under review

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(9 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான [[மும்மணிக்கோவை]] வகையில் அமைந்த நூல். சைவ நூல். இந்நூல் நம்பியாண்டார் நம்பியின் திருமுறைத் தொகுப்பில் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான [[மும்மணிக்கோவை]] என்ற வகைமையில் அமைந்த சைவ நூல். சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம்பெறுகிறது.

== நூல் பற்றி ==
== ஆசிரியர் ==
இந்த நூலில் 30 பாடல்கள் உள்ளன. சைவர்களால் பெரிதும் பயிலப்படும் நூல். ‘உமையொரு பாகன்' வடிவம் பாதம் முதல் தலைமுடி வரை வர்ணிக்கப்படுகிறது. திருவடி, திருவின் ஆகம் (மார்பு), திருக்கரம், திருநெடுநாட்டம் (கண்கள்), திருமுடி என்று ஆறு பகுதிகளாக அர்த்த நாரீசுவரர் வடிவத்தைப் பட்டினத்தடிகள் இந்நூலில் வர்ணிக்கிறார். பட்டினத்தடிகள் திருவுருவ வர்ணனையாகக் கூறும் விளக்கங்களில் பல சிற்ப சாத்திரங்களிலும் காணப்படுகிறது. மொழி ஆய்வு செய்பவருக்கு இந்த நூலில் இடம்பெறும் சொற்கள் சிறந்த ஆய்வுத் தளமாகத் திகழும். சைவ சமய நூல்.
திருவிடைமருதூர் மும்மணிக்கோவையை இயற்றியவர்  திருவொற்றியூரில் வாழ்ந்த பட்டணத்துப் பிள்ளையார், திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட [[பட்டினத்து அடிகள்|பட்டினத்தடிகள்]].
 
== நூல் அமைப்பு ==
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை நேரிசை ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என மூன்று  பாவகைகளிலுமாக மொத்தம் 30 பாடல்களைக் கொண்டது.  திருவிடைமருதூரில் கோவில் கொண்ட மகாலிங்கத்தைப் போற்றிப் பாடும் நூல். சைவர்களால் பெரிதும் பயிலப்படும் நூல். 'உமையொரு பாகன்' வடிவம் பாதம் முதல் தலைமுடி வரை வர்ணிக்கப்படுகிறது. திருவடி, திருவின் ஆகம் (மார்பு), திருக்கரம், திருநெடுநாட்டம் (கண்கள்), திருமுடி என்று ஆறு பகுதிகளாக அர்த்த நாரீசுவரர் வடிவத்தைப் பட்டினத்தடிகள் இந்நூலில் வர்ணிக்கிறார். பட்டினத்தடிகள் திருவுருவ வர்ணனையாகக் கூறும் விளக்கங்களில் பல சிற்ப சாத்திரங்களிலும் காணப்படுகிறது. மொழி ஆய்வு செய்பவருக்கு இந்த நூலில் இடம்பெறும் சொற்கள் சிறந்த ஆய்வுத் தளமாகத் திகழும்.  

== பாடல் நடை ==
== பாடல் நடை ==
Line 23: Line 26:
     யாந்தெய்வத் தாமரையே
     யாந்தெய்வத் தாமரையே
</poem>
</poem>
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11028&padhi=040&startLimit=30&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
* [http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11028&padhi=040&startLimit=30&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்]
* மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
* மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005

{{ready for review}}
 
{{Finalised}}
 
{{Fndt|24-Sep-2023, 03:53:34 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மும்மணிக்கோவைகள்]]

Latest revision as of 16:24, 13 June 2024

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான மும்மணிக்கோவை என்ற வகைமையில் அமைந்த சைவ நூல். சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம்பெறுகிறது.

ஆசிரியர்

திருவிடைமருதூர் மும்மணிக்கோவையை இயற்றியவர் திருவொற்றியூரில் வாழ்ந்த பட்டணத்துப் பிள்ளையார், திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட பட்டினத்தடிகள்.

நூல் அமைப்பு

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை நேரிசை ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என மூன்று பாவகைகளிலுமாக மொத்தம் 30 பாடல்களைக் கொண்டது. திருவிடைமருதூரில் கோவில் கொண்ட மகாலிங்கத்தைப் போற்றிப் பாடும் நூல். சைவர்களால் பெரிதும் பயிலப்படும் நூல். 'உமையொரு பாகன்' வடிவம் பாதம் முதல் தலைமுடி வரை வர்ணிக்கப்படுகிறது. திருவடி, திருவின் ஆகம் (மார்பு), திருக்கரம், திருநெடுநாட்டம் (கண்கள்), திருமுடி என்று ஆறு பகுதிகளாக அர்த்த நாரீசுவரர் வடிவத்தைப் பட்டினத்தடிகள் இந்நூலில் வர்ணிக்கிறார். பட்டினத்தடிகள் திருவுருவ வர்ணனையாகக் கூறும் விளக்கங்களில் பல சிற்ப சாத்திரங்களிலும் காணப்படுகிறது. மொழி ஆய்வு செய்பவருக்கு இந்த நூலில் இடம்பெறும் சொற்கள் சிறந்த ஆய்வுத் தளமாகத் திகழும்.

பாடல் நடை

தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து
வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
சிலம்பும் கழலும் அலம்பப் புனைந்து
கூற்றின் ஆற்றல் மாற்றிப் போற்றாது
வலம்புரி நெடுமால் ஏனமாகி நிலம்புக்கு

பாடல் எண் 30

கரத்தினில் மாலவன் கண்கொண்டு
    நின்கழல் போற்றநல்ல
வரத்தினை ஈயும் மருதவப்
    பாமதி ஒன்றுமில்லேன்
சிரத்தினு மாயென்றன் சிந்தையு
    ளாகிவெண் காடனென்னும்
தரத்தினு மாயது நின்னடி
    யாந்தெய்வத் தாமரையே

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Sep-2023, 03:53:34 IST