under review

ஷாநவாஸ்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(7 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
[[File:Shanavas.jpg|thumb|ஷாநவாஸ்]]
[[File:Shanavas.jpg|thumb|ஷாநவாஸ்]]
ஷாநவாஸ் என்ற பெயரில் எழுதும் முகம்மது காசிம் ஷாநவாஸ் (1959) சிறுகதை, கட்டுரை, பத்தி, கவிதை என பல வகைமைகளிலும் எழுதும் சிங்கப்பூர் எழுத்தாளர். சிங்கப்பூரின் தனித்தன்மையான பல இன உணவு கலாச்சாரம், வாழ்க்கை முறை, சூழல்கள் சார்ந்த பத்திகளில் சிறப்புக் கவனம் செலுத்துபவர். சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், சிராங்கூன் டைம்ஸ் மாத இதழின் ஆசிரியராகவும் உள்ளார்.
ஷாநவாஸ் (இயற்பெயர்:முகம்மது காசிம் ஷாநவாஸ் )( பிறப்பு: 1959) சிறுகதை, கட்டுரை, பத்தி, கவிதை என பல வகைமைகளிலும் எழுதும் சிங்கப்பூர் எழுத்தாளர். சிங்கப்பூரின் தனித்தன்மையான பல இன உணவு கலாச்சாரம், வாழ்க்கை முறை, சூழல்கள் சார்ந்த படைப்புக்களில் சிறப்புக் கவனம் செலுத்துபவர். சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், சிராங்கூன் டைம்ஸ் மாத இதழின் ஆசிரியராகவும் உள்ளார்.
==பிறப்பு கல்வி==
==பிறப்பு கல்வி==
ஷாநவாஸ் தமிழ்நாட்டில் இராமநாதபுர மாவட்டம் நத்தம் (அபிராமம்) என்ற ஊரில் 1959 ல் பிறந்தார். தந்தை முகம்மது காசிம், தாயார் செய்யது பாத்திமா. உடன் பிறந்தவர்கள், அண்ணன் காதர், தம்பி கலில் ரஹ்மான், தங்கை -ரம்ஜான் ஆயிஷா. ஷாநவாஸ் பள்ளிப்படிப்பை அபிராமம் முஸ்லிம் உயர் நிலைப்பள்ளியிலும் இளங்கலை (வேதியியல்) பட்டக் கல்வியை ஜமால் முகம்மது கல்லூரியிலும் அரசியல் மற்றும் பொது நிர்வாக முதுகலை பட்டப்படிப்பை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலும் முடித்தார்.
ஷாநவாஸ் தமிழ்நாட்டில் இராமநாதபுர மாவட்டம் நத்தம் (அபிராமம்) என்ற ஊரில் முகம்மது காசிம், செய்யது பாத்திமா இணையருக்கு 1959-ல் பிறந்தார். உடன் பிறந்தவர்கள், அண்ணன் காதர், தம்பி கலில் ரஹ்மான், தங்கை -ரம்ஜான் ஆயிஷா. ஷாநவாஸ் பள்ளிப்படிப்பை அபிராமம் முஸ்லிம் உயர் நிலைப்பள்ளியிலும் இளங்கலை (வேதியியல்) பட்டக் கல்வியை ஜமால் முகம்மது கல்லூரியிலும் அரசியல் மற்றும் பொது நிர்வாக முதுகலை பட்டப்படிப்பை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலும் முடித்தார்.


==குடும்ப வாழ்க்கை==
==குடும்ப வாழ்க்கை==
மனைவி வஹிதா பானு. இரண்டு மகன்கள், ஒரு மகள். இந்திய அரசுத் துறையில் 14 ஆண்டுகள் பணியாற்றியவர். சிங்கப்பூரரான தன் தந்தையின் உணவகத் தொழிலைக் கவனிக்க 1990களில் சிங்கப்பூரில் குடியேறினார்.
மனைவி வஹிதா பானு. இரண்டு மகன்கள், ஒரு மகள். இந்திய அரசுத் துறையில் 14 ஆண்டுகள் பணியாற்றியவர். சிங்கப்பூரில் வசித்த தன் தந்தையின் உணவகத் தொழிலைக் கவனிக்க 1990-களில் சிங்கப்பூரில் குடியேறினார்.
==இலக்கிய வாழ்க்கை/ பங்களிப்பு==
==இலக்கிய வாழ்க்கை/ பங்களிப்பு==
ஷாநவாஸ் தொழிற்சங்க ஈடுபாடு மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் மூலம் இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். தொழிற்சங்கத் தலைவர் ஞானையா, கவிஞர் [[மீரா (கவிஞர்)|மீரா]] இவர்களுடன் இவருக்கு நல்ல நட்பு இருந்தது.  தொடர்ந்து வாசிப்பதிலும்கையெழுத்து பத்திரிக்கையில் எழுதுவதிலும் ஈடுபட்டவர். உயிரோசை, சிங்கப்பூர் கிளிஷே, இதழ்களில் பத்திகள் எழுதி இருக்கிறார். வாதினி மாத இதழ், தங்கமீன் இணைய இதழ், சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு நாளிதழ், ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு வார இதழ் ஆகியவைகளில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன.  
ஷாநவாஸ் தொழிற்சங்க ஈடுபாடு மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் மூலம் இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். தொழிற்சங்கத் தலைவர் ஞானையா, கவிஞர் [[மீரா (கவிஞர்)|மீரா]] இவர்களுடன் இவருக்கு நல்ல நட்பு இருந்தது.  தொடர்ந்து வாசிப்பதிலும்கையெழுத்து பத்திரிக்கையில் எழுதுவதிலும் ஈடுபட்டவர். [[உயிரோசை]], [[சிங்கப்பூர் கிளிஷே]], இதழ்களில் பத்திகள் எழுதி இருக்கிறார். வாதினி மாத இதழ், [[தங்கமீன்(இணைய இதழ்)|தங்கமீன்]] இணைய இதழ், சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் [[தமிழ் முரசு]] நாளிதழ், ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் [[தமிழ்முரசு வார இதழ்(ஆஸ்திரேலியா)|தமிழ்முரசு வார இதழ்]] ஆகியவைகளில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன.  


====== சிறுகதைகள் ======
====== சிறுகதைகள் ======
ஷாநவாஸ் சிங்கப்பூர் இதழ்களில் தொடர்ச்சியாக கதைகள் எழுதிவந்துள்ளார். 2013ல் இவருடைய மூன்றாவது கை என்னும் முதல் சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. இதுவரைநான்கு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.  
ஷாநவாஸ் சிங்கப்பூர் இதழ்களில் தொடர்ச்சியாக கதைகள் எழுதிவந்துள்ளார். 2013-ல் இவருடைய 'மூன்றாவது கை' என்னும் முதல் சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. இதுவரைநான்கு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.  


====== சமையற்கலை ======
====== சமையற்கலை ======
ஷாநவாஸ் சிங்கப்பூரின் உணவு வகைகளைப் பற்றியும் சுவைமரபுகளைப் பற்றியும் சிறப்புக்கவனம் அளித்து எழுதி வருகிறார். தமிழில் அயல்நாட்டுச் சுவைகள் பற்றி எழுதப்பட்ட முன்னோடியான நூல்கள் என்னும் இடம் அவருடைய அயல்பசி முதலிய நூல்களுக்கு உண்டு.
ஷாநவாஸ் சிங்கப்பூரின் உணவு வகைகளைப் பற்றியும் சுவைமரபுகளைப் பற்றியும் சிறப்புக்கவனம் அளித்து எழுதி வருகிறார். தமிழில் அயல்நாட்டுச் சுவைகள் பற்றி எழுதப்பட்ட முன்னோடியான நூல்கள் என்னும் இடம் அவருடைய 'அயல்பசி' முதலிய நூல்களுக்கு உண்டு.


== அமைப்புப்பணிகள் ==
== அமைப்புப்பணிகள் ==
Line 19: Line 19:


== இதழியல் ==
== இதழியல் ==
ஷாநவாஸ்  ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழின் முதன்மை ஆசிரியர் பணியில் இருக்கிறார் .
ஷாநவாஸ்  ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழின் முதன்மை ஆசிரியர் .


== விருதுகள் ==
== விருதுகள் ==


* 2012 ஷாநவாஸ்  உயிரோசை இணைய இதழில் தொடராக எழுதிய “அயல்பசி” பத்தி எழுத்துகளை 2012 ம் ஆண்டுக்கான சிறந்த பண்பாட்டுக் கட்டுரையாக [[எஸ். ராமகிருஷ்ணன்]] தேர்வு செய்தார்
* 2012 -ஷாநவாஸ்  உயிரோசை இணைய இதழில் தொடராக எழுதிய 'அயல்பசி' பத்தி எழுத்துகளை 2012- ம் ஆண்டுக்கான சிறந்த பண்பாட்டுக் கட்டுரையாக [[எஸ். ராமகிருஷ்ணன்]] தேர்வு செய்தார்


*2014 - சிங்கப்பூர் இலக்கியப் பரிசு - வெற்றியாளர் (புனைவு)
*2014 - சிங்கப்பூர் இலக்கியப் பரிசு - வெற்றியாளர் (புனைவு)
Line 33: Line 33:
"ஷாநவாஸ் புனைகதைகளில் தமிழக / இந்திய நிலப்பரப்பு நினைக்கப்படும் வெளியாக அடியாழத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறது. விரும்பிப் புலம்பெயர்ந்து வாழநேர்ந்த புதியவெளிக்குள் தன்னை இருத்திக்கொள்வதில் ஏற்படும் சின்னச் சின்ன முரண்களும் மகிழ்ச்சியும் இணையாகவே நிரல்படுத்தப்பட்டுள்ளன,"  என முனைவர் [[அ.ராமசாமி]] குறிப்பிட்டுள்ளார்.
"ஷாநவாஸ் புனைகதைகளில் தமிழக / இந்திய நிலப்பரப்பு நினைக்கப்படும் வெளியாக அடியாழத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறது. விரும்பிப் புலம்பெயர்ந்து வாழநேர்ந்த புதியவெளிக்குள் தன்னை இருத்திக்கொள்வதில் ஏற்படும் சின்னச் சின்ன முரண்களும் மகிழ்ச்சியும் இணையாகவே நிரல்படுத்தப்பட்டுள்ளன,"  என முனைவர் [[அ.ராமசாமி]] குறிப்பிட்டுள்ளார்.


"ஒருவர் புலம்பெயர்ந்த நாட்டின் ருசியைப்பற்றி எழுதிய கட்டுரை நூல் என்பது ஒரு மிக முக்கியமான வரவாக எனக்குத் தெரிந்தது. நான் வாசித்த ஷாநவாசின் ’அயல்பசி’ இன்னும் மொழிக்கச்சிதமும் கூர்ந்த அவதானிப்பும் கொண்ட நூலாகத் தென்பட்டது. தமிழில் உணவுபற்றி எழுதப்பட்ட சிறந்த நூல்கள் எவை என்றால் சற்றும் தயங்காமல் ஷாநவாசின் அந்த நூல்களை சொல்ல முடியும்," என எழுத்தாளர் [[ஜெயமோகன்]] எழுதியுள்ளார்.
"ஒருவர் புலம்பெயர்ந்த நாட்டின் ருசியைப்பற்றி எழுதிய கட்டுரை நூல் என்பது ஒரு மிக முக்கியமான வரவாக எனக்குத் தெரிந்தது. நான் வாசித்த ஷாநவாசின் ’அயல்பசி’ இன்னும் மொழிக்கச்சிதமும் கூர்ந்த அவதானிப்பும் கொண்ட நூலாகத் தென்பட்டது. தமிழில் உணவுபற்றி எழுதப்பட்ட சிறந்த நூல்கள் எவை என்றால் சற்றும் தயங்காமல் ஷாநவாசின் அந்த நூல்களை சொல்ல முடியும்," என எழுத்தாளர் [[ஜெயமோகன்]] குறிப்பிடுகிறார்.


" திறந்த மனமும் உணவில் நேசமும் மதிப்பும் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய நூல், ஷாநவாஸின் நூல் முழுவதையும் ஒவ்வாமையின்றி வாசித்தேன். அது நூலாசிரியரின் செய்முறை நேர்த்தி. சலிப்பற்ற சொல்முறை. இணக்கமான மொழி, ஆகியவைகளி கொண்டது" என்பது எழுத்தாளர் [[நாஞ்சில் நாடன்]] மதிப்பீடு.
" திறந்த மனமும் உணவில் நேசமும் மதிப்பும் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய நூல், ஷாநவாஸின் நூல் முழுவதையும் ஒவ்வாமையின்றி வாசித்தேன். அது நூலாசிரியரின் செய்முறை நேர்த்தி. சலிப்பற்ற சொல்முறை. இணக்கமான மொழி, ஆகியவைகளை கொண்டது" என்பது எழுத்தாளர் [[நாஞ்சில் நாடன்]] மதிப்பீடு.
[[File:2014-SLP.jpg|thumb|2014ஆம் ஆண்டின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசை, தமிழ் புனைவுப் பிரிவில் ஷாநவாசின் 'மூன்றாவது கை' சிறுகதைத் தொகுப்பு வென்றது. அமைச்சர் லாரன்ஸ் வோங்கிடம் இருந்து விருது பெறும் எழுத்தாளர்.]]
[[File:2014-SLP.jpg|thumb|2014-ஆம் ஆண்டின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசை, தமிழ் புனைவுப் பிரிவில் ஷாநவாசின் 'மூன்றாவது கை' சிறுகதைத் தொகுப்பு வென்றது. அமைச்சர் லாரன்ஸ் வோங்கிடம் இருந்து விருது பெறும் எழுத்தாளர்.]]
[[File:Sha-கரிகால்சோழன்.jpg|thumb|2015ஆம் ஆண்டு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முஸ்தபாத அறக்கட்டளையின் கரிகாற்சோழன் விருது.]]
[[File:Sha-கரிகால்சோழன்.jpg|thumb|2015ஆம் ஆண்டு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முஸ்தபா அறக்கட்டளையின் கரிகாற்சோழன் விருது.]]


==நூல்கள்==
==நூல்கள்==


====== கட்டுரை ======
====== கட்டுரை ======
*2012 ஒரு துண்டு மீனும் வன்முறைக் கலாச்சாரமும் (கட்டுரை)
*ஒரு துண்டு மீனும் வன்முறைக் கலாச்சாரமும் (2012)
*2013 ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும் (கட்டுரை)
*ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும் (2013)
*அயல்பசி (2014)
*நனவு தேசம் (2015 )


====== சிறுகதைகள் ======
====== சிறுகதைகள் ======
*2013 மூன்றாவது கை (சிறுகதை)
*மூன்றாவது கை (2013)
*2014 அயல்பசி (கட்டுரை)
*ஒலி மூங்கில் (2019)
*2015 நனவு தேசம் (கட்டுரை)
*2019 ஒலி மூங்கில் (சிறுகதை)


====== கவிதை ======
====== கவிதை ======
*2016 சுவை பொருட்டன்று (கவிதை)
*சுவை பொருட்டன்று (2016 )


====== தொகுப்பாசிரியர் ======
====== தொகுப்பாசிரியர் ======
*2017 இடமும் இருப்பும் (சிறுகதை, தொகுப்பாசிரியர்)
*இடமும் இருப்பும் (சிறுகதை, தொகுப்பாசிரியர்)(2017 )
*2018 காலச்சிறகு (‘தி சிராங்கூன் டைம்ஸ்’ படைப்புகள், தொகுப்பாசிரியர்)
*காலச்சிறகு (‘தி சிராங்கூன் டைம்ஸ்’ படைப்புகள், தொகுப்பாசிரியர்)(2018 )


====== மொழியாக்கம் ======
====== மொழியாக்கம் ======
*2019 Not unto the taste (கவிதை மொழிபெயர்ப்பு
*Not unto the taste (கவிதை மொழிபெயர்ப்பு)(2019)


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
Line 73: Line 73:
*[https://solvanam.com/2015/03/29/%e0%ae%a8%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/ நனவுதேசம்]
*[https://solvanam.com/2015/03/29/%e0%ae%a8%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/ நனவுதேசம்]
*[https://www.geotamil.com/index.php/2021-02-14-02-20-19/3300-2016-04-27-23-47-18 ஷாநவாஷின் “சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்]
*[https://www.geotamil.com/index.php/2021-02-14-02-20-19/3300-2016-04-27-23-47-18 ஷாநவாஷின் “சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்]
{{Being created}}
{{Finalised}}
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]

Latest revision as of 08:40, 10 February 2024

ஷாநவாஸ்

ஷாநவாஸ் (இயற்பெயர்:முகம்மது காசிம் ஷாநவாஸ் )( பிறப்பு: 1959) சிறுகதை, கட்டுரை, பத்தி, கவிதை என பல வகைமைகளிலும் எழுதும் சிங்கப்பூர் எழுத்தாளர். சிங்கப்பூரின் தனித்தன்மையான பல இன உணவு கலாச்சாரம், வாழ்க்கை முறை, சூழல்கள் சார்ந்த படைப்புக்களில் சிறப்புக் கவனம் செலுத்துபவர். சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், சிராங்கூன் டைம்ஸ் மாத இதழின் ஆசிரியராகவும் உள்ளார்.

பிறப்பு கல்வி

ஷாநவாஸ் தமிழ்நாட்டில் இராமநாதபுர மாவட்டம் நத்தம் (அபிராமம்) என்ற ஊரில் முகம்மது காசிம், செய்யது பாத்திமா இணையருக்கு 1959-ல் பிறந்தார். உடன் பிறந்தவர்கள், அண்ணன் காதர், தம்பி கலில் ரஹ்மான், தங்கை -ரம்ஜான் ஆயிஷா. ஷாநவாஸ் பள்ளிப்படிப்பை அபிராமம் முஸ்லிம் உயர் நிலைப்பள்ளியிலும் இளங்கலை (வேதியியல்) பட்டக் கல்வியை ஜமால் முகம்மது கல்லூரியிலும் அரசியல் மற்றும் பொது நிர்வாக முதுகலை பட்டப்படிப்பை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலும் முடித்தார்.

குடும்ப வாழ்க்கை

மனைவி வஹிதா பானு. இரண்டு மகன்கள், ஒரு மகள். இந்திய அரசுத் துறையில் 14 ஆண்டுகள் பணியாற்றியவர். சிங்கப்பூரில் வசித்த தன் தந்தையின் உணவகத் தொழிலைக் கவனிக்க 1990-களில் சிங்கப்பூரில் குடியேறினார்.

இலக்கிய வாழ்க்கை/ பங்களிப்பு

ஷாநவாஸ் தொழிற்சங்க ஈடுபாடு மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் மூலம் இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். தொழிற்சங்கத் தலைவர் ஞானையா, கவிஞர் மீரா இவர்களுடன் இவருக்கு நல்ல நட்பு இருந்தது. தொடர்ந்து வாசிப்பதிலும்கையெழுத்து பத்திரிக்கையில் எழுதுவதிலும் ஈடுபட்டவர். உயிரோசை, சிங்கப்பூர் கிளிஷே, இதழ்களில் பத்திகள் எழுதி இருக்கிறார். வாதினி மாத இதழ், தங்கமீன் இணைய இதழ், சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு நாளிதழ், ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு வார இதழ் ஆகியவைகளில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன.

சிறுகதைகள்

ஷாநவாஸ் சிங்கப்பூர் இதழ்களில் தொடர்ச்சியாக கதைகள் எழுதிவந்துள்ளார். 2013-ல் இவருடைய 'மூன்றாவது கை' என்னும் முதல் சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. இதுவரைநான்கு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.

சமையற்கலை

ஷாநவாஸ் சிங்கப்பூரின் உணவு வகைகளைப் பற்றியும் சுவைமரபுகளைப் பற்றியும் சிறப்புக்கவனம் அளித்து எழுதி வருகிறார். தமிழில் அயல்நாட்டுச் சுவைகள் பற்றி எழுதப்பட்ட முன்னோடியான நூல்கள் என்னும் இடம் அவருடைய 'அயல்பசி' முதலிய நூல்களுக்கு உண்டு.

அமைப்புப்பணிகள்

ஷாநவாஸ் சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்.

இதழியல்

ஷாநவாஸ் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழின் முதன்மை ஆசிரியர் .

விருதுகள்

  • 2012 -ஷாநவாஸ் உயிரோசை இணைய இதழில் தொடராக எழுதிய 'அயல்பசி' பத்தி எழுத்துகளை 2012- ம் ஆண்டுக்கான சிறந்த பண்பாட்டுக் கட்டுரையாக எஸ். ராமகிருஷ்ணன் தேர்வு செய்தார்
  • 2014 - சிங்கப்பூர் இலக்கியப் பரிசு - வெற்றியாளர் (புனைவு)
  • 2015- தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முஸ்தபா அறக்கட்டளை கரிகாற்சோழன் விருது.
  • 2016- சிங்கப்பூர் இலக்கியப் பரிசு - தகுதிப் பரிசு (புதினம் அல்லாத படைப்பு)
  • 2016- மு.கு.இராமச்சந்திரா புத்தகப் பரிசு
சுவை பொருட்டன்று நூல்வெளியீடு. ஜஹாங்கீர், ஷாநவாஸ், நாஞ்சில் நாடான்,

இலக்கிய மதிப்பீடு

"ஷாநவாஸ் புனைகதைகளில் தமிழக / இந்திய நிலப்பரப்பு நினைக்கப்படும் வெளியாக அடியாழத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறது. விரும்பிப் புலம்பெயர்ந்து வாழநேர்ந்த புதியவெளிக்குள் தன்னை இருத்திக்கொள்வதில் ஏற்படும் சின்னச் சின்ன முரண்களும் மகிழ்ச்சியும் இணையாகவே நிரல்படுத்தப்பட்டுள்ளன," என முனைவர் அ.ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

"ஒருவர் புலம்பெயர்ந்த நாட்டின் ருசியைப்பற்றி எழுதிய கட்டுரை நூல் என்பது ஒரு மிக முக்கியமான வரவாக எனக்குத் தெரிந்தது. நான் வாசித்த ஷாநவாசின் ’அயல்பசி’ இன்னும் மொழிக்கச்சிதமும் கூர்ந்த அவதானிப்பும் கொண்ட நூலாகத் தென்பட்டது. தமிழில் உணவுபற்றி எழுதப்பட்ட சிறந்த நூல்கள் எவை என்றால் சற்றும் தயங்காமல் ஷாநவாசின் அந்த நூல்களை சொல்ல முடியும்," என எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

" திறந்த மனமும் உணவில் நேசமும் மதிப்பும் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய நூல், ஷாநவாஸின் நூல் முழுவதையும் ஒவ்வாமையின்றி வாசித்தேன். அது நூலாசிரியரின் செய்முறை நேர்த்தி. சலிப்பற்ற சொல்முறை. இணக்கமான மொழி, ஆகியவைகளை கொண்டது" என்பது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மதிப்பீடு.

2014-ஆம் ஆண்டின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசை, தமிழ் புனைவுப் பிரிவில் ஷாநவாசின் 'மூன்றாவது கை' சிறுகதைத் தொகுப்பு வென்றது. அமைச்சர் லாரன்ஸ் வோங்கிடம் இருந்து விருது பெறும் எழுத்தாளர்.
2015ஆம் ஆண்டு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முஸ்தபா அறக்கட்டளையின் கரிகாற்சோழன் விருது.

நூல்கள்

கட்டுரை
  • ஒரு துண்டு மீனும் வன்முறைக் கலாச்சாரமும் (2012)
  • ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும் (2013)
  • அயல்பசி (2014)
  • நனவு தேசம் (2015 )
சிறுகதைகள்
  • மூன்றாவது கை (2013)
  • ஒலி மூங்கில் (2019)
கவிதை
  • சுவை பொருட்டன்று (2016 )
தொகுப்பாசிரியர்
  • இடமும் இருப்பும் (சிறுகதை, தொகுப்பாசிரியர்)(2017 )
  • காலச்சிறகு (‘தி சிராங்கூன் டைம்ஸ்’ படைப்புகள், தொகுப்பாசிரியர்)(2018 )
மொழியாக்கம்
  • Not unto the taste (கவிதை மொழிபெயர்ப்பு)(2019)

உசாத்துணை

  • ரோஜாக் இணையப்பக்கம் www.shaanavas.wordpress.com

இணைப்புகள்


✅Finalised Page