோ. தர்மராஜ்) (பிறப்பு: 8, ஆகஸ்ட் 1953) தமிழ் எழுத்தாளர். கரிசல்நில எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் படைப்பாளிகளில் ஒருவர். நாவல், சிறுகதை, நாட்டாரியல் என செயல்பட்டு வருபவர். தமிழிலக்கியத்தில் தொண்ணூறுகளில் உருவான இயல்புவாத இலக்கிய அலையில் தனியிடம் பெற்றவர். சூல் என்னும் நாவலுக்காக 2019-ம் ஆண்டில் கேந்த்ரிய சாகித்ய அகாதெமி விருதைப்பெற்றார். | சோ.தர்மன் (சோ. தர்மராஜ்) (பிறப்பு: 8, ஆகஸ்ட் 1953) தமிழ் எழுத்தாளர். கரிசல்நில எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் படைப்பாளிகளில் ஒருவர். நாவல், சிறுகதை, நாட்டாரியல் என செயல்பட்டு வருபவர். தமிழிலக்கியத்தில் தொண்ணூறுகளில் உருவான இயல்புவாத இலக்கிய அலையில் தனியிடம் பெற்றவர். சூல் என்னும் நாவலுக்காக 2019-ம் ஆண்டில் கேந்த்ரிய சாகித்ய அகாதெமி விருதைப்பெற்றார். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
சோ. தர்மன் (சோலையப்பன் தர்மராஜ்) தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்திலுள்ள கடலையூருக்கு அருகில் உருளைகுடி என்னும் ஊரில் மீ.சோலையப்பன் - பொன்னுத்தாய் ஆகியோருக்கு ஆகஸ்ட் 8, 1953 ல் பிறந்தார். புகழ்பெற்ற எழுத்தாளரான [[பூமணி]] இவருடைய தாய்மாமா. | சோ. தர்மன் (சோலையப்பன் தர்மராஜ்) தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்திலுள்ள கடலையூருக்கு அருகில் உருளைகுடி என்னும் ஊரில் மீ.சோலையப்பன் - பொன்னுத்தாய் ஆகியோருக்கு ஆகஸ்ட் 8, 1953-ல் பிறந்தார். புகழ்பெற்ற எழுத்தாளரான [[பூமணி]] இவருடைய தாய்மாமா. | ||
உருளைக்குடி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆரம்பக் கல்வி. உயர்நிலைக் கல்வி திருநெல்வேலி டயோசீசன் டிரஸ்ட் அசோசியேஷன் பள்ளி (TDTA), கடலையூர். மேல்நிலைக்கல்வி நாடார் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி. தொழிற்கல்வியை புனித மரியன்னை தொழில்நுட்ப பள்ளி, தூத்துக்குடியில் முடித்தார் | உருளைக்குடி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆரம்பக் கல்வி. உயர்நிலைக் கல்வி திருநெல்வேலி டயோசீசன் டிரஸ்ட் அசோசியேஷன் பள்ளி (TDTA), கடலையூர். மேல்நிலைக்கல்வி நாடார் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி. தொழிற்கல்வியை புனித மரியன்னை தொழில்நுட்ப பள்ளி, தூத்துக்குடியில் முடித்தார் | ||
Line 75: | Line 75: | ||
*[https://www.youtube.com/watch?v=lIpORKTVHQA&ab_channel=DoordarshanPodhigai Vanakkam Podhigai | Nam Virundhinar - Cho Dharman, Tamil writer | 08 -11 -2021 - YouTube] | *[https://www.youtube.com/watch?v=lIpORKTVHQA&ab_channel=DoordarshanPodhigai Vanakkam Podhigai | Nam Virundhinar - Cho Dharman, Tamil writer | 08 -11 -2021 - YouTube] | ||
*[https://www.jeyapirakasam.com/2020/01/blog-post_31.html சோ.தர்மன் - கரிசல் இலக்கிய வெள்ளாமையின் மகசூல் பெருத்த காடு] | *[https://www.jeyapirakasam.com/2020/01/blog-post_31.html சோ.தர்மன் - கரிசல் இலக்கிய வெள்ளாமையின் மகசூல் பெருத்த காடு] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 13:34:21 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:நாவலாசிரியர்]] | ||
[[Category: | [[Category:எழுத்தாளர்]] | ||
[[Category: | [[Category:சிறுகதையாசிரியர்]] |
Latest revision as of 13:47, 17 November 2024
To read the article in English: Cho Dharman.
சோ.தர்மன் (சோ. தர்மராஜ்) (பிறப்பு: 8, ஆகஸ்ட் 1953) தமிழ் எழுத்தாளர். கரிசல்நில எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் படைப்பாளிகளில் ஒருவர். நாவல், சிறுகதை, நாட்டாரியல் என செயல்பட்டு வருபவர். தமிழிலக்கியத்தில் தொண்ணூறுகளில் உருவான இயல்புவாத இலக்கிய அலையில் தனியிடம் பெற்றவர். சூல் என்னும் நாவலுக்காக 2019-ம் ஆண்டில் கேந்த்ரிய சாகித்ய அகாதெமி விருதைப்பெற்றார்.
பிறப்பு, கல்வி
சோ. தர்மன் (சோலையப்பன் தர்மராஜ்) தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்திலுள்ள கடலையூருக்கு அருகில் உருளைகுடி என்னும் ஊரில் மீ.சோலையப்பன் - பொன்னுத்தாய் ஆகியோருக்கு ஆகஸ்ட் 8, 1953-ல் பிறந்தார். புகழ்பெற்ற எழுத்தாளரான பூமணி இவருடைய தாய்மாமா.
உருளைக்குடி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆரம்பக் கல்வி. உயர்நிலைக் கல்வி திருநெல்வேலி டயோசீசன் டிரஸ்ட் அசோசியேஷன் பள்ளி (TDTA), கடலையூர். மேல்நிலைக்கல்வி நாடார் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி. தொழிற்கல்வியை புனித மரியன்னை தொழில்நுட்ப பள்ளி, தூத்துக்குடியில் முடித்தார்
தனிவாழ்க்கை
சோ.தர்மன் மனைவி பெயர் மாரியம்மாள். இரு மகன்கள், வினோத் மாதவன் மற்றும் விஜய சீனிவாசன். இப்போது கோயில்பட்டியில் வசிக்கிறார். 1976 முதல் 1996 வரை இருபதாண்டுகள் கோவில்பட்டியிலுள்ள லாயல் டெக்ஸ்டைல் மில் என்னும் தனியார் தொழில்நிலையத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அதன் பின்னர் முழு நேர எழுத்தாளராக கோவில்பட்டியில் வசித்து வருகிறார். சோ.தர்மன் இருபதாண்டுகள் தொழிற்சங்கப்பணிகளில் இருந்தார். அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் அமைப்பின் பொறுப்பில் இருந்தார்.
இலக்கியவாழ்க்கை
சோ.தர்மன் தன் தாய்மாமனான எழுத்தாளர் பூமணியிடமிருந்து எழுத்தாளராகும் ஊக்கத்தை அடைந்தார். கி.ராஜநாராயணன், சி.கனகசபாபதி, ஜோதிவினாயகம், தேவதச்சன் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட கோயில்பட்டியின் இலக்கியச் சூழலில் உருவானவர் சோ.தர்மன். கோயில்பட்டி பகுதியின் கரிசல் காட்டின் இலக்கிய முன்னோடியான கி.ராஜநாராயணின் எழுத்துக்களை முன்னுதாரணமாக கொண்டவர். கோயில்பட்டியில் எழுபதுகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த இலக்கிய உரையாடல்கள் சோ.தர்மனின் இலக்கியப்பார்வையை வடிவமைத்தன. தொழிற்சங்க அரசியலின் சிக்கல்களும் அவரை எழுதத் தூண்டின.
ஆனால் முக்கியமாக அவருடைய எழுத்துக்கான தூண்டுதல் கரிசல்நிலத்தில் நிகழ்ந்து வந்த தொடர்மாற்றங்களில் இருந்து எழுந்தது. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட கரிசல்நிலத்தில் பருத்தி முதலிய கரிசல்பயிர்கள் இழப்பு தருவனவாக ஆயின. கண்மாய்கள் (ஏரிகள்) சார்ந்தே வேளாண்மை நடந்துவந்த கரிசலில் அந்நீர்நிலைகள் கைவிடப்பட்டு பராமரிப்பின்றி அழிந்தன. மக்கள் தொடர்ச்சியாக ஊரைவிட்டு வெளியேறவே கிராமங்கள் ஆளில்லாமல் விடப்பட்டன. மில் தொழிலாளியாக இருந்தாலும் சோ.தர்மன் தன்னை விவசாயியாகவே உணர்பவர். இந்த வீழ்ச்சி அவருள் வாழ்ந்த விவசாயியை துயரமும் சீற்றமும் கொள்ளச்செய்ததன் விளைவுகளே அவருடைய கதைகள். சோ.தர்மன் தன் பெரும்பாலான நாவல்களிலும் கதைகளிலும் உருளைக்குடி என்னும் சிற்றூரையே களமாக கொண்டு எழுதியிருக்கிறார்
1980-ல் மதுரையிலிருந்து வெளிவந்த மகாநதி இதழில் வெளியான விருவு என்பது சோ.தர்மனின் முதல் சிறுகதை. தொடர்ச்சியாக இலக்கியச் சிற்றிதழ்களில் சிறுகதைகளை எழுதினார். அன்பின் சிப்பி, ஈரம், சோகவனம், வனக்குமாரன் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும்,ஐந்து நாவல்களையும் எழுதியுள்ளார்.
சோ.தர்மனின் முதல் நாவல் தூர்வை 1996-ல் சிவகங்கை அன்னம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அத்தியாயப் பகுப்புகள் இல்லாமல் ஒரே உரைநடை ஓட்டமாக எழுதப்பட்டது அந்நாவல். சோ.தர்மனின் நாவல்களில் முதன்மையாக கருதப்படுவது கூகை. ஒடுக்கப்பட்ட மக்களின் குறியீடாகவே கூகை அதன்பின்னர் மாறியது. பா.ரஞ்சித் முன்னெடுப்பில் தலித் இயக்க கலை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டபோது அதற்கு கூகை என்று பெயரிடப்பட்டது. சூல் நாவலுக்காக 2019 க்கான சாகித்ய அக்காதமி விருது அவர் எழுதிய சூல் நாவலுக்கு வழங்கப்பட்டது.பதிமூன்றாவது மையவாடி (2020) நாவல் உருளைக்குடி கிராமத்திலிருக்கும் கருத்தமுத்துவை மையமாகக் கொண்ட கதையிது. ஒரு கிராமத்திலிருந்து கல்வியின் நிமித்தம் வெளியே சென்று உலகத்தை அவன் அனுபவங்களால் கற்றுக் கொள்வதாக கதை விரிகிறது. வௌவால்தேசம் (2022) பகடியுடன் சூழ்ந்திருக்கும் சமூக வீழ்ச்சியைச் சித்தரிக்கும் நாவல்.
நாட்டாரியல் சார்ந்த செய்திகளை சேகரித்து ஆவணப்படுத்துவதில் ஈடுபாடு கொண்டவர் சோ.தர்மன். வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி பற்றிய வாழ்க்கைவரலாற்று நூல் எழுதியிருக்கிறார்.கி. ராஜநாராயணன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், வெங்கட்சாமிநாதன் ஆகியோரை இலக்கியத்தில் தனக்கு அணுக்குமாகக் கருதுபவர், அவர்களுடன் உரையாடலில் இருந்தவர்.
சோ தர்மன் சுற்று சூழல் விழிப்புணர்வையும், இயற்கையோடு இயைந்த வாழ்வையும் மரபின் அறிவையும் பண்பாட்டையும் எடுத்துரைப்பதில் ஆர்வம் கொண்டவர். அரசின் குத்தகை கண்மாய்களில் ஆடு, மாடு நீர் அருந்த அனுமதிக்கப்படவில்லை. மேய்ப்பவர் அடித்து விரட்டப்படுகிறார் என்ற அவரின் ஆதங்கமான முக நூல் பதிவை மேற்கோள்காட்டி மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலக்கிய இடம்
சோ.தர்மனின் பெரும்பாலான நாவல்கள் உருளைக்குடி என்னும் அவருடைய சொந்த ஊரை களமாகக் கொண்டவை. சென்ற ஐம்பதாண்டுகளில் வேளாண்மையில் உருவான சரிவும், அதன் விளைவாக கிராமச் சமூக அமைப்பில் உருவான சிதைவும், அதன் வழியாக மானுட உறவுகளில் உருவாகும் சிக்கல்களுமே அவருடைய பேசுபொருள்:. சோ.தர்மனை இயல்புவாத அழகியல் கொண்ட படைப்பாளி என விமர்சகர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார். ஆசிரியரின் இடையீடின்றி மெய்யான தகவல்கள் வழியாகவும், உணர்ச்சியற்ற மிகையற்ற சித்தரிப்பு வழியாகவும் ஒரு நம்பகமான வாழ்க்கைக்களத்தை உருவாக்கி அதிலிருந்து வாசகர்கள் தங்கள் முடிவுகளுக்குச் செல்லச்செய்வது சோ.தர்மனின் எழுத்துமுறையாகும்.
சோ.தர்மன் பிறப்பால் தலித் என அடையாளப்படுத்தப்படும் சாதியைச் சேர்ந்தவர். ஆனால் அத்தகைய அடையாளங்கள் இலக்கியத்திற்கு எவ்வகையிலும் தேவையானவை அல்ல என்னும் கருத்து கொண்டவர். இடதுசாரி அமைப்புகளுடன் முப்பதாண்டுகள் இணைந்து செயல்பட்டவர். ஆனால் இடதுசாரிக் கருத்துக்களை இலக்கியத்தின் பேசுபொருள் ஆக்கக்கூடாது என்றும் இலக்கியவாதியின் பார்வையை அந்தக் கொள்கைகள் முடிவுசெய்யக்கூடாது என்றும் சொல்பவர். தன்னை தன் கிராமத்தின் கதையை இயல்பாக சொல்லமுற்படும் கதைசொல்லியாக உருவகம் செய்துகொள்பவர். இலக்கியத்தை கற்றறிந்தவராயினும் தன் எழுத்து சாமானியனின் குரலாக மட்டுமே ஒலிக்கவேண்டும் என எண்ணுபவர். சோ.தர்மனின் எழுத்தில் கி.ராஜநாராயணன்,பூமணி இருவருடைய செல்வாக்கும் உண்டு. தமிழிலக்கியத்தில் சாமானியனின் அறச்சீற்றத்தையும் வரலாற்றுணர்வையும் வெளிப்படுத்தியவை அவருடைய படைப்புக்கள்.
"கு.அழகிரிசாமி, கி.ரா., பூமணிக்கு அடுத்த நிலையில் கரிசல் மண்ணின் ஆளுமை சோ.தர்மன்" என்று எழுத்தாளர் கோணங்கி குறிப்பிடுகிறார்.
விருதுகள்
- 1992 மற்றும் 1994 ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார்.
- கூகை என்னும் புதினத்திற்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கிறார்.
- சூல் என்னும் புதினத்திற்காக 2016-ம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார்.
- சூல் என்னும் புதினத்திற்காக 2019-ம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருதைப்பெற்றார்.
- முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரிடமிருந்து மாநில அரசு விருதுகள்.
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது, சுந்தரனார் விருது.
- கனடா தோட்ட விருது (2005)
- சுஜாதா விருது (2016)
- ஆனந்த விகடன் விருது (2019)
வாழ்க்கை வரலாறு
சோ.தர்மனின் வாழ்க்கை வரலாற்றை கோ.சந்தனமாரியம்மாள் நூலாக எழுதியிருக்கிறார்
படைப்புகள்
நாவல்கள்
சிறுகதைத்தொகுதிகள்
- ஈரம் (சிறுகதைத்தொகுதி)
- சோகவனம்
- வனக்குமாரன்
- அன்பின் சிப்பி
- சோகவனம்
- நீர்ப்பழி (முழு அறுபத்தெட்டு கதைகள் அடங்கிய தொகுப்பு - 2020 அடையாளம் பதிப்பகம்)
ஆய்வு நூல்
- வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி (2014), மறைந்த வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி அவர்களைப்பற்றி ஒரு வரலாற்று நூல்.
உசாத்துணை
- விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன். | எழுத்தாளர் ஜெயமோகன்
- சோ.தர்மன்: கண்மாயின் ஈரம் கொண்ட எழுத்துக்காரர்! | so dharman - hindutamil.in
- எழுத்தாளர் சோ.தர்மனின் வைரல் ஃபேஸ்புக் பதிவு... தீர்ப்பில் அரசுக்கு சுட்டிக்காட்டிய நீதிபதி - இ கார்த்திகேயன், விகடன்.காம், செப்டம்பர் 2020
- [மறைக்கப்பட்ட உலகம், வெங்கட் சாமிநாதன், திண்ணை.காம் செப்டம்பர் 2006 ]
- ஏர் இதழ்: மரபின் மையத்திலிருந்து ஒருபோதும் விலக முடியாது! - சோ.தர்மன் நேர்காணல்.
- மின்னம்பலம்:நான் சூரியகாந்தி அல்ல மூலிகை: சோ.தர்மன்
- புனைவு என்பது தனக்குத் தெரிந்தவற்றைக் கொட்டி வைப்பதல்ல: சோ. தர்மன் | புனைவு என்பது தனக்குத் தெரிந்தவற்றைக் கொட்டி வைப்பதல்ல: சோ. தர்மன் - hindutamil.in
- தலித் எழுத்து என்று ஒன்று இல்லை - சோ. தர்மன் நேர்காணல்
- சோ.தர்மனின் 'கூகை' நாவல் வாசிப்பு அனுபவம் -சோ. விஜயகுமார் - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு
- ஆண்கள்... பெண்கள்... இன்றைய பொங்கல்! - எழுத்தாளர் சோ. தர்மன் | தினமலர், ஜனவரி 2020
- Cho. Dharman speech | விஷ்ணுபுரம் விருது 2021 | விக்ரமாதித்யன் | சோ. தர்மன் - YouTube
- Vanakkam Podhigai | Nam Virundhinar - Cho Dharman, Tamil writer | 08 -11 -2021 - YouTube
- சோ.தர்மன் - கரிசல் இலக்கிய வெள்ளாமையின் மகசூல் பெருத்த காடு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:34:21 IST